Home Blog Page 3932

ம.மமுவின் தோட்ட தலைவர் காங்கிரஸில் இணைவு

மலையக மக்கள் முன்னணியின் ஒஸ்போன் கீழ்பிரிவு தோட்ட தலைவர், டிக்கோயா
பிரதேச அமைப்பாளர் உட்பட அக்கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இணைந்துகொண்டுள்ளனர்.

இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானை நேரில் சந்தித்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.

பொகவந்தலாவ நிருபர் – எஸ்.சதீஸ்

CB,SBயின் கூட்டங்களில் பிரபுவிற்கு வாக்ககளிக்கக் கோரிய பிரதமர் மகிந்த

பிரதமர் மகிந்த ராஜபக்ச, நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபுவிற்கு வாக்களிக்குமாறு பகிரங்கமாக கோரிய நிலையில், பிரபுவின் வெற்றி உறுதியாகியுள்ளதாக அந்தக் கட்சியின் நுவரெலியா மாவட்ட ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் முகமாக பிரதமர் மகிந்த ராஜபக்சவும் சூறாவளி சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.அந்த வகையில் நேற்று நுவரெலியாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச அந்தக் கட்சியின் வேட்பாளர்களின் கூட்டங்களிலும் பங்கெடுத்தார்.

இதன்போது நுவரெலியா மாவட்டத்தின் வேட்பாளர்களான சீ.பீ. ரத்நாயக்க, எஸ்.பீ. திசாநாயக்க ஆகியோரின் கூட்டங்களிலும் பங்கெடுத்தார. இதன்போது முத்தையா பிரபுவின் 10ஆம் இலக்கத்திற்கும் வாக்களிக்குமாறு பிரதமர் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், பிரதமரின் இந்த கோரிக்கை முத்தையா பிரபுவின் வெற்றியை நுவரெலியா மாவட்டத்தில் உறுதிசெய்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டிக்கோயாவில் 20 பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து

டிக்கோயா அளுத்தகல பகுதியில் இன்று (27) காலை ஆட்டோவொன்று 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. எனினும், ஆட்டோ ஓட்டுனருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து டிக்கோயாவை நோக்கி வந்த ஆட்டோவே, அதிக வேகம் காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கண்டியில் முதன்முறையாக சஞ்சாரியின் ‘சௌந்தர்யம்’ நிகழ்வு

கலைகள் மனிதனை வாழ்விப்பவை அந்தவகையில் எம் ஒவ்வொருவரது படைப்பும் எம் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையிலே அமைகிறது.

ஆனால் எமக்கான மேடையை நாமே உருவாக்க எமது கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்த வேண்டிய தேவை உணரப்படுகிறது.

அந்தவகையில் சஞ்சாரியின் ஏற்பாட்டில் கண்டி மாவட்டத்தில் உள்ள மூவினத்தைச் சேர்ந்த கலைஞர்கள், சிரேஷ்ட கலைஞர்கள் மற்றும் வளர்ந்து வருகின்ற இளம் கலைஞர்களுக்கிடையிலான ‘சௌந்தர்யம்;’ நிகழ்வு கடந்த சனிக்கிழமை கண்டியில் இடம்பெற்றது.

கண்டி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி பாரத் அருள்சாமி  தலைமையிலும் அனுசரனையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் கண்டி மாவட்டத்தில் உள்ள கலைஞர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் மற்றும் கலைத்துறையின் முன்னேற்றம் , தற்போதைய நிலை குறித்தான பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது சட்டத்தரணி பாரத் அருள்சாமியின் கலை கலாசார மேம்பாட்டுத் திட்டம் ஒன்றும் முன்வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலைஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் திரைப்பட முன்னணி நட்சத்திரங்கள் , சிரேஷ்ட கலைஞர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்விற்கு அழகு சேர்க்கும் முகமாக கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

பவதாரணி ராஜசிங்கத்தின் சஞ்சாரி ஏற்பாடு செய்த இந்நிகழ்வு நூற்றுக்கணக்கான கலைஞர்களின் பங்குபற்றுதலுடன் கண்டி மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

‘ தோட்டங்களை மக்களுக்கு வழங்கி சுயதொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை’

ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி தமிழ் அமைப்பாளரும் வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் இரத்தினபுரியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.

