Home Blog Page 4069

‘ஜனாதிபதியை தமிழ் மக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்’

” இந்த நாட்டில் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு விசேட உரிமைகள் எதுவும் கிடையாது. இலங்கையானது பிளவுபடாத – பிரிக்கமுடியாது நாடு என்ற கருத்தாடலையும் அவர்கள் மத்தியில் உருவாக்கவேண்டும்.” – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களின் ஆதரவை ராஜபக்ச அரசாங்கத்தால் ஏன் இன்னும் வெல்லமுடியாதுள்ளது என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” வடக்கு, கிழக்கில் தமக்கு சுயநிர்ணய உரிமை இருப்பதாக தமிழ் மக்கள் நம்புகின்றனர். இதனை அடிப்படையாகக்கொண்டு போராட்டம் இடம்பெற்றது. இதன்போது பிரதான கட்சிகள் மக்களை ஏமாற்றினவேதவிர, நேரடி பதில்கள் எதனையும் வழங்கவில்லை.

சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இந்நாட்டில் சம உரிமைகள் இருக்கின்றன என்பதை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். எனவே, வடக்கு, கிழக்கு மக்களுக்கு அப்பகுதியில் விசேட உரிமையுள்ளது என்ற காரணியை ஏற்கமுடியாது. இதனை சுட்டிக்காட்டுவதால் எமது கட்சிமீது மக்கள் அதிருப்தியடைகின்றனர். இருப்பதை நாம் தடுப்பதுபோல் உணர்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு பிரபாகரன் கொடுமைகளை இழைத்திருந்தாலும் சிலர் மத்தியில் அவருக்கு ஆதரவு இருக்கின்றது என்பதையும் நாம் ஏற்கவேண்டும். போர் முடிவடைந்த பின்னர் அது இல்லாமல்போய்விட்டது. இதனால் கவலையில் இருக்கும் சிலரும் இருக்கவே செய்கின்றனர்.

எமது அரசாங்கத்தால் 2010- 2015 காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமூக அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு பாரிய திட்டங்ளை முன்னெடுத்திருந்தாலும் சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தையே ஏற்படுத்தினர். அரசாங்கத்துக்கு எதிரான கருத்தை கட்டியெழுப்பினர். 2019வரையிலும் இந்நிலைமை நீடித்தது.

சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களையும் சமமாக வழிநடத்தும் தலைவரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச என்பதை வடக்கு, கிழக்கு மக்கள் புரிந்துகொள்வதற்கு இன்னும் சில காலம் எடுக்கும். அதற்கான அவகாசத்தை நாம் வழங்கவேண்டும். அதேபோல் இலங்கையானது பிளவுபடாத – பிரிக்கமுடியாத நாடு என்பதையும் சுட்டிக்காட்டவேண்டும்.” – என்றார்.

கொரோனா வைரஸ் காற்று வழியாகவும் பரவுகிறது

காற்றில் உள்ள மிகச் சிறிய பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பது தொடர்பாக சில ஆதாரங்கள் வெளிவந்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்ட வசதி உள்ள இடங்களில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்பதை மறுக்க இயலாது என்று ஓர் உலக சுகாதார நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய ஆதாரம் உறுதி செய்யப்பட்டால் உள்ளரங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் மாற்றம் செய்யவேண்டிவரும்.

காற்று வழியாக தொற்று பரவும் வாய்ப்பை உலக சுகாதார நிறுவனம் குறைத்து எடைபோட்டுவிட்டதாக 200க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம் ஒன்று அந்த அமைப்பை குற்றம்சாட்டியுள்ளது.

ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் வெளியேறும் நீர் குமிழிகள் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக இதுவரை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

”இந்த புதிய ஆதாரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என உலக சுகாதார நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டவரும், கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த வேதியல் ஆராய்ச்சியாளருமான ஜோஸ் ஜிம்னேஷ் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

”இது நிச்சயம் உலக சுகாதார நிறுவனத்தை தாக்கி நாங்கள் அனுப்பிய கடிதம் அல்ல. இது ஓர் அறிவியல் விவாதம்; ஆனால் நாங்கள் பலமுறை இது குறித்து விளக்கியும் அவர்கள் இது குறித்து கேட்க மறுப்பதால், இதனை பொது மக்களுக்கு எடுத்துரைக்க உள்ளோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த புதிய ஆதாரங்கள் ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், இது குறித்து மேலும் விரிவான மதிப்பீடு தேவை என்று உலக சுகாதார நிறுவன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

‘யாழ். பல்கலையில் கரும்புலி தின நிகழ்வு நடைபெறவில்லை’

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தின நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை என்று யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இன்றைய (07.07.2020) திவயின பத்திரிகை ‘யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தின கொண்டாட்டம் – பாதுகாப்பு படையினரால் விசாரணைகள் ஆரம்பம்’ என தனது பிரதான தலைப்புச் செய்தியாக வெளியிட்டது.

இது தொடர்பில் யாழ் பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் சுப்பிரமணியன் ஐங்கரன் தெரிவிக்கையில், இது தொடர்பில் நிர்வாகத்திற்கு எதுவித அறிவிப்புகளும் வழங்கப்படவில்லை என கூறினார்.

மேலும், இவ்வகையான கொண்டாட்டத்தின் போது பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாக தனக்குத் தெரியாது என்றும், அந்த விசாரணையை மேற்கொள்ள அவரிடம் எந்த ஆதரவும் கோரப்படவில்லை என்றும் தலைமை மாணவர் ஆலோசகர் டாக்டர் ராஜுமேஷ் கூறினார்.

நவீன தொழில்நுட்பத்துடன் பெருந்தோட்டத்துறையை கட்டியெழுப்புவோம்’

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். அதற்கான வேலைத்திட்டங்கள் உடனடியாக வகுக்கப்படவேண்டும் -என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் வேலாயுதம் தினேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் குளவிக்கொட்டு சம்பவங்கள் நாளாந்தம் அதிகரித்துவருகின்றன.  இம்மாதத்தில் கடந்துள்ள 7 நாட்களில்  மாத்திரம் 5 இற்கும் மேற்பட்ட குளவிக்கொட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே தொழிலாளர்களின் பாதுகாப்பு உடனடியாக உறுதிப்படுத்தப்படவேண்டும் என வேலாயுதம் தினேஷ்குமார் இன்று (08.07.2020) வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளம் மட்டுமல்ல தொழிலாளர்களின் நலன்புரிசார் விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனால், சம்பளம் குறித்து மாத்திரம் கதைத்து ஏனையவை மறைக்கப்பட்டு – மழுங்கடிக்கப்பட்டுவருகின்றன.

தேயிலை தோட்டங்களை காடாக்கமுடியாது, தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் போன்ற விடயங்களும் உள்ளன. இவை உரியவகையில் நடைமுறைப்படுத்தப்பட்டால்

குளவிக்கொட்டு, சிறுத்தை தாக்குதல் போன்ற பேரனத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை எமது மக்களுக்கு ஏற்படாது.

அரசாங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் கம்பனிகள் இணைந்து இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கமுடியும். குளவிக்கூடுகளை இயற்கையான முறையில் அகற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளன. வனவளத்துறை அமைச்சிடம் அதற்கான அதிகாரிகளும் உள்ளனர். எனவே, இனியும் தாமதிக்காது –

 எமது தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அதேவேளை, ஆரம்பத்தில் பெருந்தோட்டத்துறையில் லட்சக்கணக்கானவர்கள் தொழில் புரிந்தனர். இன்று அந்த எண்ணிக்கை பல மடங்காக குறைவடைந்துள்ளது. தொழில் பாதுகாப்பு இன்மை, தொழில்நுட்ப சிந்தனை இன்மை, தூரநோக்கு பார்வையற்ற தன்மை போன்றவே இதற்கு பிரதான காரணமாகும்.

