Home Blog Page 3914

5 லட்சத்துக்கும் மேல் விருப்பு வாக்கு – மஹிந்த ராஜபக்ச வரலாற்று சாதனை!

இலங்கை தேர்தல் வரலாற்றில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்ற வேட்பாளர் என்ற சாதனையை மஹிந்த ராஜபக்ச படைத்துள்ளார்.

குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட அவர் 5 லட்சத்து 27 ஆயிரத்து 364 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க  5 லட்சத்து 566 விருப்பு வாக்குகளைப் பெற்றார். பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக இது பதிவானது.

அதற்கு முன்னர் 1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் கம்பஹா மாவட்டத்தில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 588 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இந்நிலையிலேயே இந்த சாதனையை மஹிந்த இம்முறை முறியடித்துள்ளார்.

 

‘மைத்திரியின் கழுகு தாக்குதல்’ – பொலன்னறுவையில் முதலிடம்!

பொலன்னறுவை மாவட்டத்தில் நான்கு ஆசனங்களைக் கைப்பற்றி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி வெற்றிநடை போட்டுள்ளது.மாவட்ட விருப்பு வாக்கு பட்டியலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 137 வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியல் போரில் ஈடுபட்ட ரொஷான் ரணசிங்க 90 ஆயிரத்து 615 வாக்குகளைப்பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு வேட்புமனு வழங்கப்படக்கூடாது என ஆரம்பம் முதலே வலியுறுத்திவந்த ரொஷான் ரணசிங்க, மைத்திரியின் கடந்தகால அரசியல் செயற்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து – கழுவி ஊத்தினார்.

எனினும், மைத்திரிக்கு மொட்டு கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. மறுபுறத்தில் ரொஷான் ரணிங்கவை சமரசப்படுத்தவதற்காக மாவட்டத்தின் தலைமை வேட்பாளர் பதவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து தேர்தல் பரப்புரைகளின்போது இருவரும் கடும் சொற்சமரில் ஈடுபட்டனர். சரமாரியாக விமர்சனக் கணைகளையும் தொடுத்துக்கொண்டனர். ‘முட்டை அப்பம், ‘கழுகு கதை’ உட்பட மேலும் சில அறிவிப்புகளால் பொலன்னறுவை அரசியல் களம் அனல் கக்கியது.

இதில் குறிப்பாக மைத்திரிகூறிய கழுகு கதை அவருக்கே பெரும் தலையிடியை ஏற்படுத்தியது. திரும்பும் திசைகளியெல்லாம் மொட்டுக்கட்சி காரர்கள் அவரை விளாசித்தள்ளினர்.

” நீண்டநேரம் காத்திருந்து நீர்க்காகம் மீனை கொத்தினாலும், மேலே இருந்து தக்கதருணம் பார்த்து பறந்துவந்து கழுகு அதனை பறித்துசெல்லும். இம்முறை எனது தாக்குதல் வியூகமும் அவ்வாறே அமையும்.” – என்பதே மைத்திரி கூறிய கதையின் சாராம்சம்.

அதாவது ரொஷான் ரணசிங்க, மாவட்ட தலைவராக இருந்தாலும் மைத்திரிதான் தல என்பதையே இக்கதைமூலம் அவர் கூற முயற்சித்தார். ஆனால், இக்கதைக்கு கை, கால், மூக்கு, பொட்டு எல்லாம் வைத்து மொட்டு கட்சிக்காரர்கள் ஊதி பெருப்பித்து, மைத்திரிக்கு நெருக்கடி கொடுத்தனர். அவருக்கு வாக்களிக்ககூடாது எனவும் வலியுறுத்தினர்.

கடும் சவால்கள், தாக்குதல்கள், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட வேட்பாளரும் தேர்தலில் வெற்றி!

