Home Blog Page 3933

‘5 ஆம் திகதி இரவே பாய், படுக்கையுடன் சென்றுவிடுவேன்’ -வடிவேல் சுரேஷ்

தமிழர்களின் ஆதரவின்றி எந்தவொரு பிரதான கட்சியாலும் ஆட்சியமைக்கமுடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையில்லை என ஒரு சில இனவாதிகள் கொக்கரிக்கின்றனர். தேர்தல் முடிந்ததும் தமிழர்களின் பலம் என்னவென்பது தெரியும். தமிழர்களின் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியாலும் ஆட்சியமைக்கமுடியாது.

5 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றாலும் 6 ஆம் திகதியே வாக்கெண்ணும் பணி இடம்பெறும். வாக்கு பெட்டிகள் எல்லாம் பாதுகாப்பாக கச்சேரியில் வைக்கப்படும். எனவே, 5 ஆம் திகதி இரவே பாய், படுக்கையுடன் கச்சேரிக்கு முன் சென்று படுத்துவிடுவேன். வாக்கு பெட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்குவேன். எனக்கான வாக்குகளை எவரும் மாற்றிவிடமுடியாது.” – என்றும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

‘விமர்சிப்பவர்களுக்கு சொல்லில் அல்ல செயலில் பதிலடி கொடுப்பேன்’ – ஜீவன்

நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் என்னை நம்புகின்றனர். எனது மக்களுக்கும் என்மீது முழு நம்பிக்கையும் உள்ளது. எனவே, என்னை சின்னப்பையன் என விமர்சிப்பவர்களுக்கு, அதிகாரம் கிடைத்ததும், செய்கைமூலம் பதிலடி கொடுப்பேன் – என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் கூறியதாவது,

பிரதமர் மஹிந்த ராஜபக்வும் எனது தந்தையும் நெருங்கிய நண்பர்கள். அரசியலுக்கு அப்பால் இருவருக்குமிடையில் சிறந்த நட்புறவு இருந்தது.  எனது தந்தையின் மறைவுசெய்தி கேள்வியுற்றதும் கண்கலங்கி நின்றார். எங்களுக்கு ஆறுதல் கூறி தூணாக இருந்தார். அதற்காக அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைக்கூறிக்கொள்கின்றேன்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது யாரையும் விமர்சிக்ககூடாது, குறைகூறும் அரசியலை முன்னெடுக்கக்கூடாது என்ற முடிவை நாம் எடுத்திருந்தோம். திட்டங்களை முன்வைத்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம்.  எனினும், எதிரணியினர் விமர்சிப்பதையே பிரச்சாரமாக செய்தனர். என்னை விமர்சித்தவர்களுக்கு என்னால் முன்வைக்கப்பட்ட திட்டங்களை விமர்சிக்கமுடியாமல்போனது. ஏனெனில் அவர்களின் அறிவுமட்டம் அவ்வளவுதான்.

ஜீவன் தொண்டமான் சின்ன பையன், சின்ன தம்பி என விமர்சனம் செய்கின்றனர், இதே சின்ன பையனிடம் அதிகாரத்தை தந்துபாருங்கள், மலையகத்தையே மாற்றிக்காட்டுகின்றேன். இ.தொ.காவில் இருந்து வளர்ந்து முதுகில் குத்திவிட்டு சென்றவர்களுக்கே அவ்வளவு திமிரு இருக்குமானால், ஆறுமுகன் தொண்டமானின் அரவணைப்பில் வளர்ந்த எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்?

ஆயிரம் ரூபா என்பது தொழிற்சங்கப் பிரச்சினை. ஆனால், அதனை அரசியல் மயப்படுத்திவிட்டனர். இதனால் எமது ஏனைய பிரச்சினைகள் மறைக்கப்பட்டன. இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இந்த சின்ன பையனை நம்புகின்றனர். எனவே, எமது மக்கள் என்னை நம்பமாட்டார்களா?

நமது சமூகத்துக்கு ஒரு மாற்றம் தேவை. அந்த மாற்றத்தை தரக்கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்சதான்.” – என்றார்.

க.கிசாந்தன்

பெருந்தோட்ட மக்களை கைவிடமாட்டோம் – ஜீவன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் உறுதி

பெருந்தோட்ட மக்களுக்கு தலைமைத்துவத்தை வழங்கிய ஆறுமுகன் தொண்டமானின் மறைவு எமக்கு பேரிழப்புதான். ஆனாலும் அவரின் புதல்வரான ஜீவன் தொண்டமானின் தலைமைத்துவ அணுகுமுறையானது, மக்களுக்காக அவர் போராடுவார் என்ற நம்பிக்கையை எமக்கு அளிக்கின்றது – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையில்  ஹட்டன் டி.கே.டபிள்யூ மண்டபத்தில் இன்று (26.07.2020) நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

” அமரர் ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக என்னை சந்தித்தபோது கூட  பெருந்தொட்ட மக்கள் தொடர்பிலேயே அதிகம் கலந்துரையாடினார். பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கதைத்தார்.  பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டங்களையும் முன்மொழிந்திருந்தார்.

