Home Blog Page 3917

நுவரெலியா மாவட்டத்தில் 75வீத வாக்குபதிவு!

நுவரெலியா மாவட்டத்தில் இன்றைய (05.08.2020) தினம் வாக்களிப்பு மிகவும் சுமுகமாக நடைபெற்றதாகவும் மாவட்டத்தில் 75 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
498 வாக்களிப்பு நிலையங்களில் 577,717 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.  பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூல வாக்குகள் 19741 .நாளைய தினம் காலை7.00 மணியளவில் (06.08.2020) வாக்கு என்னும் பணிகள் ஆரம்பமாகவுள்ளது.
வழமையாக நுவரெலியா காமினி தேசிய பாடசாலையிலேயே வாக்குகள் என்னப்படும்.ஆனால் இம்முறை நான்கு இடங்களில் வாக்குகள் கணக்கிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் 45 வாக்கு என்னும் நிலையங்களும் நுவரெலியா தொழில்நுட்ப கல்லூரியில் 15 வாக்கு என்னும் நிலையங்களும் நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் 35 வாக்குகள் என்னும் நிலையங்களும் தபால் மூல வாக்குகளை கணக்கிடுவதற்காக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் 10 வாக்கு என்னும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.மொத்தமாக 95 வாக்கு என்னும் நிலையங்களில் வாக்குகள் கணக்கிடப்படவுள்ளது.
இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 13 சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன.8 பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 275 பேர் போட்டியிடுகின்றனர்.
நாளை  (06.08.2020)  மாலை 4.00 மணியளவில் மாவட்ட பெறுபேறுகள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.நாளை மறுதினம் (07.08.2020) விருப்பு வாக்குகளின் விபரம் வெளியிடப்படுவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக நுவரெலியா மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவிக்கின்றார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

வாக்களிப்பு நிறைவு! நாளை காலை வாக்கெண்ணும் பணி ஆரம்பம்!!

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

9 ஆவது பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமானது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே வாக்களிப்பு இடம்பெற்றது.

நாடளாவிய ரீதயில் 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பாதுகாப்பு கடமையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகளும் இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபட்டனர்.

வாக்களிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வாக்குப்பெட்டிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்  வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச்செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

 நாளை காலை 7 மணி முதல் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும். மாலை 4 மணிக்குள் முதலாவது முடிவு வெளிவரும் எனவும், நள்ளிரவுக்குள் இறுதி முடிவு வெளியாகும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 13 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 13 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,537 ஆக அதிகரித்துள்ளது.

286  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேத மந்திரங்கள் முழங்க ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது.
 
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக காலை 9.30 மணியளவில் டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லக்னோ வந்த பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி சென்றார்.
 
அயோத்தி வந்ததும் பிரதமர் மோடி, அங்குள்ள ஹனுமன் கோவிலில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமரை வழிபட்ட பிரதமர் மோடி, பூஜைகளையும் செய்தார். பின்னர், கோவில் வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டு வைத்தார்.
 
இதையடுத்து, பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
 
தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை தொடங்கியது. இதில், மாஸ்க் அணிந்த படி பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றனர்.
 
இதையடுத்து, ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மூன்றரை ஆண்டுகளில் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று!

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தன்னுடைய அறக்கட்டளை சார்பாக கொரோனா பாதித்தவர்களுக்காக நிதி திரட்டி வருகிறார். 100 ரூபாவுக்கும் மேல் யார் வேண்டுமானாலும் நிதி தரலாம் என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதையடுத்து, திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தனக்கு சில அறிகுறிகள் தென்பட்டதையடுத்து மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச்சீட்டை படமெடுத்தவர் நாவலப்பிட்டியவில் கைது!

தான் வாக்களிப்பதை தொலைபேசிமூலம் படமெடுத்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டிய மத்திய மகாவித்தியாலயத்திற்கு வாக்களிக்க சென்ற நபரொருவரே இன்று முற்பகல் நாவலப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்களிப்பு பகுதிக்குசென்றதும் குறித்த நபர் தொலைபேசிமூலம் படமெடுப்பதைகண்ட தேர்தல் கடமை அதிகாரி, அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவரை நாவலபிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களும் வெற்றிபெற்ற கட்சிகளும்!

