Home Blog Page 48

திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்!

திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் ஐக்கியமானார்.

அவரது ஆதரவாளர்கள் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் முன்பு இன்று திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
\
தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக-வில் ஓபிஎஸ் இணைந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

75 வயதான ஓபிஎஸ் கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. ஊடாக அரசியல் பயணத்தை முன்னெடுத்து வந்தவர்.

அக்கட்சியின் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் துணை தலைவர், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக-வில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

தொடர்ந்து மீண்டும் அக்கட்சியில் இணைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவர், அது பலன் அளிக்காத நிலையில் திமுக-வில் இணைந்துள்ளார்.

அவருடன் அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார்.

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்!

T-20 உலகக்கிண்ண தொடரில் இன்று (27) நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.

கொழும்பு ஆர்.பிரேமதாச Colombo RPS மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

இங்கிலாந்து அணி அரையிறுதிச் சுற்றுக்கு ஏற்கனவே தெரிவாகியுள்ளது. எனவே, இன்றைய போட்டி அவ்வணிக்கு முக்கியத்துவம் இல்லை.

எனினும், நியூசிலாந்து அணிக்கு முக்கியமான போட்டியாகும். இதில் வெற்றிபெறும் பட்சத்தில் அந்த அணி அரையிறுதிக்கு தெரிவாகிவிடும். எனவே, வெற்றி முனைப்போடு நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது.

நௌபர் மௌலவியே பிரதான சூத்திரதாரி: சுரேஸ் சலே கைது ஏமாற்று நடவடிக்கை!

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்காகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்புலத்தில் அரசியல் நோக்கமே உள்ளது.”

இவ்வாறு முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது அரசாங்க புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே சரத் வீரசேகர இவ்வாறு கூறினார்.

“பேராயர்,கத்தோலிக்க சபை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதற்கான நடவடிக்கையாகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாயிகள் அரசாங்கத்தை சபிக்கின்றனர். நிலக்கரி மோசடி இடம்பெற்றுள்ளது. இவற்றை திசை திருப்புவதற்காக இக்கைது இடம்பெற்றிருக்கலாம்.” எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

சனல் 4 ஊடகமென்பது இராணுவத்துக்கு எதிராக பிரச்சாரம் முன்னெடுக்கும் ஊடகமாகும். அதில் அசாத் மௌலானா தெரிவித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது ஏற்புடையது அல்ல.

சுரேஷ் சலே என்பவர் 2016 டிசம்பர் முதல் 2018 டிசம்பர்வரை மலேசியாவில் இருந்தார். அதன்பின்னர் இந்தியாவில் இருந்தார். தாக்குதல் சம்பவம் நடைபெற்ற காலப்பகுதியில் அவர் இலங்கையில் இருக்கவில்லை.

நௌபர் மௌலவிதான் பிரதான சூத்திரதாரியாவார். வெளிநாட்டு விசாரணைகள்கூட இதனையே வெளிப்படுத்தின. நிலைமை இவ்வாறு இருக்கையில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதற்குரிய காரணம் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.” எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (27.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்று (27) வெள்ளிக்கிழமை கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.

திருவிழாவை முன்னிட்டு ஆலயமும் அதன் சுற்றுப்புறச் சூழலும் முழுமையாகத் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திருவிழா ஏற்பாட்டுப் பணிகளுக்காகப் பங்குத்தந்தையர்கள், கடற்படையினர், பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் என 500 இற்கும் மேற்பட்டோர் கச்சதீவில் தங்கியிருந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

பக்தர்களின் வருகைக்காகப் போக்குவரத்து, குடிதண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

நாமலை எதிர்கொள்ள பிரிட்டன் தமிழ் மாணவ அமைப்புகளுக்கு முதுகெலும்பில்லை!

“ உரையாடலில் பங்கேற்று நாமல் ராஜபக்கவிடம் கேள்வி எழுப்புவதற்குரிய முதுகெலும்பு பிரிட்டனில் உள்ள தமிழ் மாணவ அமைப்புகளுக்கு இல்லை.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர  விமர்சித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பிரிட்டன் தமிழ் மாணவ அமைப்புகளுக்கு எதிராக கடும் விமர்சனங்களை சரத் வீரசேகர முன்வைத்தார்.

“ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் என்பவற்றிடமிருந்து நாமல் ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கருத்து சுதந்திரம் மற்றும் விவாத உரிமை என்பனவே மேற்படி பல்கலைக்கழகங்களின் பிரதான அம்வசம்.
எனினும், தமிழ் பிரிவினைவாத குழுக்களின் அழுத்தங்களால் குறித்த உரிமை, கலாசாரம் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

இது ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் போன்ற பல்கலைக்கழகங்களின் நற்பெயருக்கு நல்லதல்ல.
நாமல் ராஜபக்சவிடம் கேள்வி கேட்டகலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழ் மாணவ அமைப்புகள் தயாரில்லை.

பின்னர் கேள்விகளை எழுத்துமூலம் வழங்குமாறு கோரப்பட்டிருந்தது. அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால்தான் உரையாடல்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

நாமல் ராஜபக்சவிடம் தற்துணிவுடன் கேள்வி கேட்பதற்குரிய முதுகெலும்பு பிரிட்டன் தமிழ் மாணவ அமைப்புகளுக்கு இல்லை என்பது இதன்மூலம் புலனாகின்றது.” எனவும் வீரசேகர குறிப்பிட்டார்.

