Home Blog Page 3920

போயா தினத்தில் அட்டனில் விற்பனைக்காக வைத்திருந்த மதுபான போத்தல்களைக் கைப்பற்றிய பொலிசார்

அட்டனில் மதுபான போத்தல்களை வைத்திருந்த இடமொன்று சுற்றிவளைக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டுள்ளதாக அட்டன் பொலிசார் தெரிவித்தனர்.

பெருமளவிலான மதுபான போத்தல்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போயா தினத்தில் மதுபான சாலைகள் கட்டாயம் மூடப்பட்டிருக்க வேண்டும் என்ற சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், இந்த மதுபான போத்தல்கள் எதற்காக வைக்கப்பட்டிருந்தன என்பது குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விற்பனைக்காக வைத்திருந்த மதுபான போத்தல்களைக் கைப்பற்றிய பொலிசார், சந்தேகத்தின் பேரில் ஒருவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

சிம்புவை தொடர்ந்து தனுஷுடன் சங்கமிக்கும் ‘குட்டி குஷ்பு’

சிம்புவுடன் இணைந்து மஹா படத்தில் நடித்து வரும் ஹன்சிகா, அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து, மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தில் இரண்டு ஹீரோயின்களாம், அதில் ஒருவராக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை ஹன்சிகா ஏற்கனவே கடந்த 2011-ம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் வெளியான மாப்பிள்ளை படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘முறைகேடு’ – சின்மயாமிஷன் முகாமையாளர்மீது இறம்பொடையில் தாக்குதல்!

இறம்பொடை ஆஞ்சநேயர் கோவிலிலுள்ள சின்மயாமிஷன் கிளையின் முகாமையாளர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் காயமுற்ற அவர் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த முகாமையாளருக்கு எதிராக இந்து அமைப்புகளும், தன்னார்வ நிறுவனங்களும் பல குற்றச்சாட்டுகளை சான்றுகள் சகிதம் முன்வைத்தும், சின்மயாமிஷன் ஆன்மீக நிறுவனத்தின் இலங்கை கிளை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என பரவலாக விசனம் வெளியிடப்பட்டுவருகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி முகாமையாளரின் ஒழுக்கமற்ற செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட நபரொருவர் நேற்று மாலை (03) அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

மலையக மக்களுக்கு ஆன்மீக சேவையாற்றும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சின்மயாமிஷன் நிறுவனம் ஆரம்பத்தில் சிறப்பாக செயற்பட்டாலும் தற்போது திசைமாறி பயணிப்பதாக இந்து குருமார்கள் அண்மையில் குற்றச்சாட்டியிருந்தனர்.

குறித்த ஸ்தாபனம் வியாபார நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், புனித தளத்தை அவமதிக்கும் விதத்தில் முகாமையாளரின் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் மலையக இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், சின்மயாமிஷன் நிறுவனத்தின் இலங்கைக்கிளை உறுப்பினர்களுக்குமிடையில் ஜுன் 14 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  கடும் சொற்போரால் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் ‘கொரோனா’ பரிசோதனை – இன்று மூவர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 03 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,517 ஆக அதிகரித்துள்ளது.

295  பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 823 ஆக இருக்கின்றது.

அதேவேளை, இலங்கையில் இதுவரையில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 90 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சர்வதேச பட விழாவில் ‘கைதி’

டொரன்டோ சர்வதேச பட விழாவில் ‘கைதி’ படம் தேர்வாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜூன் தாஸ், ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்திய படம் கைதி.

கதாநாயகி இல்லாமல் கதாநாயகனை மையப்படுத்தி வந்த கைதியின் வெற்றி திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்தது. தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் நல்ல லாபம் பார்த்தனர்.

தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு அங்கும் வரவேற்பு கிடைத்தது. இந்தியில் அஜய்தேவ்கான் நடிக்க கைதியை ரீமேக் செய்ய உள்ளனர்.

இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. இந்த படத்துக்கு பிறகுதான் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்க லோகேஷ் கனகராஜிக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் மேலும் பெருமை சேர்க்கும் வகையில் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட கைதி படம் தேர்வாகி உள்ளது. வருகிற 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இந்த திரைப்பட விழா நடக்க உள்ளது. இது கைதி படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘அபிஷேக் இன்னும் சிகிச்சையில் – மனம் வலிக்கிறது’

அபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைக்கும்போது மனம் வலிக்கிறது என அமிதாப் பச்சன் கூறி உள்ளார்.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இதில் ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவருக்கும் லேசான தொற்றுதான் என்பதால், முதலில் குணமாகி வீடு திரும்பினார்கள்.

நேற்று அமிதாப் பச்சனுக்கு கொரோனா நெகட்டிவ் வந்ததால் வீடு திரும்பினார். ஆனால், அபிஷேக் பச்சனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியானதால் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.

வீடு திரும்பிய அமிதாப் பச்சன் தனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து டுவீட் செய்திருந்தார். தற்போது அவருடைய பேஸ்புக்கில் அபிஷேக் சிகிச்சையிலிருப்பது மனம் வலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமிதாப் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்த பிறகு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளது நிறைவாக உள்ளது. ஆனால், அபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைக்கும்போது மனம் வலிக்கிறது.

மருத்துவச் சூழல், பரிசோதனைகள், லேப் அறிக்கைகள், உடல்நலன் குறித்த மதிப்பீடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மிகச்சிறந்த நிபுணர்கள் இந்தத் தனித்துவமான சூழலில் இரவு பகலாகப் போராடி வருகிறார்கள்.

ஒவ்வொரு கணமும் ஆலோசனை நடத்தி, தகவல் பரிமாற்றம் செய்து, உலகம் முழுவதும் உள்ள தங்கள் சக மருத்துவர்களுடன் பேசி எங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றனர்.

ஒவ்வொரு நிமிடமும் ‘அனைத்தும் சரி ஆகும்’ என்று எங்களுக்கு நம்பிக்கையூட்டி வருகின்றனர். வைரஸிடமிருந்து ஏராளமான உயிர்களைப் பாதுகாக்க மருந்து கண்டுபிடிக்க அவர்கள் போராடி வருகின்றனர்.

அவர்களை நான் ‘வெள்ளுடை தேவதைகள்’ என்று குறிப்பிட்டபோது, அவர்களின் சிறப்பான சேவைக்கு மத்தியில் நானும் படுத்திருப்பேன் என்று நான் கற்பனை செய்திருக்கவில்லை. போராடுவதற்கான ஊக்கத்தையும் வலிமையையும் நமக்கு அளிக்கிறார்கள். அவர்களின் பணி இன்றியமையாதது. அவர்களுக்கான எனது நன்றியுணர்வு எப்போதும் தீராது”. இவ்வாறு அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

‘சச்சினின் பேட்டில் அதிவேக சதமடித்த அப்ரிடி’

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அதாவது 37-பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்த அப்ரிடி உலக அளவில் மிகவும் அபாயகரமான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக விளங்கினார்.

1996-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நைரோபியில் நடைபெற்ற போட்டியில் 11 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் மின்னல் வேக சதம் விளாசி தனது 16-வயதிலேயே கிரிக்கெட் ரசிகர்களை புருவத்தை உயர்த்த வைத்தவர் அப்ரிடி.

அப்ரிடியின் இந்த சாதனை 18 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சனால் தகர்க்கப்பட்டது.

பாகிஸ்தான் அணிக்கு பந்து வீச்சாளராகவும் சராசரி பேட்ஸ்மேன் ஆகவும் அறிமுகம் ஆன அப்ரிடி, தனது 2-வது போட்டியிலேயே இவ்வளவு இமாலய சாதனையை படைத்தது அவரது எஞ்சிய கிரிக்கெட் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது.

இந்த நிலையில், அப்ரிடி 37- பந்துகளில் சதம் அடித்த போது பயன்படுத்திய பேட், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கருடையது என்று தெரியவந்துள்ளது.

