Home Blog Page 3944

சீரற்ற காலநிலையால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு – இன்றும் மழை!

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலைவேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

அதேவேளை, சீரற்ற காலநிலையில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடை மழை, கடும் காற்றால் 225 வீடுகள் சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலையால் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

25 லட்சம் சிங்கள வாக்குகளை இழந்துவிட்டோம் – ரணில் கவலை

” ஐக்கிய தேசியக்  கட்சியானது கடந்த காலத்தில் 25 லட்சம் சிங்கள வாக்குகளை இழந்துவிட்டது. அதனை மீளப்பெற்று, தமிழ், முஸ்லிம் வாக்குகளையும் தக்கவைத்துக்கொண்டு கட்சி முன்நோக்கி பயணிக்கும்.” – என்று ஐ.தே.கவின் தலைவரும், கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய தேசியக் கட்சியினராகிய நாம் பல சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். இம்முறை நடைபெறும் தேர்தலும் ஒரு சவால்மிக்கவிடயம்தான். இருந்தாலும் கொரோனாவுக்கு மத்தியில் நாட்டை எவ்வாறு முன்நோக்கி அழைத்துசெல்வது என்பதுதான்  பிரதான சவாலாகும். அதற்கும் முகங்கொடுப்பதற்கு நாம் தயாராகிவிட்டோம்.

1993 ஆம் ஆண்டு நான் பிரதமரானபோது, லலித் அத்துலத் முதலி கொல்லப்பட்டிருந்தார். எதிரணி எமது பக்கமே விரல் நீட்டியது. மாகாணசபைத் தேர்தலிலும் எதிரணி மூன்று சபைகளைக் கைப்பற்றியது. அதுமட்டுமல்ல ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் எமது கட்சியின் பிரதான தலைவர்கள் கொலைசெய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் கட்சியை முன்நோக்கி கொண்டுசெல்வது பெரும் சவாலாக இருந்தது. அந்த சவாலையும் எதிர்கொண்டு முன்நோக்கி பயணித்தோம்.

இனிவரும் காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியாக நாம் முன்நோக்கி செல்வோம். எமக்கு இல்லாமல்போயுள்ள 25 லட்சம் சிங்கள வாக்குகளைப் பெறுவோம். தமிழ், முஸ்லிம் வாக்குகளையும் பாதுகாத்துக்கொள்வோம். ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர்களை மாத்திரம் நிறுத்தக்கூடியதாக இருந்திருந்தால் இனவாத பிரச்சினைகூட ஏற்பட்டிருக்காது.

ஜனாதிபதி தேர்தலின்போது நாம் எவரினதும் காலை வாரவில்லை. ஒற்றுமையாக பயணிக்கவே முயற்சித்தோம். ஆனால் பிரிந்தசென்றுவிட்டனர். பொதுத்தேர்தலில் ஆட்சியைப்பிடிப்பதே எமது இலக்கு. அதனை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கின்றோம். தெளிவான முறையில் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் முன்வைத்துள்ளோம்.” – என்றார்

நுவரெலியாவின் அபிவிருத்தி உறுதியானது : பிரபு முத்தையா

அடுத்த ஐந்து வருடங்களில் நுவரெலியா மாவட்டத்தை அனைத்துத் துறைகளிலும் அபிவிருத்தி செய்வது உறுதி என்று நுவரெலியா மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நுவரெலியாவிற்கு சென்று திரும்பிய நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவி வகிப்பார் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

எனவே, அவருடன் இணைந்து பயணிக்கும் பிரதிநிதிகளுக்கு தங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதேசங்களுக்கு இலகுவாக அபிவிருத்தியை எடுத்துவர முடியும். அதன்படி நுவரெலியாவில் அடுத்த ஐந்து வருடங்களில் கணிசமான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயம், கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, சுற்றுலா, விளையாட்டு ஆகிய துறைகளில் இந்த அபிவிருத்திகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கான திட்டங்கள் தம்மிடம் இருக்கின்ற நிலையில், அதற்கான மக்கள் அங்கீகாரம் மட்டுமே தற்போது தேவையாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 வந்தாச்சு! டீசர் இதோ – முற்றிலும் வித்தியாசமான லோகோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 எப்போது என்ற கேள்விகள் டிவி நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் மத்தியில் உதயமாகிவிட்டன. தற்போது கொரோனா ஊரடங்கு, படப்பிடிப்புகளுக்கு தடை என இக்கட்டான சூழல் நிலவி வருகின்றது.

