Home Blog Page 3937

நாட்டில் 5 மாகாணங்களில் கடும் வறட்சி – 4 மாகாணங்களில் மழை!

வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் 5 மாகாணங்களில் கடும் வறட்சி நிலவுகின்றது. இதனால் 2 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வடமேல், கிழக்கு, தென்,வடமத்திய மற்றும் வடக்கு ஆகிய மாவட்டங்களிலேயே வறட்சியுடனான காலநிலை தொடர்கின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென் மாகாணத்தில் வறட்சி நிலவினாலும் இன்று மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2,764 பேருக்கு கொரோனா – 2,094 பேர் மீண்டனர் – 11 பேர் மாண்டனர்!

நாட்டில் நேற்று மாத்திரம் 11 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தை சேர்ந்த 9 கைதிகளும், அங்கு தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பை பேணிய தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும். பிரித்தானியாவில் இருந்து நாடுதிரும்பிய ஒருவருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

இதன்படி இலங்கையில்கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 764 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் இதுவரையில் 2 ஆயிரத்து 94 பேர் குணமடைந்துள்ளனர்.659 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகளுக்கான ஆசனங்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் தீவிர பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றன. மறுபுறத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் தலைதூக்கியுள்ளன. இதனால் தேர்தல் களம் பரபரப்பாகவே காணப்படுகின்றது.

ஆளப்போவது எந்த கட்சி, வெற்றிப்பெறப்போகும் வேட்பாளர்கள் யார் என்பதை அறிவதற்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களுக்கு விகிதாசார முறைப்படி எவ்வாறு ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் பார்ப்போம்.

ஆசன ஒதுக்கீடு 

பாராளுமன்றத் தேர்தலில் மாவட்டமொன்றில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளில் இருந்து நிராகரிக்கப்பட்ட வாக்குகளை கழிக்க வருவதே செல்லுபடியான வாக்குகளாகும்.

அவ்வாறுவரும் தொகையிலிருந்து – , செல்லுபடியான வாக்குகளில் 5 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப்பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் பெற்ற வாக்குகள் கழிக்கப்படும்.

அதன்பின்னர் வரும் வாக்கு தொகையை மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் ஆசனங்களால் (போனஸ் ஆசனம் ஒதுக்கிய பின் வருவது) பிரிக்க வருவதே முதல் சுற்றில் ஆசனத்தை பெறுவதற்கு தேவையான வாக்குகளாகும்.

உதாரணமாக 2015 ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை எடுத்துக்கொண்டு இது தொடர்பில் விரிவாக ஆராய்வோம்.

2015 பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 734 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 32 ஆயிரத்து 788 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 87 ஆயிரத்து 946 ஆகும்.

இவ்வாறு செல்லுபடியான 3 லட்சத்து 87ஆயிரத்து 946 வாக்குகளில் இருந்து, 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் வாக்குகள் கழிக்கப்படும். (நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி ஆகிய இரு கட்சிகள் மாத்திரமே 5 வீதத்துக்கும் மேல் வாக்குகளைப்பெற்றிருந்தன.)

அதேபோல் 5 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப்பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 678 ஆககும். ( 387,946 – 11,678)

இதன்படி செல்லுபடியான   வாக்குகளில் இருந்து 5 வீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் வாக்குகளை கழிக்க வரும் எண்ணிக்கை 3 லட்சத்து 76 ஆயிரத்து 268 ஆகும்.

இந்த 3 லட்சத்து 76 ஆயிரத்து 268 வாக்குகளே ஆசன பங்கீட்டுக்கான வாக்குகளாக கருத்திற்கொள்ளப்படும். நுவரெலியா மாவட்டத்துக்கு 8 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப்பெற்ற கட்சிக்கு ஆரம்பத்திலேயே போனஸ் ஆசனம் ஒன்று ஒதுக்கப்படும். எஞ்சிய 7 ஆசனங்களே கட்சிகளுக்கு பங்கிடப்படும்.