அப்ரிடி ஏற்கனவே தனது சுய சரிதை புத்தகத்தில் இதை தெரிவித்திருந்தாலும் கூட பாகிஸ்தான் முன்னாள் அசார் முகம்மது தற்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை தேர்தல் வரலாற்றையே மாற்றியமைத்த ‘கொரோனா’!

இலங்கை அரசியல் வரலாற்றிலே பொதுத்தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டு – அத்தினத்தில் வாக்களிப்பு நடைபெறாமல் இரண்டு தடவைகள் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இம்முறை பதிவானது.

கொரோனா’ வைரஸ் தாக்கம் காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டது.

8 ஆவதுநாடாளுமன்றத்தின் பதவிகாலம் ஆகஸ்ட் மாதம்வரை இருந்தாலும், நான்கரை வருடங்களில் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கான அறிவித்தல் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த மார்ச் 2 ஆம் திகதி வெளியிட்டார்.

இதன்படி ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும்,  நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் மே 14 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பின்னர், கொரோனா வைரஸ் தாக்கத்தால் திகதி குறிப்பிடாமல் தேர்தலை, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஒத்திவைத்தார்.

அதன்பின்னர் திகதி குறிப்பிடப்பட்டிருந்தாலும் இரண்டாவது முறையும் தேர்தல் பிற்போடப்பட்டது. இந்நிலையிலேயே கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் 5 ஆம் திகதி தேர்தலை நடத்தும் முடிவை ஆணைக்குழு எடுத்தது.

இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் (சனப் பிரதிநிதிகள் சபை) 1947 ஆகஸ்ட் 23 முதல் 1947 செப்டம்பர் 20 வரை 19 நாட்கள் நடைபெற்றது.

அதன்பின்னர் 1952, 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது தேர்தல் திகதியாக மூன்றிற்கும் மேற்பட்ட நாட்கள் அறிவிக்கப்பட்டுவந்த நிலையில் 1960 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதே ஒரே நாளில் வாக்களிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதேவேளை, 1965, 1970, 1977, 1989, 1994, 2000,2001, 2004, 2010, 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களும் திட்டமிட்ட அடிப்படையில் நடைபெற்றது.

தெற்கு கிளர்ச்சி, உள்நாட்டுப்போர் ஆகியவற்றுக்கு மத்தியிலும் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல்கள் நடைபெற்றன.(வாக்களிப்பு வீதம் குறைவாக இருந்தாலும் தேர்தல் பணி இடம்பெற்றது.)

ஆனால், இலங்கையில் முதலாவது பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு இற்றைக்கு 73 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், குறித்தொகுக்கப்பட்ட தினத்தில் தேர்தலை நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல வழமையாக பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான கையோடு தேர்தல் களமும் சூடுபிடித்து அனல்கக்க ஆரம்பிக்கும். ஆனால், கொரோனா வைரஸ் தாண்டவத்தால் இம்முறை எதிர்ப்பார்த்தளவு தேர்தல் திருவிழா களைகட்டவில்லை. பிரமாண்ட கூட்டங்களை நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தேர்தலொன்றில் சுகாதார பரிசோதகர்கள் நேரடியாக தொடர்புபடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

வழமையாக வாக்களிப்பு முடியும் தினத்தன்றே வாக்கெண்ணும் பணியும் ஆரம்பமாகும். ஆனால், இம்முறை மறுநாளே அப்பணி இடம்பெறவுள்ளது.   வாக்களிப்பு நேரமும் ஒரு மணிநேரத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. புள்ளடி இடுவதற்கு பேனை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலங்கை தேர்தலில் கொரோனா பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

பயணத்தை முடித்து கடலில் தரையிறங்கிய விண்வெளி வீரர்கள்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில், முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக மெக்சிகோ வளைகுடாவின் கடல் பகுதியில் தரை இறங்கியுள்ளனர்.

‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூள்’ என்ற விண்வெளி ஓடம் மூலம் அமெரிக்க விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் விண்ணிற்கு இரண்டு மாத பயணம் மேற்கொண்டனர்.

