Home Blog Page 3935

புதிய ஆட்சியிலேயே இனி அமைச்சரவை கூடும்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அடுத்த வாரத்துக்கான (29.07.2020)  அமைச்சரவைக் கூட்டம் நடைபெறாது என தெரியவருகின்றது.

பொதுத்தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரங்களில் அமைச்சர்கள் பங்கேற்கவேண்டியுள்ளதாலேயே அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறாது என அறியமுடிகின்றது.

கடந்தவாரம் நடைபெற்ற கூட்டமே இந்த ஆட்சியின்கீழ் நடைபெற்ற கடைசி அமைச்சரவைக் கூட்டம் என்றும், 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறுவதால் அன்றைய தினமும் அமைச்சரவை கூடாது என தெரியவருகின்றது.

எனவே, பொதுத்தேர்தலில் வெற்றிபெறும் கட்சி புதிய அரசாங்கமொன்றை நிறுவி, அமைச்சரவையை நியமித்த பின்னரே இனி அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறும்.

விவாதத்துக்கு வருமாறு மஹிந்தவுக்கு சஜித் மீண்டும் சவால்!

பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தன்னுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

கண்டி தெல்தெனிய பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் இந்த சவாலை விடுத்தார்.

” எனக்கு பொருளாதாரம் தொடர்பான அறிவில்லை என்று பிரதமர் விமர்சித்துள்ளார். பரவாயில்லை, அவரை பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். அவ்விவாதத்தின்போது பொருளாதாரம் பற்றி கலந்துரையாடலாம்.” – என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அண்மையில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டமொன்றின்போதும் மேற்படி சவாலை சஜித் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘எனக்கு எதிரான சதிவேலை நடக்கிறது’ – ஏ.ஆர். ரஹ்மான் கவலை

பாலிவுட்டில் என்னை இசையமைக்க விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மறைந்த சுஷாந்த் நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள  ‘தில் பெசாரா’ திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட் படத்தில் இசை அமைத்தது குறித்து தனியார் வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:-

பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. நல்ல படங்களை எப்போதும் நான் தவிர்ப்பதே இல்லை. ஆனால் என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல் தவறான செய்தி செய்திகளை பரப்பி வருகிறது என்று நினைக்கிறேன்.

‘தில பெசாரா’ படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார். இரண்டு நாட்களில் அவரிடம் நான்கு பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், ‘பலர் என்னை உங்களிடம் போக வேண்டாம் என்று கூறினார்கள்.

அவர்கள் ஏதேதோ கதைகளை சொல்கிறார்கள்’ என்று கூறினார். அப்போதுதான் எனக்கு புரிந்தது. அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் இந்த தவறை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று

பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு நான் இசையமைக்கிறேன். அனைவரையுமே நான் வரவேற்கிறேன்.இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

‘கண்டி மாவட்டத்தில் மொட்டும், யானையும் எமக்கு சவால் அல்ல’

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கண்டி மாவட்டத்தில் கடந்த நான்கரை வருடங்களில் தளம்பலற்ற செல்வாக்குநிலை தொடர்ந்தது.கடந்த ஜனாதிபதி தேர்தலின்போதுகூட இதனை நிரூபித்தோம். பொதுத்தேர்தலிலும் பலத்தைக்காட்டுவோம் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கண்டி மாவட்டத்தில் 13 தேர்தல் தொகுதிகள் இருக்கின்றன. இவற்றில் நாவலப்பிட்டிய, கம்பளை, பாத்ததும்பர மற்றும் பாத்த ஹேவாஹெட்ட ஆகிய நான்கு தொகுதிகளில் மாத்திரமே சஜித் பிரேமதாச வெற்றிபெற்றார். அத்தொகுதிகளில்தான் தமிழ் மக்களே அதிகம் வாழ்கின்றனர். எனவே, வெற்றிக்கான களத்தை முற்போக்கு கூட்டணியே எமது செயற்பாடுகள் ஊடாக அமைத்துக்கொடுத்தது. எமது செல்வாக்கு எப்படியுள்ளது என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.

