Home Blog Page 3913

‘தேசியப்பட்டியல் ஊடாக ரணில் சபைக்கு வரமாட்டார்’

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லமாட்டார் என தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கூட்டமொன்று இன்று சிறிகொத்தவில் நடைபெற்றது. இதன்போதே ரணில் விக்கிரமசிங்க மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளார் என தெரியவருகின்றது.

பொதுத்தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக்கட்சிக்கு தேசியப்பட்டியல் ஊடாகவே ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க தயார்’ – சம்பந்தன் அறிவிப்பு

நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அரசுடன் சேர்ந்து பயணிக்கத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 9 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்று வெற்றி ஈட்டியதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இரா.சம்பந்தன் தலை மையில் விசேட பூசை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பொன்று அவரது இல்லத்தில் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன்,

இம்முறை இடம்பெற்ற தேர்தலை ஒரு ஜனநாயகத் தேர்தலாக நான் கருதவில்லை. மக்களுக்கு பணம் வழங்கி நன்கொடை கொடுத்து மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங் களைப் பெற்று கொண்டுள்ளனர்.

சிறிய சிறிய தமிழ்க் கட்சிகள் போட்டியிட்டு தமிழ் வாக்குகளைப் பிரித்துள் ளன. இதனால் 20 ஆசனங்கள் எதிர் பார்க்கப்பட்ட போதிலும் கூட்டமைப்புக்கு
ஒன்பது ஆசனங்களே கிடைத்துள்ளன. இதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.

மேலும், நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த நீதியும் மற்றும் கெளரவமான பிரஜையாக வாழ தீர்வு வழங்கப்பட வேண்டும். அதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால், ஆட்சி அமைக்கும் அரசாங்கத்தின் நிலைபாட்டைக் கொண்டு எமது இலட்சியத்தை அடைவோம்.” – என்றார்.

இரத்தினபுரிக்கு தேசிய பட்டியலை தலைமையிடம் கோரும் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள்

இரத்தினபுரி மாவட்டத்தில் பிரபல அரசியல்வாதிகளே பின்னடைவை சந்தித்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் கடந்த முறையை விடவும் அதிகளவிலான வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதாக கொடகவலை பிரதேச சபையின் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினரான அண்ணாமலை போதிமாதவன் தெரிவிக்கின்றார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவம் மீண்டும் கேள்விக்குரியாகியுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட சந்திரகுமார் 29 ஆயிரத்து 958 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், இந்த முறை தேர்தலில் சந்திரகுமார் 36473 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் வெற்றி பெற்ற போதிலும், அவர்களின் வாக்கு வங்கி கடந்த முறையை விடவும் இந்த முறை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் போதிமாதன் கூறியுள்ளார்.

எனினும், இரத்தினபுரி தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சந்திரகுமாரின் வாக்குவங்கி இந்த முறை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்திற்கு ஏற்கனவே மூன்று ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில், தேசிய பட்டியல் உறுப்புரிமையும் நுவரெலியா மாவட்டத்திற்கே கிடைக்கும் சாத்தியம் தற்போது ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களின் ஊடாக அறிய முடிகின்றது என அவர் தெரிவிக்கின்றார்.

இரத்தினபுரியில் கவனிப்பாரற்று காணப்படும் தமிழர்களுக்கான உரிமைகளை கருத்திற் கொண்டு, தேசிய பட்டியல் மூலம் கிடைக்கும் ஒரு ஆசனத்தையேனும் இரத்தினபுரிக்கு வழங்க தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலையகத்தின் ஏனைய பகுதிகளுக்கு மக்கள் பிரநிதிகள் இருக்கின்ற நிலையில், இரத்தினபுரிக்கு ஒரு தமிழ் மக்கள் பிரதிநிதி கூட கிடையாது என்பது வருத்தமானது எனவும் அவர் கூறினார்.

இதனால், இரத்தினபுரி மாவட்டத்திற்கு ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்க தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுக்குமா எனவும் கொடகவலை பிரதேச சபையின் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினரான அண்ணாமலை போதிமாதவன் கோரிக்கை விடுக்கின்றார்.

‘உண்மையான வெற்றி சவால்களிலிருந்து தோற்றம் பெறுகிறது’

“இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி, இந்த பாரிய வெற்றிக்காக வாக்களித்த அனைவருக்கும் எனது சார்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” இந்த மாபெரும் வெற்றி நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று நான் சொல்ல வேண்டும். கொவிட் – 19 தொற்றுநோயால் உலகம் முழுவதும் செயலற்ற நிலையில் இருக்கும் நேரத்தில் இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தோம்.

இந்த நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானோர் வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களித்தனர். நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும் ஜனநாயக முறையில் ஜனநாயகத்திற்காக பணியாற்ற மக்கள் முன்வந்திருப்பது ஒரு நாடாக நாம் மகிழ்ச்சியடைய வேண்டிய விடயமாகும்.

