Home Blog Page 53

ஒருபுறம் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பு; மறுபுறம் மதத் தலைவர்கள் அரசால் அவமதிப்பு

நாட்டில் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்து வரும் நிலையில், அரசு மதத் தலைவர்களை அவமதிப்பதிலும் சமூகப் பிளவுகளை ஏற்படுத்துவதிலும் குறியாக இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.

குப்பியாவத்தை மேற்கு பிரதேசத்தில் நேற்று 700 மாணவர்களுக்குப் பாடசாலைப் பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:-

“வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்த அமைச்சர்கள், இன்று மதத் தலைவர்களை விலங்குகளின் பெயர்களால் அழைத்து இழிவுபடுத்துகின்றனர். புத்த சாசனத்தைப் பாதுகாப்பது அரசமைப்பின் கடமை என்றாலும், இன்று அமைச்சர்களே மகா சங்கத்தினரையும், அருட்தந்தையர்களையும் ‘கேடுகெட்டவர்கள்’ எனச் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தாக்கி வருகின்றனர்.

மதமற்ற கொள்கையைப் பிறர் மீது திணிக்கும் இத்தகைய கீழ்த்தரமான சேறு பூசும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.” – என்றார்.

ஆடைத் தொழிற்சாலைகள் மூடல் மற்றும் வேலையிழப்பு
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்துப் பேசிய அவர்,

“ஆடைத் தொழிற்சாலைகள் முடக்கம்: ரணசிங்க பிரேமதாஸவினால் உருவாக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைத் திட்டங்கள் இன்று மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

பாரிய ஆடை உற்பத்தி நிறுவனமான MAS Holding இல் பணியாற்றும் 96 ஆயிரம் பேரில், சுமார் 26 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊழியர் எண்ணிக்கையை 70 ஆயிரமாகக் குறைக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க வரிக் குறைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளைச் சரியாக முன்னெடுக்க இந்த அரசால் முடியாமல் போனதே இந்த வீழ்ச்சிக்குக் காரணம். தொழிற்சாலைகளைத் திறந்த அனுபவம் இல்லாதவர்கள், இன்று அவற்றை மூடிவிட்டுத் தொழிலாளர்களை வீதிக்கு இறக்கியுள்ளனர்.

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால், நாடாளுமன்றத்தில் அது குறித்துப் பேசினால், தட்டுப்பாடு இல்லையென அரசு அப்பட்டமாகப் பொய் கூறி வருகின்றது. இது அரசின் அகம்பாவத்தையும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாத இயலாமையையுமே காட்டுகின்றது.” – என்றார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட அணியே மாகாணசபைத் தேர்தலுக்காக கோஷம்!

கடந்த காலங்களில் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களே, தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஒப்பாரி வைப்பதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி சாடியுள்ளார்.

“துணிவிருந்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விடுத்த சவாலுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“செப்டம்பர் 21ஆம் திகதி மக்கள் வழங்கிய தீர்ப்பு இன்னும் ஈரம் காயவில்லை. நீண்டகாலமாகத் தேர்தல்களை நடத்தாமல் முடக்கி வைத்திருந்தவர்கள், இன்று ஜனநாயகம் பற்றிப் பேசுவது வேடிக்கையானது. மக்கள் எதற்காக இந்த அரசைத் தெரிவு செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்; அந்தப் பொறுப்பை நாம் சரியாக நிறைவேற்றி வருகின்றோம்.

தேர்தல்களைக் கண்டு அஞ்சும் தேவையோ அல்லது மக்கள் செல்வாக்கை இழந்துவிடுவோம் என்ற பயமோ இந்த அரசுக்கு இல்லை. முறையான காலத்தில், உரிய முறையில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும். சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும், திருடப்பட்ட மக்கள் பணத்தை மீட்பதுமே எமது தற்போதைய முன்னுரிமையாகும்.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இதனைப் ‘பழிவாங்கல்’ என்று கூச்சலிடுவதன் மூலம் எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது.

ராஜபக்ஷக்களின் நிழலில் இருந்து அரசியல் செய்தவர்கள், இப்போது மக்கள் செல்வாக்கு பற்றிப் பேசுவது நகைப்புக்குரியது. முடிந்தால் மீண்டும் மக்களிடம் சென்று ஆதரவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.” – என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி சவால் விடுத்தார்.

இலங்கையை பந்தாடிய இங்கிலாந்து அணியை வீழ்த்துமா பாகிஸ்தான்?

