Home Blog Page 3918

நுவரெலியா மாவட்டத்தில் வாக்குபதிவு விறுவிறுப்பு!

பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நுவரெலியா மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவருகின்றது.

சில பகுதிகளில் இடையிடையே மழைபெய்தாலும், குடைபிடித்து வரிசையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி காத்திருந்து மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர்.

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 275 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

8 ஆசனங்களை இலக்கு வைத்து 12 அரசியல் கட்சிகளில் இருந்து 132 பேரும், 13 சுயேட்சைக்குழுக்களில் இருந்து 143 பேரும் களமிறங்கியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  577,717 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

‘ஜனநாயக திருவிழா ஆரம்பம் – வாக்குரிமையை பயன்படுத்துவோம்’

ஜனநாயகத்தின் திருவிழாவாகக் கருதப்படும் பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, தற்போது வாக்கு பதிவு இடம்பெற்றுவருகின்றது.

எனவே, வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்குரிமையை பயன்படுத்துமாறு ‘மலையக குருவி’ கேட்டுக்கொள்கின்றது.

✍️வேட்பாளர்களின் எண்ணிக்கை – 7 ஆயிரத்து 452
✍️வாக்காளர்களின் எண்ணிக்கை – ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885
✍️வாக்களிப்பு நிலையங்கள் – 12 ஆயிரத்து 985
✍️ பாதுகாப்பு – 69 ஆயிரம் பொலிஸார், 10 ஆயிரம் சுகாதார அதிகாரிகள்
✍️ தேர்தல் பணிகளில் 3 லட்சம் அரச ஊழியர்கள்
✍️2 ஆயிரத்து 759வாக்கெண்ணும் நிலையங்கள்
✍️வாக்கெண்ணும் பணி நாளை ஆரம்பம் 

✍️ஒரு வாக்காளருக்கான செலவு 523 ரூபா.

லெபலான் வெடிப்பு சம்பவம் – 78 பேர் பலி ! 4000 மேற்பட்டோர் காயம்!!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 78 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெய்ரூட்டில் துறைமுக பகுதியில் நடந்த வெடிப்பு சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு கிடங்கில் 6 வருடங்களாக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் இந்த வெடிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அந்நாட்டு  ஜனாதிபதி மைக்கேல் ஆன், 2750 டன் அமோனியம் நைட்ரேட்டை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தது “ஏற்கத்தக்கதல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெடிப்பு சம்பவத்தால் பல்வேறு கட்டடங்கள் சேதம் ஆகியுள்ள நிலையில் காயமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்துள்ள அந்நாட்டு அதிபர் மைக்கேல் அவசரகால நிதியிலிருந்து 100 பில்லியன் லிரா உடனடியாக விடுவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை பேரழிவு என்று குறிப்பிட்டுள்ள அந்நாட்டு அதிபர், இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு மத்திய தரைக்கடலில் இருக்கும் சைப்ரஸ் தீவில் வெடிப்பு சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

அரியணையேறப்போவது யார்? விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குபதிவு

இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் 9ஆவது பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமானது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்து 652 பேரும், சுயேட்சைக்குழுக்களில் இருந்து 3 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 7 ஆயிரத்து 452 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

160 தேர்தல் தொகுதிகளில் இருந்து இவர்களில் 196 பேர் வாக்களிப்புமூலமும், 29 பேர் தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவுசெய்யப்படுவார்கள். 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்களும் 2 ஆயிரத்து 773 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமையில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகளும் இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாலை 5 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்ததும் ‘சீல்’ வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். மறுநாள் காலை அதாவது 6 ஆம் திகதி காலை 8 மணி முதல் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும்.