இரத்தினபுரி வேவல்வத்தை பகுதி மக்களை சந்தித்த அவர், அந்த பகுதி மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.

தமது பகுதியிலுள்ள தோட்டங்கள் மூடப்பட்டுள்ளமையினால், தமது தொழில்வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன், தமக்கான காணி மற்றும் வீட்டு உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதற்கு பதிலளித்த எஸ்.ஆனந்தகுமார், தான் பாராளுமன்றத்திற்கு சென்று இந்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுகொடுப்பதாக உறுதியளித்தார்.

செயலிழந்துள்ள தேயிலை தோட்டங்களை மக்களுக்கு வழங்கி சுயதொழிலை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த உறுதிமொழி தமக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.

மலையக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘கொரோனா’ வைரஸ் தாக்கத்தால் மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளில் இன்று (27) திங்கட்கிழமை முதல் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

அதிபர், ஆசிரியர்கள் மற்றும்  தரம் 11, 12 ,13 ஆம் வகுப்பு மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளுக்கு வருகைதந்திருந்தனர்.

இதன்படி முகக்கவசம் அணிந்து வந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள இடத்தில் கைகளை கழுவினர். அதன்பின்னர் அவர்களின் உடல் உஷ்ணம் கணிப்பிடப்பட்டது. அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
பிறகு அதிபர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதன்போது சுகாதார நடைமுறைகளை எவ்வாறு பின்பற்றுவது, மாணவர்கள் வருகைதந்த பின்னர் அவர்களிடையே சுகாதார பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பது எப்படி, யாருக்காவது திடீரென சுகயீனம் ஏற்பட்டால் அதனை எவ்வாறு கையாள்வது என்பது உட்பட மேலும் பல விடயங்கள் தொடர்பில் அதிபர்களால் விளக்கமளிக்கப்பட்டதுடன், ஆசிரியர்களின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டன.
சமூக இடைவெளியைப் பின்பற்றி வகுப்பறையில் இடஒதுக்கீடுகள் இடம்பெற்றிருந்தனர். சிலமாணவர்கள் முகக்கவசம் அணியாமல் வந்திருந்தனர். அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய், ஆராத்யா

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆராத்யாவுக்கு கொரோனா பாதிப்பு சரியாகி அவர்கள் வீடு திரும்பியுள்ளதாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 11ம் தேதி மும்பையில் இருக்கும் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரின் மகனும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு அமிதாப் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகள் ஆராத்யாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அமிதாபின் மனைவி ஜெயா பச்சனுக்கு மட்டும் பாதிப்பு இல்லை.

ஐஸ்வர்யா ராயும், ஆராத்யாவும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர். அதன் பிறகு அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கடந்த 17ம் தேதி இரவு நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் தாங்கள் எப்படி இருக்கிறோம் என்பது குறித்து அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் தொடர்ந்து ட்வீட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தன் மனைவி ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யாவுக்கு குணமாகி அவர்கள் இன்று வீடு திரும்பியுள்ளதாக அபிஷேக் பச்சன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தங்களுக்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் அபிஷேக் தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் தீவிரமாக இல்லை என்றாலும் இன்னும் முற்றிலும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

அமிதாப் வீட்டில் வேலை செய்து வரும் சுமார் 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையில் அவர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. முன்னதாக அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் அவர்களுக்கு சொந்தமான 4 பங்களாக்களுக்கு மும்பை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். தற்போது அந்த சீல் நீக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோர் வீடு திரும்பிய செய்தி அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்ததாக அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக்கும் விரைவில் வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

அமிதாப் பச்சன் குடும்பத்தார் குணமடைந்து வீடு திரும்பும் வரை கொல்கத்தாவில் இருக்கும் ரசிகர்கள் யாகம் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 77 வயதாகும் அமிதாப் பச்சன் தைரியமாக இருப்பதை பார்த்து அனைவரும் வியக்கிறார்கள்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் பயப்படாமல் இருப்பது தான் முக்கியம் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் தான் அமிதாப் பச்சனின் தைரியம் ரசிகர்களை வியக்க வைக்கிறது.