மேலும், இதுபோன்ற ஒரு ஜனநாயக தீர்மானத்தை மேற்கொண்டு அதை ஒரு தொற்றுநோய் சூழ்நிலையில் செயல்படுத்த முன்வந்த ஒரு சில நாடுகள் மட்டுமே உலகில் உள்ளன.

அத்தகைய முடிவை எடுத்த நாடு இலங்கை. தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வந்த அனைத்து மக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக உலக சுகாதார பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றி இந்த தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம், சுகாதார சேவை, பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு முடியுமானதாயிற்று.

சவால்களின் மூலம் தான் உண்மையான வெற்றி பிறக்கிறது. போரை வெல்வது, கொவிட் -19 தொற்றுநோயை வென்றது மற்றும் இது போன்ற மிக வெற்றிகரமான தேர்தலை நடத்துவது நம் நாட்டின் பலத்தையும் மக்களின் பலத்தையும் உலகுக்குக் காண்பிக்கும்.

இந்த தேர்தல் வெற்றி தேசத்தின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வெற்றியாகும். இந்த தேர்தலின் வெற்றி, ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை இந்நாட்டில் செயற்படுத்துவதற்கு முடியும் என்பதை உலகுக்கு நிரூபிக்கிறது. இந்த வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்த தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும், தேர்தல் ஆணையம், பாதுகாப்புப் படையினர், அனைத்து அரச அதிகாரிகள், அனைத்து ஊடகங்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல்களை வெற்றிகரமாக மற்றும் அமைதியாக நடத்துவதற்கு உதவிய பொது மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.

சுதந்திரக்கட்சியின் 14 உறுப்பினர்கள் வெற்றி!

பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போட்டியிட்ட நிலையில், அக்கட்சியின் 14 உறுப்பினர்கள் பாராளுமன்றம் தெரிவாகியுள்ளனர்.

நுவரெலியா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டிருந்தாலும் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மட்டுமே ஓர் ஆசனம் கிடைக்கப்பெற்றது.

அத்துடன், சுதந்திரக்கட்சிக்கு ஓர் தேசியப்பட்டியல் வழங்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது. இதன்படி ரோஹண லக்‌ஷ்மன் பியதாச அல்லது சுரேன் ராகவன் ஆகிய இருவரில் ஒருவர் பாராளுமன்றம் செல்லக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் விவரம் வருமாறு,

01.மைத்திரிபால சிறிசேன  – பொலன்னறுவை – 1,11,137

02.துமிந்த திஸாநாயக்க  -அநுராதபுரம் – 75,537

03.மஹிந்த அமரவீர – அம்பாந்தோட்டை – 1,23,730

04.லசந்த அழகியவன்ன – கம்பஹா – 73,061

05.நிமல் சிறிபாலடி சில்வா – பதுளை – 1,41,901

06. சாமர சம்பத் – பதுளை – 66,393

07. தயாசிறி ஜயசேகர- குருணாகலை 1,12,452

08. சாந்த பண்டார – கருணாகலை  52,086

09. ஷான் விஜேலால் – காலி 67,793

10. ரஞ்சித் சிலம்பலாபிட்டிய- கேகாலை 1,03,300

11. துஷ்மந்த – கேகாலை 58,306

12. ஜகத் புஷ்பகுமார – மொனறாகலை 66,176

13. அங்கஜன் ராமநாதன் – யாழ்ப்பாணம் 36,395

14. காதர் மஸ்தான் – வன்னி 13,454

‘மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவேன்’ – ஜீவன் அறிவிப்பு

” புதிய மலையகத்தை உருவாக்குவேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே மக்கள் எனக்கு பேராதரவை வழங்கியுள்ளனர். எனவே, மக்களின் எதிர்ப்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவேன். எனக்கு கிடைத்த வெற்றியை மக்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் வெற்றியின் பின்னர் கொட்டகலையில் வைத்து 07.08.2020 அன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

நுவரெலியா மாவட்டத்தையும் கைப்பற்றி வெற்றிபெறவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாக இருந்தது. தந்தையும் இதனையே கூறியிருந்தார். அந்தவகையில் மாவட்டத்தை கைப்பற்றி விருப்பு வாக்கு பட்டியலில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியளிக்கின்றது. இந்த பெரும் வெற்றியை கண்டு மகிழ்வதற்கு எனது தந்தை அருகில் இல்லாமை பெரும் கவலையளிக்கின்றது. ஆனால் எனது தந்தையை நேசித்த மக்கள் என்னுடன் இருக்கின்றார்கள். அது போதும்.

தேர்தல் காலங்களில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சிறுபையன் என்றுகூட என்னை தாக்கி பேசியிருந்தனர். ஆனால், என்மீது நம்பிக்கை வைத்து இளைஞர்களும், மக்களும் பேராதரவை வழங்கியுள்ளனர். புதியதொரு மலையகத்தை உருவாக்க முடியும் என மக்கள் நம்பியுள்ளனர். அந்த நம்பிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவேன். எனது வெற்றியை மக்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். சொல்லில் அல்லாமல் எனது சேவைகளை செயலில் காட்டுவதற்கே விரும்புகின்றேன்.

