Home Blog Page 3924

கண்டி மாவட்டத்தில் துரித கதியில் காணி உறுதி பத்திரம் – பாரத்

” மலையகத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் நான் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய கண்டி மாவட்டத்திலுள்ள மாகாவலி மற்றும் எல்.ஆர்.சிக்கு கீழுள்ள இடங்களுக்கான காணி உறுதி பத்திரத்தை துரித கதியில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குறிப்பிட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்று கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

இது தொடர்பில் பாரத் மேலும் கூறியதாவது,

பாராளுமன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு பூராகவும் விஜயம் மேற்கொண்டார். அதன்படி, மலையகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியிடம் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்த அறிக்கையொன்றை கடந்த 11 ஆம் திகதி கலஹாவில் வைத்து கையளித்திருந்தேன்.

அந்த அறிக்கையில் மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படாதிருப்பது குறித்த குறிப்பிட்டிருந்ததுடன், அவர்களுக்கான காணி உறுதிப்பத்திரத்தை விரைவாக பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கைவிடுத்திருந்தேன்.

அதன்படி, என்னுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மாகாவலி மற்றும் எல்.ஆர்.சி இடங்களுக்கான காணி உறுதி பத்திரத்தை துரித கதியில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய கண்டி பிரதேசத்தில் அம்பகோட்ட, அளுத்வத்த, திகன, கலஹா, தெல்தோட்டை, புசல்லாவ, ரங்கலை, பன்வில, பல்லேகெல உள்ளிட்ட கண்டியில் ஏனைய மலையக பிரதேசங்களிலுள்ள காணிகளுக்கான உறுதிப்பத்திரம் துரித கதியில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் போலியான உறுதி பத்திரம் வழங்கி மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

இந்த நிலையில் நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உறுதி பத்திரம் வழங்கப்படும். குறிப்பாக, நான் மனித வள அபிவிருத்தி நிலையத்தின் தலைவராக இருந்த போது அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய எல்.ஆர்.சியுடன் இணைந்து காணி உறுதி பத்திரங்களை வழங்கினோம். அதேபோன்று, ஜனாதிபதியின் ஆலோசனையுடன் கண்டி பிரதேசங்களுக்கு துரித கதியில் காணி உறுதிபத்திரம் வழங்கப்படும்.” – என்றார்.

க.கிசாந்தன்

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 2,439 பேர் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 48 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,439 ஆக அதிகரித்துள்ளது.

365 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 815 ஆக இருக்கின்றது.

முக்கிய தளபதிகளின் பங்குபற்றலுடன் நாளை இறுதி ஆட்டம்!

பொதுத்தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் யாவும் நாளை (02) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கடைசி கூட்டங்கள் தொடர்பான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் இறுதிப்பிரச்சாரக் கூட்டம் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் தங்காலையில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

அத்துடன், சஜித் பிரேமதான தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதி பரப்புரைக்கூட்டம் நாளை இரவு மத்திய கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரச்சாரக்கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை இரவு மருதானையில் நடைபெறவுள்ளது.

அதேவேளை,  தேசிய மக்கள் சக்தியின் இறுதி பிரசாரக் கூட்டம் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில், புதுக்கடை ஜும்மா மஸ்ஜித் வீதிப் பகுதியில் இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் இறுதிப்பிரச்சாரக்கூட்டம் நுவரெலியா மாவட்டத்தை மையைப்படுத்தி இடம்பெறவுள்ளது.

அரசியல் கட்சிகளின் இறுதிப்பிரச்சாரக் கூட்டங்களில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.

இ.தொ.காவின் முன்னாள் செயலாளர் செல்லச்சாமி காலமானார்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளரும் அமைச்சருமான எஸ். செல்லச்சாமி தனது 95 ஆவது வயதில் இன்று (01) காலமானார்.

சுகவீனமடைந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கொழும்பிலுள்ள வீட்டிலேயே சிகிச்சைபெற்றுவந்த அவர் இன்று நண்பகல் காலமானார் என உறவினர்கள் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக விளங்கிய செல்லசாமி, இ.தொ.காவின் நீண்டகாலம் பொதுச்செயலாளர் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1965 ஆம் ஆண்டிலேயே எஸ். செல்லச்சாமி பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 1992 வரை அவர் அப்பதவியில் நீடித்தார். 27 ஆண்டுகளாக அப்பதவியில் நீடித்தவர் என்ற பெருமையும் சாரும்.

இ.தொ.காவின் அரசியல் செயற்பாட்டை தலைநகரிலும் கோலோச்சவைத்தனர்.