மருத்துவமனையில் இருக்கும் அமிதாப் பச்சன் தன் தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன் எழுதிய கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார். இது போன்ற நேரத்தில் தன் தந்தையை ரொம்பவும் மிஸ் பண்ணுவதாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் இருந்து வீடியோ எடுத்து அதை ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ளார் அமிதாப்.

அவர் அடிக்கடி இப்படி தன் உடல்நலம் பற்றி அப்டேட் கொடுப்பது ரசிகர்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.

– நன்றி சமயம்.கொம்

ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவர் – சங்கா

ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலி பொருத்தமானவராக இருப்பார் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி.) தலைவராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகரின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்ததால், அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை துணைத்தலைவர் இம்ரான் கவாஜா (ஹாங்காங்) இடைக்கால தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

ஐ.சி.சி.யின் தலைவர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் காலின் கிராவ்ஸ் முன்னணியில் இருக்கிறார்.

அதேவேளை இந்திய கிரிக்கெட் சபை தலைவரும், முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலியை ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் சபையின் தலைவர் கிரேமி சுமித் ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரவும் கங்குலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக சங்கக்கரா அளித்த ஒரு பேட்டியில்,

‘ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவராக இருப்பார் என்று கருதுகிறேன். நான் கங்குலியின் தீவிரமான ரசிகர். ஒரு கிரிக்கெட் வீரர் என்பதற்காக மட்டுமல்ல. அவர் கிரிக்கெட் அறிவு மிக்கவர். புத்திசாலித்தனமானவர். கிரிக்கெட் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் எண்ணம் அவரது மனதில் உண்டு.

ஐ.சி.சி. தலைவர் பொறுப்புக்கு வரும் போது சர்வதேச அளவில் முற்றிலும் பரந்த மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும். நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், இந்தியரா, இலங்கை நாட்டவரா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரா என்ற எண்ணம் இல்லாமல் பாரபட்சமின்றி செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம்.

நான் ஒரு கிரிக்கெட் வீரர். கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும், கிரிக்கெட் விளையாடும் அணிகளின் நலனுக்கும் என்ன தேவையோ அதை செய்வேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது எந்த நிலையிலும் மாறக்கூடாது.

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பே கங்குலியின் செயல்பாட்டை நான் பார்த்து இருக்கிறேன். உலக அளவில் கிரிக்கெட் வீரர்களுடன் உறவை எப்படி வலுப்படுத்தினார் என்பதை அவர் எம்.சி.சி. கமிட்டி உறுப்பினராக இருந்த போது கவனித்துள்ளேன்.

எனவே ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு அவர் மிகவும் கச்சிதமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஐ.சி.சி. தலைவராக பதவி ஏற்றால், நிச்சயம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன்’ என்றார்.

‘இரத்தினபுரியில் அடிமை அரசியலில் இருந்து விடுபடுவோம்’

