Home Blog Page 3956

‘தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் தேர்தல்’

சிறுபான்மையின மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் தேர்தலே இது. எனவே, அரசியல் இருப்பையும், பிரதிநிதித்துவத்தையும் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தமிழ் மக்கள் வாக்குரிமையை பயன்படுத்தவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரிதித் தலைவருமான ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தலவாக்கலை, வட்டகொடை பகுதியில் இடம்பெற்ற 10.07.2020 அன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

“ நாட்டில் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலானது மிக முக்கியமானதாகும். நாட்டை ஆள்வதற்கு ஓர் ஆட்சிக்கட்டமைப்பு அவசியம். அதனை பாராளுமன்றம் மூலமே ஏற்படுத்த முடியும். ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் பாராளுமன்றத் தேர்தலில் எழுச்சி பெறவேண்டும். சஜித் பிரேமதாசவை பிரதமராக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் பிரதமரே பலம் பொருந்திய நபர். அவரின் பரிந்துரைக்கமையவே அமைச்சரவை நியமிக்கப்படும். எனவே, கிடைத்துள்ள வாய்ப்பை நாம் நழுவவிடக்கூடாது. இம்முறை யானை இல்லை. தொலைபேசி சின்னமே இருக்கின்றது என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.

பல சின்னங்கள் இருக்கின்றன. குறிப்பாக கோடாரி இருக்கிறது. அது உங்களை வெட்டி சாய்த்துவிடும். எனவே, தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு, மூன்று விருப்பு வாக்குகளையும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வழங்கவும்.

கடந்த நான்கரை வருடங்களில் எம்மால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் பல திட்டங்களை முன்னெடுத்தோம். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தால் அவற்றை தொடரமுடியாமல் போய்விட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் புதிய ஆட்சி 6 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. குறைந்தப்பட்சம் பொருட்களின் விலைகள்கூட குறைக்கப்படவில்லை. பல துன்பங்களை இந்த ஆட்சியின் கீழ் எதிர்கொள்ளவேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் உறுப்பினர் கூட இல்லை. தமிழ் மக்கள் சார்பில் இருந்த ஆறுமுகன் தொண்டமானும் உயிரிழந்துவிட்டார். எனவே, சிறுபான்மையின பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவையே இயங்குகின்றது. இந்நிலைமையை நீடிக்கவிடலாமா?

நடைபெறவுள்ள தேர்தலானது சிறுபான்மையின மக்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற தேர்தலாகும். எமது இருப்பை, பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளும் விதத்தில் வாக்களிக்கவேண்டும். வடக்கு, கிழக்கிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் எமது எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ளமுடியும்.” –என்றார்.

‘நுவரெலியா கொல்ப் விளையாட்டு மைதானம் சர்வதேச தரம் வாய்ந்ததாக மாற்றப்படவேண்டும்’

வளம் நிறைந்த நுவரெலியா மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய சிறப்பான வேலைத்திட்டங்கள் தேவையென அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

நோர்வூட் நகரில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

” ஆங்கிலேயர் முழு ஆசியாவையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது ஆங்கிலேயர்கள் கோல்ப் விளையாட்டு மைதானத்தினையும் குதிரைப்பந்தய திடலையும் நுவரெலியாவிலேயே அமைத்தனர். ஆனால் அண்மையில் நடைபெற்ற குதிரைப்பந்தய போட்டிக்கு இந்தியாவில் இருந்தே குதிரைப்பந்தய வீரர்கள் கொண்டுவரப்பட்டனர். ஒரு குதிரைக்கு 50 இலட்சம் கொடுக்கப்பட்டன.

மூன்று பந்தயத்துக்கு 150 இலட்சம் ரூபாவினை ஒரு குதிரைக்கு மாத்திரம் செலவுசெய்தனர். இவ்வாறான விளையாட்டுக்களை இங்கே அபிவிருத்தி செய்திருந்தால் எமது நாட்டில் இருந்து வெளியில் செல்லும் பணமும் மிஞ்சியிருக்கும். வெளிநாட்டு பணமும் வந்து குவிந்திருக்கும். இன்று உலகில் கோல்ப் விளையாட்டு மைதானங்கள் உள்ள நாடுகளும் அந்த பிரதேசங்களும் பாரிய அளவில் அபிவிருத்தி கண்டு வருகின்றன.

