Home Blog Page 3921

‘மனசாட்சியின் பிரகாரம் வாக்களிப்போம் – ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்’

“ வாக்கு என்பது எங்கள் உரிமை. அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்ககூடாது. ஆயிரம் வேலைகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்.” – என்று ‘மலையக உரிமைக் குரல்’ என்ற சிவில் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பின் தலைமைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

“இலங்கைவாழ் மக்களுக்கு 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரமே சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை இலங்கைவாழ் மக்கள் வாக்குரிமையைப்பயன்படுத்திவருகின்றனர். ஆனால், 100 வீத வாக்குபதிவு என்பது இன்னமும் எட்டாக்கனியாகவே இருப்பது கவலைக்குரிய விடயமாகும். குறைந்தபட்சம் 90 வீதத்துக்கும் மேலாவது வாக்களிப்பு இடம்பெறவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

மலையக தமிழர்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் 1948 இல் பறிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டனர். 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குடியுரிமையும், வாக்குரிமையும் வழங்கப்பட்டிருந்தாலும் அனைவருக்கும் வாக்குரிமை கிடைப்பதற்கு 2002வரை காலமெடுத்தது.

பல போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் மத்தியிலேயே வாக்குரிமையை வென்றெடுத்தோம். அவ்வுரிமை இல்லாதபோது இருந்த பெறுமதி தற்போது சிலருக்கு புரிவதில்லை. அதனால்தான் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் சிலர் ஏனோ தானோவென வாக்களிப்பதால் அவை நிராகரிக்கப்படுகின்றன. இந்நிலைமை மாறவேண்டும். இம்முறை உரிய வகையில் வாக்குரிமையப் பயன்படுத்துவோம்.

மக்களுக்காக மக்கள் அரசியல் நடத்தக்கூடிய, கொள்கைகளை முன்னிறுத்தி செயற்படக்கூடிய வேட்பாளர்களை ஆதரிப்போம். ஜனநாயகத்துக்கும், மனித உரிமைகளுக்கும் சவால் விடுக்கும் வேட்பாளர்களை நிராகரிப்போம்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி மாலைவரை காத்திருக்காமல் காலையிலேயே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி வாக்களிப்பு நிலையங்களுக்குச்சென்று சமூக இடைவெளியைப்பின்பற்றி ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறும், வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் வாக்களிப்புக்கு தேவையான ஆவணங்கள் உள்ளனவா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். ” – என்றுள்ளது.

பொதுத்தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

வாக்கு என்பது உங்கள் பலம் – உரிமை. எனவே, அதனை முறையாக அளிக்கவேண்டியதும் உங்கள் பொறுப்பாகும்.

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற பின்னர், உங்களுக்கு வழங்கப்படும் வாக்குச்சீட்டில் முதலில் தேர்தலில் போட்டியிடும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவின் சின்னத்துக்கு முன்னால் புள்ளடி (X) இடவேண்டும்.

அதன்பின்னர் அக்கட்சியில் போட்டியிடும் மூவருக்கு விருப்பு வாக்குகளை வழங்கலாம். வேட்பாளர்களின் இலக்கங்களுக்கு மேல் புள்ளடி இடவேண்டும்.

மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை பயன்படுத்தமுடியாது. நீங்கள் விரும்பும்பட்சத்தில் ஒருவருக்கு மாத்திரம் விருப்பு வாக்கை வழங்கலாம்.   ( அவ்வாறு வழங்கினால் மூன்று வாக்குகளும் அவருக்கு சென்றடையும் என அர்த்தப்படாது)

கட்சி அல்லது சுயேட்சைக்குழுவுக்கு முன்னால் புள்ளடி இடாமல் விருப்பு வாக்கு பயன்படுத்தப்படுமானால் அந்த வாக்கு நிராகரிக்கப்பட்ட வாக்காகவே கருதப்படும். மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்கை பயன்படுத்துவதும் பிழையான நடைமுறையாகும். புள்ளடி இடுவதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் இடவும். அவ்வாறு இல்லாவிட்டால் அந்த வாக்கும் ஏற்றுக்கொள்ளப்படாது.