‘ஒற்றுமையை கட்டியெழுப்ப ஐ.தே.கவுடன் இணைவோம்’ – சண். பிரபா

ஐக்கிய தேசியக்கட்சியானது இனவாதம் மற்றும் மதவாதத்தை கொண்டல்லாமல் எப்போதும் சமத்துவத்தை ஏற்படுத்திய தனித்துவமான கட்சியாகும். தமிழ், முஸ்லிம் தலைவர்களும் இந்த கட்சியில்போட்டியிட்டுதான் வெற்றிபெற்றனர்.  இவ்வாறு துணையாக இருந்த கட்சியை கைவிட்டுவிட்டு, நன்றி மறந்து இன்று  சஜித் அணியில் இணைந்துள்ளனர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் சண். பிரபா தெரிவித்தார்.

அட்டுளுகமவில் நேற்று பெருமளவாக ஐ.தே.க ஆதரவாளர்கள் கலந்துகொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

” ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து நன்றியுணர்வுடன் மக்களுக்கு சரியான சேவைகள் செய்யாது, வெற்றி பெறுவோமா என்ற அச்சத்திலேயே சஜித் அணியில் இணைந்துள்ளனர். ஆனால், இதுவரை காலமும் நன்றி உணர்வுடன் இருந்தவர்கள் ஐ.தே.வுடன் இணைந்திருப்பார்கள்.

தற்போது முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்பு இடம்பெறும் இக்கூட்டத்தில், பாலித தெவரப்பெரும ஒரு பௌத்தராக இருந்தாலும் கூட அவருடன்  முஸ்லிம்களும் இணைந்திருப்பதும் முஸ்லிம்கள் மனதில் அவர் இடம்பிடித்திருப்பதும் தேசிய ரீதியில் சமத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கு உந்து சக்தியாக இருக்கின்றது.

முஸ்லிம் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கூட்டத்தில் பாலித்த தெவரப்பெருமவிற்கு வழங்கப்படும் பேராதரவு மகிழ்ச்சியைத் தருகிறது. அவருடன் இணைந்து சிறுபான்மை தமிழ்மக்கள் பிரதிநிதியாகிய என்னையும் இதில் இணைத்து இங்கு மூவினத்தையும் ஒன்றாக இணைத்திருப்பது தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதாக இருக்கின்றது.

தங்களை வளர்த்துக்கொள்கின்ற இனவாத தமிழ் , முஸ்லிம் தலைமைகளுக்கு அப்பால் சென்று தேசிய ரீதியான ஒற்றுமையை நாம் கட்டியெழுப்புவோம். இதற்கு ஐக்கியதேசியக்கட்சியுடன் இணைந்து செயற்படுவோம்.” – என்றார்.

‘ 40 ஆண்டுகளா இ.தொ.கா. தூங்கியது – அதனால்தான் கனவுகள் வந்துள்ளன’

40 வருடங்கள் அமைச்சரவையில் பலமிக்க அமைச்சு பதவிகளை வகித்த மலையக அரசியல்வாதிகள் செய்யாத பல சேவைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி நான்கரை ஆண்டு காலப்பகுதிக்குள் செய்துள்ளது எனவும் அலரி மாளிகையை பிடிப்பதே தமது கட்சியின் இலக்கு எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பில் பணிபுரியும் மலையக இளைஞர்களுடனான சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையகம் தொடர்பில் புதியக் கனவுகளை நாம் காணவில்லை. நாம் கண்ட கனவுகள் கணிசமானவையை நிறைவேற்றி இருக்கிறோம். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகர் சௌமியமூர்த்தி தொண்டமான் முதல், அமரர் ஆறுமுகன் தொண்டமான் வரையில் 40 வருடங்களாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்திருக்கிறார்கள். அவர்கள் தூங்கிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் வெறும் கனவுகளை மாத்திரம் கண்டார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் வெறும் நான்கரை வருடங்களே அமைச்சரவையில் அமைச்சராக இருந்தோம். இந்த நான்கு வருடங்களில் 40 வருடங்களுக்கு ஈடு செய்யும் விதத்தில் மலையகத்தில் அபிவிருத்தியும்.எமது மக்களுக்கு சேவையும் முன்னெடுக்கப்பட்டது.

மலையகத்தில் தமிழ் கிராமங்களை அமைத்தல், பிரதேசசபைகள் அதிகரிப்பு உள்ளிட்டப் பல அபிவிருத்திகளை தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்னெடுத்துள்ளது.

சிறிகொத்தவை பிடிப்பதே எமது இலக்கு என ஐக்கிய தேசிய கட்சியினர் கூறுகிறார்கள். ஆனால் எங்களது இலக்கு அலரி மாளிகையை பிடிப்பதே. ” – என்றார்.