ஆனால் எமது நுவரெலியாவில் உள்ள கொல்ப் விளையாட்டு மைதானம் சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டு மைதானமாக மாற்றவேண்டும். அவ்வாறு மாற்றினால் உலகில் உள்ள நாடுகள் இந்த விளையாட்டு மைதானத்தினை பயன்படுத்துவதன் மூலம் பாரிய அளவில் அபிவிருத்தி காணமுடியும்.

அதேபோன்று நுவரெலியாவில் தான் சிறந்த பூக்கள் மலர்கின்றன.ஆனால் உலக தேவையில் 3 சதவீதமே நாங்கள் பூ உற்பத்தி செய்கின்றோம்.

அதே போன்று தான் மரக்கறி, விவசாயம் போன்ற துறைகளும் நுவரெலியா மாவட்டத்தில் மேற்கொள்கின்றனர்.

ஆகவே சூரிய ஒளியினையும் காற்றினையும் பயன்படுத்தி மரக்கறிகள், மலர்கள் கெடாதவாறு பாதுகாக்கக்கூடிய குளிர்சாதன அறைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ வெற்றிபெற்ற போதிலும் நுவரெலியா மாவட்டத்தில் தோல்வியடைய வேண்டியேற்பட்டது அதற்கு பிரதான காரணம் இங்குள்ள மக்கள் புரிந்துகொள்ளாமையினையே.

இந்த மாவட்டத்தினை அபிவிருத்தி செய்து முழுநாட்டுக்கும் பயனுள்ள மாவட்டமாக அமையவேண்டும் என்றால் சிறந்த திட்டங்களும் செயல்களுமே அவசியமாகின்றன என அவர் தெரிவித்தார்.

நன்றி – தினகரன்

வனவிலங்குகளை பாதுகாக்க விசேட தொடர்பு இலக்கம்

வனவிலங்குகள் வலையில் சிக்குண்ட நிலையிலோ அல்லது விபத்துக்குள்ளான நிலையிலோ இருந்தால் வன பாதுகாப்பு திணைக்களத்தின் 1992 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு உடன் அறிவிக்குமாறு உலக முடிவில் உள்ள தேசிய வன பாதுகாப்பு உயர் அதிகாரி பி.எம்.பி.கே.பிரதீப் குமார தெரிவித்தார்.

மேலும்,வன விலங்குகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் வனவிலங்குகள் விபத்துக்குள்ளாகி காயமுற்ற நிலையில் காணப்படும் போது சிகிச்சை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க இலகுவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மலையக பகுதிகளில் வனவிலங்குகள் அதிகளவில் காணப்படுவதால் சிலர் கம்பி வலை பயன்படுத்தி வேட்டையாடுவதாகவும் அவ்வாறான ஒரு சில கம்பி வலைகளில் சிக்கிய சிறுத்தைகளை சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாது போயுள்ளதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆகவே பொது மக்கள் வனவிலங்குகளை பாதுகாக்க தமது பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

‘ஒரு கோடியே 23 லட்சம் பேருக்கு கொரோனா பரவியது’

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 5 லட்சத்து 57 ஆயிரத்து 395 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 23 லட்சத்து 79 ஆயிரத்து 87 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 46 லட்சத்து 42 ஆயிரத்து  636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவில் இருந்து 71 லட்சத்து 87ஆயிரத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

‘உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் எனக்கு தொடர்பு இல்லை’ – ரிஷாட்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடனோ வேறு எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுடனோ தனக்கும் தனது குடும்பத்துக்கும் துளியளவும் தொடர்பு கிடையாதென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்

இன்று காலை (09) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்ட அவர், சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர், ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார்.

மேலும் தெரிவித்ததாவது,

“நேற்றுக் காலை (08) மன்னாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நான் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, குற்றப்புலனாய்வு பிரிவிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றது.

நாளை (இன்று) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு  வாக்குமூலம் அளிக்க வருமாறு கோரப்பட்டேன். எனது தேர்தல் நடவடிக்கைகள் அத்தனையையும் இடைநிறுத்தி விட்டு, இன்று காலை கொழும்பு வந்து, விசாரணைக்கு முகங்கொடுத்தேன்.