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்8 சுற்று விறுவிறுப்பான கட்டத்தை எட்டிள்ளது. இதில் குரூப்2-ல் பல்லகெலேயில் இன்று நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து- பாகிஸ்தான் அணி கள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இவ்விரு அணிகளும் லீக் சுற்றில் தலா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் சூப்பர்8-ஐ எட்டின.

சூப்பர்8 சுற்றில் பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோத இருந்தது. ஆனால் இந்த ஆட்டம் மழையால் ரத்தானதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. எஞ்சிய இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் அரைஇறுதியை அடைய முடியும் என்பதால் இன்றைய மோதல் பாகிஸ்தானுக்கு வாழ்வா-சாவா? ஆட்டமாக அமைந்துள்ளது.

பாகிஸ்தானின் பிரதான அஸ்திரமே சுழல் தாக்குதல் தான். நடப்பு உலகக் கோப்பையில் அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 26 விக்கெட்டுகளை அறுவடை செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக ஓடி வந்து நின்றபடி வித்தியாசமாக பந்துவீசி திணறடிக்கும் உஸ்மான் தாரிக் தான் அவர்களின் துருப்பு சீட்டாக இருப்பார்.

பேட்டிங்கில் சவாலான ஸ்கோரை எட்ட வேண்டும் என்றால் பர்ஹான், பாபர் அசாம், கேப்டன் சல்மான் ஆஹா, சைம் அயூப் உள்ளிட்டோர் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமாகும்.

மரக்கறி விலைப்பட்டியல் (24.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

தோட்டத் தொழிலாளர்களுக்குரிய சம்பள உயர்வில் வெளிப்படைதன்மை இல்லை!

“தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் எழுத்துப்பூர்வமான எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை.” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படுவதாகக் கூறப்படும் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தோட்ட நிறுவனங்களிடம் இருந்து முறையான சட்ட ரீதியான உடன்படிக்கைகள் எதுவும் எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

​பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்து வரும் கருத்துக்களை வழிமொழிந்த ஹரின் பெர்னாண்டோ,தோட்டத் துறை சார்ந்த அனுபவம் கொண்ட ஜீவன் தொண்டமான் கூறுவது போல, இந்தச் சம்பள அதிகரிப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒரு புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தோட்ட நிறுவனங்கள் இந்தச் சம்பள அதிகரிப்பை வழங்க முன்வந்துள்ளனவே தவிர, இது நிலையான ஒன்றல்ல எனக் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியிலும் இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், அவர் குறுகிய காலமே பதவியில் இருப்பார் என்ற கணிப்பில் நிறுவனங்கள் அதற்கு இணங்கவில்லை என்றும், தற்போது அநுரகுமார திஸாநாயக்க அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருப்பார் என்பதால் தற்காலிகமாக இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அவர் விவரித்தார்.

​மேலும், ஒரு காலத்தில் 3 இலட்சமாக இருந்த தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது 60 ஆயிரமாகக் குறைந்திருப்பதையும், தொழிற்சங்கங்களின் பலம் வீழ்ச்சியடைந்துள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் துறையைப் பாதுகாப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

அரசாங்கம் இதுவரை கூறி வந்த ஏனைய பொய்ப் பிரச்சாரங்களைப் போலவே, இந்தச் சம்பள அதிகரிப்பு விவகாரமும் இன்னும் சில மாதங்களில் சமூக மயமாகும்போது, அது ஒரு வெறும் அரசியல் நாடகம் என்பது நாட்டு மக்களுக்குத் தெளிவாகத் தெரியவரும் என அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

ச. ஞான பிரசாந்தன்

சஜித் எமது கட்சி தலைவர் அல்ல: எம்மை கட்டுப்படுத்த முடியாது!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் முகநூல் பதிவு வருமாறு,

” எமது கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி. சஜித்தின் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி.

இரண்டு கட்சிகளுக்கும் இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் தேர்தல் உடன்பாட்டு கூட்டணி இருக்கிறது.

இரண்டுமே ஒரே கட்சி அல்ல. சஜித் எமது கட்சி தலைவரும் அல்ல. அவர் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற தேசிய கூட்டணி தலைவர்.

அவரை, “அங்கே போகாதீர்கள், இங்கே போகாதீர்கள்” என நாம் கட்டு படுத்த முடியாது. நாம் கட்டுபடுத்துவதும் இல்லை.

அவரும் எம்மை அதே மாதிரி கட்டு படுத்த முடியாது. அவர், எம்மை கட்டு படுத்துவதும் இல்லை.