தாத்தா (சௌமியமூர்த்தி தொண்டமான்) அதன்பின்னர் பேரன் (ஆறுமுகன் தொண்டமான்)  இன்னும் அவரின் மகன் (ஜீவன் தொண்டமான்)  ஆகிய மூவருடனும் வேலைசெய்வதற்கான அதிஷ்டம் எனக்கு கிட்டியுள்ளது. இதன்படி மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்காக மூவரும் கையாளும் அணுகுமுறைகள் தொடர்பில் எனக்கு தெரியும்.

பாட்டன், தந்தை ஆகிய இருவர் கையாண்ட அணுகுமுறைகளைக்காட்டிலும் ஜீவன் தொண்டமான் மிகவும் வித்தியாசமான முறையில் அணுகிவருகின்றார். பெருந்தோட்ட உரிமையாளர்களுடன் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் ஜீவன் தொண்டமானும் பங்கேற்றிருந்தார். இக்கூட்டத்தின்போது அவர் மிகவும் தர்க்கரீதியாக வாதங்களை முன்வைத்தார். மறுக்கமுடியாத வகையிலேயே கருத்துகளை முன்வைத்தார்.

பொதுத்தேர்தல் முடிவடைந்ததும் நாம் மீண்டும் சந்தித்து இப்பிரச்சினை தொடர்பில் நிரந்தரமானதொரு தீர்வு எட்டப்படும் என்பதையும் கூறிக்கொள்கின்றேன். ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையின் பிரகாரமே எமது ஆட்சியின்போது மலையகத்தில் பல அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.குறிப்பாக லயன் யுகத்துக்கு முடிவு கட்டுவதற்கு தொண்டமானே அடித்தளமிட்டார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கௌரவமாகவே, கொரோனா பிரச்சினைக்கு மத்தியிலும் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அரச மரியாதையுடன் இறுதி நிகழ்வுகளை நடத்தினோம். எனவே, பெருந்தோட்ட மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம்.” – என்றார்.

ஜீவன் தலைமையில் நுவரெலியாவை கைப்பற்றுவோம் – பீரிஸ் சூளுரை

” பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நுவரெலியா மாவட்டத்தையும் கைப்பற்றும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் வேட்பாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டு மக்கள் அமோக ஆதரவை வழங்கினர். இதன்மூலம் நிலையானதொரு அரசாங்கம் உருவானது. எனவே, நாட்டு மக்கள் வழங்கிய ஆதரவை முழுமைப்படுத்தி முன்நோக்கி பயனிப்பதற்காக பாராளுமன்றத்திலும் எமக்கு பெரும்பான்மை அவசியம். சாதாரணப் பெரும்பான்மை இல்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மையே தேவைப்படுகின்றது. அது கிடைக்கும் என நம்புகின்றோம். எனவே, வெற்றியின் பங்காளர்களாகுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நுவரெலியா மாவட்டமென்பது பொருளாதாரத்தின் மையம். தேயிலை ஏற்றுமதிமூலம் சிறந்த வருமானத்தைப்பெறலாம் இம்மாவட்டத்திலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் புதிய அரசாங்கம் தீர்க்கும். நுவரெலியா மாவட்டத்தில் பல்கலைக்கழகமொன்று அமையும் என்பதுடன், தொழிற்பயிற்சி நிறுவனமும் அமைக்கப்படும்.

ஜீவன் தொண்டமான் என்பவர் சிறந்த இளம் தலைவர். அவர் தனது தந்தையின் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துசெல்லவேண்டும். தொண்டமான் திட்டமிட்டிருந்ததைக்காட்டிலும் அதனை சிறப்பாக அதனை செய்யவேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.” – என்றும் ஜீ.எஸ். பீரிஸ் கூறினார்.

க.கிசாந்தன்

மரணவீட்டுக்கு வந்தவர் குளவிக்கொட்டால் வைத்தியசாலையில்

மரணச்சடங்கொன்றில் கலந்து கொள்ள வந்த நபர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (26) பதுளை-பசறை வீதியில் அமைந்துள்ள வேவெஸ்ஸ கம(4ம் கட்டை) பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பதுளையில் இருந்து உறவினர் ஒருவரின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக பஸ் வண்டியில் வந்து இறங்கிய நபரே இவ்வாறு குளவிக் கொட்டிற்கிலக்காகி ஆபத்தான நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

‘ஆற்றல் மிகுந்த தலைவர்களை பாராளுமன்றம் அனுப்பவும்’ – பிரமர் மஹிந்த

பொறுப்பொன்றை ஒப்படைக்கக் கூடிய ஆற்றல் மிகுந்த தலைவர்களை இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பயமின்றி பொறுப்பை ஒப்படைக்கக் கூடிய ஆற்றல் மிகுந்த உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்து அனுப்புவது பொதுமக்களின் கடமை என்று நுவரெலியா ராகல பிரதேசத்தில் இன்று (2020.07.26) முற்பகல் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்துக் கொண்ட பிரதமர் இதன்போது இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் கைவிடப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டு சென்று வேலையற்று காணப்படும் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது விரைவில் நிறைவேற்ற வேண்டியது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பொறுப்பாக கருதப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட வளங்களை விற்பனை செய்தமை தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதமர், ஐந்து வருடங்களுக்கு நியமிக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிர்கால சந்ததியினருக்காக உள்ள நாட்டின் வளங்களை விற்பனை செய்யமுடியாது என்பதை ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கங்களும் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

