Home Blog Page 3922

‘மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்கு’

” மக்கள் வசம் இருக்கும் மிகப்பெரிய ஜனநாயக ஆயுதமே வாக்குரிமையாகும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உங்களை ஆளப்போகின்றவர்களை தெரிவுசெய்யும் நாளே தேர்தலாகும். அவ்வாறு தெரிவுசெய்யப்படுபவர்கள் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பவர்களாக இருக்கவேண்டும். அதற்கேற்றவகையில் மக்கள் நிச்சயம் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

” இலங்கையர்களுக்கு 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது. இதன்படி இலங்கையின் முதலாவது அரசுப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 1931 ஜுன் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை நடைபெற்றுள்ளது.

1947 ஆம் ஆண்டுக்கு முன்னர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு, அவர் அங்கம் வகிக்கும் கட்சிக்கான நிறத்தின் அடிப்படையிலேயே வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.1947 ஆம் ஆண்டுதான் அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுக்களுக்கும் தேர்தல் சின்னங்கள் வழங்கப்பட்டு, தொகுதிவாரி முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது.

எனினும், 1978 இல் தொகுதிவாரிமுறைமாறியது. விகிதாசார – விருப்புவாக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இன்றளவிலும் அந்தமுறையிலேயே தேர்தல் நடைபெற்றுவருகின்றது. இந்த விருப்பு வாக்குமுறைதான் சிக்கலுக்குரியது. வாக்குகளைப்பெறுவதற்காக என்னவெல்லாம் செய்யமுடியுமோ அவற்றை அரசியல்வாதிகள் செய்கின்றனர். இந்நிலைமை மாறவேண்டும்.

எமது மலையக சொந்தங்களுக்கு 1948 இல் வாக்குரிமை பறிக்கப்பட்டது, 1989 இலும் அதன்பின்னர் 2000 காலப்பகுதியிலுமே அந்த உரிமை மீளக்கிடைத்தது. எனவே, நாம் அனைவரும் கட்டாயம் வாக்குரிமையைப் பயன்படுத்தவேண்டும். அது நீங்கள் நிறைவேற்ற வேண்டிய மிக முக்கிய ஜனநாயக கடமையாகும்.

5 ஆம் திகதி காலைவேளையிலேயே சென்று வாக்களித்து விடுங்கள். வாக்களிக்கசெல்வதற்கு முன்னர் அடையாள அட்டை அல்லது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் உள்ளனவா என்பதை அவமதானித்துக்கொள்ளுங்கள்.

கட்டாயம் முகக்கவசம் அணியவும், வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளியை பின்பற்றவும். பேனையொன்றையும் எடுத்துசெல்லவும். வாக்களிப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம்.” – என்றுள்ளது.

‘நுவரெலியா உட்பட 19 மாவட்டங்களில் வெற்றி உறுதி’ – பஸில்

நுவரெலியா உட்பட 19 மாவட்டங்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் என்று பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் 130 ஆசனங்களுக்குமேல் எமது அணி கைப்பற்றும். 150 தான் எமது இலக்காக இருக்கின்றது. அதற்கான பேராதரவை மக்கள் வழங்குவார்கள் என நம்புகின்றோம்.

யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களே எமக்கு சவால்மிக்க தேர்தல் களம். மற்றும்படி ஏனைய 19 தேர்தல் மாவட்டங்களிலும் வெற்றி உறுதி.”  – என்றும் அவர் குறிப்பிட்டார்.

இ.தொ.காவே மலையக மக்களின் பலம் – ஓரணியில் திரளுமாறு ஜீவன் அறைகூவல்

” இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸே மலையக மக்களின் பலம். அபிவிருத்திகளையும், உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான பேரம் பேசும் சக்தியும் எம்மிடமே இருக்கின்றது. எனவே, காங்கிரஸை மேலும் பலப்படுத்தி மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தில் அனைவரும் இணைவோம்.” – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.

கொட்டகலையில் 02.08.2020 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது,

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எங்கு பிரச்சாரக்கூட்டங்களை நடத்தினாலும் மக்கள் திரண்டுவந்து பேராதரவை வழங்குகின்றனர். எமக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகியதை அண்மைக்காலங்களில் கண்டோம். இன்று பேராதரவு கிட்டியுள்ளது. மலையகத்தின் தாய்க்கட்சியான காங்கிரஸின் பின்னால்தான் நாம் நிற்போம் என்பதை மக்கள் உறுதிப்படுத்திவிட்டனர்.

