Home Blog Page 3938

செந்தில் தொண்டமானுக்கு பெருகிவரும் பேராதரவு – சுயேட்சைக்குழு வேட்பாளர்களும் சங்கமம்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் ஆப்பிள் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த வேட்பாளர்கள், செந்தில் தொண்டமானைச் சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

செந்தில் தொண்டமானை, பண்டாரவளையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த வேட்பாளர்கள், செந்தில் தொண்டமானின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது கரங்களைப் பலப்படுத்துவதற்காக உழைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவரது வெற்றி மூலமாக எமது சமூகத்துக்கு ஊவா மாகாணத்தில் பாதுகாப்பும் அபிவிருத்தியும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து ஆப்பிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் கருத்து வெளியிடுகையில்,

“பதுளை மாவட்டத்தில் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காகவே பல்வேறு சுயேட்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோரின் தரகர்களாகவே சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்  போட்டியிடுகின்றனர்.

நான்கு இலட்சம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தோருக்கு 2 சுயேட்சைக் குழுக்களும் ஒரு இலட்சம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தோருக்கு 10 சுயேட்சைக் குழுக்களும் பதுளையில் போட்டியிடுகின்றன. சுமார் 14 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டால் பாராளுமன்றம் செல்லலாம் என எமக்குச் சொல்லப்பட்டது.

அதில் நாம் ஆயிரத்து 500 வாக்குகளைப் பெற்றால் போதும் என்றார்கள். அதனால் நாங்கள் சூட்சுமமாக ஏமாற்றப்பட்டோம். தேர்தல்கள் ஆணைக்குழுவால் பதுளை மாவட்டத்தில் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். அவ்வாறானதொரு சூழ்நிலையில் ஐந்து இலட்சம் வாக்காளர்கள் கொண்ட பதுளை மாவட்டத்தில் ஓர் உறுப்பினர் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெறவேண்டியுள்ளது.

இவர்கள் சொல்வது போன்று 14 ஆயிரம் அல்லது 15 ஆயிரம் வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் இந்த மாவட்டத்தில் 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள்.

கடந்த கலங்களில் பராளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சிகளில் ஒன்றான மக்கள் விடுதலை முன்னணி 25 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. பாராளுமன்றத்துக்கு ஓர் உறுப்பினரை அவர்களால் தெரிவு செய்ய முடியாமல் போனது.

அவ்வாறான சூழ்நிலையில் சிறுபான்மை இனத்தவர்கள் அதிக வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவாகக் கூடாது என்பதற்காக பெரும்பான்மை இனத்தவர்கள் எங்களை கருவிகளாகப் பயன்படுத்தினர். இன்று சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என நாம் சிந்தித்தோம். ரணில் கட்சியிலோ சஜித் கட்சியில் இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் போது எந்தவிதமான பிரயோசனமும் எமக்கு இல்லை.

ஏனென்றால், கடந்த தேர்தலில் அவர்கள் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்றார்கள். அதில் 15 இலட்சம் வாக்குகள் வடக்கு கிழக்கு மக்களால் அளிக்கப்பட்டவை. மிகுதி உள்ள 40 இலட்சம் வாக்குகளை தற்போது ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் பிரித்துக்கொண்டுள்ளார்கள். ஆதலால் தலைகீழாக இருந்தாலும் அவர்களால் ஆட்சியமைக்க முடியாது. உடைந்த பஸ்ஸில் டிக்கட் எடுத்து பயணிப்பதை விட ஒழுங்கான, பாதுகாப்பான பஸ்ஸில் பயணிப்பது மேலானது.

அதனாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்சவின் பஸ்ஸில் பயணிக்கத் தயாரானோம். செந்தில் தொண்டமான் சக்தி வாய்ந்த அரசாங்கத்தில் முக்கிய பதவியை வகிப்பார். அனைவருக்கும் சேவையாற்றுவார். அவரிடம், இன, மத, குல வேறுபாடுகள் கிடையாது. ஊவா முழுவதும் செந்தில் தொண்டமானுக்கான ஆதரவு பெருகிவருகின்றது. பதுளை மாவட்டத்தில் அவர் சாதனை படைப்பார். அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குவோம்.” – என்றனர்.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 95 லட்சம் பேர் தப்பினர்’

உலகம்  முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 73 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 56 லட்சத்து 73 ஆயிரத்து 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 95 லட்சத்து 60 ஆயிரத்து 604  பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – 41,69,991
பிரேசில் – 22,89,951
இந்தியா – 12,38,635
ரஷியா – 7,95,038

‘1000 ரூபா மட்டுமல்ல எமது மக்களுக்கு ஆயிரம் பிரச்சினைகளும் உள்ளன’