இதனால் இவ்வருடம் பிக்பாஸ் சீசன் 4 இருக்குமா என்ற சந்தேகம் பலரின் மனதிலும் இருக்கிறது. தெலுங்கிலும் சீசன் 4 ஐ எட்டிவிட்டது. நிகழ்ச்சிக்கான வேலைகள் தொடங்கிவிட்டதாக அண்மையில் தகவல் வெளியாகியது.

போட்டியாளர்களுடன் பேச்சு வார்த்தை, ஒப்பந்தம், ஆன்லைன் மீட்டிங் என நடைபெற்று வந்ததாகவும் சொல்லப்பட்டன. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 க்கான டீசர் வெளியாகியுள்ளது.

எனவே தெலுங்கு பிக்பாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனால் தமிழ் பிக்பாஸ் ரசிகர்கள் நமக்கு எப்போது என ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.

#BigBosstamil #BigBoss

View this post on Instagram

Here is the most awaited time of the year!!! #BiggBossTelugu4 coming soon on @StarMaa #StaySafeStayStrong #MaaPrayatnamManakosam

A post shared by BIGG BOSS 4 TELUGU OFFICIAL (@bigboss4teluguofficiall) on

தல அஜித்தின் விருமாண்டி 2! இணையத்தில் வைரலாகும் மாஸ் புகைப்படம்.

கமல் ஹாசன் தயாரித்து அவரே நடித்து 2004ஆம் ஆண்டு வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற படம் விருமாண்டி.

இப்படத்தில் கமலுடன் இணைந்து நெப்போலியன், பசுபதி, அபிராமி, நாசர் என பலரும் நடித்திருந்தனர்.

இப்படம் சதிகளை காட்டி எடுப்பட்டிருந்தலும் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படத்திற்கு இசையமைத்தார் இசைஞானி இளையராஜா. ஆம் இவரின் இசையில் இப்படத்தில் உருவான ஒவ்வொரு படலும் மிக அற்புதமாக வெளிவந்தது.

சமீப காலமாக இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வெளிவந்தால் எப்படி இருக்கும் என பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் தல அஜித்தின் ரசிகர்கள் அஜித்தை வைத்து விருமாண்டி 2 என டைட்டிலை சூட்டி ஃபேன் மேட் போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த போஸ்டர்…

அண்டம் முழுக்க அதிர்வலைகளை உருவாக்கிய அணு வெடிப்பு

பகுதியளவு சூப்பர்நோவா வெடிப்பைத் தொடர்ந்து அண்டத்தில் ஒரு நட்சத்திரம் அதிர்வுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று விண்வெளி நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில நட்சத்திரங்கள் ஆயுட்கால முடிவை எட்டும்போது நடைபெறும் சக்திமிக்க வெடிப்பு சூப்பர்நோவா எனப்படுகிறது; இந்த வெடிப்பு அதை அழிப்பதற்குப் போதுமான சக்தியைக் கொண்டதாக இருக்காது.

மாறாக அது விண்வெளியில் மணிக்கு 9 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் நட்சத்திரத்தை தாறுமாறாக இயங்கச் செய்யும்.

ஒயிட் டார்ஃப் (white dwarf) எனப்படும் இந்த நட்சத்திரம், வேறொரு நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டிருந்தது என்றும், அது எதிர் திசையில் பறக்கும் நிலையில் வெளியில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் விண்வெளியாளர்கள் கருதுகின்றனர்.

இதுபோல இரண்டு நட்சத்திரங்கள் சுற்றுப்பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் போது, அவை “பைனரி” எனப்படுகின்றன. இருந்தபோதிலும், இதில் ஒரு நட்சத்திரத்தை மட்டுமே விண்வெளியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

SDSS J1240+6710 எனப்படும் இந்த விண்பொருள், முன்பு அசாதாரணமாக வான்வெளி சேர்க்கையைக் கொண்டதாகக் கருதப்பட்டது.