மலையக மாற்றத்துக்கு ஆட்சிமாற்றம் வேண்டும் – அரவிந்தகுமார்

ஆட்சிமாற்றத்தின் ஊடாகவே  மலையகத்தில் சுபீட்சம் ஏற்படும். எனவே, ஐக்கிய மக்கள் சக்திக்கு பேராதரவை வழங்கி அந்த மாற்றத்தை ஏற்படுத்துமாறு  மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவு தலைவரும், பதுளை மாவட்ட வேட்பாளருமான அ.அரவிந்தகுமார் அறைகூவல் விடுத்துள்ளார்.

பதுளை, லுணுகலை ஹொப்டன் பகுதியில் 01.08.2020 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அறைகூவல் விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கடும் குளிர், மழை என்பவற்றைக்கூட பொருட்படுத்தாமல் எமக்காக மக்கள் அணிதிரள்கின்றனர். கூட்டம் நடைபெறும் இடங்களிளெல்லாம் இதனைக்காணக்கூடியதாக இருக்கின்றது. இது அன்பால் சேர்ந்த கூட்டம், ஆதரவாளர்களின் ஒருமித்தக் குரலோடு சங்கமித்த கூட்டம். இவ்வாறான ஆதரவும், ஒற்றுமையுமே மலையகத்துக்கு தேவைப்படுகின்றது.

நாம் வெவ்வேறான தொழிற்சங்கங்களில் அங்கம் வகித்தாலும் சமூகம் என வரும்போது இணைந்து பயணித்தால்தான் இலக்கை நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும்.

பிரச்சாரங்களுக்காக தோட்டங்களுக்கு செல்லும்போது ஆயிரம் ரூபா தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த ஆட்சி நீடிக்கும்வரை ஆயிரம் ரூபா கிடைக்கப்போவதில்லை என்பதுதான் எனது பதிலாக இருக்கின்றது. எனவே, கிடைக்காத ஒன்றை கிடைக்கும் என கூறி மக்கள் மத்தியில் ஏமாற்றுகாரனாக வலம்வருவதற்கு நான் தயாரில்லலை.

உண்மையை பேசினால் சிலர் அபசகுணம் என விமர்சிக்கின்றனர், ஆயிரம் ரூபா கிடைக்கவேண்டும் என்றால், மலையகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்றால் இந்த ஆட்சிமாறவேண்டும். அதன் ஊடாகவே மலையகத்தில் சுபீட்சம் ஏற்படும்.

சஜித் பிரேமதாச என்பவர் ஏழைகளின் தோழன், அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்ககூடியவர், அவர் பிரதமரானால் மாத்திரமே சிறுபான்மையின மக்களின் அரசியல் இருப்பும் பாதுகாக்கப்படும். ஏனெனில் இன்று இனவாதிகள் பலகோணங்களில் கொக்கரிக்க தொடங்கியுள்ளனர்.

அதேவேளை, இன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளன. சாதாரண மனிதம் குறித்து சிந்திக்காத கொடூங்கோல் அரசாங்கத்தை வீட்டுக்கு விரட்டவேண்டும். ” – என்றார்.

க.கிசாந்தன்

குழந்தைகளை விகாரையில் விட்டுவிட்டு தலைமறைவான தாய் கைது!

தமது இரண்டரை வயது நிரம்பிய பெண் குழந்தையையும், ஐந்து மாதங்களைக் கொண்ட  ஆண் சிசுவையும் விகாரை மண்டபத்தில் வைத்துவிட்டு, தலைமறைவாகிய 28 வயதுடைய இளம் தாயை, கொஸ்லந்தைப் பொலிஸார் (01-08-2020) இன்று காலை கைதுசெய்துள்ளனர்.

கொஸ்லந்தைப் பொலிஸாரினால் மீட்கப்பட்ட இரு குழந்தைகள் கொஸ்லந்தை அரசினர் மருத்துவமனையின் விசேட அறையொன்றில் வைத்து,தற்போது பராமரிக்கப்பட்டுவருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட இளம்பெண் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது, அப் பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கினார்.

“தான் திருமணம் செய்து கணவனின் வீட்டிலேயே இருந்துவந்தேன். அந்நிலையில் எனது கணவனுக்கும் எனக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு,கணவனுடன் தொடர்ந்து வாழமுடியாத நிலை,எனக்கு ஏற்பட்டது.

எனதும்,குழந்தைகளதும் பாதுகாப்புகருதி,எமது ஊர் விகாரைக்குச் சென்று இரவுதங்கினேன். மறுதினம் அதிகாலை குழந்தைகள் நித்திரையிலிருக்கும் போது,குழந்தைகளைவிட்டுவிட்டுசென்று, நிக்கபொத்தை என்ற இடத்தில் உறவினர் வீடொன்றில் தங்கியிருந்தேன். பொலிசார் என்னைத் தேடிவந்து கைதுசெய்தனர்.

எனதுகணவனுடன் வாழமுடியாதலாலேயே, இவ்வகையில் செயற்பட்டேன்”என்றார்.

