Home Blog Page 3946

13 பிளஸ் என்ற பேச்சுக்கு இடமே இல்லை – சஜித் திட்டவட்டம்!

“அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று ஒருபோதும் அதிகாரங்களைப் பகிரமாட்டோம். தற்போது அமுலில் உள்ள அதிகாரப்பகிர்வு நடைமுறை அவ்வாறே தொடரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.” –  என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (20) திட்டவட்டமாக அறிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“நாட்டிலுள்ள அனைத்து இனம் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, அந்த ஒற்றுமையை மேலும் பலப்படுத்த வேண்டும். குறிப்பாக நாட்டில் தீப்பிழப்புகளை உருவாக்குவது அல்ல ஆட்சியாளர்களின் கடமை. ஏதேனும் பிரச்சினை, முரண்பாடுகள் உருவாகவிருந்தால், அவற்றை தீர்த்துவைத்து, பாதகமான விளைவுகளை ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். இதுதான் ஆட்சியாளர்களுக்கான கடப்பாடாகும்.

ஒற்றையாட்சிக்குள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நாம் அதிகாரங்களைப் பகிர்வோம். இதுவரையில் நடைமுறையில் இருந்ததை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். எனவே, 13 பிளஸ்சும் இல்லை, 13 மைனசும் இல்லை என்பதை கூறியாகவேண்டும்.

வெளிநாடுகளுக்கு இராஜதந்திர பணயம் மேற்கொள்ளும்போது பிளஸ் என்றும், விமான நிலையம் திரும்பியதும் மைனஸ் என்றும்கூறும் அரசியலை நாம் முன்னெடுக்கமாட்டோம். எம்மிடம் உறுதியான நிலைப்பாடு உள்ளது. எனவே, எவருக்கும் வளைந்துக்கொடுக்காத எமது பயணம் தொடரும். தெளிவான அரசியல் மற்றும் ஆட்சிக்கொள்கை எம்மிடம் உள்ளது.” – என்றார்.

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து அனைத்து கடற்படையினரும் மீண்டனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 3 கடற்படையினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி கொரோனா தொற்றுக்கு இலக்கான அனைத்து கடற்படையினரும் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில்   மொத்தமாக 906 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 06 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2730 ஆக பதிவாகியுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 05 பேர் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் ஒருவர் ராஜாங்கனை நோயாளியுடன் தொடர்புடையவர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

 

இன்றும் மழை பெய்யும் – மண்சரிவு எச்சரிக்கையும் நீடிப்பு!

மேல்,  சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று (21) இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என்றும், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்   50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யக்கூடுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இடி, மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் கூறியுள்ளது.

அதேவேளை, கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் ஒரு மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

‘கொரோனா’ தாண்டவம் – ரி -20 உலகக்கிண்ண போட்டியும் ஒத்திவைப்பு!

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த 20 ஓவர் உலக கிண்ண போட்டித்தொடர், கொரோனா வைரஸ் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

7ஆவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி  முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

ஆனால் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரசின் கோரதாண்டவம் ஆஸ்திரேலியாவையும் விட்டுவைக்கவில்லை. அங்கு நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா மாகாணங்களில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு அங்கு பாராளுமன்றம் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளது.

இத்தகைய சூழலில் 16 அணிகளை ஒரே சமயத்தில் வரவழைத்து, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்துவது என்பது சாத்தியல்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே வெளிப்படையாக தெரிவித்து விட்டது.

இதனால் இந்த உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனாலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. கடந்த 2 மாதங்களில் ஐ.சி.சி. மூன்று முறை ஆலோசித்தும் உலக கோப்பை விவகாரத்தில் அவசரம் காட்டமாட்டோம் என்று கூறியது.

இந்த நிலையில் ஐ.சி.சி.யின் நிர்வாக குழு உறுப்பினர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆலோசனை நடத்தினர். இதன்பிரகாரமே போட்டித் தொடர் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 2021 ஒக்டோபர் முதல் நவம்பர் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

‘தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படகூடாது’

தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு மூன்று உறுப்பினர்கள் போதும். அதனைவிடவும் அதிகரித்தால் அரசியல் தலையீடுகள் ஏற்படக்கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் மூவர் மாத்திரமே உறுப்பினர்களாக இருக்கின்றனர். கூட்ட நடப்பெண்ணும் மூன்றாக இருக்கின்றது. இதனால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, இது தொடர்பில் உங்கள் கருத்து என்னவென எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” மூவர் இருக்கவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இது தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடப்பட்டது. ஐவர் இருந்தால்கூட ஐவரும் இணைந்து முடிவெடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நால்வர் முடிவெடுக்கும் நிலைமையை அனுமதிக்கமுடியாது.
உலகில் பிரபலமான நாடுகளில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மூவர் மாத்திரமே. அந்த எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அரசியல் தலையீடுகளும் அதிகரிக்கும். மூவர் இணைந்து எடுக்கும் ஒருமித்த தீர்மானம்தான் முக்கியம். தொழில்நுட்ப வழியாககூட கூட்டங்களை நடத்தலாம்.” – என்றார்.