என்னிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட சம்பவங்கள் குறித்தே பல கேள்விகள் கேட்கப்பட்டன. குண்டுதாரி இன்ஷாபின் மாமனாரான அலாவுதீன், முன்னர் நான் பதவி வகித்த அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை மற்றும் எனது அமைச்சின் கீழான நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் நான் தெளிவான விளக்கங்களைக் கொடுத்தேன்” என்றார்.

“என்னைப் பொறுத்தவரையில் நான் நிரபராதி. சஹ்ரானை என் வாழ்நாளில் கண்டதே இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் எந்தவொரு செயற்பாட்டிலும் எனக்கு துளியளவும் தொடர்புமில்லை. நான் பயங்கரவாதத்தை முற்றாக வெறுப்பவன். என்னையும் எனது சகோதரர்களையும் அநியாயமாக, வேண்டுமென்றே இந்தச் சம்பவத்துடன் தொடர்புபடுத்துகின்றனர்” இவ்வாறு அவர் கூறினார்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர்,

“வாக்குமூலம் ஒன்றுக்காக எனது சகோதரரை அழைத்துச் சென்று, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரை தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர். குண்டுதாரி இன்ஷாபிடமிருந்து ஆறு தொலைபேசி அழைப்புக்கள் வந்ததாகத் தெரிவித்தே அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எனது சகோதரருக்கும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கும் எந்தத் தொடர்பும், ஒருபோதுமே இருந்ததில்லை என்பதை நான் உறுதிபட அறிவேன். அவரை அநியாயமாகத் தடுத்து வைத்துள்ளனர். எனவே, நாங்கள் நியாயங் கோரி, நீதிமன்றத்தை நாடியுள்ளோம்”

“குண்டுதாரி சஹ்ரான் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல, உங்களது மற்றுமோர் சகோதரர் ரிப்கான் உதவியதாக, ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளதே” என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட்,

முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் பொய்யான சாட்சியங்களை வழங்கியுள்ளதாகவும், அது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, சட்டத்தரணி ஒருவரின் ஊடாக, சகோதரர் ரிப்கான் கடிதம் ஒன்றை எழுதி, தனது விளக்கத்தை வெளிப்படுத்த அவகாசம் வழங்குமாறும் கோரியிருப்பதாக முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

‘ஆசிரியர்களின் வீடமைப்புத் திட்டம்’ குறித்த போலி பிரசாரத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் : விசாரணைகள் சி.ஐ.டியிடம் ஒப்படைப்பு!!

– பின்புலத்தில் உள்ளவர்களின் சதித்திட்டம் அம்பலமாகலாம் –

ஆசிரியர்களுக்கான வீடமைப்புத் திட்டம் குறித்து போலி பிரசாரங்களை முன்னெடுத்து ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் வகையில் அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக செயற்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இன்று பதியப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதுதொடர்பிலான விசாரணைகளும் சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த போலி பிரசாரத்தின் புன்புலத்தில் இருந்த அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கையெடுக்கப்பப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுப்பது குறித்து பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் இந்திய வீடமைப்புத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் கலந்துரையாடல்கள் நடத்தி வீடமைப்புத் திட்டங்களை கொண்டுவரும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்திருந்தார்.

இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு எத்தனை வீடுகள் கட்டி வழங்கப்பட்டது என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் ஊடாக சில அரசியல்வாதிகளின் கைக்கூலிகளால் கோரப்பட்டுள்ளது.

வீடுகள் கட்டி முடிப்பதற்கு ஒருவருடம் ஆகும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களால், மார்ச் மாதம் கடிதம் வழங்கிய பின்னர் பெயர்ப் பட்டியல் வழங்கிய மறுநாளே விபரங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இதுவரை வீடுகள் கட்ட ஆரம்பிக்கவில்லை என்ற தகவல் அமைச்சின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. அதனை மொழி மாற்றி இனி வரும் காலங்களில் வீடுகள் கட்டப்போவதில்லை என விஷமிகளால் கேவலமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் அரசியல் கைக்கூலிகளால் அரசியல் இலாபம் கருதி தமிழில் தவறாக தயாரிக்கப்பட்டு பிரசாரப்படுத்தப்படுகிறது. தோட்டத் தொழிலாளர்கள் தவிர்ந்தோருக்கும் வீடமைப்பு வழங்கலாம் என இந்திய அரசாங்கம் அனுமதியளித்துள்ள நிலையில் அரசியலுக்காக இவ்விடயம் தவறாக கையாளப்படுகிறது.