வாக்களிப்பு நிலையத்துக்கு செல்வதற்கு முன்னர் வாக்காளருக்கான அட்டை, அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ( தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு….) இருக்கின்றனவா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இம்முறை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே தேர்தல் நடைபெறுகின்றது. எனவே, முகக்கவசம் அணிந்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுங்கள். வாக்களிப்புக்காக ஒரு மணிநேரம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதால் இறுதிநேரம்வரை காத்திருக்காது முடிந்தளவு விரைந்துசென்று வாக்குரிமையை பயன்படுத்தவும்.

(வழமையாக காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையே வாக்களிப்பு இடம்பெறும். இம்முறை மாலை 5 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 

மழையுடனான சீரற்ற காலநிலை தொடரும்!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தோடு, வடமேல் மாகாணத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்திலும் பொலன்னறுவை, மன்னார், திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்தை அண்டிய பகுதிகளில் உயர் அலைகள் காரணமாக கடல் அலைகள் கரையை அண்டிய நிலப்பகுதிகளுக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை!

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

மாவட்ட ரீதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை வருமாறு,

  1.  கொழும்பு – 17 லட்சத்து 9 ஆயிரத்து 209
  2. கம்பஹா – 17 லட்சத்து 85 ஆயிரத்து 964
  3. களுத்துறை – 9 லட்சத்து 72 ஆயிரத்து 319.
  4. கண்டி – 11 லட்சத்து 29 ஆயிரத்து 100
  5. மாத்தளை – 4 லட்சத்து 7 ஆயிரத்து 569 
  6. நுவரெலியா – 5 லட்சத்து 77 ஆயிரத்து 717 
  7. காலி – 8 லட்சத்து 67 ஆயிரத்து 709
  8. மாத்தறை – 6 லட்சத்து 59 ஆயிரத்து 587
  9. அம்பாந்தோட்டை – 4 லட்சத்து 93 ஆயிரத்து 192
  10. யாழ்ப்பாணம் – 5 லட்சத்து 71 ஆயிரத்து 848
  11. வன்னி – 2 லட்சத்து 87 ஆயிரத்து 24
  12. மட்டக்களப்பு – 4 லட்சத்து 9 ஆயிரத்து 808
  13. திகாமடுல்ல – 5 லட்சத்து 13 ஆயிரத்து 979
  14. திருகோணமலை – 2 லட்சத்து 8 ஆயிரத்து 868
  15. குருணாகலை – 13 லட்சத்து 48 ஆயிரத்து 787
  16. புத்தளம் – 6 லட்சத்து 14 ஆயிரத்து 370
  17. அநுராதபுரம் – 6 லட்சத்து 93 ஆயிரத்து 634
  18. பொலன்னறுவை – 3 லட்சத்து 31 ஆயிரத்து 109
  19. பதுளை –  6 லட்சத்து 68 ஆயிரத்து 166
  20. மொனறாகலை – 3 லட்சத்து 72 ஆயிரத்து 155
  21. இரத்தினபுரி – 8 லட்சத்து 77 ஆயிரத்து 582
  22. கேகாலை – 6 லட்சத்து 84 ஆயிரத்து 189

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா!

சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 49 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

உலக நாடுகளை தற்போது கதி கலங்க வைத்து வரும் கொரோனா முதன் முதலில் சீனாவின் உகான் நகரில் தான் கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதும் உஷாரான சீனா பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது.

உகான் நகரம் அமைந்துள்ள ஹுபெய் நகரை முழுவதுமாக முடக்கியது. சீனா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் அந்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில், உகான் நகரில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கொரோனா நோயாளியும் குணம் அடைந்து விட்டதாக சீனா பெருமிதப்பட்டது.

