ஐக்கிய மக்கள் சக்தி – 5,144
தேசிய மக்கள் சக்தி – 3,135
ஐக்கிய தேசியக்கட்சி 1,507
நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவு இன்று பிற்பகல் 2 மணிக்குள் வெளியாகும் என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ரோஹன புஷ்பகுமார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
“நுவரெலியா மாவட்டத்தில் பிரதான வாக்கெண்ணும் நிலையங்கள் 4 இல் இன்று காலை 8 மணி முதல் வாக்கெண்ணும் பணி ஆரம்பமானது. இப்பகுதியில் சீரற்ற காலநிலை நிலவுகின்றது. இருந்தும் அதிகாரிகள் உரிய நேரத்தில் கடமைக்கு சமூகமளித்திருந்தனர்.
நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதிக்கான வாக்குகள் காமினி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள 48 வாக்கெண்ணும் நிலையங்களில் எண்ணப்படவுள்ளன.ஹங்குராங்கத்த மற்றும் வலப்பனை தேர்தல் தொகுதிகளுக்கான வாக்குகள், 25 வாக்கெண்ணும் நிலையங்களில் எண்ணப்பட்டுவருகின்றன. கொத்மலை தொகுதிக்கான வாக்குகள், 13 நிலையங்களில் எண்ணப்படுகின்றன.
நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகள் ஒன்றரை இரண்டு மணியளவில் வழங்கக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம். மாவட்டத்தில் 75சதவீத வாக்கு பதிவே இடம்பெற்றது. அதேபோல் நுவரெலியா மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. எவ்வழத அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. சீரற்ற காலநிலையே சிறு இடைஞ்சலை ஏற்படுத்தியது.” – என்றார்.
க.கிசாந்தன்
பொதுத்தேர்தல் தொடர்பான முதலாவது பெறுபேறு இன்று மதியம் 1.30 மணியளவில் வெளியாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தபால்மூல வாக்களிப்பு பெறுபேறுதான் முதலில் வெளியாகும் எனவும், மன்னார் மாவட்டத்திலிருந்தே முதல் முடிவு கிடைக்கக்கூடும் எனவும் அவர் கூறினார்.
பிரபல நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்ததாக கூறியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா. இவரிடம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், வர்த்தக படங்கள் இந்த இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு:-
“நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் பெயர் வரும். வர்த்தக படங்களில் நடித்தால் வளர்ச்சி வேறுமாதிரி இருக்கும் என்றெல்லாம் பிரித்து பார்த்து நான் கணக்கு போட்டது இல்லை. எதிர்பார்க்காமல் சினிமா துறைக்கு வந்து நடிகையானேன். அதிர்ஷ்டம் கூட சேர்ந்ததால் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கினேன்.
என்னை விட அழகானவர்கள். திறமையானவர்கள் எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களை மீறி முன்னுக்கு வந்து இருக்கிறேன். எதிர்பாராமல் இந்த தொழிலுக்கு வந்தாலும் இப்போது சினிமாதான் எனது வாழ்க்கை என்று சொல்லும் அளவுக்கு நடிப்பு மீது காதலை வளர்த்துக்கொண்டேன். அதனால்தான் அந்தமாதிரி படம் இந்த மாதிரி படம் என்றெல்லாம் வேறுபடுத்தி பார்க்காமல் எல்லாவிதமான கதைகளிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.”
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் ஆகியோர் நடித்து கடந்த பெப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் ஓ மை கடவுளே.
இதில் விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் வந்தார். காதல் நகைச்சுவை படமாக தயாராகி இருந்தது. அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார்.
கொரோனா ஊரடங்கில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ஓ மை கடவுளே படத்தை பார்த்து விட்டு பாராட்டினார்.
அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவிவில். ‘ஒ மை கடவுளே’ படம் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படி இருந்தது. அசோக் செல்வன் இயல்பாக நடித்துள்ளார். திரைக் கதை சிறப்பாக இருந்தது” என்று கூறியிருந்தார்.
