Home Blog Page 3919

2000 கோவில்களில் புனித மண் – 100 நதிகளின் புனித நீர் – முழுக்க முழுக்க கற்களால் அமைக்கப்படும் ராமர் கோவில்

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் 5ஆம் திகதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்க உள்ளது. அதில், பங்கேற்கும் பிரதமர் மோடி, கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.

இதனிடையே, கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால், 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண், 100 நதிகளின் புனித நீரும் பூமி பூஜைக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. அயோத்தி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில் கோவில் கட்டுமானம் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது: ராமருக்கான கோவிலில், இரும்பு கம்பிகள், மரம், தாமிரம், வெள்ளை சிமென்ட் ஆகியவை பயன்படுத்தப்படாது. பல நுாற்றாண்டுகள் நிலைத்து இருக்கும் என்பதால், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே அமைக்கப்படும்.

இதற்கு தேவையான கற்கள் ஏற்கனவே அயோத்தியில் உள்ளன. கூடுதலாக தேவைப்படும் கற்கள், ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட உள்ளன. பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகியவை, கோவிலுக்கான அஸ்திவாரத்தில் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ராமர் கோவில் 360 தூண்களுடன் விசாலமான 5 குவி மாடங்களுடன், 161 அடி உயர கோபுர கலசத்துடன் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான கற்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஷி மலையில் இருந்து கொண்டு வரப்பட உள்ள நிலையில், மூன்றரை ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக சந்திரகாந்த் பாய் சோம்புரா என்பவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் ஸ்ரீராம் என எழுதப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட செங்கல்கள் இந்த கோவிலின் அடித்தளத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது சிறப்பு அம்சமாகும்.

கோவில் படிக்கட்டுகள் 16 அடி அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. ரங்க மற்றும் நிருத்திய மண்டபங்கள் கடந்த காலங்களில், கோவிலில் பணியாற்றும் தேவதாசி பெண்கள் நடனமாட பயன்பட்ட நிலையில், தற்போது அவை, மூன்று பக்கமும் இருந்து பகவான் ராமரை தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

‘நுவரெலியாவில் 498 நிலையங்களுக்கும் வாக்குப்பெட்டிகள் சென்றன’

நாளை இடம்பெறவுள்ள பொது தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  577,717  பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 95 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் அரச அதிகாரிகள் 6200 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 1500 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

க.கிசாந்தன்

கடும் எதிர்ப்பையும்மீறி முரளிக்காக விஜய் சேதுபதி களத்தில்

நடிகர் விஜய் சேதுபதி, கிரிக்கெட் வீரர் கதையில் எதிர்ப்பை மீறி நடித்து வருகிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படமாக உருவாக்கப்படும் என்றும் இதில் முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்றும் எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்குவார் என்றும் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்பதால் படத்துக்கு 800 என்று பெயர் வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமை என்று விஜய் சேதுபதியும் கூறியிருந்தார்.

வாழ்க்கை படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் ஈழ தமிழர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா அல்லது விலகி விடுவாரா என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் எதிர்ப்பை மீறி படத்தில் நடிக்க விஜய்சேதுபதி முடிவு செய்து இருப்பதாகவும் திரைக்கதை தயாராகி விட்டது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இசையமைப்பாளராக சாம்.சி.எஸ்.ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதர நடிகர், நடிகை தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் பட வேலைகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

‘தந்துவிடுங்கள் – இல்லையேல் தடை’! டிக்டாக்குக்கு ட்ரம்ப் காலக்கெடு!!

டிக்டாக் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் விற்பனை செய்யவில்லை என்றால் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கெடு விதித்துள்ளார்.

தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர்.

இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

மேலும், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது.

ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இதனால் இரு நாடுகௌக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை போன்றே சீனாவின் டிக்டாக் செயலியை தங்கள் நாட்டிலும் தடை விதிக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

அமெரிக்காவில் 80 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் பட்ச்த்தில் டிக்டாக்கின் தாய்நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

இதனால் டிரம்ப் தடை விதிக்கும் முன்னரே டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டு உரிமத்தை விற்பனை செய்யும் முயற்சியில் பைட் டான்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமம் விற்பனைக்கு வருவதால் அதை வாங்க அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், டிக்டாக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் ஒருவேளை டிக்டாக் செயலி தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டிக்டாக் செயலியை வாங்குவது தொடர்பாக மைக்ரோசாப்ட் தலைவர் சந்திய நாதல்லாவுடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன்.