‘எம்மை எவரும் ஏமாற்றமுடியாது – நான் அமைச்சராவது உறுதி’

அதிகாரத்தை பயன்படுத்தி மலையக மக்களுக்கு உரிய வகையில் சேவைசெய்யக்கூடிய ஆற்றல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே இருக்கின்றது. எனவே, பொதுத்தேர்தல் மூலம் எமது கரங்களை பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்,  ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

லிந்துலை பாமஸ்டன் ரட்ணகிரி தோட்டத்தில் 20.07.2020 அன்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த ஆட்சியின்போது அனைத்து தோட்டங்களுக்கும் சேவைகளை வழங்கியிருந்தேன். மேலும் பல திட்டங்களையும் முன்னெடுக்கவிருந்த நிலையிலேயே ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. நாம் கடந்த நான்கரை வருடங்களில் மக்களை ஏமாற்றவில்லை. ஆனாலும், 80 வருடங்களாக செயற்படாதவர்கள் இன்று எம்மை விமர்சிக்கின்றனர். போலி வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.

தனிவீட்டு திட்டம், மலையக அதிகார சபை, பிரதேச செயலகம் அதிகரிப்பு உட்பட என்னால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றினேன். இவ்வாறு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டுதான் இன்று வாக்கு கேட்கின்றனர்.

இனிவரும் காலப்பகுதியில் எமது இளைஞர்களுக்கு இங்கேயே வேலை செய்யக்கூடிய சூழ்நிலை உருவாக்க வேண்டும். கைத்தொழில் பேட்டைகள் அமையவேண்டும். கடந்த ஆட்சியின்போது இந்தியாவுடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். ஆட்சிமாற்றத்தால் அதனை தொடரமுடியவில்லை. எமது ஆட்சியின்கீழ் கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்படும்.

மக்கள் வழங்கும் ஆணையை தமிழ் முற்போக்கு கூட்டணியே உரிய வகையில் பயன்படுத்தும். எம்மை எவரும் ஏமாற்றமுடியாது. இந்த தேர்தலுக்கு பின்னர் அமைச்சராகி மக்களுக்கான சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பேன். எனவே, நம்பிக்கையுடன் எமக்கு வாக்களிக்கவும். எங்கள் வெற்றி உங்கள் வெற்றி. நமது வெற்றி மலையகத்தின் வெற்றியாகும்.

க.கிசாந்தன்

‘பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும்’

பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் கொரோனா தொற்று கடமையிலிருந்து விலகி இருக்க தீர்மானித்திருப்பதாக தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

” இன்று உலகம் பூராவும் கொரோனா தொற்று பெரும் அளவில் பரவி வருகின்றது. இலங்கையிலும் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டுபிடிக்கப் படுகிறார்கள்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களுடைய கடமையில் இருந்து விலகி இருப்பது இந்த தொற்று பரவாமல் இருப்பதை தடுப்பதற்கு உகந்த ஒரு விடயமாக நான் கருதவில்லை.

எனவே அரசாங்கம் இவர்களை அழைத்து கலந்துரையாடி இவர்கள் கேட்கும் அந்த அதிகாரங்களை இவர்களுக்கு வழங்கி அவர்களையும் இணைத்துக் கொண்டு இந்த கொரோனா தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட முடியுமாக இருந்தால் அதுவே வெற்றியான செயல்பாடாக இருக்கும் என நான் கருதுகின்றேன்.

கடந்த காலங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களை அர்ப்பணித்து இந்த கடமையில் ஈடுபட்டதை நாங்கள் காண முடியும் எனவே அனைவரையும் இணைத்துக் கொண்டு இந்த பயணத்தை செல்வோமாக இருந்தால் மாத்திரமே கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பா.திருஞானம்

‘கொழும்பில் நடுத்தர வர்க்க மக்களுக்கு விசேட வீட்டுத்திட்டம் சஜித் ஆட்சியில் அமுலாகும்’

கொழும்பில் வாடகை வீடுகளில் வாழும் மத்திய வர்க்கத்தை சார்ந்த அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்கள் ஆகிய நடுத்தர மட்ட வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு, அவர்கள் இன்று வாடகையாக செலுத்தும் தொகையையே சொந்த வீட்டுக்கான மாத கட்டணமாக மாற்றி அவர்களுக்கு சொந்த மனைகளை வழங்கும் வீட்டுத்திட்டத்தை சஜித் ஆட்சியில் முன்னெடுப்போம் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

மட்டக்குளிய, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் உரையற்றிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

எமது நல்லாட்சியின் போது, வடகொழும்பில் 13,500 தொடர்மாடி வீட்டுமனைகளை கட்டி பின்தங்கிய குடிசைகளில் இங்கு வாழும் மக்களை புதிதாக குடியமர்த்தினோம். இன்னமும் இத்தகைய 10,000 தொடர்மாடி வீட்டு மனைகளுக்கு அடித்தளம் இட்டுள்ளோம். கடந்த நான்கு வருடங்களில் வட கொழும்பில் குடிசைகள் வெகுவாக மறைந்து விட்டன. நண்பர் அமைச்சர் சம்பிக ரணவக்க இந்த அபிவிருத்திக்கு பொறுப்பாக இருந்தார். இந்த வீட்டு திட்டங்களில் பாரபட்சமின்றி குடிசைகளில் வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களே பெரும்பான்மையாக குடியேற்றப்பட்டார்கள். பாரபட்சங்கள் நிகழாவண்ணம் நாம் கண்காணித்து கொண்டோம்.

இதற்கு முந்தைய ராஜபக்ச அரசாங்க காலத்தில் இந்த தமிழ், முஸ்லிம் மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் நடந்ததையும், அப்போது அவற்றுக்கு எதிராக நாம் போராடி அவற்றை தடுத்து நிறுத்தியதையும் மக்கள் மறக்க மாட்டார்கள்.

அதேபோல் மத்திய தர வர்க்க மக்களுக்கான விசேட வீட்டு மனைத்திட்டத்தை முன்னெடுக்கும்படி கோரிகைகளை பலமுறை நான் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்தேன். என்னுடன் இணைந்து இதற்காக நண்பர் முஜிபுர் ரஹ்மானும் கோரிக்கை விடுத்தார். எனினும் பிரதமர் ரணில் இதை கடைசிவரை தட்டிக்கழித்தே விட்டார். இந்த நடுத்தர வர்க்க மக்களுக்கான வீட்டுத்திட்டம் நடைமுறையாகும் பட்சத்தில், அது அன்றைய தேசிய வீடமைப்பு அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாசவின் கீழ் வந்திருக்கும். இதுதான் இந்த திட்ட ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படாததன் காரணாமா என எனக்கு புரியவில்லை.

எனினும் எமது ஆட்சியின் கீழ் இந்த திட்டம் நடைமுறையாகும். இது கொழும்பில் பெரும்பான்மையாக வாடகை வீடுகளில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.” என்றார்.

சஜித்தின் கூட்டணி வாடகைக் கட்சி – நவீன் திஸாநாயக்க விளாசல்!

ஐக்கிய மக்கள் சக்தியானது வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சியாகும். அந்த கட்சிக்யென கொள்கைகள் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கொத்மலை நவதிஸ்பன பகுதியில் 20.07.2020 அன்று இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

” ஐக்கிய தேசியக்கட்சிக்கென ஒரு கட்டமைப்பு இருக்கின்றது. அது எமது கலாச்சாரம், மதம். ஆனால், ஐக்கிய மக்கள் சக்தியென்பது, அதிக தலைவர்கள் உள்ள கட்சியாகும். சஜித்தை தலைவர் என்கின்றனர், மேலும் சிலர் சம்பிக்க தலைவர் என்கின்றனர். ஆனால், உறுதியான தலைவர் ஒருவர் இல்லாத கட்சியாகும்.

எனது தந்தை ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வெளியேறியபோது புதிய கட்சியொன்றை உருவாக்கினார். ஆனால், சஜித் அணியினர் கட்சியொன்றை வாடகைக்கு வாங்கியுள்ளனர். அந்த கட்சிக்கு கொள்கை இல்லை, இரண்டாம் தலைமைத்துவமும் இல்லை.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராக பல கட்சிகள் உருவாகலாம். அவற்றுக்கு ஆயுள் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை எவராலும் அழிக்கமுடியாது. 50 களில் பண்டார நாயக்க வெளியேறினார். சுதந்திரக்கட்சியை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கை சின்னம் இருந்தது. அதன் பின்னர் கதிரை, வெற்றிலை என இன்று மொட்டு சின்னத்தில் வந்து நிற்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இதே நிலைமையை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித்துக்கும், சம்பிக்கவுக்குமிடையில் அதிகாரப்போட்டி ஆரம்பித்துவிட்டது. நிதி பலத்தை பலப்படுத்தி சஜித் பக்கம் உள்ள உறுப்பினர்களை பாட்டளி வாங்கிவிடுவார். அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ஆவதே அவரது இலக்காகும். எமது கட்சியிலும் மறுசீரமைப்பு அவசியம். அதனை நிச்சயம் செய்வோம். என்றார்.

க.கிசாந்தன்

‘கொரோனா’வின் பிடிக்குள் இருந்து மேலும் அறுவர் தப்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 06 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,O41 ஆக அதிகரித்துள்ளது.

672 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 724 ஆக இருக்கின்றது.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

லெபனான் போர் நிறுத்தம்: ஐ.நா, ஈரான், பாகிஸ்தான் வரவேற்பு!

0
இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கு இடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தை ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் வரவேற்றுள்ளார். இந்த அமைதி முயற்சியை சாத்தியமாக்குவதற்கு பங்காற்றிய அமெரிக்காவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். குறித்த தற்காலிக போர்நிறுத்தம் நிலையான அமைதி...

அமைதி முயற்சி வெற்றியளித்தால் பாகிஸ்தான் வருவேன்: ட்ரம்ப்!

0
“ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இறுதிப்படுத்தப்படுமானால் நான் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வேன்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இது தொடர்பில் வெள்ளைமாளிகையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் கூறியவை வருமாறு, “ஈரான் உடனான அமைதிப்...