மொழி பெயர்ப்பு மாற்றத்தின் ஊடாக பதுளை மாவட்ட ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் கேவலமான அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களை வழிடத்திய அரசியல்வாதிகளை நிராகரிப்பதற்கு ஆசிரியர் சமூகம் தயாராகிவிட்டது.

செந்தில் தொண்டமான், கடந்த 10 வருட காலத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் எதனையும் முழுமைப்படுத்தாமல் விட்டதில்லை என ஆசிரியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான பின்புலத்திலேயே போலியான பிரசாரங்களை மேற்கொண்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்கனவே வெளியான செய்தி :
போலி பிரச்சாரங்களுக்கு எதிராக நடவடிக்கை! வீடுகள் வந்து சேரும் -செந்தில் தொண்டமான்

‘மக்கள் படை என் பக்கமே – அரசியல் கோழைகளுக்கு 5 ஆம் திகதி பதிலடி’

” மக்கள் மத்தியில் எனக்கான ஆதரவு பெருகிவருவதால் –  தோல்வி பீதியில் தொடை நடுங்கிபோயுள்ள சிலரே , கைக்கூலிகளை ஏவிவிட்டு, கோழைகள்போல் மறைந்திருத்து தாக்குதல் நடத்துகின்றனர். மக்கள் படை என் பக்கமே நிற்கின்றது. எனவே, ஆகஸ்ட் 5 ஆம் திகதி வாக்குரிமை என்ற ஆயுதத்தின் ஊடாக தக்கபதிலடி கொடுக்கப்படும்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்தார்.

புரட்டொப் பகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு புஸல்லாவை நோக்கி பயணிக்கையில் பிரபுவின் வாகனம்மீது, ஒளிந்திருந்த சிலர் கற்களைவீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள முத்தையா பிரபு, தேர்தல் ஆணைக்குழுவிடமும், பாதுகாப்பு தரப்புகளிடமும் முறைப்பாடு செய்துள்ளார்.

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடி வேட்பாளராகவே நான் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றேன். அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான அபிவிருத்தி திட்டங்களை கொண்டுவருவதே எனது இலக்காகும்.

இதனை முன்னிலைப்படுத்தியே பிரச்சாரத்திலும் ஈடுபட்டுவருகின்றேன். ஏனையோர்போல போலி வாக்குறுதிகளை வழங்கவில்லை.
இதனால் மக்கள் மத்தியில் எனக்கான ஆதரவு பெருகிவருகின்றது. இந்நிலையில் தோல்விபீதியில் இருக்கும் சில வேட்பாளர்கள், வன்முறை, அடாவடிமூலம் எனது பயணத்தை தடுப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

மறைந்திருந்து தாக்குகின்றனர். எனது வெற்றி உறுதி என்பதாலேயே இப்படியெல்லாம் செயற்படுகின்றனர்.

நாம் நாகரீகமான அரசியல் கலாச்சாரத்தை விரும்புபவர்கள். வன்முறையை விரும்புவதில்லை. எனவே, என்னுடைய அரசியல் களத்தில் மோதுவதாக இருந்தால், கொள்கைகளை முன்வையுங்கள். விவாதிப்போம். அதனைவிடுத்து மறைந்திருந்து கோழைகள்போல செயற்படவேண்டாம். மக்கள் ஆகஸ்ட் 5 ஆம் திகதி பதிலடி கொடுப்பார்கள்,’ – என்று முத்தையா பிரபு தெரிவித்தார்.

முத்தையா பிரபுவின் வாகனம்மீது தாக்குதல்!