முதலாவது தேர்தல் முடிவை மாலை 4 மணிக்கும் இறுதி தேர்தலை முடிவை நள்ளிரவு 12 மணிக்குள்ளும் வழங்குவதற்கு தேர்தல் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது. விருப்பு வாக்கு முடிவுகள் 7 ஆம் திகதி நள்ளிரவுக்குள் வெளியாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் பிரதான இரு கட்சிகளாக கருதப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியன இம்முறை மூன்றாம் நிலை கட்சிகளாகவே களத்துக்கு வந்துள்ளன.  இதில் ஐக்கிய தேசியக்கட்சி 22 தேர்தல் மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட்டாலும் சுதந்திரக்கட்சி 3 மாவட்டங்களில் மட்டுமே போட்டியிடுகின்றது. ஏனைய மாவட்டங்களில் மொட்டு கட்சியுடன் இணைந்து பயணிக்கின்றது.

முதல்முறையாக பொதுத்தேர்தலை சந்திக்கும் கட்சிகளான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு அணிகளுக்கிடையில்தான் அதிகாரத்துக்கான போட்டி நிலவுகின்றது என அரசியல் அவதானிகளால் சுட்டிக்காட்டப்படுகின்றது. வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதான போட்டிக்கட்சியாக கருதப்படுகின்றது.

2 ஜனாதிபதிகள், 2 பிரதமர்களின் மகன்மார்கள் தேர்தலில் போட்டி! ஜனாதிபதி பதவி வகித்த இருவரும் களத்தில்

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் முன்னாள் எம்.பிக்கள் 208 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் ஒரு தடவையேனும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிகள் இருவர், முன்னாள் பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகளின் இரு புதல்வர்கள் ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர்.
மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிகளாவர் என்பதுடன், சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ச ஆகியோர் முன்னாள் ஜனாதிபதிகளின் புதல்வர்களாவர். ரணில் விக்கிரமசிங்க முன்னாள் பிரதமராவார்.
அத்துடன், முன்னாள் பிரதமர்களான திமு ஜயரட்ன, ரட்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோரின் புதல்வர்களும் மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.
8ஆவது நாடாளுமன்றத்தில் சபாநாயகராக பதவிவகித்த கரு ஜயசூரிய இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. தேசியப்பட்டியலிலும் அவர் இடம்பெறவில்லை.
பிரதி சபாநாயகராக செயற்பட்ட திலங்க சுமதிபால ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின்கீழ் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.
குழுக்களின் பிரதி தவிசாளராக செயற்பட்ட செல்வம் அடைக்காலநாதன் இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் வன்னி மாவட்டத்தில் களமிறங்கியுள்ளார்.

தேர்தலில் கட்சிகளுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்படும் முறை

பாராளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.

ஆளப்போவது எந்த கட்சி, வெற்றிப்பெறப்போகும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிவதற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்கு விகிதாசார முறைப்படி எவ்வாறு ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன , தேசியப்பட்டியல் ஆசனங்கள் எவ்வாறு பங்கிடப்படுகின்றன என்பது தொடர்பில் பார்ப்போம்.

ஆசன ஒதுக்கீடு 

பாராளுமன்றத் தேர்தலில் மாவட்டமொன்றில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் இருந்து நிராகரிக்கப்பட்ட வாக்குகளை கழிக்க வருவதே செல்லுபடியான வாக்குகளாகும்.

அவ்வாறுவரும் தொகையிலிருந்து – , செல்லுபடியான வாக்குகளில் 5 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப்பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் பெற்ற வாக்குகள் கழிக்கப்படும்.

அதன்பின்னர் வரும் வாக்கு தொகையை மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் ஆசனங்களால் (போனஸ் ஆசனம் ஒதுக்கிய பின் வருவது) பிரிக்க வருவதே முதல் சுற்றில் ஆசனத்தை பெறுவதற்கு தேவையான வாக்குகளாகும்.

உதாரணமாக 2015 ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக்கொண்டு இது தொடர்பில் விரிவாக ஆராய்வோம்.

2015 பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 734 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 32 ஆயிரத்து 788 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 87 ஆயிரத்து 946 ஆகும்.