பாராளுமன்ற வாக்களிப்பில் கூட நாம் சுயாதீனமாகவும், சேர்ந்தும் வாக்கு அளிக்கின்றோம்.

இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

2004ம் வருடம், சந்திரிக்கா தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை அமைத்து, வெற்றிலை சின்னத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்து, அனுரவின் JVP போட்டி இட்டது.

பிறகு, 2005ம் வருடம், அதே சின்னத்தில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து,

மஹிந்த ராஜபக்சவை வேட்பாளர் ஆக்கி, அவரை போட்டி இட செய்து, பெரும் பாடு பட்டு, வடக்கில் தேர்தல் பகிஷ்காரம் நடத்த பட்ட நிலையில், மஹிந்தவை ஜனாதிபதி ஆக்கியதும், அனுரவின் JVP தான்.

ஆகவே, JVP எப்படி, மஹிந்த தலைமையிலான கட்சியுடன் புரிந்துணர்வு உடன்பாட்டில், கூட்டணியாக செயல் பட்டதோ, அதேபோல்தான், தமிழ் முற்போக்கு கூட்டணி, சஜித் தலைமையிலான கட்சியுடன், புரிந்துணர்வு உடன்பாட்டில், கூட்டணியாக செயல் படுகிறது.

இது நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டம் காரணமான அரசியல் நடைமுறை ஆகும். தென்னிலங்கையில் சிறுபான்மையாக வாழும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கு, மாற்று வழி கிடையாது.

அஞ்சா நெஞ்சம் படைத்த தலைவனே நாமல்!

“மஹிந்த ராஜபக்ச அன்று வெளிநாடு செல்லும்போது இருந்த அதே எதிர்ப்பு இன்று நாமல் ராஜபக்சவுக்கு உள்ளது. எனினும், சவால்களுக்கு, அச்சுறுத்தல்களுக்கு அஞ்சும் தலைவர் நாமல் கிடையாது.” என்று முன்னாள் ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ எதிர்ப்பு வரும் என்பது தெரியும். எனினும், அழைப்பு விடுத்துவிட்டனர், எனவே, கலந்துரையாடச் செல்வோம் என்ற நோக்கிலேயே நாமல் சென்றார்.

உரைகள் இரத்து செய்யப்பட்டமை எமக்கு பெரிய விடயம் கிடையாது. ஏனெனில் நாமல் ராஜபக்ச தோல்வி அடையும் தலைவர் அல்லர்.

எனவே, அவரது உரை இரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பில் சில தரப்பினர் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் நாமல் சிறந்த தலைவர் என்பது புலனாகியுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாமல் ராஜபக்ச சவாலை ஏற்றதால்தான் இன்று மொட்டு கட்சியே எஞ்சியுள்ளது.” – என்றார்.

யூரி தோட்ட தொழிலாளர்கள் பணி பகிஷ்கரிப்பு: பொதுமக்கள் ஆதரவு

​( இரா. சுரேஷ்குமார் – தெமோதரை நிருபர்)

யூரி தோட்ட தொழிலாளர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக யூரி தோட்டப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மக்கள் வாழும் பகுதிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டதுடன், இதனால் தோட்டத்தில் அமைந்துள்ள ஆரம்ப பாடசாலை, ஆலயம் மற்றும் சுற்றுப்பகுதிகளும் சேதமடைந்த நிலையில் உள்ளன.

இருப்பினும், இதுவரை உரிய புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாதுகாப்பான தோட்டக் காணிகளை பாடசாலை அமைப்பதற்காக அரசாங்கத்தின் மூலம் சட்டபூர்வமாகப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்து, தொழிலாளர்கள் இந்தப் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்தக் கவனயீர்ப்பு நடவடிக்கையில் தொழிலாளர்கள் மற்றும் பிரதேச சமூக பிரதிநிதிகளும் கலந்து கருத்து வெளியிட்டனர். மேலும், யூரி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களும் இதில் பங்கேற்று தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

குறிப்பாக, யூரி தோட்டப் பாடசாலை தற்போது பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், அதனை உடனடியாக புதிய பாதுகாப்பான இடத்தில் நிர்மாணம் செய்வதற்கான நிலம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், அரசாங்கம் நேரடியாக தலையிட்டு, இப் பாடசாலையை விரைவாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

பிரிட்டனில் உரைகள் ரத்து: நாமல் கவலை!

