Home Blog Page 843

இரத்தினபுரியில் விபத்து – ஐவர் படுகாயம்!

இரத்தினபுரி, நவநகர பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிவேகமாக வந்த காரொன்று, மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குருவிட்ட பிரதேசத்தில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த கார் வேக கட்டுப்பாட்டை இழந்து முன்னால் வந்த, மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
வுpபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.எப்.எம். அலி

கயிறு கழுத்தில் இறுகி 12 வயது சிறுவன் பலி – நுவரெலியாவில் சோகம்!

வீட்டுக்கு அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் உள்ள சவுக்கு மரத்தில் கயிறு கட்டி விளையாடிக்கொண்டிருந்த 12 வயது பாடசாலை மாணவன் ஒருவர், கயிறு கழுத்தில் இறுகியதில் பலியாகியுள்ளார்.

நுவரெலியா, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகஸ்தோட்ட பகுதியிலேயே இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா, மாகாஸ்தோட்ட பகுதியில் தனிவீட்டில் தாய் , இரு மகள்மார் மற்றும் மகன் என நால்வர் வசித்து வருகின்றனர்.

தனது கணவன் இறந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், தாய் பிள்ளைகளைப் படிக்கவைத்து வாழ்ந்து வரும் நிலையில், மூத்த மகள் பல்கலைக்கழக படிப்புக்குச் சென்ற பின் வீட்டில் சிறிய மகள் தாய் மற்றும் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் என மூவர் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் வழமைபோல சிறுவன் சவுக்கு மரம் ஒன்றில் கயிறு கட்டி விளையாடி கொண்டிருந்துள்ளார்.

தாய் தனக்குத் தலைவலியென வீட்டில் படுத்து இருந்த நிலையில் பகல் ஒரு மணியளவில் மரத்தில் விளையாடிய சிறுவன் கழுத்தில் கயறு இறுகி துடிக்கிறான் காப்பாற்றுங்கள் எனச் சம்பவத்தை அவதானித்த அருகிலிருந்த வீட்டார் கூச்சலிட்டுள்ளனர்.

இதையடுத்து மரத்துக்கு அருகில் ஓடியவர்கள் சிறுவனை மீட்டபோதிலும் சிறுவன் மயக்கத்தில் இருப்பதாக உணர்ந்து 1990 அவசர அம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பின் அவசர அம்புயூலன்ஸ் வண்டி சம்பவ இடத்திற்கு வருகை தந்த வைத்தியர்கள் சிறுவனைப் பரிசோதித்த போது சிறுவன் உயிர் இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் சம்பவ இடத்திற்கு நுவரெலியா பொலிஸார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மேலும் சடலம் நுவரெலியா மாவட்ட நீதவானின் மரண விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக விசாரணைகளை முன்னெடுக்கும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

சுற்றுலாவந்த ஆஸ்திரேலிய பெண்ணிடம் அத்துமீறி நடந்தவர் கைது!

இலங்கைக்கு சுற்றுலாவந்திருந்த ஆஸ்திரேலிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முற்பட்டார் எனக் கூறப்படும் சந்தேகநபர், கம்பளை, வெலம்பொட பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் நாளை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து தமது குடும்பத்தார் சகிதம் வருகை தந்திருந்த பெண்ணொருவர் கம்பளை, வெலம்பொட, வலகெதர பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் கடந்த 6 ஆம் திகதி தங்கியுள்ளனர்.

இதன்போது தமக்கு மசாஜ் செய்வதற்கு அத்துறை சார்ந்த ஒருவரை பெற்றுக்கொடுக்குமாறு விடுதி உரிமையாளரிடம் கூறியுள்ளார். இதன்பிரகாரம் ஒன்லைன்மூலம் வாதுவ பகுதியில் இருந்து நபர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார்.

இவரே மசாஜ் செய்யும்போது தவறான தொடுகைகளை செய்துள்ளார், இதனையடுத்து பெண் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

நுவரெலியாவுக்கு சென்ற அப்பெண் சம்பவம் தொடர்பில் இங்குள்ள பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து நுவரெலியா பொலிஸார், வெலம்பொட பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். வெலம்பொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

அத்துமீறி நடத்தார் எனக் கூறப்படும் நபரின் தொலைபேசி இலக்கத்தை அடிப்படையாக வைத்து அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அதன்பின்னர் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து , இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை நிருபர்

ஹெல்மெட்க்குள் ஐஸ் போதைப்பொருள் – வியாபாரி கைது!

ஹெல்மெட்க்குள் ஐஸ் போதைப் பொருளை மறைத்து வைத்து, ஆலயப் பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரொருவர், குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை மன்னாரில் இடம்பெற்றுள்ளது. மன்னார் சாவற்காடு புனித அந்தோனியார் ஆலயப் பகுதியில் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்த நபரை பொலிஸார் சோதனை செய்தபோது ஹெல்மெட்க்குள் ஐஸ் போதைப் பொருள் இருக்கக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிட மாகவும் வவுனியாவை வளர்ப்பிடமாகவும் கொண்ட 31 வயதுடைய நபர் ஒருவரே 20 கிராம் 850 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் இச் சந்தேக நபர் விடத்தல்தீவிலிருந்து மன்னாருக்கு இதனை வியாபாரத்துக்குக் கொண்டு வந்தார் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

குளியலறையில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு!

