Home Blog Page 3945

ரிஷாட்டை பாதுகாக்கிறார் தேர்தல் ஆணையாளர் – விமல் குற்றச்சாட்டு!

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை பாதுகாக்கும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் செயற்படுகின்றார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரிஷாட் பதியுதீன் தொடர்பில் சி.ஐ.டியினர் முன்னெடுத்துவரும் விசாரணையை ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரை பிற்போடுமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு உள்ள அதிகாரம் என்ன எனவும் கேள்வி  எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் விமல்வீரவன்ஸ கூறியதாவது,
” சஹ்ரான் குழுவினால் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை திட்டமிட்ட அடிப்படையில் கடந்த அரசாங்கம் மூடிமறைத்தது. இது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இன்று சாட்சியமளித்துவருகின்றனர்.
ஆதாரங்கள் சகிதமே ரிஷாட் பதியுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்படபோகின்றார் என பதில் பொலிஸ்மா அதிபருக்கும், சி.ஐ.டியினருக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் கடிதம் எழுதுகின்றார்.
குற்றவாளியாக இருந்தாலும் ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரை கைதுசெய்யவேண்டாம் என்பதனையே அவர் கடிதம்மூலம் கூறமுற்படுகின்றார். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு உள்ள அதிகாரம் என்ன? குற்றவியல் சட்டத்தின் பிரகாரம், குற்றச்செயலில் ஈடுபட்டவரை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இருக்கின்றது.
இப்படியே போனால் நாளை ரிஷாட்டின் தம்பியை விடுதலை செய்யுமாறுகூட கோரலாம். எனவே, சுயாதீனம் என்ற போர்வைக்குள் இருந்துக்கொண்டு நாட்டில் சட்டம் செயற்படுவதை இப்படிதான் தடுத்துக்கொண்டிருக்கின்றனர்.” – என்றார்.

அகில இலங்கை புரட்சி மக்கள் பேரவை ஐ.தே.கவுடன் சங்கமம்!

இரத்தினபுரிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (21) விஜமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இரத்தினபுரி காளி அம்மன் ஆலயத்திற்கு சென்ற ரணில் விக்ரமசிங்கவிற்கு, இரத்தினபுரி வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தமிழ் கலாசாரத்திற்கு அமைய வரவேற்பளித்திருந்தார்.

இதன்போது, இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமாரின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்குடன், அகில இலங்கை புரட்சி மக்கள் பேரவையின் தலைவர் இராஜரட்ணம் பிரகாஷ் இன்று உத்தியோகப்பூர்வமாக இணைந்தார்.

இரத்தினபுரி மாவட்ட தமிழர்களின் பிரச்சினைகளுக்கான திட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு தெளிவூட்டிய இராஜரட்ணம் பிரகாஷ், தாம் கட்சியுடன் இணைவதற்கான விருப்பத்தையும் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்திருந்தார்.

எஸ்.ஆனந்தகுமாரின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக தாம் முன்னின்று உழைப்பதாகவும் இராஜரட்ணம் பிரகாஷ் குறிப்பிட்டார.

இரத்தினபுரி மாவட்டத்தில் நிரந்தர நியமனமற்ற நிலையில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு நியமனங்களை பெற்றுத்தருமாறு இதன்போது கோரிக்கையொன்றும் முன்வைக்கப்பட்டது.

பல வருட காலமாக நிரந்தர நியமனம் வழங்க தவறப்பட்ட பின்னணியிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

கலைகள் வாழவேண்டும், கலைஞர்கள் வளரவேண்டும் ஒரு இளைஞராக கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஜீவன்

” பிரச்சினைகளை செவிமடுத்தல், அவற்றுக்கான தீர்வு முன்மொழிவு உள்ளிட்ட ஜீவன் தொண்டமானின் கலந்துரையாடல் அணுகுமுறையானது அரசியலில் வேறு ‘லெவல்’ என்று மலையக கலைஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கலைஞர்களுக்கான அதிஉயர் கௌரவமென்பது அவர்களின் திறமைக்கு மதிப்பளித்தல், உற்சாகப்படுத்தல் என்பதாகும். இவற்றை அறிந்துவைத்துள்ள ஜீவன் தொண்டமான், கலைஞர்களுக்கு நேசக்கரம் நீட்டுவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினர்.