1947 முதல் 2015 வரை இலங்கையில் நடைபெற்றுள்ள 15 பாராளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சி 08 தேர்தல்களிலும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி 07 தேர்தல்களிலும் வெற்றிபெற்று அரியணையேறியுள்ளன.

பிரதான இரு அரசியல் கட்சிகளுள் ஒன்றாக விளங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது 68 ஆண்டுகளுக்கு பின்னர் -தலைமை வழங்கும் அந்தஸ்த்தை இழந்து, புதிதாக உதயமான கட்சியுடன் கூட்டணி அமைத்து பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றது.

நுவரெலியா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தனது சொந்த சின்னத்திலும் (கை) அக்கட்சி போட்டியிடுகின்றது.

அதேபோல் ஐக்கிய தேசியக்கட்சியும் இரு அணிகளாக பிளவுபட்டே தேர்தலை எதிர்கொள்கின்றது.ர ணில் விக்கிரமசிங்க தலைமையிலான அணி யானை சின்னத்திலும், சஜித் பிரேமதாச தலைமையிலான தரப்பு தொலைபேசி சின்னத்திலும் களம் காண்கின்றன.

ஐ.தே.க. உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் சஜித் பக்கமே நிற்கின்றனர். அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பங்காளிகளும் ரணிலைக்கவைிட்டு சஜித்துடன் சங்கமித்தே பொதுத்தேர்தலை எதிர்கொள்கின்றன.

அதேவேளை, உள்ளாட்சி மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் முதல் தடவையாக போட்டியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டிலும் அமோக வெற்றியை பெற்றுள்ள நிலையில், பொதுத்தேர்தலிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இலக்கை குறிவைத்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டணி அமைத்து தேசிய மக்கள் சக்தியாக தேர்தலை எதிர்கொள்கின்றது.

முதலாவது பொதுத்தேர்தல்…..

குறிப்பாக 1947 முதல் 1977 வரை தொகுதி அடிப்படையிலேயே பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் 1978 இற்கு பிறகே விகிதாசாரமுறை அறிமுகப்படுத்தப்பட்மை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 1947 இல் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் அமரர். டிஸ். சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிபெற்றது.

1952 இல் நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிநடைபோட்டது.

1956 இல் நடைபெற்ற 3ஆவது பொதுத் தேர்தலில் அமரர். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது. புதிய கட்சியை ஆரம்பித்து நான்கரை வருடங்களிலேயே அவர் ஆட்சியைப் பிடித்தார்.

1960 மார்ச் 19 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் நான்காவது பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியே அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது.

1947, 1952, 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது தேர்தல் திகதியாக மூன்றிற்கும் மேற்பட்ட நாட்கள் அறிவிக்கப்படும்.

1960இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதே ஒரே நாளில் வாக்களிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் 95 பேர் வாக்களிப்பு ஊடாகவும், அறுவர் நியமன உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். சபையில் மொத்தம் 101 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்.

எனினும் 1959 இல் தொகுதிகளை நிர்ணயிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, இலங்கையை 145 தேர்தல் தொகுதிகளாக நிர்ணயித்தது.

இதில் 140 தொகுதிகள் தனி அங்கத்துவ தொகுதிகளாகவும், நான்கு தொகுதிகள் இரட்டை அங்கத்துவ தொகுதிகளாகவும், மத்திய கொழும்பு மூன்று அங்கத்துவ தொகுதியாகவும் வரையறுக்கப்பட்டது.நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை 6ஆகநீடித்தது.

இதன்படி மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 இலிருந்து 157 ஆக அதிகரித்தது. (140+8+3 +6)

இலங்கையில் 5ஆவது பொதுத்தேர்தல் 1960 ஜீலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது.