அதுமட்டுமல்ல கடந்த உள்ளாட்சிமன்றத்தேர்தலில் தனித்துபோட்டியிட்டு 23 ஆயிரம் வாக்குகளைப்பெற்றோம். எமக்கென இன்று 11 உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். எனவே, இத்தேர்தலிலும் எமக்கான மக்கள் செல்வாக்கு தொடரும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.

கண்டி மாவட்டத்தில் மொட்டும், யானையும் போட்டியிடுகின்றன. இவை இரண்டுமே எமக்கு சவால் அல்ல. ஏனெனில் மக்கள் ஆதரவு எமக்கே இருக்கின்றது. கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இனி எப்போதும் இழக்கக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.

கடந்தகாலங்களில் இருந்து பாடமும் கற்றுள்ளனர். எனவே, தமிழ்ப் பாராளுமன்றத்தை இழக்கும் வகையிலான தவறை அவர்கள் செய்யமாட்டார்கள். எனவே, மேற்படி இரு கட்சிகளைவிடவும் நாம் பலமாக இருக்கின்றோம். ” – என்றும் வேலுகுமார் கூறினார்.

 

இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிய மேலும் நால்வர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து வருகைதந்து, கொரோனா தடுப்பு முகாமில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த நால்வருக்கே வைரஸ் தொற்றியிருப்பது பிசிஆர் பரிசோதனைமூலம் தெரியவந்தது.

இதன்படி இலங்கையில் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 768 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 2 ஆயிரத்து 103 பேர் குணமடைந்துள்ளனர். 654 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர். 11 பேர் பலியாகியுள்ளனர்.

மலையகத்தில் வீடில்லாத அனைவருக்கும் வீடு – ஹப்புதளை கூட்டத்தில் பிரதமர் உறுதி!

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையகத்தில் வாக்காளர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

பிரதமரின் இணைப்புச் செயலாளரும் பதுளை மாவட்ட வேட்பாளருமான செந்தில் தொண்டமானின் அழைப்பை ஏற்று ஹப்புத்தளையில் இன்று சனிக்கிழமை (25) நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இன்று இந்த இடத்தில் ஆறுமுகன் தொண்டமானை நினைவுபடுத்தாமல் இருக்க முடியாது.

செந்தில் தொண்டமான் கடந்த 12 வருடங்களாக மக்களுக்கு பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கிறார். செந்தில் என்பவர் மிகத் திறமையான இளைஞர். அவர் மலையக மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறார்.

மலையக அரசியல்வாதிகள் பலர் எம்மைச் சுற்றியிருந்தாலும் மலையக மக்கள் தொடர்பில் எப்போதும் பேசுபவர்கள் தொண்டமான்கள் மாத்திரம்தான்.

செந்திலும் அவ்வாறு மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து எப்போதும் எங்களோடு கலந்துரையாடுபவர்.
செந்தில் தொண்டமான் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்துவைத்திருக்கிறார்.

செந்தில் தொண்டமான் என்னிடம் மூன்று கோரக்கைகளை முன்வைத்தார். அதில் முதல் கோரிக்கை ஆசிரியர்களுக்கான வீடமைப்புத் திட்டமாகும். அது செந்தில் தொண்டமானின் கோரிக்கைக்கு அமைய அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரமே இதுவரை காலமும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன நாம் .அதனை மாற்றியமைத்து மலையகத்தில் வாக்காளர் இடாப்பில் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படும்.

பதுளையில் ஏற்கனவே இரண்டு பாடசாலைகளை விஞ்ஞான கல்லூரிகளாக செந்தில் தொண்டமான் தரமுயர்த்தியுள்ளார். மேலும் இரண்டு பாடசாலைகளில் விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என என்னிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கையை முன்வைத்தார்.
அவரது கோரிக்கைக்கு அமைய நிச்சயமாக இரண்டு பாடசாலைகள் விஞ்ஞான பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும்.