மலையக கலைஞர்களுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருக்குமிடையிலான நேரடி கலந்துரையாடலொன்று கொட்டகலை சிஎல்எவ் வளாகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

அரசியலுக்கு அப்பால் ஒரு இளைஞனாக கலைஞர்களை சந்தித்து, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்து, யோசனைகளையும் உள்வாங்கி, தீர்வு பொறிமுறையை தயாரிப்பதற்காகவே இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்றிருந்த கலைஞர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானிடம் சுட்டிக்காட்டி, யோசனைகளையும் முன்வைத்தனர். கலைஞர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை செவிமடுத்த ஜீவன் தொண்டமான், தன்னால் எவ்வாறான திட்டங்களை முன்வைக்கமுடியும் எனவும் விபரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த சந்திப்பு தொடர்பில் மலையகத்திலுள்ள மூத்த கலைஞர்கள் சிலர் வெளியிட்ட கருத்து வருமாறு,

” பொதுச்செயலாளர் என்ற உயர் பதவி கிடைத்ததும்  ஜீவனின் மனநிலை மாறியிருக்கும் என்ற எண்ணம் எம்முள் இருந்தது. ஆனால், அவரை நேரில் சந்தித்த பின்பு அவர் அப்படி பட்டவர் அல்லர் என்றும், இளைஞர் அணி பொதுச்செயலாளராக இருந்தபோது கலைஞர்களுடன் எவ்வாறு பழகினாரோ அதே மதிப்பையும், மரியாதையையும் இன்றும் வைத்துள்ளார் என்பதையும் அறிந்துகொண்டோம்.

கலைஞர் ஒருவரை பணத்தால் திருப்திபடுத்தமுடியாது. அவருக்கான களத்தை அமைத்துக்கொடுத்து – திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கினால் மட்டுமே கலையும் வாழும் கலைஞனும் வளர்வான். அதற்கான களத்தை – தளத்தை அமைத்துக்கொடுக்கும் திட்டம் ஜீவனிடம் இருக்கின்றது.

அதுவும் குறிப்பாக எமது பாரம்பரிய கலைகளை பாதுகாத்து, புதுமைகளுக்கும் வழிவிட்டு கலைத்துறையிலும் மலையக இளைஞர்கள் புரட்சி செய்யவேண்டும் எனவும், அதற்காக தன்னால் முடிந்த உதவிகள் செய்யப்படும் எனவும் அவர் கூறியுள்ளது எமக்கு புது தெம்பை வழங்கியுள்ளது. இதற்கு முன்னரும் அரசியல் பிரமுகர்களை சந்தித்து குறைகளை கொட்டியுள்ளோம். ஆனால், ஜீவனுடன் நடைபெற்ற சந்திப்பு ஆக்கபூர்வமானதாகவும், ஆத்ம திருப்தியுடையதாகவும் அமைந்தது. எனவே, ஜீவன் போன்ற அரசியல் தலைமைகளே எமக்கு தேவை” – என்றனர்.

இ.தொ.கா. வேட்பாளர்களை ஆதரித்து ஜனாதிபதி பிரச்சாரம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (21)  செவ்வாய்கிழமை நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அந்தவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நுவரெலியா,பூண்டுலோயா,பகுதிகளில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்ற ஜனாதிபதி மக்களின் குறைப்பாடுகளை கேட்டறிந்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர்களாகிய மருதபாண்டி ரமேஸ்வரன்,கணபதி கணகராஜ், பழனி சக்திவேல், அருளாநந்தம் பிலிப்குமார் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் கலந்துக்கொண்டனர்.

தலவாக்கலை பி.கேதீஸ்

‘தமிழர்களை கொச்சைப்படுத்தியவர்கள் ஐ.தே.கவில் இருந்து வெளியேறியுள்ளனர்’

ஐக்கிய தேசியக் கட்சியை தமிழர்கள் மத்தியில் கொச்சைப்படுத்திய தரப்பினர் தற்போது மாற்று கட்சியை நோக்கி நகர்ந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