இதன்படி 3 லட்சத்து 76 ஆயிரத்து 268 வாக்குகளை 7 ஆல் பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரிக்க வருவது 53 ஆயிரத்து 753 வாக்குகளாகும். அதாவது முதற்சுற்றில் ஒரு ஆசனத்தை பெறுவதற்கு தேவையான வாக்குகளாகும். கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளை குறித்த எண்ணிக்கையில் பிரிக்க வரும் மதிப்பீட்டுக்கமையவே ஆசனங்கள் ஒதுக்கப்படும்.

ஐக்கிய தேசியக் கட்சியானது 2 லட்சத்து 28 ஆயிரத்து 920 வாக்குகளைப் பெற்றிருந்தது. இதனை ஒரு ஆசனத்துக்கான வாக்குகளால் பிரிக்க வருவது (228,920 /53,753) 4 ஆகும். இதன்படி ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆனங்கள் ஒதுக்கப்பட்டது.

அடுத்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1 லட்சத்து 47 ஆயிரத்து 348 வாக்குகளை ப்பெற்றிருந்தது. (147,348/53,753) இதனை பிரிக்க வருவது 2 ஆசனங்கள். அது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்டது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு 4 ஆசனங்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 2 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. மீதம் ஒரு ஆசனம் இருக்கின்றது. 5 வீதத்துக்கும் மேல் பெற்ற வேறு கட்சிகளும் இல்லை. இதன்போதே எஞ்ஞசி வாக்குகள் கருத்திற்கொள்ளப்பட்டு 2ஆம் சுற்றில் ஆசனப்பகிர்வு இடம்பெறும்.

4 ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 13 ஆயிரத்து 908 வாக்குகளே எஞ்சியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணிக்கு 39 ஆயிரத்து 842 வாக்குகள் எஞ்சியுள்ளன. இதற்கமைய ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணிக்கே அந்த ஆசனம் வழங்கப்படும்.

இதன்படி  ஒரு போனஸ் ஆசனம் உட்பட ஐக்கிய தேசியக்கட்சிக்கு 5 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 3 ஆசனங்களும் நுவரெலியா மாவட்டத்தில் ஒதுக்கப்பட்டன. ஐக்கிய தேசியக்கட்சியில் விருப்பு வாக்கு பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்திருந்தவர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்திருந்தவர்களும் சபைக்கு தெரிவானார்கள்.

முதல் சுற்றிலேயே ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டால் எஞ்சிய வாக்குகள் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என்பதையும் கவனத்திற்கொள்வோம்.

ஆர்.சனத்

செந்திலின் வெற்றியுடன் பதுளை மிளிரும்

செந்தில் தொண்டமானின் வெற்றியுடன் பதுளை மாவட்டத்தில் மொட்டு அணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கட்சித் தலைவர், பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று பதுளையில்  பிரசாரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர், செந்தில் தொண்டமானின் வெற்றியுடன் பதுளையில் அரசாங்கம் அமோக வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.

அத்துடன், பதுளை மாவட்டத்தில் ஆளும் கட்சிக்கு 7 ஆசனங்கள் கிடைப்பது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆளும் கட்சியில் செந்தில் தொண்டமான் இருக்கும் போது எதிர்தரப்பில் இருந்து எந்தவொரு நபரையும் ஆளும் கட்சி உள்வாங்காது எனவும் இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆளும் கட்சி பதுளையில் 7 ஆசனங்களைப் பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், எதிர் தரப்பினருக்கு ஆளும் கட்சியின் கதவு அடைத்தே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

செந்தில் தொண்டமானுக்கு அடுத்த அரசாங்கத்தில் பலம்மிக்க அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பகிரங்கமாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

‘தேர்தல் கூட்டத்துக்கு செல்லாத தோட்ட தொழிலாளர்களின் வீடுகள்மீது கல்வீச்சு தாக்குதல்!