விமர்சன அதேபோல் குறைகூறும் அரசியலுக்கு அப்பால் கொள்கை ரீதியில் திட்டங்களை முன்வைத்தே எமது அணி பிரச்சாரம் முன்னெடுத்தது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறானதொரு அரசியல் கலாச்சாரத்தையே மக்கள் விரும்புகின்றனர். அதனை ஏற்படுத்துவதற்கே நாம் முயற்சிக்கின்றோம்.

எதிர்காலத் திட்டங்களை நாம் முன்வைத்த பின்னர், தற்போது சிலர் அதேபோன்று செய்கின்றனர். எம்மால் முன்வைக்கப்படும் யோசனைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்கின்றனர். பரவாயில்லை, மக்கள் நலனே எமக்கு முக்கியம். இரண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களையும் ஒப்பிடுங்கள். அதில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்கள் எமது விஞ்ஞாபனத்திலேயே இருக்கின்றது என்பதை கூறிக்கொள்கின்றேன்.

மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதே எனது எண்ணம். அதற்காக தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கின்றேன். இலக்கை அடைவதற்கான வயதும் எனக்கு இருக்கின்றது. எனவே, அதிகாரத்தை வழங்கி எனது கரங்களைப்பலப்படுத்தி மாற்றத்துக்கான பயணத்தில் நீங்களும் இணையவேண்டும். இன்னும் 10 ஆண்டுகளில் மலையகம் எப்படி இருக்கவேண்டும் என நாம் யோசிக்கின்றோம். அதற்கான திட்டங்களை அடுத்துவரும் காலப்பகுதியில் அமைப்போம்.

அதேவேளை, மலையகத்தில் சுமார் 2 ஆயிரம் வீடுகள்வரைதான் கட்டப்பட்டுள்ளன. விரைவில் கணக்கு விபரத்தை வெளியிடுவோம். கட்டப்பட்ட வீடுகளிலும் பல குறைப்பாடுகள் உள்ளன. மனிதன் வாழும் வகையில் அவை அமையவில்லை.

இறுதிநேரத்தில் குழப்பங்களை விளைவிப்பதற்கு சிலர் முயற்சிக்கலாம். விழிப்பாக இருங்கள். மக்களின் பலம் காங்கிரஸ்தான். என்னதான் நடந்தாலும் தொண்டமான் இருக்கிறார் என்ற நம்பிக்கை அன்று எமது மக்கள் மத்தியில் இருந்தது. இன்று தலைவர் இல்லை. ஆனாலும் எமது பலத்தை இழந்துவிடக்கூடாது. காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து, வெற்றியின் பங்காளிகளாகி மாற்றத்தை நோக்கி பயணிக்க ஓரணியில் திரள்வோம்.” – என்றார்.

க.கிசாந்தன்

இலங்கையில் ‘கொரோனா’ பிடிக்குள் இருந்து மேலும் 75 பேர் தப்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 75 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,514 ஆக அதிகரித்துள்ளது.

291 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 816 ஆக இருக்கின்றது.

‘எவ்வாறான சவால்கள் வந்தாலும் மக்கள் சக்தியால் முறியடிப்பேன்’

” எனது தந்தை 1989 இல் நங்கூர சின்னத்தில் போட்டியிட்ட போதும் 199இல் சுயேட்சையாக மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்ட போதும் மலையக அரசியலில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தினார் அவரது துணிவான கொள்கைகளும் மக்களின் தெளிவான ஆதரவுமே அதற்கு காரணம் என்று மலையக மக்கள் முன்னணியின் பிரதிசெயலாளர் நாயகமும் சட்டத்தரணியும் கோடரி சின்ன சுயேட்சை வேட்பாளருமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

” தனது ஒரு வாக்கினால் இலங்கை அரசியலையே தீர்மானித்த என் தந்தையின் வழியிலும் அதே உணர்வோடு மாற்றத்தை நோக்கி பயணிக்க காத்திருக்கும் என் சகோதர சகோதரிகள் நண்பர்கள் தந்தையின் விசுவாசிகளின் ஆதரவோடும் இம்முறை நான் நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமல்ல மலையக அரசியலிலும் நிச்சயமாக ஒரு மாற்றத்தினை பேரிடியாக ஏற்படுத்துவேன்.