இந்த செயலியை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பாதுகாப்பு காரணங்களுக்காக மிகவும் ஆபத்தான ஒன்று. ஆகையால் டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை மைக்ரோசாப்ட் நிறுவனமோ அல்லது வேறு ஏதேனும் அமெரிக்க பெருநிறுவனமோ வாங்குவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

டிக்டாக்கின் 30 சதவிகித பங்குகளை மட்டும் வாங்குவதை விட அந்நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளையும் வாங்குவது சுலபமான ஒன்றுதான்.

அமெரிக்க நிறுவனங்கள் யாரும் டிக்டாக் செயலியை வாங்கவில்லை என்றால் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

ஒருவேளை விற்பனை நடைபெறும் பட்சத்தில் அந்த விற்பனை ஒப்பந்தத்திற்கு உதவும் வகையில் டிக்டாக்கை வாங்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு குறிப்பிட்டத் தொகை அரசின் பங்காக வழங்கப்படும்.என தெரிவித்தார்.

’69 ஆயிரம் பொலிஸார், 8 ஆயிரம் சுகாதார அதிகாரிகள் களத்தில்’

பொதுத் தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் சுகாதார ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவதற்காக 8 ஆயிரம் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதிகாரிகள் தங்களுக்குரிய பணி இடங்களுக்கு இன்று முதல் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், சுகாதார அத்தியட்சகர்கள், நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள், குடும்பநல சுகாதார அதிகாரிகள், நிறைவுகான் வைத்தியர்கள் அடங்கலாக சுகாதார குழுவினர் தேர்தல் காலத்தில் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தலா ஒருவர் அல்லது இருவர் வீதம் சுகாதார உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொதுத் தேர்தல் காலத்தில் பாதுகாப்பு கடமைகளுக்காக 69 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்களிப்பு நிலையமொன்றில் இரு பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன், சில பகுதிகளுக்கு இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

6 ஆம் திகதி மாலை முதல் பெறுபேறு! 7 இல் விருப்பு வாக்கு முடிவு!!

முதலாவது தேர்தல் பெறுபேறு ஆகஸ்ட் 6 ஆம் திகதி மாலை 4 மணியளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை (05) முடிவடைந்ததும், நாளை மறுதினம் (06) காலை முதலே வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும். இதற்கமையவே முதல் முடிவு மாலை 4 மணியளவில் வெளியாகும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், விருப்பு வாக்கு பெறுபேறு ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்குள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளுக்கு விடுமுறை – 10 ஆம் திகதி கல்வி நடவடிக்கை ஆரம்பம்

பொதுத்தேர்தலினை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் 5, 6 மற்றும் 7ஆம் திகதிகளில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. க

கடந்த 27ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள தரம் 11, 12 மற்றும் 13ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டன. எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகும்.

20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது நடப்பது என்ன? விசேட தொகுப்பு!

9ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரால் நேற்று வெளியிடப்பட்டது.

பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவது சம்பந்தமாக ஜனாதிபதியால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலில், புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெறும் திகதியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலில் பொதுத்தேர்தலுக்கான திகதியும் (ஏப்ரல் – 25), பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் திகதியும் ( மே 14) அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பின்னர், கொரோனா வைரஸ் தாக்கத்தால் திகதி குறிப்பிடாமல் தேர்தலை, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஒத்திவைத்தார். அதன்பின்னர் திகதி குறிப்பிடப்பட்டிருந்தாலும் இரண்டாவது முறையும் தேர்தல் பிற்போடப்பட்டது.

இந்நிலையிலேயே ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.ஆனால் 9ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவித்தலை ஜனாதிபதி  வர்த்தமானிமூலம் அறிவிக்கவில்லை. இந்நிலையிலேயே நேற்று திகதி குறிப்பிடப்பட்டது.

எதுஎப்படியிருந்தாலும் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள் பற்றி பார்ப்போம்.இலங்கை ஜனநாயக சோஸலிஷக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வன்று, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளும், தேசியப்பட்டியல்மூலம் நியமிக்கப்பட்டவர்களும் சபைக்கு வருவார்கள்.