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனைவருக்கும் அரசாங்கத் தொழில் வழங்க முடியாது. ஆதலால் இளைஞர், யுவதிகளுக்கு அவர்களின் தேவை உணர்ந்து ஊவா மாகாணத்தில் தொழிற்சாலைகள் நிருவப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் செந்தில் என்னிடம் முன்வைத்தார்.
அவ்வாறான தொழிற்சாலைகளையும் நாம் எமது ஆட்சிக்காலத்தில் உருவாக்குவோம்.

இவரின் திறமையையும் நேர்த்தியான அரசியல் பயணத்தையும் கருத்திற்கொண்டு மலையகத்தின் எதிர்காலத்துக்காகவும் அவர் செயற்படுவார் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவரது கோரிக்கைகளை நம்பிக்கையுடன் நிறைவேற்றுவேன்.

தேயிலைத் தொழிற்துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

இலங்கைத் தேயிலையை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான செயற்திட்டங்களையும் விளம்பர உத்திகளையும் நாம் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளோம்.

செந்தில் தொண்டமான் மலையக மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் எங்களிடத்தில் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகிறார். அவ்வாறான அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நாம் முழுமையான ஆதரவை அவருக்கு நாம் வழங்குவோம்.

எதிர்க்கட்சிகளில் போட்டியிட்டு தேர்தலின் பின்னர் எம்மோடு இணையும் கனவோடு காத்திருக்கும் எந்த மலையக அரசியல்வாதிக்கும் இடமில்லை. மலையத்தின் எதிர்காலம் நோக்கிய எமது பயணம் செந்திலுடன் மாத்திரமே தொடரும்.

இந்தத் தேர்தலில் செந்தில் எங்களோடு இருக்கிறார். தேர்தலின் பின்னர் செந்தில் தொண்டமானோடு நாங்கள் இருப்போம் என்பதை கூறிக்கொள்கிறேன் என்றார்.

பிரதமருக்கு பேரதிர்ச்சி கொடுத்த செந்தில் – ஹப்புதளையில் மக்கள் வெள்ளம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணியின்கீழ் பதுளை  மாவட்டத்தில்  போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பிரச்சாரப்பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச, இன்று ஹப்புதளை நகரில் நடைபெற்ற பிரமாண்ட கூட்டத்திலும் பங்கேற்றார்.

பிரதம அமைச்சரின் இணைப்புச்செயலாளரும், பதுளை மாவட்ட வேட்பாளருமான செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற இந்த வெற்றிப் பிர்சசாரக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் செந்தில் தொண்டமானுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்காக மூவின மக்களும் ஓரணியில் திரண்டதால் வாகன நெரிசல் ஏற்பட்டு, ஹப்புத்தளை நகரமே ஸ்தம்பித்தது.

கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மைதானத்தில் சுமார் 17 ஆயிரம் பேர் மாத்திரமே பங்கேற்கமுடியும். இந்நிலையில் மைதானம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்ததுடன், மைதானத்துக்கு வெளியில் வீதிகளில் அணிதிரண்டு நின்றும், மக்கள் பேராதரவை வழங்கினர்.

 

‘மலையக மக்களுக்கு ஜே.ஆரும் நானுமே வாக்குரிமை வழங்கினோம்’ – ரணில்

மலையக மக்களுக்கு ஜே.ஆர். ஜயவர்தனவே வாக்குரிமை வழங்கினார். அதன்பின்னர் எஞ்சியிருந்தவர்களுக்கு நான் வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தேன். எனவே, மலையக மக்களிடம் வாக்கு கேட்கும் உரிமை எமக்கு உள்ளது.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” 1972 ஆம் ஆண்டு முதல் நுவரெலியாவில் நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றேன். பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றுவதற்கு எனக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. ஜே.ஆர். ஜயவர்தன, காமினி திஸாநாயக்க போன்றோர் பல சேவைகளை செய்துள்ளனர்.

ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின்கீழ்  பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சௌமியமூர்த்தி தொண்டமானும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். ரணசிங்க பிரேமதாசவும் நுவரெலியாவுக்கு வீடுகளை வழங்கினார்.

நான் கல்வி அமைச்சராக இருந்தபோது, பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு கட்டடங்களை நிர்மாணித்துக்கொடுத்தேன். ஆசிரியர்களையும் வழங்கினேன். ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தேன்.
நான் பிரதமரான பின்னர் பெருந்தோட்ட மக்களுக்கு காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுவிட்டது. 2000 காலப்பகுதியில் ஆறுமுகன் தொண்டமான் எம்முடன் இருந்தார். பெருந்தோட்டப்பகுதியில் இருந்த பலருக்கு வாக்கு உரிமை இருக்கவில்லை. தோட்ட முகாமையாளரின் அனுமதி தேவைப்பட்டது. ஒரு சத்தியக்கடதாசி ஊடாக இந்நிலைமையை மாற்றியமைத்தேன். இதனால் சுமார் 2, 3 லட்சம் பேருக்கு வாக்குரிமை கிடைத்தது.

ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் நிறைய பேருக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. குடியுரிமையும் வழங்கப்பட்டது. எஞ்சியிருந்தவர்களுக்கு நான் வழங்கினேன்.

2015 இல் பெருந்தோட்டத்துறையை கட்டியழுப்புவதற்கு பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரதமர் மோடியை ஹட்டனுக்கு அழைத்துவந்தேன். வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. 25 தமிழ்ப் பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகள்கூட வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன.கம்பெரலிய திட்டம் ஊடாகவும் அபிவிருத்திகள் நடந்தன. அதேபோல சிங்கள கிராமங்களும் மேம்படுத்தப்பட்டன.

அதேவேளை, தற்போது கொரோனா வைரஸ் பரவிவருகின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பரிசோதனைகளையும் நடத்தவில்லை. தோட்டப்பகுதிகளில் கொரோனா பரவினால் என்ன நடக்கும்? எனவே, கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். பரிசோதனைகள் அதிகரிக்கப்படவேண்டும். நாளொன்றுக்கு 5 ஆயிரம் பரிசோதனைகளையாவது நடத்துங்கள். ” – என்றார்.

க.கிசாந்தன்

‘செத்தாலும் ஐ.தே.க. உறுப்பினராகவே சாவேன்’ – ரணில் முன்னிலையில் நவீன் சத்தியம்!

” வென்றாலும், தோற்றாலும் வேறு கட்சிகளுடன் இனி அரசியலில் ஈடுபடமாட்டேன். செத்தாலும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினராகவே சாவேன். நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களை பாதுகாப்பேன்.” – என்று ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் இன்று (25.07.2020) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் நவீன் திஸாநாயக்க மேலும் கூறியதாவது,

” ஐக்கிய தேசியக்கட்சியாக தனித்து போட்டியிடுவது தொடர்பில் ஆரம்பத்தில் எனக்கும் சிறு பயம் இருந்தது. ஆனால், கூட்டங்களை நடத்தும்போது மக்களின் பேராதரவு கிடைத்தது. எனவே, வெற்றிகரமாக பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. எனவே, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் நாம் நிச்சயம் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றுவோம். ஆட்சியை பிடிப்பதே எமது இலக்கு. அதற்கான ஆட்டத்தையே ஆடிவருகின்றோம்.