முறையான கொள்கை அற்றவர்கள் ஆட்சிக்கு வருவதனால் நாட்டிற்கு ஏற்படும் இவ்வாறான சேதங்களை தவிர்ப்பதற்கு கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 69 இலட்சம் மக்கள் ஒன்றிணைந்து ஏற்றுக்கொண்ட சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு இம்முறை பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு அதிகாரத்தை பெற்றுக்  கொடுக்குமாறு இதன்போது பிரதமர் மேலும் கேட்டுக் கொண்டார்.

குறித்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

குறித்த சந்திப்பில் கலந்துக் கொள்வதற்கு முன்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ சாரிபுத்தாராம ரேவன பிரிவெனாவிற்கு சென்று அங்கு பிரிவெனாதிபதி பிடிகல வஜிர தேரரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டதுடன், பின்னர் ராகல ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திற்கு சென்று ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

‘இனத்தின் பெயரில் உள்ள கட்சிகளை தடைசெய்யவேண்டும்’ – விமல்

இனம் மற்றும் மதத்தின் பெயரில் அரசியல் கட்சிகளை பதிவுசெய்யும் செயற்பாட்டை புதிய அரசியலமைப்பின் ஊடாக தடைசெய்ய வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல்வீரவன்ஸ தெரிவித்தார்.

” இன மற்றும் மதத்தின் பெயரில் கட்சிகளை பதிவுசெய்துக்கொண்டு அரசியல் நடத்துவது தவறான விடயமாகும். இதற்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தடைவிதிக்கப்பட வேண்டும் என்பதே எனது யோசனையாகும்.
தேசிய நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றுக்கும் இது தடையாக இருக்கின்றது. எனவே, முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும் விடயங்கள் தடுத்துநிறுத்தப்படவேண்டும்.” – என்றும் விமல்வீரவன்ஸ கூறினார்.

’13 இற்கு முடிவு கட்டவே மூன்றிலிரண்டு பலத்தை கோருகிறது அரசு’

” அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை இல்லாதொழிப்பதற்காகவே இந்த இனவாத அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை கோருகின்றது. எனவே, மொட்டுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரானவை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டன், அக்கரபத்தனை பகுதியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினையை தீர்க்கின்றோம், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தாருங்கள் என ராஜபக்ச ஒருவர் கோரியுள்ளார். 2010 ஆம் ஆண்டு முதல் ராஜபக்சக்களிடம் மூன்றிலிரண்டு பலம் இருந்தது. அப்போது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை. தற்போது வாக்குகளுக்காக போலி அறிவிப்புகளை விடுக்கின்றனர்.
அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை நீக்குவதற்கே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இந்த இனத்துவேச அரசாங்கம் கோருகின்றது. எனவே, மொட்டுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்குகளும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிரானவை என்பதை புரிந்துகொள்வோம்.
மொட்டுக்கு வாக்கித்தால் குடும்ப ஆட்சியே மலரும். ஜனநாயக ஆட்சி வேண்டுமானால் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும்.” – என்றும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

‘நான் அமைச்சராவது உறுதி’ – வடிவேல் சுரேஷ் மீண்டும் தெரிவிப்பு

” பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் அமையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நானே அமைச்சர். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

கொஸ்லாந்த மீரியாகல தோட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நான் செய்த சேவைகளை மக்கள் அறிவார்கள். அரசாங்கம் மாறியதும் ஒரு சில வேலைத்திட்டங்கள் நிறுத்தப்பட்டிருக்கலாம்.  அவை தற்காலிகமாகவே இடை நிறுத்தப்பட்டுள்ளன. மீண்டும் புதிய அரசாங்கம் அமையும். அதில் நானும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அமருவேன்.விட்டுச்சென்ற வேலைகளை மீண்டும் தொடருவேன்.” – எனவும் கூறினார்.

தகவல் : நீலமேகம் பிரசாந்த்

கினிகத்தேனையில் ஆணின் சடலம் மீட்பு! கொலையா என விசாரணை!

கினிகத்தேனை பொல்பிட்டிய சமலன நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகாமையிலிருந்து இன்று காலை 7.30 மணியளவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வீதியில் இறந்துகிடப்பதைகண்ட பொதுமகன் ஒருவர், வழங்கிய தகவலையடுத்தே சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் சடலத்தை மீட்டனர்.

உயிரிழந்திருப்பவர் யாரென இன்னும் அடையாளம் காணப்படவில்லை. குறித்த நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...