தெலுங்கிலும் படத்தை ரீமேக் செய்கின்றனர். இந்த நிலையில் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஓ மை கடவுளே படம் தேர்வாகி உள்ளது.
எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 15ஆம் திகதவரை இந்த திரைப்பட விழா நடக்க உள்ளது. ஏற்கனவே கார்த்தியின் கைதி படத்தையும் டோரன்டோ பட விழாவில் திரையிட தேர்வு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி 329 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிப்பிடித்து சாதனை படைத்தது.
இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 328 ஓட்டங்களை சேர்த்து ‘ஆல்-அவுட்’ ஆனது. 44 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறிய அந்த அணி கேப்டன் இயான் மோர்கன் (106 ரன்), டாம் பான்டன் (58 ரன்), டேவிட் வில்லி (51 ரன்) ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது.
அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் காரெத் டெல்னி 12 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இதன் பின்னர் கேப்டன் ஆன்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங்குடன் இணைந்தார்.
இருவரும் நிலைத்து நின்று ஆடி இங்கிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்தனர். 95 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ஸ்டிர்லிங் தனது 9-வது சதத்தை எட்டினார்.
ஸ்டிர்லிங் 142 ரன்னிலும் (128 பந்து, 9 பவுண்டரி, 6 சிக்சர்), 6-வது சதத்தை நிறைவு செய்த பால்பிர்னி 113 ரன்னிலும் (112 பந்து, 12 பவுண்டரி) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 214 ரன்கள் திரட்டியது சிறப்பம்சமாகும்.
இதைத் தொடர்ந்து ஹாரி டெக்டரும், கெவின் ஓ பிரையனும் கூட்டணி அமைத்து தங்கள் அணிக்கு ‘திரில்’ வெற்றியை தேடித்தந்தனர். அயர்லாந்து 49.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 329 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் உலக சாம்பியன் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது.
டெக்டர் 29 ரன்னுடனும், ஓபிரையன் 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய சாகிப் மக்மூத் 3-வது பந்தை புல்டாசாக வீசினார். இடுப்புக்கு மேலே வந்த அந்த பந்தை நடுவர் ‘நோ-பால்’ என்று அறிவித்தார். அது அயர்லாந்து அணி ஆறுதல் வெற்றியை தொடுவதை எளிதாக்கியது.
ஒரு நாள் போட்டியில் அயர்லாந்து அணியின் அதிகபட்ச ‘சேசிங்’ இதுவாகும். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் பெங்களூருவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 328 ரன் இலக்கை எட்டியதே சிறந்த சேசிங்காக இருந்தது. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஒரு அணி வெற்றிகரமாக துரத்திப்பிடித்த அதிகபட்ச ரன் இலக்கும் இது தான்.
இருப்பினும் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வென்று இருந்த இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வசப்படுத்தியது. பால் ஸ்டிர்லிங் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
கொரோனா பேரிடருக்கு மத்தியில் அமெரிக்க மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் புரட்டிப் போட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.
உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
அங்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும், அந்தக் கொடிய வைரசின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இப்படி அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் சூழலில், இயற்கைப் பேரிடர்களும் தன் பங்குக்கு அமெரிக்காவை உலுக்கி வருகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட டெக்சாஸ் மாகாணத்தை ஹன்னா என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயலால் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை இசையாஸ் என்ற சக்தி வாய்ந்த புயல் நேற்று முன்தினம் தாக்கியது. அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான இந்த புயல், வடக்கு கரோலினா மாகாணத்தில் ஓஷன் இஸ்லே கடற்கரை பகுதியில் கரையை கடந்தது.
அப்போது, மணிக்கு, 136 கி.மீட்டர் வேகத்துக்கும் அதிகமாக, பலத்த காற்று வீசியது. கடல் அலைகள், 5 அடிக்கு மேல் எழும்பின.