எனவே, நவீன யுகத்துக்கேற்ப தொழில்நுட்ப அறிவைப்பயன்படுத்தி எவ்வாறு இத்துறையைக் கட்டியெழுப்பலாம் என்பது பற்றியும், பெருந்தோட்டத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கி, தொழிலாளர்களாக மட்டுமின்றி அவர்களை அதிகாரிகள் மட்டத்துக்கு கொண்டுசெல்லவேண்டும். அதாவது இதனை எவ்வாறு கௌரவமிக்க துறையாக கட்டியெழுப்பலாம் என்பது பற்றிய யோசனைகள் எம்மிடம் உள்ளன. எமது ஆட்சியில் அவை நடைமுறைப்படுத்தப்படும்.” – என்றார்.

வெற்றி நிச்சயம் – இது வேத சத்தியம்! சக்திவேல் முழக்கம்

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இதுவரை காணாத வரலாற்று வெற்றியை உறுதிசெய்யும்.வெற்றி நிச்சயம் இதுவே வேத சத்தியம் என்று முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினரும் இ.தொ.காவின் உபத்தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான பழனி சக்திவேல் தெரிவித்தார்.

கந்தப்பளை பார்க் தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்விடயத்தை குறிப்பிட்டார்.

” இம்முறை பாராளுமன்ற தேர்லில் மக்கள் மனதில் எழுதி விட்டார்கள் இ.தொ.காவிற்கே வாக்களிக்க வேண்டுமென்று, காரணம் இ.தொ.காவின் ஆளும் அரசாங்கத்தில் காணப்படும்.

எனவே இ.தொ.காவில் பலத்தை அதிகரித்தாலே எமது உரிமைகளும் அதேபோல மலையகத்தில் அபிவிருத்திகளும் ஏற்படுமென மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். எனவே எப்போதும் காணாத வரலாற்று வெற்றியை இ.தொ.கா உறுதி செய்யும்.” – என்றார்.