இது 2015ல் கண்டறியப்பட்டது. வழக்கமாகக் காணப்படும் ஹைட்ரஜன் அல்லது ஹீலியம் ஆகியவை இதில் இல்லை. மாறாக, ஆக்சிஜன், நியான், மக்னீசியம் மற்றும் சிலிக்கான் என வழக்கத்திற்கு மாறான கலவையைக் கொண்டதாக இருக்கிறது.

இப்போது ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்தி சர்வதேச குழுவினர் ஆய்வு செய்ததில், கார்பன், சோடியம், அலுமினியம் ஆகியவை அந்த நட்சத்திரத்தின் வான் மண்டலத்தில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. சூப்பர்நோவா நிகழ்வில் முதலாவது வெப்ப ஆற்றல் வெளிப்பாட்டில் இவை உருவாகும்.

ஆனால் இரும்பு, நிக்கல், குரோமியம் மற்றும் மக்னீசியம் போன்ற “இரும்பு வகை” தனிமங்களை அதில் காண முடியவில்லை.

கனமான தன்மை கொண்ட இந்தத் தனிமங்கள், லேசானவற்றில் இருந்து உருவாகக் கூடியவை. சூப்பர்நோவா வெப்ப ஆற்றலின் அம்சங்களைக் காட்டுபவையாக இவை இருக்கும்.

SDSSJ1240+6710 -ல் இரும்பு வகை தனிமங்கள் இல்லாதிருப்பதால், அணு ஆற்றல் எரிப்பு முடிவதற்கு முன்னதாகவே இந்த நட்சத்திரத்தில் பகுதியளவு சூப்பர்நோவா வெடிப்பு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

`ஒயிட் டார்ஃப் என்பதன் அனைத்து முக்கிய அம்சங்களும் இருப்பதால், இந்த நட்சத்திரம் தனித்துவமானது. இது மிக அதிகமான வேகத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. குறைந்த நிறை கொண்ட பொருள்களுடன் இணையும்போது வழக்கத்திற்கு மாறான பொருள்கள் அபரிமிதமாக உருவாதல் அதை அர்த்தமற்றதாக ஆக்குகிறது” என்று பிரிட்டனில் வார்விக் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை பேராசிரியராக உள்ள போரிஸ் கன்சிக்கே கூறியுள்ளார்.

“அணு ஆற்றல் எரிப்பின் தடயங்களைக் காட்டும் ரசாயனக் கலவை அதில் உள்ளது. குறைந்த நிறை கொண்டதாக, அதிக அளவில் வேகத்தை அதிகரிப்பதாக உள்ளது; அதைப் போன்றே உள்ள வேறொரு நட்சத்திரத்தில் இருந்து இது வெளியேறி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாக இது உள்ளது.

வெப்ப ஆற்றல் உற்பத்திக்கு ஆட்பட்டிருக்க வேண்டும் என்றும் காட்டுகிறது. இது ஒரு வகையான சூப்பர்நோவா ஆக இருந்திருக்கலாம், ஆனால் நாம் முன்பு பார்த்திராத வகையாக இது இருக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வெடிப்புக்குப் பிறகு தங்களின் சுற்றுப் பாதையில் எதிர்த் திசைகளில் ஈர்ப்புப் பிடிமானத்துடன் இருப்பதால் அதிக அளவிலான வேகம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அந்த நட்சத்திரத்தின் நிறையை விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். சூரியனின் நிறையில் 40 சதவீதம் அளவுக்கு ஒயிட் ட்வார்ப் நிறை இருக்கும். நட்சத்திரத்தை முழுமையாக அழித்துவிடாத பகுதியளவு சூப்பர்நோவா பாதிப்பால் ஏற்படுவதாக இது இருக்கும்.