ஆனாலும், சீனாவில் அவ்வப்போது கொரோனா தலைகாட்டி வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்றய நிலவரப்படி 14 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 14 பேர் குணமடைந்துள்ளனர்.

புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 49 நபர்களில் 33 பேர் உள்ளூர்வாசிகள் என்றும், 16 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், வடக்கு சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் இதுவரை 54,385 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4,634 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 79,003 பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 19 ஐ.பி.எல். தொடர் ஆரம்பம்!

செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

மும்பை ஐபிஎல் நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்தினபுரி தமிழர்களை ஏனைய சமூகத்திற்கு நிகராக வாழ வைப்பேன் – ஆனந்தகுமார் உறுதி

ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் இன்றும் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.

வெவில்ல பகுதிக்கு சென்ற எஸ்.ஆனந்தகுமாருக்கு மக்கள் பெருமளவிலான ஆதரவை வழங்கியிருந்தனர்.

இரத்தினபுரி தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்க விரைவில் தீர்வை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் இதன்போது உறுதியளித்திருந்தார்.

கவனீபாரற்ற சமூகமாக வாழ்ந்து வரும் இரத்தினபுரி தமிழர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கி, எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் இரத்தினபுரி தமிழர்களை ஏனைய சமூகங்களுக்கு நிகராக வாழ வைப்பதே தனது ஒரே எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு இலங்கைக்கு வருகைத் தந்த நாள் முதல் இன்று வரை அதே நிலையிலேயே வாழ்ந்து வருவதாகவும், சிறந்ததொரு தமிழ் தலைமைத்துவம் இல்லாமையே அதற்கான காரணம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தான் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எடுக்க நாள் முதல் இரத்தினபுரி தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக மாத்திரமே முன்னின்று உழைப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

கல்வி, தொழில்வாய்ப்பு, காணி உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தனது பாராளுமன்ற காலப் பகுதியில் முன்னெடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, வேவல்வத்தை, இறக்குவானை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்றைய தினம் சென்ற எஸ்.ஆனந்தகுமார் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

‘தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் எமது சேவை தொடரும்’ – முரளி

” பொதுத்தேர்தலில் எனது சகோதரர் வென்றாலும், தோற்றாலும் மக்களுக்கான எமது சமூகசேவை தொடரும்.” – என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் முத்தையா பிரபுவை ஆதரித்து, ஹட்டன், ரொசல்ல பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நான் அரசியல்வாதி அல்லன், ஒரு கிரிக்கெட் வீரர். கடந்த 22 வருடகாலமாக சமூகசேவையில் ஈடுபட்டுவருகின்றேன். இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தியும் எமது சேவைகளை தொடர எண்ணியுள்ளேன். கணிணி பயிற்சி, ஆங்கில மொழி பயிற்சி நிலையம் உட்பட எட்டு கட்டங்களாக எமது சேவைகள் தொடரும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியலுக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அதனை ஏற்கவில்லை.  என்னை போன்றவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என ஜனாதிபதி உறுதியாக நம்பினார். இதனால்தான் எனது சகோதரனை அரசியலுக்கு அனுப்பியுள்ளேன்.

எம்மீது நம்பிக்கை இருந்தால் அவருக்கும் ஒரு விருப்புவாக்கை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் எமது சமூகசேவை தொடரும்.” – என்றார்.

அதேவேளை, இதன்போது உரையாற்றிய சனத் ஜயசூரிய,” இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் உறுப்பினர்களுக்கு வாக்களிக்காமல், சிறந்த வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவர்களையே மக்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும்.”  -என்று குறிப்பிட்டார்.

சாரதிகளே அவதானம் – மலையகத்தில் அடை மழை, கடும் பனிமூட்டம்!