தகவல் – நீலமேகம் பிரசாந்த்

சஜித்தால் முடியவே முடியாது – அடித்து கூறுகிறார் சண்.பிரபா

இன்றைய தேர்தல் காலத்தில் தமிழ்த் லைமைகள் வெற்றியை மாத்திரம் நோக்காக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை இரண்டாகப் பிரிப்பதற்கு துணை சென்று அதனை இரண்டாகப் பிரித்து தங்களின் வெற்றி வாய்ப்புக்காக சஜித் பிரேமதாசாவின் செல்வாக்கை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற முனைப்போடு இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி எனும் கட்சியில் டெலிபோன் சின்னத்தில் இணைந்து வாக்கு கேட்கின்றனர்.
சஜித் நாட்டை தலைமைத்தாங்கக் கூடியவர் அல்ல என்பதை கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிரூபித்துவிட்டது என களுத்துறை மாவட்ட ஐ.தே.க வேட்பாளர் சண்.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
” கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்விக்குப் பின்னர் சஜித் பிரேமதாச நடத்திய முதலாவது பத்திரிகை மாநாட்டிலும் அவர் நடந்து கொண்ட விதத்திலும் அவர் எந்த விதத்திலும் இலங்கையை தலைமைத்தாங்கக் கூடியவர் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார்.
அதேவேளை 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு பிரவேசித்த அவர் 2010 ஆண்டு கட்சித்தலைமையை கோரி அடம்பிடிக்கும் சிறுபிள்ளையாகவே இருந்து வந்திருக்கின்றார்.
அவரை விட கட்சியில் அனுபவம் நிறைந்த மூத்த உறுப்பினர்கள் இருக்கும் போது தன்னுடைய கட்சி தலைமைப்பதவிதான் தன்னுடைய இலக்கு போல அந்த கட்சித் தலைமைப்தவிக்கான ஆசை கொண்டு தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
தேர்தலில் வெற்றி கொள்ள முடியாதவர்கள் இன்று ஐ.தே.விலிருந்து பிரிந்து சென்றவர்கள், தான் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வந்து விட முடியாது என்பதால் பெரும் இனவாதியான சம்பிக்க இன்று சிறுபான்மை இன தலைமைகளை வழி நடத்தும் தலைவராக மாறியிருக்கின்றார். ஒரு இனவாதியின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ்த்தலைமைகள் அகப்பட்டுக்கொள்ளக்கூடாது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாஸா வெளி உலகுக்கு தெரிகின்ற போதிலும் அதனுடைய நிழல் தலைவர்களாக அல்லது அதனை வழி நடத்துபவர்களாக சிறுபான்மை தமிழ்த்தலைவர்களுக்கு அறிவுரை கூறி அழைத்துச் செல்பவராக சம்பிக்க ரணவக்க இருக்கின்றார்.
சம்பிக்க அன்று ஆரம்பித்து வைத்த இனவாத பயணம்     இலங்கையில் இன்றும்  இருந்துக்கொண்டே இருக்கின்றது. அவர் அன்று சிஹல உறுமய என கட்சியை ஆரம்பித்து தன்னுடைய அரசியலுக்காக இனவாதத்தை தூண்டிவிட்டு பௌத்த மதகுருக்களை அரசியலில் ஈடுபடுத்தி தன்னுடைய சுயநலத்துக்காக இனவாதத்தையும் மத வாதத்தையும் இந்நாட்டில் வளர்த்தார்.
2002 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க சமாதான ஒப்பந்தத்தை எடுத்து எவ்வித உயிரிழப்புக்களும் இன்றி இனப்பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொள்வதற்கான முன்னெடுப்பை செய்தபோது அதற்கு சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் தடையாகவே இருந்தனர். இவ்வாறானவரின் பிடிக்குள்ளேயே இன்று சிறுபான்மை தலைவர்கள் அகப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஐ.தே.க வின் மூலமே பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலமே புதியதொரு பாராளுமனற்த்தை உருவாக் க முடியும்.
ஆகவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வந்த ஆதரவை இம்முறையும் வழங்கி பொதுத்தேர்தலில் ஐ.தே.க விற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது அமெரிக்கா!

உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரி்க்கா விலகுவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Who என்று அழைக்கப்படுகிற உலக சுகாதார நிறுவனம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது ஐ.நா.சபையின் துணை அமைப்பாகும்.

உலகளவிலான சுகாதார விவகாரங்களை இந்த அமைப்பு கையாள்கிறது.  194 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன. ஆனாலும் இந்த நிறுவனம், செயல்படுவதற்கான முக்கிய நிதி பங்களிப்பை அமெரிக்காதான் வழங்கி வருகிறது.

தற்போது உலகமெங்கும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி, பெருத்த உயிர்ச்சேதங்களையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய முயற்சிகளுக்கு உதவி செய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக சீனா கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.

இதனிடையே கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனா சார்பு நிலையில் உள்ளதால் அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்வதாக கடந்த மே மாதம் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.

அந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும் அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அதிபர் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த பல மில்லியன் டாலர்கள் நிதியை நிறுத்தினார்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறியது.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் அன்ட்டோனியோ குட்டரசிற்கு கடந்த 6 ஆம் திகதி அனுப்பிய கடிதத்ததில் கூறியுள்ளதாவது:

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்கிறது. ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6- ஆம் திகதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறியது மற்ற நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் பரப்புரைச்சமர் உக்கிரம்!

நுவரெலியாவில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், அடுத்தவாரம் முதல் சூறாவளிப்பிரச்சாரம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 275 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

8 ஆசனங்களை இலக்கு வைத்து 12 அரசியல் கட்சிகளில் இருந்து 132 பேரும், 13 சுயேட்சைக்குழுக்களில் இருந்து 143 பேரும் களமிறங்கியுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

தமிழ் முற்போக்கு கூட்டணியானது ஐக்கிய மக்கள் சக்தியின்கீழ் தொலைபேசி சின்னத்தில் களமிறங்கியுள்ளது.