அணுசக்தி நிலையங்கள் அல்லது பெரும்பாலான அணு ஆயுதங்களில் இருந்து வெளியாகும் சக்தியில் இருந்து மாறுபட்டதாக சூப்பர்நோவா பாதிப்பில் இருந்து வெளியாகும் அணு ஆற்றல் எரிப்பின் தன்மைகள் இருக்கும். பூமியில் அணு சக்தியின் பெரும்பாலான பயன்கள் அணு பிளவு மூலம் பெறப்படுகின்றன. கனமான தனிமங்களை லேசானவையாக உடைப்பதாக அது உள்ளது. நட்சத்திரங்களில் நிகழும் அணு சேர்க்கை போல இருக்காது.

“பூமியில் நமது எதிர்கால அணுசக்தி நிலையங்களில் பெறுவதற்கு முயற்சிக்கும் வெப்ப ஆற்றலைப் போன்றதாக, சூப்பர்நோவா வெப்ப ஆற்றல் வெளிப்பாடு தன்மை இருக்கும். லேசான தனிமங்களை அணு சேர்க்கை மூலம் கனமானதாக ஆக்கி, அதில் அபரிமிதமான ஆற்றலைப் பெறுவது என்பது நமது முயற்சியாக உள்ளது” என்று பேராசிரியர் கன்சிக்கே பிபிசியிடம் கூறினார்.

“அணுசேர்க்கை உலையில், மிகவும் லேசான ஹைட்ரஜன் தனிமத்தை (மிகவும் குறிப்பாக, மாறுபட்ட மணங்கள் அல்லது அதன் ஐசோடோப்புகள்) பயன்படுத்துவோம். வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும் சூப்பர்நோவாவில், நட்சத்திரத்தின் தின்மை மற்றும் அதில் உள்ள வெப்பம் மிக அதிகமாக இருக்கும். கனமான தனிமங்களின் சேர்க்கை ஆரம்பமாகும். கார்பன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை இதன் `எரிபொருளாக’ இருக்கும். கனமான மற்றும் இன்னும் கனமான தனிமங்களின் சேர்க்கை நிகழும்” என்றார் அவர்.

டைப் லா என்பது தான் மிக சிறப்பாக ஆய்வு செய்யப்பட்ட வெப்ப ஆற்றல் வெளிப்படுத்தும் சூப்பர்நோவாவாக உள்ளது. இருள் எரிசக்தியைக் கண்டுபிடிக்க இது உதவிகரமாக இருந்தது. இப்போது பிரபஞ்சத்தின் அமைப்பை பொருத்திப் பார்ப்பதில் இந்த நடைமுறை வழக்கமாகப் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், மிகவும் மாறுபட்ட சூழ்நிலைகளில் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும் சூப்பர்நோவாக்கள் நிகழலாம் என்பதற்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன.

இதுவரையில் அறியப்படாத வகையிலான சூப்பர்நோவா வெடிப்புக்கு ஆளானதாக SDSSJ1240+6710 இருக்கும் என்று கருதப்படுகிறது.

டைப் லா சூப்பர்நோவாக்களின் நீண்ட காலம் நீடித்திருக்கும் மிளிர்ச்சியை அளிக்கும் கதிரியக்கத் தன்மை கொண்ட நிக்கல் இல்லாமல், நமது அண்டத்திற்குள் ஒயிட் ட்வார்ப்-ஐ அனுப்பிய வெடிப்பு என்பது கண்டுபிடிக்க சிரமமானதாக இருக்கும், குறுகிய நேர ஒளிக் கீற்றில் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த ஆய்வறிக்கை Royal Astronomical Society மாதாந்திர தகவல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

பிபிசி அறிவியல் பிரிவு

‘தோட்டப்புற வைத்தியசாலைகளிலுள்ள குறைபாடுகளை அறிவியுங்கள்’ – செந்தில் தொண்டமான்

பதுளை மாவட்டத்தின் தோட்டப்புற வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து அறிவிக்குமாறு பிரதமரின் பெருந்தோட்டத்துறை இணைப்புச் செயலாளரும், பதுளை மாவட்டத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அடுத்துவாரம் ஊவா மாகாணத்தின் சுகாதாரத்துறைச் செயலாளர் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஆகியோரைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும், இதன்போது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து பேசவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தலின் பின்னர் ஏனைய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கீழே உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தமது தோட்டப் புற வைத்தியசாலைகளில் தற்போது நிலவும் பிரச்சினைகளை அறியத்தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