பலாங்கொடை , பெட்டிகள பிரதேசத்தில் வீடொன்றின் குளியலறையில் இருந்து பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வீட்டார் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பலாங்கொடை காவற்துறையினரால் குறித்த மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி பலாங்கொடை பிரதேசத்தில் பிரபல தமிழ் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.பிரேத பரிசோதனைக்காக சடலம் பலாங்கொடை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.எப்.எம். அலி

யாழில் விபத்து –ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, மந்திகை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொடிகாமம் – புலோலி வீதியில் நெல் உலரவைத்துக்கொண்டிருந்த நபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் நெல் உலரவைத்த நபர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் காயமடைந்துள்ளார்.

சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இந்திய பயணத்தின் பின்னராவது ஜே.வி.பிக்கு ஞானம் பிறக்கட்டும் – மொட்டு கட்சி எம்.பி.

“ இந்திய விஜயத்தின் பின்னராவது ஜே.வி.பியினருக்கு ஞானம் பிறக்க வேண்டும், இவ்வாறு ஓரிரு நாடுகளுக்கு சென்றாவது அவர்கள் புனர்வாழ்வடையட்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இந்தியாதான் எமது பிரதான எதிரியென இந்திய எதிர்ப்பு கொள்கையை ஜே.வி.பி. கடைபிடித்து வந்தது. இலங்கை – இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராக இந்நாட்டில் பாரிய அழிவுகளை அக்கட்சி ஏற்படுத்தியது. இந்திய அமைதி படையை வானர படையென விமர்சித்தது. இந்திய முதலீடுகள்வரும்போது அதற்கும் போர்க்கொடி தூக்கியது.

இந்தியாவின் அமுல் நிறுவனம் இலங்கைக்கு வந்து, காணிகளை குறைந்த விலைக்கு வாங்கி பால் உற்பத்தி செய்யப்போகின்றது என ஜே.வி.பியின் விவசாய அமைப்பின் தலைவர் இங்கு குறிப்பிடுகின்றார். ஆனால் அக்கட்சியின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களுக்கு செல்கின்றனர். இதன்மூலம் அக்கட்சியின் டபள்கேம் அம்பலமாகியுள்ளது. சீடர்கள் இங்கு கோஷம் எழும்புகின்றனர், குருநாதர் அங்கு விஜயம் செய்கின்றார்.

இந்திய விஜயத்தின் பின்னராவது அவர்கள் திருந்தட்டும், இப்படி வெளிநாடுகளுக்கு சென்றாவது புனர்வாழ்வு பெறட்டும். ஏனெனில் இங்கு அடிப்பதும், எரிப்பதும்தான் அவர்கள் இங்கு செய்துள்ளனர்…” – என்றார்.

குழந்தைகளுக்கான சத்திரசிகிச்சைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியுதவி

ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் சிறு குழந்தைகளின் கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பெரியாஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும் செவிப்புலன் மாற்று சத்திரசிகிச்சை என்பவற்றுக்காக ஜனாதிபதி நிதியில் இருந்து நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நாட்டின் எதிர்கால நலனுக்காகவும் வறிய பெற்றோர்களின் நலனுக்காகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வட கொழும்பு பொது வைத்தியசாலையில் (ராகம போதனா வைத்தியசாலை) மேற்கொள்ளப்படும் சிறு குழந்தைகளின் (16 வயதிற்குட்பட்ட) கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்கான அதிக செலவைக் கருத்தில் கொண்டு, சாதாரண மற்றும் ஏனைய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படும்பட்சத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக 01-01-2024 முதல் ஜனாதிபதி நிதியில் இருந்து ஒரு மில்லியன் ரூபாய் (ரூ. 1,000,000/-) வழங்கப்படும்.

அத்துடன், இலங்கையில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் செவிப்புலன் மாற்று சத்திரசிகிச்சை தேவைப்படும் நிலையில் பிறப்பதாக மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளில், இந்த அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளை பிறக்கும்போதே கண்டறிந்து, பிறக்கும்போதே தேவையான அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இலங்கையில் கூட, இவ்வாறான குறைபாடுகள் குழந்தைகள் பிறக்கும்போதே கண்டறியப்படுகிற போதும் அவர்கள் அனைவருக்கும் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவதில்லை. இவ்வாறான குழந்தைகள் பிறந்து 2 வருடங்களுக்குள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்காக இந்த சத்திரசிகிச்சையை மேற்கொள்ள வேண்டுமென வைத்தியர் தெரிவிக்கின்றார்.