'அரச சேவையில் ஊழல், மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி'

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல்வாதி, விருப்புவாக்கு பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு கடந்த 31 ஆம் திகதி  மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கஹவத்தை பகுதியில் 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசார பேரணி இடம்பெற்ற போது, ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத்தேர்தலுக்கு 5 நாட்கள் எஞ்சியிருந்த நிலையிலேயே கடந்த 31 ஆம் திகதி வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரின் சார்பில் அவரின் மகள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் வெளியாகியுள்ள விருப்பு வாக்கு பட்டியலில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 237 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

‘இரத்தினபுரியில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இம்முறையும் இல்லை’

பொதுத்தேர்தலில் எட்டு ஆசனங்களைக் கைப்பற்றி இரத்தினபுரி மாவட்டத்தையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்துள்ளன.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கின்றது. இம்முறையும் அந்த இலக்கை அடைய முடியாமல்போனது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் சந்திரகுமாரும், ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ஆனந்தகுமாரும் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 08

பவித்ரா வன்னியாராச்சி- 200,977
பிரேமலால் ஜயசேகர- 104,237
ஜனக வக்கும்புர- 101,225
காமினி வெலேபொட- 85,840
அகில எல்லாவெல- 71,179
வாசுதேவ நாணயக்கார- 66,991
முடித்த பிரஷாந்தி- 65,933
டபிள்யு.டி.செனவிரத்ன- 61,612

ஐக்கிய மக்கள் சக்தி – 03

ஹேஷா விதானகே- 60,426
வருண லியனகே- 47,494
தலதா அதுகொரல- 45,105

‘கண்டியில் தமிழ்ப் பாராளுன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டது’

பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையைிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது. அக்கூட்டணி 8 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 4 ஆசனங்களையும் வென்றுள்ளன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 08

திலும் அமுனுகம – 171,758

மஹிந்தானந்த அளுத்கமகே – 161,471

லொஹன் ரத்வத்த – 140,917

அநுராத ஜயரத்ன – 140,798

கெஹலிய ரம்புக்வெல்ல – 110,832

வசந்த யாபா பண்டார – 108,940

குணதிலக ராஜபக்ச – 49,317

உதயன சாமிந்த கிரிந்திகொட – 39,904

ஐக்கிய மக்கள் சக்தி -04

ரவூப் ஹக்கீம் – 83,398

அப்துல் ஹலீம் – 71,063

எம். வேலுகுமார் – 57,445

லக்‌ஷ்மன் கிரியல்ல – 52,311

அரவிந்தகுமார், வடிவேல் சுரேஷ் பதுளையில் வெற்றி!

'கொரோனா'வின் பிடிக்குள் இருந்து மேலும் 16 பேர் தப்பினர்

2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான பதுளை மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நிமல் சிறிபாலடி சில்வா மாவட்டத்தில் முலிடம் பிடித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -06

நிமல் சிறிபால டி சில்வா – 1,41,901

சுதர்ஷன தெனிபிட்டிய – 71,766

தேனுக விதானகமகே – 68,338

சாமர சம்பத் தஸநாயக்க – 66,393

டிலான் பெரேரா – 53,081

ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி – 50,151

ஐக்கிய மக்கள் சக்தி – 03

வடிவேல் சுரேஸ் – 49,762

அரவிந்தகுமார் – 45,491

சமிந்த விஜேசிறி – 36,291

லட்சம் தொட்டார் ஜீவன் – இருப்பை தக்கவைத்தது முற்போக்கு கூட்டணி!

நுவரெலியா மாவட்டத்திலிருந்து இம்முறை 5 தமிழ் வேட்பாளர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களை பொதுஜன பெரமுன கைபற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அந்தவகையில் பொதுஜன பெரமுன கட்சியில் விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்கள்.
ஜீவன் தொண்டமான்  109155
சி.பி.ரட்நாயக்க  70871
எஸ்.பி.திஸாநாயக்க  66045
மருதபாண்டி ரமேஸ்வரன்   57902
நிமல் பியதிஸ  51225
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்கள்.
பழனி திகாம்பரம்  83392
வேலுசாமி இராதாகிருஸ்ணன்  72167
மயில்வாகனம் உதயகுமார்  68119
அதேவேளை, 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவமே கிடைக்கப்பெற்றிருந்தது.

145 ஆசனங்களுடன் வெற்றிவாகை சூடியது மொட்டு கட்சி!

10 ஆண்டுகளுக்கு பிறகு நுவரெலியாவைக் கைப்பற்றியது இ.தொ.கா. தலைமையிலான அணி!