கேகாலை தெஹிஓவிட்ட − மாஒயா பகுதியில் ஆளுங்கட்சியால் நடத்தப்பட்ட பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்காத தோட்டத்தொழிலாளர்களின் லயன்கு டியிருப்புகள்மீது தொடர்ச்சியாக கல்வீச்சு தாக்குதல் நடத்தப்படுவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் 12 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளபோதிலும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த 19 ஆம் திகதி முதல் இவ்வாறு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்படுவதாகவும், இதனால் தொழிலுக்குகூட செல்லாமல் தமக்கு வீட்டுக்குள் முடங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தோட்ட தலைவர் ஒருவரின் வீட்டிலேயே பிரச்சாரக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும், அதில் பங்கேற்காததாலேயே தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடர் செப்டம்பர் 19 இல் ஆரம்பம்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) ரி-20  தொடர் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘கொரோனா’வால் ஐ.பி.எல். போட்டி தொடரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றுவதற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீர்மானம் எடுத்திருந்தது. அதற்கான அனுமதியை மத்திய அரசாங்கத்திடம் கோரியிருந்தது.

இந்தநிலையில் இன்று காலை அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த வாரம் நடைபெறும் ஐபிஎல் நிர்வாக சபைக் கூட்டத்தில் அட்டவணை மற்றும் அணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்படுவது குறித்த கூடுதல் விபரங்கள் விவாதிக்கப்படும்.

2020ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்ட ஐ.பி.எல். கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

‘கொரோனா’வால் போலிவியாவில் 2ஆவது முறையும் ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக போலிவியாவில் நடைபெற இருந்த ஜனாதிபதி தேர்தல் 2ஆவது முறையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எவோ மாரல்ஸ் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக கூறி எவோ மாரல்சுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது.

போராட்டத்தில் பொதுமக்களுடன் ராணுவமும் கலந்துகொண்டதால் மாரல்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பொலிவியாவில் இருந்து வெளியேறி மெக்சிகோவில் தஞ்சம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த பெண் எம்.பி. ஜூனைன் அனெஸ் தன்னைத்தானே இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டார்.

அந்த நாட்டு நாடாளுமன்றத்தில், ஆகஸ்ட் 2 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்தி முடிக்க மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மசோதாவுக்கு ஜூனைன் அனெஸ் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து இது தொடர்பாக வழக்கு ஒன்றை அந்நாட்டு தேர்தல் கோர்ட்டில் தொடரப்பட்டது. அதில் செப்டம்பர் 6ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஆனால் போலிவியாவில் தற்போது கொரோனா தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டில் இதுவரை 64 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு சுமார் 2 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, ஜனாதிபதி தேர்தலை மீண்டும் தள்ளிவைக்க பொதுத்தேர்தல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தேர்தல் கோர்ட் செப்டம்பரில் நடைபெறவிருந்த போலிவிய ஜனாதிபதி தேர்தலை அக்டோபர் 18 ஆம் திகதிக்கு மாற்றி உத்தரவிட்டது.

ஒக்டோபர் 18 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் முடிவுகள் சரிவர வெளியாகவில்லை என்றால் நவம்பர் 29 ஆம் தேதி இரண்டாவது கட்டமாக தேர்தல் வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

‘தை பிறந்துவிட்டது – ஆடியும் முடியப்போகிறது – ஆயிரம் ரூபா மட்டும் வரவே இல்லை’

” சிலர் கூறுவது போல தாத்தாவும், அப்பாவும் மலையகம் தொடர்பில் கனவு காணவில்லை. நாம்தான் கண்டோம். கண்ட கனவுகளை நிறைவேற்றியும் உள்ளோம்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கினிகத்தேனை கெனில்வத்தை தோட்டத்தில் இன்று (24.07.2020) மாலை இடம்பெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மலையகம் தொடர்பில் நாமே கனவு கண்டோம். அந்த கனவுகளை நிறைவேற்றியுள்ளோம். எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்கும் திட்டமிட்டுள்ளோம். ஆனால் தாத்தா கண்ட கனவு, அப்பா கண்ட கனவு என்று சிலர் மக்களை ஏமாற்றிவருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலின்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றார். தற்போது நோர்வூட்டுக்கு வந்துசென்றுள்ளார். ஆனால், இன்னும் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள், ஏப்ரல் என்றார்கள், தற்போது ஆகஸ்ட் மாதமும் வரப்போகின்றது. ஆயிரம் ரூபா மட்டும் வரவேயில்லை. எனவே, பொய்யுரைப்பவர்களை பாராளுமன்றம் அனுப்பினால் அவர்கள் மீண்டும், மீண்டும் பொய்யுரைக்கவே முற்படுவார்கள்.