புயலைத் தொடர்ந்து வடக்கு கரோலினாவில், இடை விடாது கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்கு உள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையம், புயலின் தாக்கம் குறித்து ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இதனால், வடக்கு கரோலினாவின் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
எனினும் வடக்கு கரோலினா மாகாணத்தின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளக்காடாகி இருப்பதால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வடக்கு கரோலினாவை தொடர்ந்து பென்சில்வேனியா, மேரிலேண்ட் மற்றும் நியூயார்க் ஆகிய மாகாணங்களிலும் இசையாஸ் புயல் தனது வேகத்தை காட்டியது.
சூறாவளி காற்று சுழன்றடித்ததில் வீடுகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சாலையில் சரிந்து விழுந்தன.
இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து முடங்கியுள்ளது.
இசையாஸ் புயலால் வடக்கு கரோலினாவில் 2 பேர், பென்சில்வேனியாவில் 2 பேர், மேரிலேண்ட் மற்றும் நியூயார்க் மாகாணங்களில் தலா ஒருவர் என இதுவரை 6 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயலால் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கெண்ணும் பணிகள் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
9 ஆவது நாடாளுமன்றுக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
5 மணியளவில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற பின்னர் சுமார் 8 மணியளவில் வாக்குப் பெட்டிகள் யாவும் பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தன.
இம்முறை தேர்தலில் 71வீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் இன்று பிற்பகல் 3 மணியளவில் முதலாவது தேர்தல் முடிவை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் இறுதி தேர்தல் முடிவுகளை இன்று நள்ளிரவு அளவில் வழங்கக்கூடியதாக இருக்கும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
9ஆவது பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதன்போது வாக்குபதிவு வீதம் 71 ஆக இடம்பெற்றுள்ளது.
2015 ஆம் ஆண்டுடன் இம்முறை வாக்குபதிவு வீதம் சற்று குறைந்துள்ளது.
1977- 94.14%
1989 – 63.60%
1994- 76.24%
1994-76.24%
2000 – 73.31%
2001-76.03%
2004 -75.96%
2010-61.26%
2015 -77.66%
2020 -71%
ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு இன்று மாலை நிறைவடைந்தது. இன்றைய தேர்தல் வாக்களிப்பு வீதம் 70 சதவீதமாக அமைந்திருந்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
நாளை பிற்பகல் 3.00 மணியளவில் முதலாவது பெறுபேற்றை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும், இறுதி பெறுபேறு நாளை நள்ளிரவு அளவில் வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதேவேளை மாவட்ட ரீதியில் பதிவாகியுள்ள வாக்களிப்பு வீதங்கள் பின்வருமாறு அமைந்திருந்தது.
கொழும்பு மாவட்டம்- 67%
களுத்துறை மாவட்டம்- 70%
கண்டி மாவட்டம்- 72%
மாத்தளை மாவட்டம்- 72%
நுவரெலியா மாவட்டம்- 75%
காலி மாவட்டம் – 70%
மாத்தறை மாவட்டம்- 71%
ஹம்பாந்தோட்டை மாவட்டம்- 76%
யாழ்ப்பாணம் மாவட்டம்- 57%
வன்னி மாவட்டம்- 73%
மட்டக்களப்பு மாவட்டம்- 76%
திஹாமடுல்ல மாவட்டம்- 73%
திருகோணமலை மாவட்டம்- 73%
குருநாகல் மாவட்டம்- 60%
புத்தளம் மாவட்டம்- 64%
அனுராதபுரம் மாவட்டம்- 70%
பொலன்னறுவை மாவட்டம்- 72%
பதுளை மாவட்டம்- 74%
மொனராகலை மாவட்டம்- 75%
இரத்தினபுரி மாவட்டம்- 71%
கேகாலை மாவட்டம்- 71%
கிளிநொச்சி மாவட்டம்- 71.52%
மன்னார் மாவட்டம்- 79.49%
வவுனியா மாவட்டம்- 74%
முல்லைத்தீவு மாவட்டம்- 76.25%
கம்பஹா மாவட்டம்- 63%