இவ்வாறு செல்லுபடியான 3 லட்சத்து 87ஆயிரத்து 946 வாக்குகளில் இருந்து, 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் வாக்குகள் கழிக்கப்படும். (நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி ஆகிய இரு கட்சிகள் மாத்திரமே 5 வீதத்துக்கும் மேல் வாக்குகளைப்பெற்றிருந்தன.)

அதேபோல் 5 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப்பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 678 ஆககும். ( 387,946 – 11,678)

இதன்படி செல்லுபடியான   வாக்குகளில் இருந்து 5 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் வாக்குகளை கழிக்க வரும் எண்ணிக்கை 3 லட்சத்து 76 ஆயிரத்து 268 ஆகும்.

இந்த 3 லட்சத்து 76 ஆயிரத்து 268 வாக்குகளே ஆசன பங்கீட்டுக்கான வாக்குகளாக கருத்திற்கொள்ளப்படும். நுவரெலியா மாவட்டத்துக்கு 8 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப்பெற்ற கட்சிக்கு ஆரம்பத்திலேயே போனஸ் ஆசனம் ஒன்று ஒதுக்கப்படும். எஞ்சிய 7 ஆசனங்களே கட்சிகளுக்கு பங்கிடப்படும்.

இதன்படி 3 லட்சத்து 76 ஆயிரத்து 268 வாக்குகளை 7 ஆல் பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரிக்க வருவது 53 ஆயிரத்து 753 வாக்குகளாகும். அதாவது முதற்சுற்றில் ஒரு ஆசனத்தை பெறுவதற்கு தேவையான வாக்குகளாகும். கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளை குறித்த எண்ணிக்கையில் பிரிக்க வரும் மதிப்பீட்டுக்கமையவே ஆசனங்கள் ஒதுக்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியானது 2 லட்சத்து 28 ஆயிரத்து 920 வாக்குகளைப் பெற்றிருந்தது. இதனை ஒரு ஆசனத்துக்கான வாக்குகளால் பிரிக்க வருவது (228,920 /53,753) 4 ஆகும். இதன்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆனங்கள் ஒதுக்கப்பட்டது.

அடுத்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1 லட்சத்து 47 ஆயிரத்து 348 வாக்குகளை ப்பெற்றிருந்தது. (147,348/53,753) இதனை பிரிக்க வருவது 2 ஆசனங்கள். அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு 4 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 2 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. மீதம் ஒரு ஆசனம் இருக்கின்றது. 5 வீதத்துக்கும் மேல் பெற்ற வேறு கட்சிகளும் இல்லை. இதன்போதே எஞ்ஞசி வாக்குகள் கருத்திற்கொள்ளப்பட்டு 2ஆம் சுற்றில் ஆசனப்பகிர்வு இடம்பெறும்.

4 ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 13 ஆயிரத்து 908 வாக்குகளே எஞ்சியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணிக்கு 39 ஆயிரத்து 842 வாக்குகள் எஞ்சியுள்ளன. இதற்கமைய ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணிக்கே அந்த ஆசனம் வழங்கப்படும்.

இதன்படி  ஒரு போனஸ் ஆசனம் உட்பட ஐக்கிய தேசியக்கட்சிக்கு 5 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 3 ஆசனங்களும் நுவரெலியா மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டன. ஐக்கிய தேசியக்கட்சியில் விருப்பு வாக்கு பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்திருந்தவர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்திருந்தவர்களும் சபைக்கு தெரிவானார்கள்.

முதல் சுற்றிலேயே ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டால் எஞ்சிய வாக்குகள் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என்பதையும் கவனத்திற்கொள்வோம்.

தேசியப்பட்டியல்…….

தேசிய மட்டத்தில் செல்லுபடியான மொத்த வாக்குகள் 29 ஆல் பிரிக்கப்படும்.