எனவே, மக்களுக்கு சேவைகளை செய்துள்ள நாம் அவற்றை சுட்டிக்காட்டி உரிமையுடனேயே வாக்கு கேட்கின்றோம். பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் எமது சேவைகள் தொடரும். தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் வெற்றிபெறுவார்கள். சலுகைகளுக்காக பேரம் பேசமாட்டோம். மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கவே பேரம் பேசுவோம்.” – என்றார்.

க.கிசாந்தன்

2020 O/L பரீட்சை – விண்ணப்பதாரிகளுக்கான விசேட அறிவித்தல்!

2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 22 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

இதன்படி பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளிடம் 2020-07-22 முதல் 2020-08-31 திகதி வரையில்  விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இம்முறை அனைத்து விண்ணப்பதாரிகளும் இணைய வழி ஊடாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

 பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk பிரவேசித்து குறித்த அறிவுறுத்தல்களை நன்கு ஆராய்ந்து இணையவழி ஊடாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

‘1000 கதைகூறி ஏமாற்றும் அரசாங்கத்தை விரட்டியடிப்போம்’ – சஜித்

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாட்டு மக்களை ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரட்டியடித்து, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சியை மலரசெய்வதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிவரும் வேலுகுமாரின் வெற்றியையும் மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சஜித் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதத்தில் நாவலப்பிட்டியவில் இன்று 24.07.2020 நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சஜித் மேலும் கூறியதாவது,

” பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உறுதியளித்திருந்தது. அந்த தொகை கிடைத்துவிட்டதா? இல்லை. இவ்வாறுதான் இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது. எமது ஆட்சியின்கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அந்த உறுதிமொழியை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

அதேபோல் மக்களுக்கு 20 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான பொருளாதாரத்திட்டமும் எம்மிடம் உள்ளது. ஆட்சிக்கு வந்து 24 மணிநேரத்துக்குள் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படும். உலக சந்தையின் எரிபொருட்களின் விலைகள் குறைந்தும், இந்த அரசாங்கம் அதன் நன்மையை நாட்டு மக்களுக்கு வழங்கவில்லை.

சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவிலும் கைவைத்துள்ள இந்த அரசாங்கம், மின்கட்டணம் தொடர்பிலும் போலியான அறிவிப்புகளை விடுத்துவருகின்றது. மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் கட்டணம் இல்லாது செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால், அறவிடப்பட்டுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்கட்டணத்தை செலுத்தியவர்களுக்கு எமது ஆட்சியின்கீழ் அந்த கொடுப்பனவு மீள வழங்கப்படும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.

நாட்டு மக்களை பலவழிகளிலும் ஏமாற்றிவரும் இந்த அரசாங்கம் அடுத்துவரும் நாட்களில் அரச ஊழியர்களின் சம்பளத்தைக்கூட குறைக்கலாம். மேலும் சிலரை வீட்டுக்கு அனுப்பலாம். இவை தடுக்கப்படவேண்டும். அப்படியானால் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சிமலரவேண்டும்.

தொலைபேசி வெற்றிபெறும். கண்டி மாவட்டத்திலும் வெற்றி உறுதி. நான் பிரதமராவேன். அதன்பின்னர் அப்பகுதிகளுக்கு வருவேன்.” – என்றார்.

க.கிசாந்தன்

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...