மலையக மக்கள் என்றால் அவர்களுக்கு சம்பள பிரச்சினை மாத்திரம்தான் இருப்பதாக பலரும் பேசுகின்றார்கள்.ஆனால் அதனையும் தான்டிய பல பிரச்சினைகள் எங்களுடைய மக்களுக்கு இருக்கின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே எங்களுடைய மக்களின் பிரச்சினைகளை சம்பளத்திற்குள் மாத்திரம் மட்டுப்படுத்திவிடாதீர்கள் என மலையக மக்கள் முன்ன்ணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா அமைப்பாளர் தினேஸ் கிரிசாந்த ஏற்பாடு செய்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்று நுவரெலியா குயின்ஸ்பெரி விருந்தகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் ஜக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும் பண்டார நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தினேஸ் கிரிசாந்த அசோக ஹேரத் நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் மகிந்த சில்வா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய வேலுசாமி இராதாகிருஸ்ணன்,
நுவரெலியா மாவட்டம் என்பது நான்கு தேர்தல் தொகுதியை கொண்ட ஒரு மாவட்டமாகும்.இந்த மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதியிலும் ஜந்துவிதமான காலநிலை நிலவுகின்றது.இவ்வாறான ஒரு மாவட்டம் இலங்கையில் எங்குமே இல்லை என்றுதான் கூற வேண்டும்.
எனவே இந்த மாவட்டத்தை பொருத்த அளவில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதில் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை என்றுதான் கூற வேண்டும்.அதற்கு கடந்த காலங்களில் இருந்த சுற்றுலா துறை அமைச்சர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.நாங்கள் பலமுறை இது தொடர்பாக கலந்துரையாடிய பொழுதும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை.
எனவே அடுத்து வருகின்ற அரசாங்கத்தின் மூலமாக அதனை நிறைவேற்ற வேண்டும்.அதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மிகவிரைவில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.அதற்கு இந்த மாவட்டத்தில் இருக்கின்ற உள்ளுராட்சி சபைகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தின் பெருந்தோட்ட தொழிலாளர்கள் தொடர்பாக அனைவரும் பேசுவது சம்பள பிரச்சினை தொடர்பாக மாத்திரமே.ஆனால் அதனைவிட பல பிரச்சினைகள் எங்களுடைய மக்களுக்கு இருக்கின்றது.
குறிப்பாக கல்வி சுகாதாரம் அடிப்படை வசதிகள் என பல பிரச்சினைகள் இருக்கின்றது.இது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும்.நான் கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த பொழுது கல்வி தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்தேன்.எனவே ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘கொரோனா’ – இலங்கையில் மேலும் 17 பேர் குணமடைவு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 17 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,O94 ஆக அதிகரித்துள்ளது.

648 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 753 ஆக இருக்கின்றது.

‘நுவரெலியா மாவட்டத்திலுள்ள போலி வைத்தியர்களுக்கு முடிவு கட்டப்படும்’

நுவரெலியா மாவட்டத்திலுள்ள போலி வைத்தியர்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும். அத்துடன், அவர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் திரட்டப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – என்று நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தலகல தெரிவித்தார்.

” பெருந்தோட்ட பகுதியை அண்டிய நகர் மற்றும் கிராம புறங்களில் இவ்வாறான போலி வைத்தியர்கள் உள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. அவர்களை இனம் கண்டு அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.” – என்றும் அவர் கூறினார்.

பொகவந்தலாவயில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது!

பொகவந்தலாவ கெசல்கமு ஓயா வனப்பகுதியான மோரா தோட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளார்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு நேற்று மாலை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தரவின் பேரில் விசேட பொலிஸ் குழுவொன்று, வனப்பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட இருவரை கைது செய்ததுடன், மாணிக்கக்கல் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

தப்பியோடிய கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார்!

தப்பியோடிய கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று அதிகாலை தப்பியோடிய நிலையில், அவரை கண்டுபிடிப்பதற்காக ஆறு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இராணுவமும் களமிறக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவர் இன்று முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தப்பியோடிய கொரோனா நோயாளியை பிடிக்க 6 விசேட பொலிஸ் குழுக்கள் – இராணுவமும் களத்தில்

அங்கொடை ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் இன்று அதிகாலை தப்பியோடிய நிலையில், அவரை கண்டுபிடிப்பதற்காக ஆறு விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
 
அத்துடன், இராணுவ புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட சில இராணுவக்குழுக்களும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.
எல்.சியாம் நசீம் என்ற 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். அவரது இடது காலில் ஊனமடந்த நிலை காணப்பட்டுள்ளது. அவர் நடக்கும் போது வித்தியாசமாக இருக்கும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
 
சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தால் 119 என்ற இலக்கத்திற்கு அல்லது 071 – 8 591 017, 071- 8 592 290, 071 – 8 591 864 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘அன்பளிப்பாக சாராயம் வழங்கி வாக்கு கேட்பது துரோக அரசியலின் உச்சம்’

மலையக சமூகம் மாற்றத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில் அதன் பிரதான பங்குதாரர்களாக இருக்கும் எமது இளைஞர்களிடமிருந்து வாக்குகளைப்பெறுவதற்காக சிலர் அன்பளிப்பாக மதுபானம் வழங்கி பிரச்சாரம் முன்னெடுப்பது துரோக அரசியலின் உச்சகட்டமாகும் என்பதுடன், இவ்வாறான சமூகசீரழிவுச் சம்பவங்களை  வன்மையாகக் கண்டிக்கின்றோம்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் தெரிவித்தார்.

இளைஞர் பிரதிநிதிகள் சிலருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டிலிருந்தும் குறிப்பாக மலையகத்திலிருந்தும் போதைப்பொருட்களையும், மதுபானத்தையும் முற்றாக துடைத்தெறியவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். எமது முன்னேற்றத்துக்கு ஏதோவொரு விதத்தில் இவை தடையாக இருக்கின்றன என்பது தெளிவு. குறிப்பாக உழைக்கும் பணத்தில் சிலர் பெரும் பகுதியை மதுபானத்துக்கு செலவிடும் அவலநிலையும் காணப்படுகின்றது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, மதுவற்ற நாட்டை – மலையகத்தை உருவாக்குவதற்காக இளைஞர்கள் பலர் இன்று முன்வந்துள்ளனர். எமது பெண்களும் இதற்கு முழு பங்களிப்பையும் வழங்கிவருகின்றனர். முன்னர் சாராய போத்தலையும், சாப்பாட்டு பார்சலையும்

வழங்கினால் வாக்குகளைப்பெற்றுவிடலாம் என்றதொரு நிலை இருந்தது என நினைத்துக்கொண்டு இன்றும் அவ்வாறு செய்வதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால், அந்த காலம் மலையேறிவிட்டது. எமது இளைஞர்கள் மாற்றத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டனர். மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

எனினும், சில நயவஞ்சக அரசியல்வாதிகள், எப்படியாவது வாக்குகளைப்பெற்றுவிட வேண்டும் என்பதற்காக அன்பளிப்பாக சாராயம் வழங்கும் சதிகார வலையை விரித்துள்ளனர். ஆசை வார்க்தைகளைக்கூறி இளைஞர்களை எப்படியாவது அந்த வலைக்குள் வீழ்த்தி சாராயம் வழங்கியேனும் சாதித்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். இப்படியான அரசியலை நாம் வெறுக்கின்றோம். அதனை கைவிடுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளிடமும் கேட்டுக்கொள்கின்றோம். அவ்வாறு கைவிட்டால் நாம் வேட்பாளர் என்ற நிலையை மறந்து, அவர்களுக்காக வாக்குகேட்க தயாராக இருக்கின்றோம். ஏனெனில் எல்லாவற்றைவிடவும் மக்கள் நலம்தான் எமக்கு முக்கியம்.

சமூகத்தை சீரழித்துவிட்டு வாக்குகளைப்பெற முயற்சிப்பது அரசியல் அல்ல, அதற்கு வேறு பெயர் உள்ளது. இன்று நுவரெலியா மாவட்டத்தில் சந்திக்கு சந்தி சாராயக்கடைகள் உள்ளன. எமது சமூகம் முன்னேறக்கூடாது என்பதற்காக போடப்பட்ட தடைகளில் இந்த சாராயக்கடைகளும் ஒன்று. இதனை இளைஞரகளின் துணையுடன் மாற்றுவோம்.” – என்றார்.

பாடசாலைகள் திங்கள் ஆரம்பம் – வகுப்பு நேரங்களில் மாற்றம்!

பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மாலை 3.30 வரை கல்வி நட வடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகுப்புகளுக்கான ஆசிரியர்களை தவிர வேறு ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வர வேண்டிய அவசியமில்லையென அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை 11, 12 மற்றும் 13ஆம் வகுப்புகளுக்கு மாத்திரமே பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப் படுகின்றது.

அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி அனைத்து வகுப்புகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான சுற்றறிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தது ஈரான்!

0
உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இவ்வாறு திறந்திருக்கும் என...

‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயல்திட்டங்கள் குறித்து மீளாய்வு!

0
'கிளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17) முற்பகல்...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

0
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நுவரெலியா நோக்கி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை பாரியளவில் அதிகரித்துள்ளது. இதனால் டெவோன் (Devon) மற்றும் சென்கிளையார் (St. Clair) நீர்வீழ்ச்சிக் காட்சித் தளங்களில் சுற்றுலாப் பயணிகளின்...