2015 இல் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 11,166,975 ஆகும். இதன் 29 இல் பிரிக்க வருவது, 3 லட்சத்து 85 ஆயிரத்து 67 ஆகும்.

கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளை இந்த எண்ணிக்கையில் பிரிக்கவருவதற்கேற்ப தேசிய பட்டியல் ஆசனங்கள் பகிரப்படும்.

ஆளப்போவது யார்? 6 ஆம் திகதி நள்ளிரவுக்குள் இறுதி முடிவு!

நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலின் இறுதி பெறுபேறு நாளை மறுதினம் (6) நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

விருப்பு வாக்கு பெறுபேறுகளை வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு முன்னதாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

காலி பிரதேசத்தில் இன்று(05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

கம்பஹா மாவட்டத்தில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்கு கூடுதலான நேரம் தேவைப்படும் என்று தெரிவித்த அவர் வாக்களிப்பு மத்திய நிலையங்களில் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் தமக்குரிய நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

வாக்களிப்பு இடம்பெற்ற பின்னர் வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் விரைவாக எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் நடைபெறும் நாளைய தினம் பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சனையும் இல்லை. குழப்பநிலை ஏற்படக்கூடிய வாக்களிப்பு பிரதேசங்களில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கலகங்களை அடக்கும் படைப்பிரிவினர் தேவையில்லை. அவ்வாறானதொரு நிலை ஏற்படாது. இருப்பினும் நாம் அதற்கு தயாராக உள்ளோம். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

6 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடியதாக இருக்கும். விருப்பு வாக்குகள் தொடர்பான பெறுபேறுகளை 7 ஆம் திகதி நள்ளிரவிற்கு முன்னர் வழங்கக்கூடியதாக இருக்கும். ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தேர்தல் தொடர்பான முழுமையான வர்தமானியை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஒரு வாக்காளருக்கான செலவு எவ்வளவு தெரியுமா?

பொதுத்தேர்தலை முன்னிட்டு ஒரு வாக்காளருக்கான செலவு 523 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலைகாட்டிலும் இம்முறை ஒரு வாக்காளருக்கான செலவு ஒன்றரை மடங்களால் அதிகரித்துள்ளது. சுகாதார நடைமுறைகளுடன் வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளமையே இதற்கு காரணமாகும்.

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

‘கொவிட் – 19’ இலங்கையில் மேலும் எழுவர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 07 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,524 ஆக அதிகரித்துள்ளது.

293  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

நுவரெலியா எந்த கட்சி வசமாகும்? 6ஆம் திகதி பகல் 1 மணிக்கு முடிவு

பொதுத்தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தின் முடிவுகள் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரித்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.

வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறித்த வாக்களிப்பு நிலையங்களுக்கு பொறுப்பானவர்கள் ஊடாக இன்று காலை வாக்கு சீட்டுகளும், வாக்குபெட்டிகளும் பாதுகாப்பான முறையில் அனுப்பவைக்கப்பட்டன.
அதேபோல் 95 வாக்கெண்ணும் நிலையங்களும் உள்ளன.  6 ஆம் திகதி காலை முதல்  நான்கு தொகுதிகளிலும் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும்.
வாக்களிப்பு பணிகளுக்காக 4 ஆயிரம் அரச அதிகாரிகளும், வாக்கெண்ணும் பணிகளுக்காக 2 ஆயிரம் அரச அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 1500 பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல்விதிமுறைமீறல்கள் சுமார் 200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. சிறு அளவிலான சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்றவையே அவையாகும். பாரியளவில் எவ்வித சம்பவங்களும் பதிவாகவில்லை.
அதேவேளை நுவரெலியா மாவட்ட தேர்தல் முடிவை ஆகஸ்ட் 6 ஆம் திகதி பகல் 1 மணிக்கும், விருப்பு வாக்கு விபரத்தை இரவு எழு மணியளவிலும் வெளியிடக்கூடியதாக இருக்கும்.” – என்றார்.
க.கிசாந்தன்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...