பொதுத்தேர்தலில் 68 லட்சத்து 53 ஆயிரத்து 690 வாக்குகளைப்பெற்று 128 ஆசனங்களைக் கைப்பற்றி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி வெற்றிவாகை சூடியுள்ளது. அக்கட்சிக்கு 17 தேசிய பட்டியல் ஆசனங்களும் பகிரப்பட்டுள்ளன. இதன்படி மொத்தமாக 145 ஆசனங்களை மொட்டு கட்சி பெற்றுள்ளது.

சஜித் பிரேதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியானது 27 லட்சத்து 71 ஆயிரத்து 980 வாக்குகளைப்பெற்று 47 ஆசனங்களைக் கைப்பற்றியது. 7 தேசியப்பட்டியல் ஆசனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி அக்கட்சிக்கு மொத்தமாக 54 ஆசனங்கள் கிடைத்துள்ளது.

3 லட்சத்து 27 ஆயிரத்து 168 வாக்குகளைப்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி, ஒரு தேசியப்பட்டியல் உட்பட 10 ஆசனங்களை வென்றுள்ளது. தேசிய மக்கள் சக்திக்கு தேசியப்பட்டியல் உள்ளடங்களாக 3 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை வென்றி நிலையில் தேசியப்பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி. 0.53 வாக்குவீதத்துடன் 2 ஆசனங்களை வென்றுள்ளது.

அத்துடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி, தேசிய காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியன தலா ஒரு ஆசனம்வீதம் பெற்றுள்ளன.

ரவி கருணாநாயக்கவும் ‘அவுட்’! பாலித தெவரப்பெருமவுக்கும் நெருக்கடி!!

சர்வதேச பட விழாவில் ‘OH MY கடவுளே’

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று, பாராளுமன்றம்சென்ற அவர், அதன்பின்னர் நடைபெற்ற அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் வெற்றிபெற்றார்.

எனினும், இம்முறை தோல்வியடைந்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சி இரு அணிகளாக பிளவுபட்டமையே இதற்கு பிரதான காரணமாகும்.

அத்துடன், பிணைமுறி விவகாரம் தொடர்பிலும் கடந்தகாலங்களில் ரவி கருணாநாயக்க சர்ச்சைக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட பாலித தெவரப்பெருமவுக்கான வெற்றிவாய்ப்பும் குறைவாகவே காணப்படுவதாக தெரியவருகின்றது.

10 ஆண்டுகளுக்கு பிறகு நுவரெலியாவை கைப்பற்றியது இ.தொ.கா. தலைமையிலான அணி!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தேர்தல் தொகுதிகளில் இரண்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

கொத்மலை, ஹங்குராந்கெத்த ஆகிய தொகுதிகளிலேயே மொட்டு கட்சி முன்னிலை வகிக்கின்றது.

நுவரெலியா மாவட்டம் – கொத்மலை தேர்தல் தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 31,822
ஐக்கிய மக்கள் சக்தி – 18,599
ஐக்கிய தேசியக்கட்சி – 18,599
சுயேட்சைக்குழு 01 – 1004

நுவரெலியா மாவட்டம் – ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -29,869
ஐக்கிய மக்கள் சக்தி – 12,949
ஐக்கிய தேசியக்கட்சி – 2394

நுவரெலியா மாவட்டம் – நுவரெலியா – மஸ்கெலியா தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -122,028
ஐக்கிய மக்கள் சக்தி – 78,222

சுயேட்சைக்குழு -01 – 14,787
ஐக்கிய தேசியக்கட்சி –6,356

நுவரெலியா மாவட்டம் – வலப்பனை தேர்தல் தொகுதி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -34,919
ஐக்கிய மக்கள் சக்தி – 18,556

ஐக்கிய தேசியக்கட்சி –1,568

2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் நுவரெலியாவை இ.தொ.கா. அங்கம் வகிக்கும் அணி கைப்பற்றியுள்ளமை விசேட அம்சமாகும். 2015 பொதுத்தேர்தல், 2019 ஜனாதிபதி தேர்தல்களில் நுவரெலியாவில் இ.தொ.கா. அங்கம் வகிக்கும் அணி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. இம்முறை பொதுத்தேர்தலில் ஜீவன் தொண்டமான் தலைமையிலேயே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...