பிரதான கட்சிகள் தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தாலும் அடுத்தவாரம் முதலே சூறாவளிப்பிரச்சாரம் ஆரம்பமாகவுள்ளது.

தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய கலந்துரையாடல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய , கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க மற்றும் பதில் பொலிஸ் மாஅதிபர் சந்தன விக்கிரமரத்ன உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிட்டுள்ளபடி முறையாக தேர்தலை நடத்துவதற்கு, கொவிட்-19 கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையம், பொலிஸ் மற்றும் சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளதாவது :

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி இதன் போது அவதானம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் வாக்களிப்பதற்காக முப்படையினரின் உதவியைப் பெற்றுக் கொள்வது பற்றியும் அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படுகின்ற தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு எவ்வாறு வாக்களிப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பது என்பது பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக வைரஸ் பரவல் தீவிரமடைந்தால் முன்னெடுக்கப்பட வேண்டிய துரித நடவடிக்கைகள் பற்றியும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அபிவிருத்திக்காக வாக்களியுங்கள்! முத்தையா பிரபு

இம்முறை எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதால் எவ்வித பயனும் இல்லை என்றும் அடுத்து ஐந்து வருடம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு வாக்களிப்பது மட்டுமே நுவரெலியா மக்களுக்கு அபிவிருத்தியை கொண்டுவர வழி ஏற்படுத்தும் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரபு,
இதுவரை இந்த மாவட்டத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் இருந்தார். ஆனால் விளையாட்டுத் துறைக்கு ஒன்றையும் செய்யவில்லை. கல்வி அமைச்சர் இருந்தார். கல்வியின் தரமும், பாடசாலைகளும் அப்படியே இருக்கின்றன. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் இருந்தார். லயன்கள் இன்னமும் இன்னமும் அப்படியே இருக்கின்றன. 50 ரூபா சம்பளத்தைக் கூட இவர்களினால் வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

அடுத்த ஐந்து வருடங்களும் ஜனாதிபதி, பிரதமர் கீழே ஆட்சித் தொடரப் போகிறது. எனவே, ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு வாக்களிப்பதன் மூலமே மக்களுக்கான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரையில் இடைத் தரகர்கள் யாரும் இல்லை. நான் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் நேரடியாக பேசுவேன். என்னை களமிறக்கியது அவர்களே. அதனால் மக்கள் எதற்காக வாக்களிக்கிறார்களே அந்தத் தேவையை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

எதிர்க்கட்சிக்கு வாக்களித்து, உங்களின் வாக்குகளைக் குப்பையில் போட்டுவிடாதீர்கள். மொட்டுச் சின்னத்திற்கு மலையக மக்கள் இம்முறை வாக்களிக்க வேண்டும். எனது சொந்த செலவில் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க முயற்சித்தேன். அதற்கும் தடை ஏற்படுத்தினார்கள். எனவே அபிவிருத்தி செய்யக்கூட அதிகாரம் தேவைப்படுகிறது. அந்த அதிகாரத்தையும், அங்கீகாரத்தையும் தர வேண்டும் என மக்களிடம் உரிமையாக கேட்டுக் கொள்கிறேன். மக்கள் அங்கீகாரத்தைத் தந்தபின்னர், நுவரெலியாவிற்கான அபிவிருத்தி நான் நேரடியாக எடுத்து வருவேன் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன்.” என்று முத்தையா பிரபு மேலும் தெரிவித்தார்.

சினிமா

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

செய்தி

செம்மணியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
  யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வில் இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி, மனிதப் புதைகுழியின் மூன்றாவது கட்ட அகழ்வின் 25வது நாள் அகழ்வுப் பணி இன்று...

சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தனக்கு தொடர்பு இல்லையெனில், சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு...

வத்தளை ஹேக்கித்தை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்: விரிவான ஏற்பாடுகள் தயார்!

0
  வரலாற்றுச் சிறப்புமிக்க வத்தளை, ஹேக்கித்தை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம்திகதி மிக விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு...