Home Blog Page 3936

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மேலும் 9 பேர் தப்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 09 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,103 ஆக அதிகரித்துள்ளது.

650 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 764 ஆக இருக்கின்றது.

ஆகஸ்ட் 9 ஆம் திகதி சிறிகொத்தவை கைப்பற்றுவோம் – ஹரின் சூளுரை

” தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியையும், கட்சி தலைமையகமான சிறிகொத்தவையும் நாம் நிச்சயம் கைப்பற்றுவோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் வேட்பாளர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” உண்மையான ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் எம்முடனேயே இருக்கின்றது. கட்சி பெயர் பலகை மட்டுமே ரணில் தரப்பிடம் இருக்கின்றது. ” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘கொரோனா’ தொற்றாளர்கள் சிகிச்சைபெறும் வைத்தியசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு

‘கொரோனா’ வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் சிகிச்சைப்பெறும் வைத்தியசாலைகளிலுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவமும், பொலிஸாரும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் கிசிச்சைபெற்றுவந்த கொரோனா நோயாளியொருவர் நேற்று தப்பிடியோடியதால் கொழும்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் சில இடங்களுக்கு சென்றுவந்த பிறகே தேசிய வைத்தியசாலைக்கு அருகில் வைத்து சிக்கினார்.

இந்நிலையிலேயே நோயாளிகள் எவரும் தப்பியோடாத விதத்திலும், சமூகத்தின் பாதுகாப்பு கருதியும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

‘சிறுபிள்ளைத்தனமான விமர்சனங்கள் வேண்டாம்’ – ஜீவன்

பெருந்தோட்ட பகுதியில் 3 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்ட உதவி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் இதற்கு முன்னர் இராஜாங்க கல்வி அமைச்சராக இருந்தவர் எமக்கு பதில் கூறவேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான நுவரெலியா மாவட்ட தலைமை வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டபகுதியில் நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

”  பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை எவராலும் பெற்று கொடுக்க முடியாது என்றும், ஆயிரம் ரூபா என்பது ஒரு பெரிய பிரச்சினை இல்லையென்றும் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்தவர் கூறுகின்றார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையில் ஆயிரம் ரூபா போதாது. எனினும், வழங்கிய உறுதிமொழிபடி ஆயிரம் ரூபாவினை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம். அது தான் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையும்கூட.

மலையகத்தில் உள்ள பிரச்சார பீரங்கிகள் மிகசிறப்பாக தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேர்தல் பிரச்சாரத்தில் 1000 ரூபா ஆறுமுகன் தொண்டமான் வீடமைப்பு போன்ற விடயங்களை முன்வைத்தே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா பிரச்சினை என்பது இது ஒரு தொழிற்சங்கத்தை சார்ந்த பிரச்சினையாகும்.

இதற்கு நாம் அரசாங்கத்தை குறை கூற முடியாது. நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அழுத்தங்களையும் சலுகைகளை கொடுக்கும் போது பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆயிரம் ரூபா சம்பளத்தினை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்குவார்கள்.

மலையகத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், மூத்த அரசியல்வாதிகள், ஜாம்பவான்கள் ஆகியோர் சிறுபிள்ளை தனமாக கூறி கொண்டு இருக்கிறார்கள்.ஜனாதிபதி ஆயிரம் ரூபா தருவதாக கூறினார், ஏன் வழங்கவில்லையென கேட்கிறார்கள்.

கடந்த அரசாங்கத்தின் போது கூட ஆயிரம் ரூபா சம்பளம் தோட்ட தொழிலாளர்களுக்கு தருவதாக கூறினர். கடந்த அரசாங்கத்தில் உள்ள பிரதமர் கூட கூறியிருந்தார். 5 வருடகாலமாக இவர்களால் 50 ரூபாவும் வழங்க முடியவில்லை.

140 ரூபாவும் வழங்க முடியவில்லை. இறுதியில் மக்களுக்கான 5000 ரூபா கடன் தொகையினையும் வழங்க முடியவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் குறைவான வாக்கு வீதத்தினையே வழங்கியிருந்தார்கள்.

இருந்தாலும் நாட்டின் ஜனாதிபதி அனைவரும் நன்மை பெறும் வகையில் 5000 ரூபா வாழ்வாதார கொடுப்பணவை வழங்கினார்.

பொகவந்தலாவ நிருபர் – எஸ்.சதீஸ்

‘3 தடவைகள் கருகலைப்பு’ – நடிகர் கைது!

3 முறை கருக்கலைப்பு செய்ததாக நடிகையை அவதூறு செய்த நடிகர் கைது செய்யப்பட்டார்.

தமிழில் சசிகுமாரின் பிரம்மன் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. மாயவன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது அதர்வாவுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு இணைய தள நடிகர் சுனிஷித் அளித்த பேட்டியொன்றில் 2015-ல் லாவண்யா திரிபாதியை திருமணம் செய்து கொண்டேன். பிறகு என்னோடு வாழப்பிடிக்காமல் விவாகரத்து செய்து கொண்டார். மூன்று முறை கருக்கலைப்பும் செய்தார்.

தமன்னா உள்ளிட்ட மேலும் சில நடிகைகளுடனும் எனக்கு தொடர்பு இருந்தது” என்று கூறியிருந்தார். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை மறுத்த லாவண்யா திரிபாதி மலிவான விளம்பரத்துக்காக தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ள சுனிஷித் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

சைபர் கிரைம் உதவி கமிஷனர் பிரசாத் கூறும்போது புகாரை பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்றார். சுனிஷித் தலைமறைவாகி விட்டார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் சுனிஷித்தை பொலிஸார் கைது செய்தனர்.

கொரோனா தொற்று தீவிர பரவலை எட்டியுள்ளது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ் தொற்று பரவல் சில நாடுகளில் தீவிர பரவலை எட்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், ஜெனீவாவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று 1½ கோடி பேருக்கும் மேலாக பாதித்து இருப்பதாகவும், 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தில் பதிவாகி இருக்கிறது.

எல்லா நாடுகளும் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் ஒப்பீட்டளவில் சில நாடுகளில் தீவிரமான பரவலை நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம்.

உலகளவில் கொரோனா பாதித்த 1 கோடி பேர் அல்லது மொத்த பாதிப்பில் மூன்றில் இரு பங்கினர் 10 நாடுகளை சேர்ந்தவர்கள். மொத்த பாதிப்பில் பாதிப்பேர் வெறும் 3 நாடுகளை சேர்ந்தவர்கள்தான்.

நாங்கள் ஏற்கனவே கூறியதுபோல, ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்கள், சமூக ஈடுபாடு உள்ளவர்கள் இரு முக்கிய தூண்களாக இருந்து கொரோனா தொற்றுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசைப் பொறுத்தமட்டில் பயன்படுத்த வேண்டிய கருவிகளில் ஒன்று சட்டம். இது கட்டாயப்படுத்துவது அல்ல. பொது ஆரோக்கியத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பது ஆகும்.

உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மேம்பாட்டு திட்டம் மற்றும் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கொரோனா வைரஸ் தொற்று சட்ட தரவுத்தளம் ஒன்றை தொடங்கி உள்ளோம். இது தொற்று நோய்க்கு எதிராக நாடுகள் அமல்படுத்தியுள்ள சட்டங்களின் தரவுத்தளம் ஆகும்.

அவசர கால அறிவிப்புகள், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், நோய் கண்காணிப்பு, முக கவசம் அணிவதையொட்டிய சட்ட நடவடிக்கைகள், தனிமனித இடைவெளியை பராமரித்தல், மருந்து மற்றும் தடுப்பூசிகளை அடைதல் ஆகியவையும் இதில் அடங்கும்.

நன்றாக வடிவமைக்கப்பட்ட சட்டங்கள், வலுவான சுகாதார அமைப்புகளை உருவாக்க உதவும். பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை மதிப்பீடு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டியது உள்ளது. பாதுகாப்பான பொது இடங்களை, பணித்தளங்களை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இருந்தாலும், மோசமாக வடிவமைக்கப்பட்டு, அமல்படுத்தப்படுகிற சட்டங்கள் ஓரங்கட்டப்பட்ட மக்களுக்கு தீங்கு விளைவிக் கின்றன. பாகுப்பாட்டை ஏற்படுத்துகின்றன. மேலும், தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை தடுக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கும், உயிர்களைக் காப்பதற்கும் சிறப்பான வழி உண்டு. தனி நபர்களும், சமூகத்தினரும் தங்கள் சொந்த ஆபத்தை நிர்வகிப்பதற்கும், அவர்களின் சொந்த ஆரோக்கியத்தையும், அவர்களைச்சுற்றிலும் இருப்பவர்களை பாதுகாப்பதற்கான ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட முடிவுகளை எடுப்பதாகும்.

கொரோனா தொற்று நோய் பல கோடி மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. ஏராளமானோர் மாதக்கணக்கில் வீடுகளில் அடைபட்டுள்ளனர். மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடர விரும்புகிறார்கள் என்பது முழுமையாக புரிந்துகொள்ளத்தக்கது.

ஆனால் நாம் பழைய இயல்பு நிலைக்கு திரும்பிவிட முடியாது. ஏற்கனவே தொற்றுநோய் நமது வாழ்க்கையை மாற்றிப்போட்டிருக்கிறது. புதிய இயல்புக்கு மாறுவது, நமது வாழ்க்கையை பாதுகாப்பாக வாழ்வதற்கான வழியாக அமையும்.

‘கொரோனா’ – 200 இற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பரிசோதனை மட்டத்தில்….

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி போட்டியில் 200 இற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள்உள்ளதால் வெற்றிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவிலிருந்து உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஒரு சமூக ஊடக நேரடி நிகழ்ச்சியில், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது:-

இயற்கை நோயெதிர்ப்பு சக்தியின் ஒரு கட்டத்திற்கு வர நோய்த்தொற்றின் அதிக அலைகள் தேவைப்படும்.

ஆகையால், விஞ்ஞானிகள் தடுப்பூசி சோதனைகளில் பணிபுரியும் போது, ​​கொரோனா வைரஸ் தொற்றை தக்க வைத்துக் கொள்ள முடிந்த அனைத்தையும் செய்ய, அடுத்த ஆண்டு அல்லது அதற்கு மேலாக, உலகம் “தயாராக” இருக்க வேண்டும் .

சிகிச்சை முறைகள் இறப்பு விகிதங்களை குறைக்கவும், மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடரவும் உதவும். இந்த நோயெதிர்ப்பு சக்தியை உண்மையில் பரப்புவதற்கு அந்த சங்கிலிகளை உடைக்க ஏதுவாக இருக்க 50 முதல் 60 சதவீதம் மக்கள் தேவை.

இதனை ஒரு தடுப்பூசி மூலம் செய்வது மிகவும் எளிதானது; மக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்து போகாமல் நாம் அதை விரைவாக அடைய முடியும். எனவே, இயற்கை தொற்றுநோய்களின் மூலம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கு, அவ்வாறு செய்வது மிகவும் நல்லது.

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், மக்கள் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கத் தொடங்குவார்கள். பாதிக்கப்பட்ட நாடுகளில் பொதுவாக 5 முதல் 10 சதவீதம் மக்கள் வரை ஆன்டிபாடிகளை உருவாக்கிய ஆய்வுகள் மூலம் இப்போது நமக்குத் தெரியும். சில இடங்களில் இது 20 சதவீதம் வரை அதிகமாக உள்ளது.

இந்த நோய்த்தொற்றின் அலைகள் நாடுகளில் மக்கள் ஆன்டிபாடிகளை உருவாக்கப் போகிறார்கள், அந்த மக்கள் சில காலம் நோயெதிர்ப்பு சக்தியுடன் இருப்பார்கள், எனவே அவர்கள் இந்த நோய்த்தொற்றின் பரவலுக்கு தடைகளாகவும் பிரேக்குகளாகவும் செயல்படுவார்கள்.

“மருத்துவ பரிசோதனைகள் வெற்றிகரமாக இருந்தாலும், இந்த ஆண்டு இறுதிக்குள் நமக்கு கிடைக்கும் என்றாலும் நமக்கு இன்னும் நூற்றுக்கணக்கான பில்லியன் அளவுகள் தேவை, அதற்கு நேரம் எடுக்கும்.

கொரோனா வைரஸ் தொற்றை புரிந்துகொள்வதில் விஞ்ஞானம் நகரும் அசாதாரண வேகத்தை எடுத்துக்காட்டும் வகையில் 200 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் சோதனையின் பல்வேறு கட்டங்களில் உள்ளன

தடுப்பூசி வளர்ச்சி என்பது பொதுவாக ஒரு நீண்ட காலம் மற்றும் அதிக உழைப்பு செயல்முறையாகும். எங்களுக்கு அதிகமான தடுப்பூசிகள் போட்டியில் உள்ளதால் வெற்றிக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்று அவர் கூறினார்.