இரத்தினபுரி காளி அம்மன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ பெருமாள் சர்மாவை இன்று (21) சந்தித்து ஆசிப் பெற்றதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மலையகத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் தமிழ் இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடி முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் சென்ற போது, அவர் மலையக தமிழர்களை நடத்திய விதம் தொடர்பிலான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டியே அவர் இதனைக் கூறினார்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழர்கள் ஆரம்பம் முதலே புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களை அவ்வாறான தலைவர்களே இன்று வரை புறக்கணித்து வந்துள்ளமை அந்த காணொளியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான புறக்கணிப்புக்களை மேற்கொண்டு, தமிழர்களை கீழ்தரமாக நடத்திய அரசியல்வாதிகளுடனேயே ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழர்களை இவ்வாறு நடத்தியவர்களுக்கு மீண்டும் வாக்களித்தால், எதிர்காலத்தில் இரத்தினபுரி வாழ் தமிழ் சமூகம் தொடர்ச்சியாக புறக்கணிப்புக்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என எஸ்.ஆனந்தகுமார் அச்சம் வெளியிட்டார்.

வேலைவாய்ப்புக்கள், வீடமைப்பு திட்டங்கள், போக்குவரத்து வசதிகள், குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட உரிமை பிரச்சினைகளுக்கு ஏனைய மாவட்டங்களில் தீர்வுகள் ஓரளவேனும் கிடைக்க பெற்றுள்ள போதிலும், இரத்தினபுரி வாழ் தமிழர்களுக்கு சிறிதளவேனும் அவை இன்று வரை கிடைக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டார்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள லயின் குடியிருப்புக்களில் மக்கள் வாழ முடியாத நிலையில் உள்ளதை, ஆட்சியிலிருந்த எந்தவொரு தமிழ் மக்கள் பிரதிநிதியும் கவனத்தில் கொள்ளாத நிலையில், அவர்கள் இன்று மக்கள் மத்தியில் தயக்கமின்றி வாக்கு கேட்பது எவ்வாறு என எஸ்.ஆனந்தகுமார் கேள்வி எழுப்பினார்.

மக்களுடன் களத்திலிருந்து செயற்படும் புதிய மக்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் ஊடாகவேனும் இரத்தினபுரி மாவட்ட தமிழர்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

இந்திய ஜோதிடர்கள் இருவர் ஹட்டனில் கைது!

சுற்றுலா விசாவில் வருகைதந்த இந்திய நாட்டை சேர்ந்த ஜோதிடர்கள் இருவர் நேற்று ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதிமன்ற நீதவான் ஜெயராம் டொஸ்க்கி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து இவர்களை 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இந்திய ஹைதராபாத் பிராந்தியத்தை சேர்ந்தவர்களாவர். இவர்கள் 2 பேரும் ஹட்டன் நகரின் பேருந்து தரிப்பிட பகுதியில் வியாபார ஸ்தலம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு ஜோதிட நிலையம் வைத்திருந்ததாகவும் அவர்களின் விசா முடிவுற்றபோதும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமையினால் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா நிருபர் – பெருமாள்

தேர்தலுக்கு நுவரெலியா மாவட்டம் தயார்! 498 வாக்களிப்பு நிலையங்கள்!!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் நுவரெலியா மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் நுவரெலியா மாவட்ட செயலாளருமான எம்.பீ.ஆர்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள இந்த தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 5லட்சத்து 77ஆயிரத்து 717 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 19ஆயிரத்து 741 பேர் அஞ்சல் மூல வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் 498 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. வாக்கு எண்ணும் நிலையங்கள் 85 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலைவிட இம்முறை தேர்தலில் வாக்கு எண்ணும் நிலையங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கு காரணம் இம்முறை வாக்கு என்னும் நிலையங்களில் அனுமதிக்கப்படுகின்ற அதிகாரிகளின் என்னிக்கை குறைவாகவே காணப்படுவதால் வாக்கு என்னும் நிலையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பிரதான வாக்கு என்னும் நிலையங்களாக நுவரெலியா காமினி தேசிய பாடசாலை நுவரெலியா தொழில்நுட்ப கல்லூரி நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மாவட்ட செயலகம் ஆகிய நான்கு இடங்களிலேயே 85 வாக்கு என்னும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.நுவரெலியா மாவட்டத்தில் 4000 அதிகாரிகள் இந்த தேர்தல் கடமைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளனர்.
அது தவிர 4000 அதிகாரிகள் வாக்களிப்பு நிலையங்களிலும் 2000 பேர் தேர்தல் முடிவுகளை பெற்றுக் கொள்வதற்குமாக மொத்தமாக 10000 பேர் நுவரெலியா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும் நுவரெலியா மாவட்ட செயலாளருமான எம்.பீ.ஆர்.புஸ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 2,048 பேர் மீண்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 07 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,O48  ஆக அதிகரித்துள்ளது.

671 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 730 ஆக இருக்கின்றது.

அர்ச்சகருக்கு கொரோனா – திருப்பதியில் 15 நாட்களுக்கு ஊரடங்கு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக டிக்கெட் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

ஒன்லைனில் மட்டுமே திருப்பதி கோவில் தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் ஆகஸ்ட் 5ஆம் திகதிவரை 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

15 நாட்களுக்கு பகல் 11 மணிக்கு மேல் திருப்பதி பகுதியில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.

‘வாய்ப்புகளை பயன்படுத்தி மீண்டெழுவோம்’ – ஜீவன் அழைப்பு

நீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியிருக்கின்றது. எனவே, குறுகிய அரசியல் நோக்கில் விமர்சனங்களை முன்வைக்காமல் ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் 20.07.2020 அன்று பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

” கொவிட் – 18 பிரச்சினையால் இன்று அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் பொருளாதாரம் மீண்டெழும். எமது நாட்டிலும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இவ்வாறு பொருளாதாரம் மீண்டெழும்போது அதன் பங்காளிகளாக நாம் மாறவேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை உரியவகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் தயாராகவேண்டும். ஒரு காலகட்டத்தில் எமது மலையக பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தான் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்களிப்பை வழங்கினர்..

எனவே, தற்போது ஆயிரம் ரூபா தொடர்பில் மட்டும் பேசிக்கொண்டிருக்காது, சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தி அத்துறையில் எவ்வாறு பயன்பெறலாம், எமது இளைஞர்களுக்கு எவ்வாறு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கலாம் என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும்.

நாட்டில் எதிர்காலத்தில் மரக்கறி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். நுவரெலியா மாவட்டத்தில்தான் அதிகளவு மரக்கறி உற்பத்தி இடம்பெறுகின்றது. அப்போதும் எமக்கு வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, பொருளாதார ரீதியில் எம்மை பலப்படுத்திக்கொள்ளவேண்டும்.

இதற்கான களத்தை நாம் அமைத்துக்கொடுப்போம். மலையக பல்கலைக்கழகம் அமையும்போது, ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பான கற்கை நெறியையும் கோரியுள்ளோம். பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக விவசாய கல்லூரியும் வரவேண்டும். இவ்வாறு தெளிவான திட்டங்களுடனும், மலையக தொடர்பான கனவுகளுடனுமே எமது பயணம் தொடர்கின்றது.

எம்மை விமர்சிப்பவர்கள் திட்டங்களை முன்வைப்பவில்லை. விமர்சனங்களை மட்டுமே முன்வைக்கின்றனர். ஆரோக்கியமான விமர்சனங்களாக இருந்தால் ஏற்கலாம், ஆனால் இங்கு அர்த்தமற்ற விதத்திலேயே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நீயா, நானா என்ற அரசியலாலேயே நாம் பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம். இந்த அரசியல் கலாச்சாரம் மாறவேண்டும்.

எதற்கும் அஞ்சவேண்டாம், இருட்டபாத்து பயப்படாதீங்க, நிச்சயம் சேவல் கூவும், சூரியன் உதிக்கும்.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலய பழைய மாணவர்களின் கிரிக்கெட் திருவிழா!

0
கொட்டகலை /மவுண்ட்வேர்ணன் தமிழ் வித்தியாலயத்தின் 1999ஆம் ஆண்டு பழைய மாணவர் தொகுதியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பழைய மாணவர்களுக்கிடையிலான மாபெரும் சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியும், ஒன்று கூடல் நிகழ்வும் கடந்த 2026.04.16 அன்று பாடசாலை...

சுயாதீன விசாரணைக்கு இடமளித்தே அமைச்சர் ராஜினாமா!

0
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்து தமது பதவிகளில் இருந்து...

அனல் பறக்கும் நிலக்கரி கொள்வனவு: வலுசக்தி அமைச்சர் ராஜினாமா!

0
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகியுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. நிலக்கரி இறக்குமதி தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும்...