கொத்மலை தேர்தல் தொகுதிக்குட்பட்ட பூச்சிக்கொட தோட்டத்தில் (புரட்டொப்)  வைத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபுவின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மறைந்திருந்த சிலர் கற்களைக் கொண்டு தாக்கினர் என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் பிரசாரத்திற்காக சென்று திரும்பிக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களே அவதானம்! இலங்கையில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் இன்று ஒரே நாளில் புதிதாக 57பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரி வித்துள்ளது.

கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் உட்பட 450 பேரிடம் மேற் கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோத னையில் அவர்களில் 56 பேருக்குக்கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனச் சுகாதாரசேவைப் பணிப்பாளர் நாயகம் விசேடவைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

குறித்த நபர் கடந்த மூன்று மாதக்காலமாக கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வுக்கு உட்படுத் தப்பட்ட நபராவார்.

அதன்படி, அங்கிருந்த கைதிகள் உட்பட 450 பேர் பி.சி.ஆர். பரிசோத
னைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், இன்று காலை மாரவிலபிரதேசத்தில் கொரோனாத் தொற்றுக் குள்ளான பெண் ஒருவர் இனங்காணப் பட்டார்.

கந்தக்காடு போதைப்பொருள் புனர் வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோச
கராகச் செயற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

மக்களே, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் என சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றவும். பொறுப்புடனும், பொதுநலன் கருதியும் செயற்பட்டு கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவும்.

ஒரு மாதத்துக்குள் 62,686 பேர் கைது!

கடந்த ஜூன் மாதம் 06ஆம் திகதி முதல், இம்மாதம் 08ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப் புகளின்போது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 62 ஆயிரத்து 686 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிபொருள்கள், சட்டவிரோத மதுபானம்வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தச் சந்தேகநபர்கள் கைதுசெய்யப் பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித் துள்ளது.

இவர்களில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 12 ஆயிரத்து 186 பேரும், ஏனைய குற்றங்களை இழைத்த குற்றச்சாட் டில் 23 ஆயிரத்து 446 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஹரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 ஆயிரத்து 87 பேரும், கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 6 ஆயிரத்து 6 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 515 பேரும் கைதுசெய்யப்பட்டுள் ளனர்.

ஆயுதங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 128 பேரும், வெடிபொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 11 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 12
ஆயிரத்து 307 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்புகளில் ரி – 56 வகை துப்பாக்கிகள் 11, ரி – 81 வகை துப்பாக்கி
01, 12 துளை கொண்ட துப்பாக்கிகள் 42, கைத்துப் பாக்கிகள் 04, உள்நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கிகள் 29, ரிபிட்டர் வகை துப்பாக்கிகள் 74,வேறு துப்பாக்கிகள் 15, தோட்டாக்கள் 692, வாள்கள்06, கத்திகள் 02 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின்போது வெடிபொருள், டெட்டனேட்டர்கள், கைக்குண்டுகள் ஆகியனவும் கைப் பற்றப்பட்டுள்ளன. அத்தோடு, 4 இலட்சத்து 37 ஆயிரத்து 466 லீற்றர்
சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும்
பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

ஜனாதிபதி தலைமையில் தேசிய புத்தரிசி விழா !

0
2026 தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதிக்கு அருகாமையில் நடைபெற்றது. அவண பல்லேகம ஹேமரதன நாயக்க...

இன்வெரி தமிழ் பாடசாலை அதிபராக தேவதாசன் கிங்ஸ்லி பதவியேற்பு!

0
ஹட்டன், டிக்கோயா இன்வெரி தமிழ் வித்தியாலயத்தின் அதிபராக தேவதாசன் கிங்ஸ்லி இன்று பதவியேற்றார். இவர் பன்மூர் ஹட்டன் தமிழ் மாகா வித்தியாலயத்தின் முன்னாள் பிரதி அதிபர் என்பதோடு அகில இலங்கை சமாதான நீதிவானும் ஆவர். ஹட்டன்...

இஸ்ரேல் ஊழித்தாண்டவம்: லெபனானில் துக்க தினம் அனுஷ்டிப்பு!

0
லெபனானில் இன்று (09) தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய கோரத் தாக்குதலில் 254 பேர் பலியாகியுள்ளனர். 1,600 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையிலேயே அங்கு துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும்...