( பாராளுமன்றம் கூடும் முதல்நாளில் குறித்தொதுக்கப்பட்ட ஆசனத்தில்தான் உறுப்பினர்கள் அமரவேண்டும் என்பது கட்டாயமில்லை)அதன்பின்னர் கூட்டத்தினை கூட்டுவது குறித்தான ஜனாதிபதியின் பிரகடனத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் வாசித்த பின்னர், முதலில் சபாநாயகர் தேர்வு நடைபெறும்.சபாநாயகர் தேர்வு

எப்படி நடக்கும்?சட்டவாக்க சபையான பாராளுமன்றத்தில் சர்வபலம் படைத்த நபராக சபாநாயகரே திகழ்வார். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் இவரே பொறுப்புமிக்கவராக விளங்குவார்.ஜனநாயகத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் சபாநாயகர் பதவிக்கு அனுபவம்மிக்க – கண்ணியமான உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யப்படவேண்டும் என்பதே பொதுவான கருத்தாகும்.

அப்போதுதான் அவைக்குள்ளும் ஜனநாயகம் கோலோச்சும்.சபாநாயகர் பதவிக்கு உறுப்பினர் ஒருவரின்பெயரை முன்மொழிவதற்கு, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தீர்மானித்திருந்தால் முன்கூட்டியே அவரின் ஒப்புதலை பெற்றிருக்கவேண்டும்.

அவ்வாறு அனுமதி இல்லாமல் பிரேரிக்க மடியாது.அனுமதி பெற்றிருந்தால் நாடாளுமன்றசெயலாளரை விளித்து, குறித்த நபரை சபாநாயகராக தெரிவுசெய்யுமாறும், நாடாளுமன்றத்தின் அக்கிராசனத்தில் அமரும்படி பிரேரித்தல் வேண்டும்.

இந்த முன்மொழிவை மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் வழிமொழிய வேண்டும்.(கடந்த பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்கு கருஜயசூரியவின் பெயரை ரணில் விக்கிரமசிங்க முன்மொழிய அதனை நிமல் சிறிபாலடி சில்வா வழிமொழிந்தார்.)

இவ்வாறு ஒரு உறுப்பினரின் பெயர்மாத்திரம் முன்மொழியப்பட்டால் குறித்த நபரே சபாநாயகராக, நாடாளுமன்ற செயலாளரால் அறிவிக்கப்படுவார்.அதன்பின்னர் பெயரை முன்மொழிந்தவரும், வழிமொழிந்தவரும் சபாநாயகராக தெரிவானவரை அழைத்துச்சென்று சபாபீடத்திலுள்ள அக்கிராசனத்தில் அமரவைக்கவேண்டும்.

சபாநாயகர் பதவிக்கு இரண்டு உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். இருவரும் சமனான வாக்குகளைப் பெற்றால் , தெரிவுக்காக  திருவுளச்சீட்டிழுப்புமுறை கையாளப்படும்.

இரகசிய வாக்கெடுப்பின்போது உறுப்பினர்களுக்கு வாக்குச்சீட்டொன்று வழங்கப்பட்டிருக்கும். போட்டியிடும் வேட்பாளர்களின் ஒருவரின் பெயரை எழுதுவதற்கு ஒரு பகுதியும், உறுப்பினர் கையொப்பம் இடுவதற்கும் ஒரு பகுதி இருக்கும். இவை இரண்டும் நிரப்படவேண்டும்.

சபாநாயகராக தெரிவுசெய்யப்படுபவர், நாடாளுமன்ற செயலாளரின் நெறிப்படுத்தலின்படி உறுதியுரை எடுப்பார்.சபாநாயகர் தேர்வு நிலையியற்கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் நடந்தபின்னர், பாராளுமன்ற உறுப்பினர்கள் , சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வார்கள்.அதன்பின்னர் பிரதிசபாநாயகர், குழுக்களின் தவிசாளர் பதவிகளுக்கு தேர்வு இடம்பெறும்.

( ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் வாக்கெடுப்பு நடத்தப்படும்.) அதன்பின்னர் சபாநாயகரின் உரை இடம்பெறும். இந்நடவடிக்கைகள் மாத்திரமே கன்னிஅமர்வில் இடம்பெறும். அதன்பின்னர் பாராளுமன்றத்தினால் நிர்ணயிக்கப்படுகின்ற திகதிவரை சபை ஒத்திவைக்கப்படும்.

முதலாவது அமர்வில் ஜனாதிபதி கலந்துகொண்டாலும் அவருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது.

சபை கூடும் திகதியும் நேரமும் எவ்வாறு நிர்ணயிக்கப்படும்?

மாதந்தோறும் முதலாவது, மூன்றாம் வாரங்களில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் நாடாளுமன்றம் கூடவேண்டும்.செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பகல் ஒரு மணிக்கும், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் முற்பகல் 10.30 மணிக்கும் சபை அமர்வு ஆரம்பமாகும்.ஜனாதிபதியால் பாராளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டால் கூடாது.

விசேட அமர்வுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் சபை அவசரமாகக் கூடும்.கூட்ட நடப்பெண்!சபாபீடத்துக்கு தலைமைதாங்கும் ( அக்கிராசனத்தில்) அமர்ந்திருக்கும் உறுப்பினர் உட்பட 17 பேர் சபைக்குள் கட்டாயம் இருக்கவேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால், உறுப்பினர்கள் அந்நிலைமையை சபாபீடத்தின் கவனத்துக்கு கொண்டுவரலாம். அதன்பின்னர் அழைப்பு மணி அடிக்கப்படும் ( கோரம்) 5 நிமிடங்களுக்குள் 20 உறுப்பினர்கள் அவைக்குள் வராவிட்டால், சபை ஒத்திவைக்கப்படும்.

மஸ்கெலியாவில் பேராபத்து! ஒரே மரத்தில் 11 குளவிக்கூடுகள்!!

மஸ்கெலியா பிரதான வீதியில் ரொக்கூட் பகுதியிலுள்ள பாரிய வாகை மரத்தில் 11 குளவி கூடுகள் காணப்படுகின்றன.

மலைநாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடனான சீரற்ற காலநிலை மற்றும் கடும் காற்றால் மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தாலோ அல்லது கிளைக்கு கிளை மோதுண்டாலோ குளவி கூடு கலையும் அபாயம் உள்ளது.

தொழிலாளர்கள் தேயிலை மலையில் வேலைசெய்யும்போது இவ்வாறு நடைபெற்றால் அவர்களை குளவிகள் கொட்டக்கூடும். அவ்வீதியூடாக செல்பவர்களுக்கும் ஆபத்து காணப்படுகின்றது.

ஆகையால் சம்பந்தப்பட்ட நல்லதண்ணி வனத்துறையினர் இந்த குளவி கூடுகளை அகற்ற முன்வருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். முக்கியமாக இவ்விடத்தில் அதிகளவு மக்கள் பேருந்திற்காக காத்து நிற்பதும் காணக்கூடியதாக உள்ளது.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

7,452 பேரில் சபைக்கு செல்லபோகும் 196 பேர் யார்? 5 இல் வாக்களிப்பு!

‘கொரோனா’ வைரஸ் பரவவால் இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளுடன் நாளை மறுதினம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் 196 ஆசனங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்தும், சுயேட்சைக்குழுக்களில் இருந்தும் 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அரசியல் கட்சிகளின் சார்பில் 3 ஆயிரத்து 652 பேரும், 617 சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 380 பேரும் இம்முறை களமிறங்கியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். இதன்படி 19 ஆசனங்களை இலக்குவைத்து அங்கீகரிக்கப்பட்ட 16 அரசியல் கட்சிகளில் இருந்து 352 பேரும், 26 சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 572 பேரும் தேர்தலில் இறங்கியுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்திலேயே குறைந்தளவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகளிலிருந்து 88 பேரும், சுயேட்சைக்குழுக்களில் இருந்து 64 பேருமாக மொத்தம் 152 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர். கம்பஹா மாவட்டத்திலேயே கூடுதல் வாக்காளர்கள் இருக்கின்றனர். 17 லட்சத்து 85 ஆயிரத்து 964 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் சார்பில் 358 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 45 நிராகரிக்கப்பட்டு 313 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 697 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 80 நிராகரிக்கப்பட்டு 617 ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...