“உரையாடுவதற்குரிய உரிமையை மறுப்பதானது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களில் இடம்பெறவிருந்த தனது உரைகள் திடீரென இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் நாமல் ராஜபக்ச எம்.பி. இன்று (23) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அழுத்தங்கள் காரணமாக தமது உரைகள் இரத்து செய்யப்பட்டமை தொடர்பில் அதில் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

“ அச்சுறுத்தல்கள் மூலம் மௌனமாக்குவதை விட, தர்க்கரீதியான விவாதங்கள் மூலமே மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டும்.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது கொள்கைகளைத் தீவிரமாக எதிர்ப்பவர்களுடன் கூட நேரடி விவாதத்தில் ஈடுபடத் தான் தயாராக இருப்பதாகவும், உரையாடல்களை மறுப்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தாது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்ட சில குழுக்களின் அழுத்தங்களால் பல்கலைக்கழக ஒன்றியங்கள் எடுத்த முடிவு வருத்தமளிக்கின்றது.

எனினும், இக்கட்டான சூழ்நிலையிலும் தனக்கு அழைப்பு விடுத்தமைக்காக ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

பிரிவினைகளை விட ஆரோக்கியமான விவாதங்களே நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என மேற்படி அறிக்கை ஊடாக நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மன்னன் கொலை: மெக்சிகோவில் வன்முறை வெடிப்பு!

 

மெக்சிகோவில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பாதுகாப்பு தரப்பு பாதுகாப்பு நடைமுறைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ மாகாணத்தின் டபல்பா நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை தடுக்கும் வகையில் நேற்று ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் நெமேசியோ ஒசேகுரா கொல்லப்பட்டார்.

இதையடுத்து அங்கு அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர்.

‘எல் மென்சோ’ என அறியப்படும் நெமேசியோ ஒசேகுரா, அந்நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் சி.ஜே.என்.ஜி என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்தார்.

59 வயதான அவர், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார். அவரை கைது செய்ய தகவல் கொடுப்பவர்களுக்கு 15 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என இரண்டு நாடுகளும் அறிவித்தன.

ஏனெனில், தனது கூட்டத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தலைவர் பொறுப்புக்கு வந்த நெமேசியோ ஒசேகுரா, தனது குழுவின் செயல்பாடு மூலம் எதிரிகள் மற்றும் பாதுகாப்பு படையை கடுமையாக தாக்கி வந்தார்.

அவர் சார்ந்துள்ள கும்பலை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது. மெக்சிகோவில் இருந்து கொக்கைன், ஹெராயின், ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருளை அமெரிக்காவுக்கு இவரது கும்பல் கடத்துகிறது.

முன்னதாக, மெக்சிகோ அரசு போதைப்பொருள் கடத்தலை தடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார்.

மேலும், மெக்சிகோவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அவர் அச்சுறுத்தினார்.
போதைப்பொருள் கும்பலின் செயல்பாட்டை தடுக்கும் செயலில் மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா தலைமையிலான அரசு மேற்கொள்ளவில்லை என அவர் கூறி வந்தார்.

இந்த சூழலில் ராணுவ நடவடிக்கையில் நெமேசியோ ஒசேகுரா கொல்லப்பட்டதாக மெக்சிகோ அறிவித்தது.

ராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டபல்பாவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நடமாட்டம் உள்ள பகுதியில் சோதனை நடந்தது.

அப்போது இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த நெமேசியோ ஒசேகுரா உயிரிழந்தார். உயிருக்கு போராடிய அவரை வான்வழியாக மெக்சிகோ சிட்டிக்கு கொண்டு செல்ல முயன்ற போது அவர் மரணமடைந்ததாக பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

நெமேசியோ ஒசேகுரா கொல்லப்பட்ட செய்தியை அறிந்து அவரது ஆதரவாளர்கள் மெச்சிகோவில் வன்முறையில் இறங்கினர்.

பல்வேறு மாகாணங்களில் கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. நெமேசியோ ஒசேகுரா கொல்லப்பட்டதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு வங்கித் துறை தோள் கொடுக்க வேண்டும்

0
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...

இலங்கை வருகிறார் இந்திய துணை ஜனாதிபதி!

0
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய துணை ஜனாதிபதி சி....

புதன்கிழமை விடுமுறை இரத்து!

0
  "எரிபொருள் நெருக்கடி மற்றும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு அரச ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசேட புதன்கிழமை விடுமுறை, எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் இரத்துச் செய்யப்படுகின்றது" என்று அத்தியாவசிய...