ஐக்கிய தேசியக்கட்சிதான் அதிக ஜனநாயக பண்புகளைக்கொண்ட கட்சியாகும். தலைவர் பதவிக்குகூட வாக்கெடுப்புமூலமே உறுப்பினர் தெரிவுசெய்யப்படும் நிலைமை காணப்படுகின்றது. வேறு எந்த கட்சியிலும் இரகசிய வாக்கெடுப்பு நடைபெறுவதில்லை. இதற்கு முன்னரும் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து பலர் பிரிந்துசென்றனர். எனது தந்தை பிரிந்து சென்றார். டி.ஸ். சேனாநாயக்கவின் பேரானான ருக்மண் சேனாநாயக்க வெளியேறினார். ஆனால், கட்சிக்கு பாரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. இம்முறையும் அப்படிதான்.

எமது கட்சியிலும் தலைவரிடமும் சில குறைப்பாடுகள் காணப்பட்டன. அவற்றை நிவர்த்தி செய்துள்ளோம். வேறு எந்தவொரு கட்சிக்கும் இனி செல்லக்கூடாது என்ற கொள்கையுடன்தான் ஐக்கிய தேசியக்கட்சிக்கு மீண்டும் வந்தேன். தற்போது எனக்கு 50 வயது, இன்னும் 20 வருடங்கள் உயிர்வாழ்வேன் என நம்புகின்றேன். அதுவரையில் ஐக்கிய தேசியக்கட்சியில்தான் இருப்பேன். கட்சி ஆதரவாளர்களை பாதுகாப்பேன். மரணிக்கும் நொடியில்கூட ஐ.தே.க. உறுப்பினராகவே இருப்பேன்.

கடந்த நான்கரை வருடங்களில் பல திட்டங்களை நாம் முன்னெடுத்தோம். அவற்றில் சில குறைப்பாடுகள் இருக்கலாம். அவற்றை நிவர்த்தி செய்து நாட்டை முன்நோக்கி அழைத்துச்செல்வதற்காகவே இன்னும் 5 ஆண்டுகளை கோருகின்றோம். நான் மக்களை அழிப்பவன் அல்ல, வளர்ப்பவன். அதனால்தான் இன்றளவிலும் எனது பின்னால் பலர் இருக்கின்றனர்.

ரணிலுடன் இணைந்ததான் பயணிப்பேன். அவருக்கு பின்னர் ஜனநாயக முறைப்படி தலைமைப்பதவியை ஏற்பதே எது விருப்பம்.” – என்றார்.

க.கிசாந்தன்

50 ரூபாவை இ.தொ.காவே தடுத்தது – திகா மீண்டும் குற்றச்சாட்டு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவை நவீனும், இதொகாவினருமே தடுத்து நிறுத்தினர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டிக்கோயாவில் இன்று (25) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இது தொடர்பில் திகாம்பரம் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதித்தேர்தலின்போது மலையக மக்களுள் பெருமளவானோர் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களிக்காவிட்டாலும், அவர் அனைத்து மக்களுக்கும் 5 ஆயிரம் ரூபா நிவாரணக்கொடுப்பனவை வழங்கினார் என்று ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

ஜனாதிபதி என்பவர் பொதுவானவர். வாக்களித்த மக்களுக்காக மட்டுமின்றி நாட்டு மக்களுக்காகவே அவர் பணியாற்றவேண்டும். இதுகூட புரியாமல் அரசியலில் அனுபவம் இல்லாதவராக ஜீவன் தொண்டமான் கருத்து வெளியிட்டுவருகின்றார்.

5000 ரூபாவை ஜனாதிபதி தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கவில்லை. அது மக்களின் வரிப்பணமாகும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை, நான் அமைச்சராக இருந்தபோது பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு மேலதிகமாக 50 ரூபா பெற்றுக்கொடுக்க முயற்சித்தேன். எனினும்,  நவீன் திஸாநாயக்கவும், இ.தொ.காவினருமே அதனை தடுத்துநிறுத்தினர். இவ்வாறு செய்துவிட்டு இன்று எம்மை குறைகூறுகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...