மலைநாட்டில் மழையுடன்கூடிய சீரற்ற வானிலை தொடர்கின்றது. இந்நிலையில் இடையிடையே கடும் பனிமூட்டமும் ஏற்படுகின்றது. எனவே, மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சாரதிகள் தமது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு பயணிக்குமாறு போக்குவரத்து பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் களுகல, பிட்டவல, கினிகத்தேனை,கடவளை,தியகல, வட்டவளை , ஹட்டன் ஆகிய பிரதேசங்களிலும்
ஹட்டன் நுவரெலியா வீதியில் குடாகம, கொட்டகலை, தலவாக்கலை, சென்கிளேயர், ரதெல்ல,  நானுஓயா ஆகிய பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் காணப்படுவதால் வளைவுகள் நிறைந்த இவ்வீதிகளில் அவதானமாக வாகனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
மலையகத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழை காரணமாகவும் கடும் குளிர் காரணமாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
அடை மழையால் பல இடங்களில் மண்சரிவு அபாயமும் காணப்படுகின்றது.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

‘தேர்தலில் தோற்றாலும் மக்களை கைவிட்டுசெல்லமாட்டேன்’ – திகா

அடக்குமுறையாளர்களின் கைகளுக்குள் ஆட்சி அதிகாரம் சென்றுவிட்டால் மலையகத்தில் மாற்றம் வராது. எனவே, மலையகத்தில் மறுமலர்ச்சிக்கான தளத்தை உருவாக்கிய தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு பேராதரவு வழங்கி ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலர ஒத்துழைப்பு வழங்குங்கள் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

லிந்துலை மவுஸ்ஸாஎல்ல பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

” பிரச்சாரங்களின்போது எமக்கு மக்கள் முழு ஆதரவையும் வெளியிட்டனர். 5 ஆம் திகதிவரை இந்த ஆதரவு தொடரவேண்டும். வாக்களிப்பு தினத்தன்று தொலைபேசி சின்னத்துக்கு முன்னால் புள்ளடியிட்டு, மூன்று விருப்பு வாக்குகளையும் எம்மூவருக்கும் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். குறைகூறி வாக்கு கேட்கவில்லை, மாறாக நான்கரை வருடங்கள் சேவை செய்து விட்டு வந்தே ஆணைகோருகின்றோம்.

மலையக மக்களின் ஆதரவானது ஏமாற்றுபவர்களின் கைகளுக்கு சென்றுவிடக்கூடாது. எம்மைபோன்ற நல்லவர்கள் அங்கம் வகிக்கும் முற்போக்கு கூட்டணியின் கைகளுக்குள்ளேயே அதிகாரம் வர வேண்டும். இதனை மக்கள் வழங்குவார்கள் என நம்புகின்றோம்.

நான்கரை வருடங்களில் மலையகத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்திருந்தாலும், எதனையும் செய்யவில்லையென 80 ஆண்டுகள் சும்மா இருந்தவர்கள் விமர்சனம் செய்கின்றனர்.

நாம் வென்றாலும், தோற்றாலும் மக்களுடன்தான் இருப்போம். ஆனால், ஏனையோர் இங்கிருந்து ஓடிவிடுவார்கள். இந்த அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலம் கிடைத்தால் தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும். இதனால் தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்துக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, அடக்குமுறை அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி ஜனநாயக ஆட்சியை மலரச்செய்வதற்காக தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த பின்னர் மலையகத்தில் இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். அத்துடன், பெருந்தோட்ட தொழிலாளர்களை நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம்.” – என்றார்.

க.கிசாந்தன்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

மாற்றம் வரும்: ஆட்சிக்கு வருவதற்கு பாரிய திட்டங்கள் உள்ளன

0
“மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குரிய  பாரிய திட்டங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்துள்ளது” என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற புத்தாண்டு...

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...

அமைதி பேச்சு இப்போதைக்கு இல்லை: ஈரான் தெரிவிப்பு!

0
அமெரிக்காவுடன் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. தெஹ்ரானில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, “பேச்சுவார்த்தையை,...