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16வது அமர்வின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம்

அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 16வது அமர்வின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் , ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (26) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பல்வேறு பொறுப்புகள் மற்றும் திட்டங்கள் உள்ளதாகவும் அந்த அனைத்து நிறுவனங்களும் இந்தத் தருணத்தில் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரணப் பணிகளை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதியின் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அனைத்து நிறுவனங்களும் ஒரே நோக்கத்திற்காக, ஒரு கட்டமைப்பாகச் செயற்பட்டு, சரியான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான நிவாரணத்தை வழங்க முடியும் எனத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், இதற்காகத் துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

அனர்த்தத்தினால் பாதிப்புக்குள்ளான மற்றும் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்காகப் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பது குறித்தும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனைக்குப் பின்னர், அவர்களின் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய வீடுகளை விரைவாகக் கட்டி முடிப்பது தொடர்பாகவும் இங்கு ஆலோசிக்கப்பட்டது.

இந்த வீட்டுத் திட்டப் பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருடன் விசேட கலந்துரையாடலை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகைகள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை விரைவாக வழங்கி முடிக்குமாறும், இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்காத மக்களின் மேன்முறையீடுகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதியின் செயலாளர் அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொத்தா, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் குமுதுலால் போகஹவத்த, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார,

அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் மேலதிக செயலாளர் கே. ஜி. தர்மதிலக, வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலைய சிரேஷ்ட உதவிச் செயலாளர் நாமல் லியனகே, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாநாயக்க, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சம்பத் கொட்டுவேகொட ஆகியோர் மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நல்லகண்ணு உடலுக்கு 72 குண்டுகள் முழங்க தமிழக அரசு மரியாதை!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த  நல்லகண்ணு உடலுக்கு 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணு நேற்று வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

அவருக்கு வயது 101 . சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் என அனைவரும் நல்லகண்ணு உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, மலர் வளையம் வைத்து மறைந்த நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், 72 குண்டுகள் முழங்க 24 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி சுட்டனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைவர்கள் நல்லகண்ணுக்கு ‘வீர வணக்கம்’ செலுத்தினர்.

நல்லகண்ணு இறப்புக்கு பிறகு தன்னுடைய உடலை மருத்துவமனைக்கு தானமாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நல்லகண்ணுவின் உடல் அவரது விருப்பப்படி சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது.

நல்லகண்ணுவின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தி அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

தென்னாபிரிக்காவிடம் மண்கவ்வியது மேற்கிந்திய தீவுகள் அணி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் தேசிய கிரிக்கெட் அணி 83 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து கடுமையாக தடுமாறியது.

எனினும், ஹோல்டர் – சைபர்ட் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க முக்கிய பங்காற்றியது. இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 8வது விக்கெட்டுக்கு 89 ஓட்டங்கள் சேர்த்தனர்.

இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் எடுத்தது.

177 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, ஒரு விக்கெட் இழப்பிற்கு 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதிப்படுத்தியது.

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் உட்பட்ட குழுவினர் (26.02.2026) நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இன்று 26.02.2026 காலை 12.30 மணியளவில் உலங்கு வானூர்தி மூலமாக பொலன்னறுவையில் இருந்து நுவரெலியா மாநகர சபை பொது விளையாட்டு மைதானத்திற்கு வந்திரங்கிய சுவாமிகள் உட்பட்ட குழுவினரை நுவரெலியா மாநகர சபை முதல்வர் உபாலி வணிகசேகர மற்றும் பிரதி முதல்வர் சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா உள்ளிட்ட மாநகர சபை குழவினர் வரவேற்றனர்.

அங்கிருந்து சுவாமிகள் நுவரெலியா பதுளை பிரதான வீதியூடாக வாகன பேரணி மூலமாக சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்டார்.ஆலயத்தில் நிரவாக சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உட்பட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றனர்.

இதன்போது சுவாமிகளுடன் வெளிநாட்டு வேலைவாபய்ப்ப மற்றும் சுற்றுலாதுறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணன் கலைச்செல்வி மற்றும் பொது மக்களும் பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.சுவாமி ஆலத்தில் நாள்தோறும் முன்னெடுக்கப்படுகின்ற அன்னதானத்தை ஆரம்பித்து வைத்ததுடன் பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் வழங்கினார்.

தொடர்ந்து சீதையம்மன் ஆலயத்தின் பிரதம குருக்கள் ரஜீவன் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகளை முன்னெடுத்தார்.அதனை தொடர்ந்து ஆலய நிர்வாக சபையினால் சுவாமிக்கு ஆலயத்தின் சார்பாக நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது. சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ் இந்தியாவின் அண்மையில் நடைபெற்ற கும்பமேலா நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் பிரதான பங்கு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து சடலம் மீட்பு!

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று (06) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர்...

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்!

0
- இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிமாற்றங்களுக்கும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கம். - புதிய முறைமையின் ஊடாக எந்த நிமிடமும் எந்த இடத்தில்...

ஈரான் உளவுத்துறை தளபதி பலி!

0
ஈரான் புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதேமி Majid Khademi, கொல்லப்பட்டுள்ளார். ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. தாக்குதலுக்குரிய பொறுப்பை இஸ்ரேல் ஏற்றுள்ளது. பயங்கரவாதத் தலைவர்களுக்கு எதிரான வேட்டை தொடரும் என்று இஸ்ரேல்...