இருவரையும் விண்வெளி வாகனத்தில் இருந்து பத்திரமாக பூமியில் தரை இறக்க மீட்பு கப்பல் அனுப்பப்பட்டது. இருவரும் ஃபோலோரிடா வளைகுடா கடற்பகுதியில் உள்ள மெக்சிக்கோ வளைகுடாவில் பாதுகாப்பாக தரை இறங்கியுள்ளனர்.

நாசா விண்வெளி வீரர்கள் இரண்டு மாத விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இந்த திட்டத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதல் முறையாக தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உடன் சேர்ந்து நாசா செயல்படுத்தும் இத்திட்டம் வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. இதுவரை சொந்த விண்வெளி திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வந்த நாசா, முதல் முறையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த விண்கலத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களை விண்ணிற்கு அனுப்பியது.

உலகிலேயே இதுபோன்ற சேவையை வழங்கும் முதல் நிறுவனம் எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ், சேவையை பயன்படுத்துவது, நாசாவிற்கு செலவை குறைப்பதாக கூறப்பட்டது. இந்த வெற்றிகரமான பயணத்தின் மூலம் அமெரிக்காவின் புதிய வர்த்தகம் துவங்கியுள்ளது.

எதிர்காலத்தில் விண்வெளி பயணம் மேற்கொள்வதற்கான அனைத்து போக்குவரத்து தேவைகளுக்கும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனத்தை அமெரிக்க பயன்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்த பயணம் குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் குவையின் ஷாட்வெல் கூறுகையில் ”இது மிகவும் முக்கியமான நாள், இந்த வெற்றியை நாம் கொண்டாடவேண்டும். வரும் காலங்களில் இன்னும் கடுமையான பல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். செவ்வாய்க்கு பயணம் மேற்கொள்ளவும் முயற்சிக்க வேண்டும்” என தெரிவித்தார்.

வைரஸ் அச்சம் வேண்டாம் – வாருங்கள் – வாக்களியுங்கள்!

வாக்குச் சாவடிகளில் சுகாதார வழிகாட்டல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதுடன், முகக்கவசங்களை கட்டாயம் அனைவரும் அணிய வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில்,

வாக்குச் சாவடிகளில் வைரஸ் பரவலுக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. வாக்குச் சாவடிகளுக்குள் தொற்றுடன் வரவோ அல்லது வைரஸ் தொற்றுடன் வெளியேறவோ எவ்வித வாய்ப்புகளும் இல்லை.

வாக்குச் சாடவடிகளுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும். கைகளையும் கழுவிக்கொண்டு வரவேண்டும். வாக்குச் சாவடியில் முதலாவதாகவுள்ள அதிகாரிக்கு முகக்கசவங்களை பணித்து வாக்களர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முகத்தை காட்ட வேண்டும். பின்னர் மீண்டும் கைகளை கழுவ வேண்டும்.

அதன் பின்னர் கை விரலை மடித்து மை பூசிக்கொள்ள வேண்டும். ஒருமுறை மாத்திரமே மை பூசும் பேனை பயன்படுத்தப்படுத்தப்படும் என்பதால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வைரஸ் பரவலுக்கு வாய்ப்பு இல்லை. அதனால் வாக்களார்களை அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு வருமாறு கோரிக்கை விடுக்கிறேன். எவரும் வாக்குச் சாவடிகளுக்கு வைரஸை கொண்டுவரப் போவதுதில்லை என்பதுடன் கொண்டுப்போகவும் போவதில்லை.

வாக்குச் சாவடியிலிருந்து வெளியேறும் போது கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். வாக்குச் சாவடியில் ஒரு மீட்டர் இடைவெளியை அனைவரும் பேண வேண்டும். முடிந்தால் கருப்பு அல்லது நீளப் பேனையை கொண்டுவாருங்கள். இல்லாவிட்டால் நாம் தொற்று நீக்கப்படும் பேனைகளை வழங்குவோம். வாக்களிப்பதற்கான ஆவணத்தை கட்டாயம் அனைவரும் கொண்டுவர வேண்டும் என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

நுவரெலியாவில் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

0
நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 20) பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக பல பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடும் காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், நோர்வூட் பகுதியில் போக்குவரத்து...

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...