“நாம் காலம் காலமாக எமது பொன்னான வாக்குகளைபெரும்பான்மை அரசியல் வாதிகளுக்கே வழங்கி எமது உரிமைகளை இழந்து வந்திருக்கின்றோம். அதனால் எமக்கான தேவைகள் அவர்களுக்கு பெரிதாக தென்பட்டதில்லை. அதனால் உட்கட்டமைப்பு வசதிகளில் பின்னடைந்திருக்கின்றோம். அடிமை அரசியலில் இருந்து விடுப்பட்டு இனியாவது அபிவிருத்தியை நோக்கி நகரவேண்டும். அதற்கு நம்மிலிருந்து நமக்காக ஒருவரை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யவேண்டும்.”
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எம்.சந்திரகுமார் தெரிவித்தார்.
இரத்தினப்புரியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின்போது கலந்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது,
ஒரு தோட்டத் தொழிலாளியின் மகனுக்கே இன்னொரு தோட்டத் தொழிலாளியின் வாழ்கையை பற்றி சரியாக புரிந்துகொள்ள முடியும். எமது தோட்ட மக்கள் சொல்லனா துயரங்களை அனுபவிக்கின்றார்கள். நாம் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து வசதி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளில் பின்னடைந்திருக்கின்றோம்.  அதனால் எமது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே இன்று நான் அரசியலுக்குள் வந்திருக்கின்றேன்.
நான் ஒரு பட்டதாரி  ஆசிரியர் ஆனாலும் அரசியல் அங்கீகாரம் என்ற ஒன்று அமைந்தால் மாத்திரமே எமது உரிமைகளையும் சலுகைகைளயும் எமது மக்களுக்கான தேவைகளையும்  தன்னால் முறையாக பெற்றுக்கொடுக்க முடியும் என்றார்.
இரத்தினபுரி தமிழ் மக்களின் இன்னல்கள் தொடராமல் முற்று பெற வேண்டுமானால் தன்னை போல் லயத்திலே பிறந்து இறப்பர் தோட்டத்திலே கஷ்டப்பட்டு படித்து பட்டதாரியான தமிழர் ஒருவர் தம் மக்களுக்கு பிரதிநிதியாக அமைய வேண்டும் என்பதை சகலரும் உணரவேண்டும்.
தான் லயத்திலே பிறந்து படித்து ஒரு படி மேலாக பட்டதாரி ஆசிரியர் ஆனாலும் என்னை போன்று பட்டதாரிகள் உருவாகினாலும் நம் சமூகம் மேம்பட அது போதுமானது அல்ல இரத்தினபுரி மாவட்டதிலே தமிழ் பொறியியலாளர்,வைத்தியர்,வழக்கறிஞர், ஏன் ஒரு தமிழ் கிராம உத்தியோகஸ்த்தர்கூட இன்னும் உருவாகவில்லை.
இரத்தினபுரி மாவட்டத்திலே 542 கிராமசேவகர் பிரிவுகள் உள்ளன பொரலுவென்ன  50% தமிழர்கள், ஹபுகஸ்தண்ண 98%, தேணாகந்த 88%, பெட்டிகல 75%, மெதகந்த,மாதம்பை,ஹொரமுல்ல 60% , இறக்குவானை நகரம் 60% ,தமிழ் முஸ்லிம்கள் செறிந்து வாழும் இடங்களிலும் பெரும்பாண்மை இனத்தவரே கிராம சேவகராக கடமையாற்றுகிறார்கள்.
இதற்கான அடிப்படை காரணங்கள் நம்மால் படிக்க முடியாமல் இல்லை வாய்ப்புகள் குறைவாக உள்ளது. எமது மாவட்டத்தில் இன்னும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.
கற்றல் உபகரணங்கள் இல்லை, தமிழ் பாடசாலைகளில் பௌதீக குறைபாடு நிறையவே உள்ளது.
மாற்றத்தை முதலில் நாம் பாடசாலையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். எமது பிள்ளைகள் முறையாக படித்து உயர வளங்களை பாடசாலை களுக்கு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.” – என்றார்.

O/L பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31 வரை ஏற்பு

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகள் தமது விண்ணப்பங்களை குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் இணையத்தளத்தினூடாக மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அதுதொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள www.doenets.lk (onlineexams.gov.lk/onlineapps) என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்களும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

உரிய வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பாடசாலை விண்ணப்பதாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழிகாட்டல்கள் பாடசாலை அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பப் பட்டுள்ளதுடன் விபரங்கள் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

“காலத்தை ஓட்டாதீங்க, ஊழல்வாதிகளை உள்ளே போடுங்கள்”

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, " அரசாங்க பேச்சாளர் நண்பர் நலிந்த என்ன உளறுறார்? ராஜினாமா செய்த குமார ஜயக்கொடி தொடர்புல, "குற்றம் சாட்டிய எதிர் கட்சி எம்பீக்கள்,...

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...