நான் முதல் முதலில் பாராளுமன்றம் செல்கின்றேன். மக்களுக்கு சேவையாற்ற வேண்டும், மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது எதிர்ப்பார்ப்பு. அதனை முன்னிலைப்படுத்தியே பிரச்சாரமும் செய்தேன். நுவரெலியா மாவட்ட மக்கள் மட்டுமல்ல வெளி மாவட்ட இளைஞர்களும் எமக்கு பேராதரவை வழங்கினர்.

இதனால்தான் கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் ஆசனங்களை பெறமுடியாவிட்டாலும் எமக்கான வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. எனவே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு வாக்களித்த அதேபோல் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அனைத்து மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கொள்கை அடிப்படையிலேயே எமது அரசியல் பயணம் தொடர்கின்றது. கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு இடமில்லை. வெற்றியின் பங்காளியாக எமது மக்களும் மாறியுள்ளனர். எனவே, மாற்றத்தை நோக்கி பயணிப்போம் என்றார்.

க.கிசாந்தன்

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 23 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 23 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,564 ஆக அதிகரித்துள்ளது.

264  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

9 ஆம் திகதி பிரதமராக மஹிந்த பதவியேற்பு!

10 ஆண்டுகளுக்கு பிறகு நுவரெலியாவைக் கைப்பற்றியது இ.தொ.கா. தலைமையிலான அணி!

பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 9 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்பார் என அறியமுடிகின்றது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றது.

ஹிருணிக்கா, பௌசி, சுஜீவ , திலங்க, ராம் கொழும்பில் தோல்வி!

பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் போட்டியிட்ட முன்னாள் எம்.பிக்களான ஹிருணிக்கா பிரேமசந்திர, சுஜீவ சேனசிங்க, பௌசி ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

அத்துடன், தமிழ் வேட்பாளர்களான ஜனகன், சிவைபி ராம் ஆகியோரும் பாராளுமன்றம் தெரிவாகவில்லை.

அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.பி. திலங்க சுமதிபாலவும் தோல்வியடைந்துள்ளார்.

‘இரத்தினபுரிக்கு தேசியப்பட்டியல்’ – முற்போக்கு கூட்டணியிடம் கோரிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு 6 ஆசனங்கள் கிடைத்துள்ள பின்னணியில், அந்த கட்சிக்கு கிடைக்கும் தேசிய பட்டியல் உறுப்புரிமையை இரத்தினபுரிக்கு வழங்க தலைமைத்துவம் இந்த முறையேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் கோரிக்கை விடுக்கின்றார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரகுமாருக்கு அந்த தேசிய பட்டியல் உறுப்புரிமை வழங்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இரத்தினபுரி மாவட்டத்திற்கான தமிழ் பிரதிநிதித்துவம் மற்றுமொரு முறை இல்லாது போயுள்ள பின்னணியிலேயே அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இரத்தினபுரியில் போட்டியிட்ட சந்திரகுமார் கணிசமான அளவு வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளமையினால், தேசிய பட்டியல் உறுப்புரிமையை அவருக்கு வழங்க தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் சந்திரகுமார் கணிசமான அளவு வாக்குகளை பெற்றுக்கொண்ட போதிலும், இரத்தினபுரிக்கு கிடைக்கவிருந்த தேசிய பட்டியல் உறுப்புரிமை கடந்த முறையும் இல்லாது போயிருந்ததை எஸ்.ஆனந்தகுமார் இதன்போது நினைவூட்டினார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தேசிய பட்டியலுக்கு ஒருவர் ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ள போதிலும், நுவரெலியா மாவட்டத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தலின் ஊடாக 3 பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், நுவரெலியா மாவட்டத்திற்கு மற்றுமொரு பாராளுமன்ற உறுப்புரிமை அவசியமற்றது என கூறியுள்ள எஸ்.ஆனந்தகுமார், அந்த பாராளுமன்ற உறுப்புரிமையை சந்திரகுமாருக்கு வழங்க கட்சி தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இரத்தினபுரிக்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வதற்காகவே தான் போராடுவதாகவும், அந்த சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த சந்தர்ப்பத்திலாவது இரத்தினபுரி தமிழர்களின் நாடி துடிப்பை அறிந்து ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தை வழங்கும் பொறுப்பு தமிழ் முற்போக்கு கூட்டணி வசம் உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

மரம் முறிந்து விழுந்ததால் குடியிருப்புகளுக்கு சேதம்!

0
புளியாவத்தை ஹென்சி தோட்டத்தில் நேற்று கடும் காற்றுடன் அடை மழை பெய்ததால் பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் சில குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இந்த அனர்த்தத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள் ...

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...