இதையடுத்து, இப் பெண்ணின் கணவரையும் கைதுசெய்யபொலிசார் நடவடிக்கைஎடுத்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட பெண்ணை, பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யஏற்பாடுகளை செய்திருப்பதாக,கொஸ்லந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்ணசிரி பண்டார தெரிவிததார்.

எம். செல்வராஜா, பதுளை நிருபர்

அமெரிக்காவிலும் டிக் டாக் Appக்கு ஆப்படிக்கும் ட்ரம்ப்

சீன தயாரிப்பான டிக் டாக் ஆப் அடுத்த 24 மணி நேரத்திற்குள் தடை செய்ய உத்தரவிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தயாராகி வருகிறார்.

வொஷிங்டனில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், டிக் டாக் ஆப்பை கவனித்து வருவதாகவும், அதற்கு தடை விதிக்கலாம் அல்லது வேறு சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்களும் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் பைட் டான்ஸுக்கு உத்தரவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன் பின்னர் டிரம்ப் இது குறித்துப் பேசியுள்ளார்

மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனம் இந்த ஆப்பை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்தியாவைப் போல அமெரிக்காவிலும் டிக் டாக் ஆப் விரைவில் தடை செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

சீனாவைச் சேர்ந்த டிக் டாக், ஹலோ, யூசி பிரவுசர் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் 47 சீன ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்த ஆப்கள் ஏற்கெனவே இந்தியாவில் தடை செய்யப்பட்ட 59 ஆப்களின் குளோன்களாக செயல்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

‘ நான் ஐ.தே.கவை திருமணம் முடிக்கவும் இல்லை – சிறிகொத்தவில் வாழவும் இல்லை’

” நான் ஐக்கிய தேசியக்கட்சியை திருமணம் முடிக்கவில்லை. அதன் தலைமையகமான சிறிகொத்தவில் வாழவும் இல்லை. எனவே, என்னை அக்கட்சியில் இருந்து என்னை நீக்கியதால் துளியளவும் கவலை இல்லை. ஏனெனில் மலையக மக்கள் என்னுடன் இருக்கின்றனர்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
பதுளையில் மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிப்பதற்கு பல சூழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. வாக்குகளை சிதறடிப்பதற்காகவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. எது எப்படியிருந்தாலும் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்து என்னையும், அண்ணன் அரவிந்தகுமாரையும் பாராளுமன்றம் அனுப்பவேண்டும் என்பதில் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர். 6 ஆம் திகதியாகும்போது பதுளை மாவட்ட தமிழ் பேசும் மக்கள் யார் பக்கம் நிற்கின்றார்கள் என்பது தெரியவரும்.
எங்களுக்கு எல்லா பக்கங்களிலும் சவால்கள் உள்ளன. நானும், அரவிந்தகுமாருமே இலக்குவைக்கப்பட்டுள்ளோம். ஆனாலும் மக்கள் எமது பக்கம் இருப்பதால் சவால்களை தாண்டி சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த ஆட்சியின்போது பதுளை மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவிருந்த நிலையிலேயே ஆட்சிமாற்றம் ஏற்பட்டுவிட்டது. இதனால் கோடிக்கணக்கான நிதி திறைசேரிக்கு திரும்பிசென்றது. வருகின்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று, புதிய ஆட்சி அமைத்த பின்னர் கைவிடப்பட்ட திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக்கட்சிக:கு சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கி, நெருக்கடிகள் கொடுக்காமல் இருந்திருந்தால் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெற்றிருப்பார். ஆனால், ரணிலும் மத்தியவங்கி கொள்ளையர்களும் ராஜபக்சக்களுக்கு வக்காளத்து வாங்கியதால் சஜித்துக்கு தோல்வியடையவேண்டிய நிலை ஏற்பட்டது. எம்மை கட்சியைவிட்டு நீக்கினாலும் பரவாயில்லை, மக்கள் எம்முடன் இருக்கும்வரை எவ்வித கவலையும் இல்லை.
க.கிசாந்தன்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

இந்திய துணை ஜனாதிபதி சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு!

0
டி.சந்ரு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், நுவரெலியா, சீதா எலியவிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தில் இன்று பூஜை வழிபாட்டில் ஈடுபட்டார். ஆலயத்துக்கு வந்த இந்திய துணை ஜனாதிபதியை, நுவரெலியா...

ராகலையில் மக்களை சந்தித்த இந்திய துணை ஜனாதிபதி!

0
இந்திய துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், நுவரெலியா, ராகலை, லிட்டில்ஸ்டே Liddlesdale தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் (மூன்றாம் கட்டம்) கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டதுடன், அதன்...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

0
ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் இன்று (20) 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மாவட்டங்களுக்கு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. சுமார் மூன்று மீட்டர் உயரத்திற்கு...