0776275429

முத்தையா பிரபுவுக்கு ஆதரவாக ஜனாதிபதி பிரச்சாரம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின்கீழ் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் முத்தையா பிரபுவை ஆதரித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஜனாதிபதி மாவட்டம் தோறும் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இதன்படி நுவரெலியா மாவட்டத்துக்கு இன்று வருகைதந்த ஜனாதிபதி ஹங்குராங்கெத்த, வலப்பனை, கந்தபளை, நுவரெலியா, கொத்மலை, தலவாக்கலை, கொட்டகலை, நோர்வூட், மஸ்கெலியா,  ஆகிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டங்களில் பங்கேற்றிருந்தார்.

குறிப்பாக நுவரெலியா தொகுதியை மையப்படுத்தி முத்தையா பிரபுவால் பிரச்சாரக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதிக்கு அங்கு வந்திருந்த ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மக்களுடன் சிநேகப்பூர்வமாக உரையாடிய ஜனாதிபதி, அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்துக்கொண்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

பிரதமர் மஹிந்தவுக்கு சஜித் விடுத்துள்ள சவால்

பொருளாதார திட்டங்கள் தொடர்பில் தம்முடன் விவாதம் நடத்துவதற்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு சவால் விடுத்துள்ளார்.

எஹலியகொட பகுதியில் இன்று (21) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த சவாலை விடுத்தார்.

” தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் ஆட்சியை தீர்மானிக்கின்றனர். ஆனால், இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதில்லை. அதற்கான தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு இல்லை.

எனவே, பொருளாதார திட்டங்கள் தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு நான் தயார். முடியுமானால் பிரதமர் இவ்விவாதத்துக்கு வரட்டும் என சவால் விடுக்கின்றேன்.” – என்றும் சஜித் கூறினார்.

‘சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாடினால் இனி கடும் நடவடிக்கை’

சட்ட விரோதமான முறையில் இடம்பெறும் மிருகங்களை வேட்டையாடும் செயற்பாடு தொடர்பில் உடனடியாக பரிசோதனை நடத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (2020.07.21) வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.சி.சூரியபண்டாரவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரிய வகை விலங்குகளை பாதுகாப்பது அரசாங்கமொன்றின் பொறுப்பு என்பதால் இது தொடர்பாக வெகு விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு தெரிவித்தார்.

கடந்த 20ஆம் திகதி நாவலப்பிட்டி மாபகந்த பிரதேசத்தில் பந்தரா பாதுஸ் வகையை சேர்ந்த ஏழு வயதுடைய சிறுத்தையொன்று வில்லில் சிக்கி உயிரிழந்தது. இது தொடர்பில் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டதுடன், பிரதமரினால் மேலே குறிப்பிடப்பட்ட ஆலோசனை வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டது.

கடந்த காலத்தில் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில், அதன் எதிரொலியாக மிகவும் அரிய வகையிலான கறுப்பு சிறுத்தையொன்றை நாடு இழந்தமையை சுட்டிக்காட்டிய பிரதமர், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை விழிப்பூட்டி மீண்டும் அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறாதிருக்கும் வகையில் செயற்படுமாறும், வன விலங்குகளின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கினார்.

சட்ட விரோதமான முறையில் மிருகங்களை வேட்டையாடும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை முழுமையாக செயற்படுத்துமாறும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலய பழைய மாணவர்களின் கிரிக்கெட் திருவிழா!

0
கொட்டகலை /மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலயத்தின் 1999ஆம் ஆண்டு பழைய மாணவர் தொகுதியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களுக்கிடையிலான மாபெரும் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியும், ஒன்று கூடல் நிகழ்வும் கடந்த 2026.04.16 அன்று பாடசாலை...

சுயாதீன விசாரணைக்கு இடமளித்தே அமைச்சர் ராஜினாமா!

0
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்து தமது பதவிகளில் இருந்து...

அனல் பறக்கும் நிலக்கரி கொள்வனவு: வலுசக்தி அமைச்சர் ராஜினாமா!

0
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. நிலக்கரி இறக்குமதி தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும்...