1970 இல் நடைபெற்ற இலங்கையின் 6ஆவது பாராளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெற்றிபெற்றது.

1977 இல் நடைபெற்ற 7ஆவது பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் அரியணையேறியது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவே வரலாற்று வெற்றியாக கருதப்படுகின்றது.

சர்வஜன வாக்கெடுப்புமூலம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் மேலுமொரு தவணைக்கு நீடிக்கப்பட்டதால் 8ஆவது பொதுத்தேர்தல் 1989 இல்தான் நடைபெற்றது. இதில் ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றது.

அதன்பின்னர் 1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்று, ஐக்கிய தேசியக்கட்சியின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைத்தது.

2000 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா தலைமையிலான கூட்டணியே வெற்றிபெற்றது.எனினும், 11 மாதங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

2001 டிசம்பர் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றது. 2001 டிசம்பர் 09 ஆம் திகதி ரணில் பிரதமரானார். 2004 ஏப்ரல் 2 ஆம் திகதிவரை பதவியில் நீடித்தார்.

2004 ஏப்ரல் 02 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது.

2010 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிநடைபோட்டு 2 ஆவது முறையும் அரியணையேறிய மஹிந்த ராஜபக்ச, அதே ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தவும் நடவடிக்கை எடுத்தார்.

அத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணிக்கே அமோக வெற்றி கிடைத்தது. 144 ஆசனங்களுடன் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி மலர்ந்தது.

2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிபெற்றது.இத்தேர்தலில் 106 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக்கட்சி, சுதந்திரக்கட்சியுடன் இணைந்து தேசிய அரசமைத்தன.

இந்நிலையிலேயே 9 ஆவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது.

டேவிட் பெக்காமின் வாழ்க்கை சினிமா படமாகிறது

உலக புகழ் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் வாழ்க்கை சினிமா படமாகிறது.

உலக புகழ்பெற்ற இங்கிலாந்து கால்பந்தாட்ட முன்னாள் வீரர் டேவிட் பெக்காம். இவர் ஏராளமான சேம்பியன் பட்டங்களையும் விருதுகளையும் வென்றுள்ளார்.

கால்பந்து விளையாட்டு தவிர யுனிசெப் மற்றும் மலேரியா நோய் தடுப்பு அமைப்புகளில் உறுப்பினராக இருந்து சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டார்.

ஆப்பிரிக்காவில் வறுமையால் வாடும் குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்கினார். 2018 ஆம் ஆண்டுக்கான உயரிய யு.இ.எப்.ஏ.வின் தலைருக்கான விருதினையும் வென்றார்.

இந்த நிலையில் டேவிட் பெக்காம் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன என்றும் நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது என்றும் அறிவித்து உள்ளனர்.

ஏற்கனவே பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டானின் வாழ்க்கை தி லாஸ்ட் டான்ஸ் என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

‘மைதானத்தில் இருமினால் சிவப்பு அட்டை’

கொரோனா அச்சம் காரணமாக கால்பந்து போட்டி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி கால்பந்து போட்டியின்போது வேண்டுமென்றே எதிரணியினர் மற்றும் நடுவர் உள்ளிட்ட போட்டி அதிகாரிகளின் அருகில் சென்று இருமினால் சம்பந்தப்பட்ட வீரருக்கு சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றலாம் என்று சர்வதேச கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விடயத்தில் சம்பவத்தின் தன்மையை பொறுத்து நடுவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் – முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு (இலங்கை நேரம்) ஆரம்பமாகின்றது.

மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகின்றது.. கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்தில் நடக்கும் இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

அண்மையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இங்கிலாந்து அணி வீரர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சும், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டும் அந்த தொடரில் அமர்க்களப்படுத்தினர்.

அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. துணை தலைவர் பாபர் அசாம், ஆசாத் ஷபிக், வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, முகமது அப்பாஸ் ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள்.

அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் அளித்த பேட்டியில்,

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது. இதில் வெற்றி பெறும் அணிக்கு 40 புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...