இனவாதிகளின் நெருக்கடி பாதுகாப்பு துறையினரின் கெடுபிடி மலையக தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தோட்ட நிர்வாகத்தின் பழி வாங்கல் அனைத்துக்கும் எதிராக தனிநபராக போராடி எம் மண்ணின் பெருமையையும் எம் மக்களின் அடையாளத்தையும் சர்வதேசத்துக்கு அடையாளம் காட்டினார்.
அவரது கொள்கையின் வாரிசாக இன்று ஒரு பெண்ணாக தனிநபராக எம்மக்களுக்காக நானும் களமிறங்கியுள்ளேன்.

எத்தனை முனைகளிலிருந்தும் எப்படியான எதிர்ப்புகள் வந்தாலும் மக்கள் சக்தியாலும் என் தந்தை போதித்த மன வலிமையாலும் அதனை உடைத்தெறிவேன் என் வெற்றியின் மூலம் மலையகம் மீண்டும் சுவாசக் காற்றை சுவாசிக்கும் நம்பிக்கையை இளைய தலைமுறைக்கு ஏற்படுத்துவேன். மலையகத்திலிருந்து நாம் மேற்கொள்ளும் நமது அரசியல் அபிவிருத்தியினுடாக எம்மவரை சர்வதேசம் திரும்பிப் பார்க்கச் செய்வேன்.” – என்றார்.

கஞ்சா வைத்திருந்த இளைஞன் மஸ்கெலியாவில் கைது!

மஸ்கெலியா பிரவுன் தோட்டத்தை சேர்ந்த இளைஞரொருவர் மஸ்கெலியா பொலிஸாரால் இன்று (02) காலை கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 2 கிரேம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச். பண்டாரவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதானவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எம். செல்வராஜா, பதுளை

கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவு – முதல் நாடாக அறிவித்தது ரஷ்யா

கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஷியா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது.

உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.

இந்த நிலையில், ரஷியாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியின் சோதனைகள் நிறைவு அடைந்துள்ளன. இதை அந்த நாட்டின் சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ அறிவித்தார்.

இதையொட்டி அவர் கூறுகையில், “கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து விட்டன. அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, “அக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட திட்டமிட்டிருக்கிறோம். கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை அக்டோபரில் போட திட்டமிடுகிறோம்” என குறிப்பிட்டார்.

தடுப்பூசிக்கான சோதனைகள் முடிந்து விட்டதாக முதல் நாடாக ரஷியா அறிவித்து இருப்பது உலக அரங்கை அதிர வைத்துள்ளது.

இதற்கிடையே ரஷியாவில் நேற்று முன்தினம் காலை நிலவரப்படி புதிதாக 5,482 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு தொற்று பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 8 லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டி உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்திருக்கிறது.

2ஆவது போட்டியிலும் மண்டியிட்டது அயர்லாந்து!

அயர்லாந்துக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது

அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.

கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகள் மோதிய 2ஆவது ஒருநாள் போட்டி நேற்று பகல்-இரவு ஆட்டமாக சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 32.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இதேநேரம் இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது மற்றும் இறுதி போட்டி எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘9 ஆவது பாராளுமன்றத்தில் முதலாவது அனுதாப பிரேரணை ஆறுமுகன் தொண்டமானுக்கு’

9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அனுதாப பிரேரணை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பிலேயே முன்வைக்கப்படவுள்ளது.

9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் நடைபெற்று சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதிதவிசாளர் ஆகிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பின்னர், சபாநாயகரின் உரையுடன் சபை ஒத்திவைக்கப்படும்.

அதன்பின்னர் பிரிதொரு நாளில் சபை அமர்வு ஆரம்பமாகும். அவ்வாறு ஆரம்பமாகி அனுதாப பிரேரணைமீது விவாதம் நடைபெறுவதற்கு நாள் ஒதுக்கும்போது, முதலாவதாக அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

நுவரெலியா மாவட்ட தேர்தல் களம் – விசேட தொகுப்பு!

எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா  மாவட்டத்திலிருந்து வாக்களிப்பதற்கு 5 லட்சத்து 77 ஆயிரத்து 717 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. வாக்கு எண்ணும் நிலையங்கள் 85 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலைவிட இம்முறை தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன.
பிரதான வாக்கு என்னும் நிலையங்களாக நுவரெலியா காமினி தேசிய பாடசாலை, நுவரெலியா தொழில்நுட்ப கல்லூரி, நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி, மாவட்ட செயலகம் ஆகிய நான்கு இடங்களிலேயே 85 வாக்கு என்னும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 4000 அதிகாரிகள்   தேர்தல் கடமைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளனர்.
அது தவிர 4000 அதிகாரிகள் வாக்களிப்பு நிலையங்களிலும் 2000 பேர் தேர்தல் முடிவுகளை பெற்றுக் கொள்வதற்குமாக மொத்தமாக 10000 பேர் நுவரெலியா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் நுவரெலியா மாவட்ட செயலாளருமான எம்.பீ.ஆர்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட தேர்தல் களம்

2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது  நுவரெலியா மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 34 ஆயிரத்து 150 ஆக இருந்தது.

எனினும், 2019 ஆம்  ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் அத்தொகை 5 லட்சத்து 77 ஆயிரத்து 717 ஆக அதிகரித்துள்ளது. அதாவது 43 ஆயிரத்து 576 பேர் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர்.

அத்துடன், 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 416 பேர் வாக்களிக்கவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அளிக்கப்பட்ட வாக்குகளிலும் 32 ஆயிரத்து 718 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

2015 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் பதிவுசெய்யப்பட்ட, அளிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, செல்லுபடியான வாக்கு விபரமும், 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

1.நுவரெலியா – மஸ்கெலியா தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 302,836
அளிக்கப்பட்ட வாக்குகள் – 231,597
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 18,101
செல்லுபடியான வாக்குகள் – 213,496
வாக்களிப்பு வீதம் – 76.48%

2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 330,761

2. கொத்மலை தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை – 78,068
அளிக்கப்பட்ட வாக்குகள் – 59,454
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,482
செல்லுபடியான வாக்குகள் – 54,972
வாக்களிப்பு வீதம் – 76.16%

2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 84,175

3.ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதி

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை – 71,053
அளிக்கப்பட்ட வாக்குகள் – 52,269
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 4,391
செல்லுபடியான வாக்குகள் – 47,878
வாக்களிப்பு வீதம் – 73.56%

2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 75,278

4.வலப்பனை தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை – 82,193
அளிக்கப்பட்ட வாக்குகள் – 62,047
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 5,539
செல்லுபடியான வாக்குகள் – 56,508
வாக்களிப்பு வீதம் – 75.49%

2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 87,503

நுவரெலியா மாவட்ட தேர்தல் முடிவு – 2015

ஐக்கிய தேசியக் கட்சி – 228,920 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 147,348 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் கைப்பற்றின. இதர கட்சிகளால் 11 ஆயிரத்து 678 வாக்குகளையே பெறமுடிந்தது.

2020 பொதுத்தேர்தல் …….

2020 ஆகஸ்ட் இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 275 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

8 ஆசனங்களை இலக்கு வைத்து 12 அரசியல் கட்சிகளில் இருந்து 132 பேரும், 13 சுயேட்சைக்குழுக்களில் இருந்து 143 பேரும் களமிறங்கியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் அதிகளவான தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளதால், வாக்குகள் சிதறக்கூடிய அபாயம் இருக்கின்றது. இதனால் இருக்கின்ற தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

வாக்குரிமை என்பது எமது பிறப்புரிமையாகும். அதுவே பலம்பொருந்திய ஜனநாயக ஆயுதமும்கூட எனவே, கடமைக்காக வாக்களிக்காமல், மதிநுட்பத்துடன் வாக்களிப்பதே சிறந்தது.  இம்முறை கட்டாயம் அனைவரும் வாக்குரிமையை பயன்படுத்துவதே சிறப்பு…….

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

பொருளாதார ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

0
இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2025' மற்றும் 'நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025' ஆகிய இரு அறிக்கைகளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் இன்று திங்கட்கிழமை...

அமைதி பேச்சு இப்போதைக்கு இல்லை: ஈரான் தெரிவிப்பு!

0
அமெரிக்காவுடன் இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. தெஹ்ரானில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, “பேச்சுவார்த்தையை,...

மாகாணசபைத் தேர்தல் குறித்த கூட்டம் ஒத்திவைப்பு: மனோ காட்டம்!

0
மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக நாளை 21ஆம் திகதி நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுத் கூட்டம், திகதி குறிப்பிடப்படாமல் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எல்லை மீள்நிர்ணய ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் முக்கிய...