‘முதுகெலும்புள்ள வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும்’ – மனோ

முதுகெலும்புள்ள வேட்பாளர்களை கண்டறிந்து தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று  முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் பிரசார கூட்டங்களில் உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,

 ” ஆளும்கட்சியோ, எதிர்கட்சியோ, முதுகெலும்புள்ள, துணிச்சலுள்ள, நாட்டின் ஜனாதிபதி  முதல் பிரதமர் வரை நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்க கூடிய, எமது மக்களின் அபிலாஷைகளையும், துன்பங்களையும் சிங்கள மொழியில் தேசிய அரங்குகளில் எடுத்து வைக்கக்கூடிய, ஆங்கில மொழியில் சர்வதேச அரங்குகளில் எடுத்து கூறக்கூடிய  வேட்பாளர்களை கண்டறிந்து அவர்களின் கட்சி சின்னத்துக்கும், அதன் பின் அந்த வேட்பாளர்களின் விருப்பு வாக்கு இலங்கங்களுக்கும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

சஜித் தலைமையிலான அரசாங்கத்தை அமைக்கவே நாம் போராடுகிறோம். அந்த நம்பிக்கை எமக்கு நாளுக்கு நாள் வலுக்கின்றது. யூஎன்பி கட்சியை கைப்பற்றுவது யூஎன்பிகாரர்களின் நோக்கமாக இருக்கலாம். கூட்டணிகாரர்களான எமக்கு அதுவல்ல, நோக்கம். எமது நோக்கம், அலரி மாளிகையை கைப்பற்றுவதாகும். அங்கே பிரதமர் ஆசனத்தில் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாசவை அமர செய்வதாகும்.

எது எப்படி இருந்தாலும், ஆளும்கட்சியோ, எதிர்கட்சியோ, இந்த நாட்டில் ஜனநாயகரீதியாக சண்டைபோட வேண்டிய இடத்தில், சண்டையிட்டு, அழுத்தம் திருத்தமாக எமது மக்களின் அபிலாசைகளுக்காக நிமிர்ந்து நின்று குரல் கொடுக்க கூடிய வேட்பாளர்களை அடையாளம் கண்டு அவர்களை தெரிவு செய்ய வேண்டியது தமிழ், முஸ்லிம் மக்களின் கடமை.

நேர்மை உள்ள, தூரப்பார்வை உள்ள, அர்ப்பணிப்பு உள்ள, துணிச்சல் உள்ள, பன்மொழி அறிவு உள்ள, விலை போகாத வரலாறு உள்ள, சொந்த இனப்பற்று உள்ள,  சகோதர இன, மதங்களின் மீது மரியாதை உள்ள, உண்மையான தேசப்பற்றுள்ள வேட்பாளர்கள் யார் என்பதை கண்டறியுங்கள்.

இதை  கண்டறிவது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. உங்கள் முன் வரும் வேட்பாளர்களை கொஞ்சம் கவனமாக ஒவ்வொருவராக அவதானித்து பார்த்தால், உண்மை அடையாளத்தை அறியலாம். எக்காரணம் கொண்டும் இதை கண்டறிய தவறிவிட்டீர்கள் என்றால், அடுத்து ஐந்து வருடங்கள் உங்கள் வாழ்க்கை கேள்வி குறியாகி விடும்.

இதை நான் இன்று எனது மாவட்டமான கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு மாத்திரம் கூறவில்லை.  நாடு முழுக்க வாழும் தமிழ் பேசும் இந்து, இஸ்லாம், கத்தோலிக்க தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சொல்கிறேன். ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பிறகு இதை செய்ய முடியாது. இப்போதே உங்கள் தீர்மானங்களை எடுங்கள்.   ” – என்றார்.

நோர்வூட்டில் 200 லீற்றர் தாரை களவாடிய இருவருக்கு மறியல்

200 லீற்றர் ‘தார் பெரலை’ களவாடிச்சென்ற நிலையில் கைதுசெய்யப்பட்ட இருவரை எதிர்வரும் திங்கட்கிழமைவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

நோர்வூட் –  மஸ்கெலியா பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் 200 லீற்றர் ‘தார் பெரலை’ களவாடிச்சென்ற இருவர் நோர்வூட் பொலிஸாரால் கடந்த 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். தாரை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதன்பின்னரே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ நிருபர் – எஸ். சதீஸ்

பிரதமர் மஹிந்த நாளை நுவரெலியாவில் சூறாவளிப் பிரச்சாரம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை (26) நுவரெலியா மாவட்டத்துக்கான பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தின்கீழ் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டங்களில் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
ஹட்டனில் நடைபெறும் கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்பார் என இ.தொ.காவின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான  மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாளை மதியம் 2 மணியளவில் ஹட்டன் டி.கே.டபல்யூ (Dkw)ம ண்டபத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
நீலமேகம் பிரசாந்த்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...