இந்த சத்திரசிகிச்சைக்கு ஐம்பது இலட்சம் ரூபா அல்லது அதனை விட அதிக தொகை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த அறுவை சிகிச்சை ஒரு சில அரசாங்க மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுவதால், நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் இதற்காக காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டியுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பெரியாஸ்பத்திரியில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதோடு இதற்காக பயன்படுத்தப்படும் கருவியின் (Implant) பெறுமதி சுமார் 3-4 மில்லியன் ரூபாவாகும். சுகாதார அமைச்சினால் இந்த கருவி ஸ்ரீ ஜயவர்தனபுர பெரியாஸ்பத்திரியில் இலவசமாக வழங்கப்பட்ட போதிலும், சத்திரசிகிச்சைக்கான செலவு 6 இலட்சம் ரூபா செலுத்த வேண்டும். இதற்கு தீர்வாக சுகாதார அமைச்சிடம் இருந்து இந்த கருவியைப் (Implant) பெற்று, சத்திரசிகிச்சைக்கான செலவான ஆறு லட்சம் ரூபாய் ஜனாதிபதி நிதியில் இருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, ஸ்ரீ ஜயவர்தனபுர பெரியாஸ்பத்திரியில் மேற்கொள்ளப்படும் இந்த சத்திரசிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.

இவ்வாறான குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் இருப்பது சமூகத்திற்கும் சுகாதார அமைப்பிற்கும் தீங்காகவே இருக்கும். இந்த சத்திரசிகிச்சைக்காக பெருமளவு பணம் செலவழிக்க வேண்டியுள்ள போதிலும் சிறு குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும் இவ்வாறான சத்திரசிகிச்சைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி உதவி வழங்குவது நாட்டுக்கான எதிர்கால முதலீடாகும். எனவே,ஜயவர்தனபுர பெரியாஸ்பத்திரியில் குழந்தைதகளுக்கு மேற்கொள்ளப்படும் செவிப்புலன் மாற்று சத்திரசிகிச்சைக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து 01-01-2024 முதல் அதிகபட்சமாக ஆறு இலட்சம் ரூபா வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலிய பெண் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு – நடந்தது என்ன?

மசாஜ் சேவையை பெற்றுக்கொள்வதற்கு சென்ற ஆஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த நபரொருவர் முயற்சித்தார் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டார் எனக் கூறப்படும் பெண்ணாலேயே குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. கண்டி, கம்பளை – வெலம்பொட பகுதியிலேயே கடந்த வெள்ளிக்கிழமை (09) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியில் இருந்து இருந்து நுவரெலியாவுக்கு வருகை தந்து , நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் மேற்படி முறைப்பாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள 39 வயதான ஆஸ்திரேலிய பெண்,

“ எனது கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுலா நிமிர்த்தம் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் திகதி இலங்கை வந்தேன். அதிகமான சுற்றுலா இடங்களை பார்வையிட்டு கடந்த 9 ஆம் திகதி வெலம்பொட பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் நாம் தங்கி இருந்தோம். அன்று மாலை குறித்த ஹோட்டலில் உடலுக்கு மசாஜ் செய்துக்கொள்ள மசாஜ் நிலையம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றிருந்தேன்.

தலை, தோள்பட்டை ஆகிய பகுதிகளை மசாஜ் செய்யவே சென்றிருந்தேன். எனினும், எனது உடலை மசாஜ் செய்யும் போர்வையில் மசாஜ் செய்த ஊழியர் அந்தரங்க பகுதிகளை, தவறான நோக்கில் தொட்டதன் காரணமாக நான் உடனடியாக அங்கிருந்து வெளியேறினேன். அதன் பின்னரே உடனடியாக அங்கிருந்து நுவரெலியாவிற்கு வருகை தந்தோம்.” – என்று முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் நுவரெலியா பொலிஸாரால், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் பகுதிக்கு தெரிவித்து, சுற்றுலா பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2ஆம் இணைப்பு –

அத்துமீறி நடக்க முற்பட்டார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட நபர் இன்று மதியம், கம்பளை, வெலம்பொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தப்பளையில் பஸ் மோதி குடும்பஸ்தர் பலி!

கந்தப்பளை, ஹைபொரஸ்ட் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

வீரையா காந்தி என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

நேற்றிரவு 10.30 மணியலவில் நுவரெலியா- ஹைபொரஸ்ட் பிரதான வீதியின் ஹைபொரஸ்ட் இலக்கம் இரண்டு – குருந்து ஒயா தோட்ட தொழிற்சாலைக்கு அருக்கிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவிலிருந்து, ஹைபொரஸ்ட் பகுதியை நோக்கி பயணித்த தனியார் பஸ், வீதியில் பயணித்தவர்மீது மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சினிமா

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

செய்தி

இந்திய தூதுவருடன் பிரதியமைச்சர் பிரதீப் சந்திப்பு

0
இந்திய தூதுவருடன் பிரதியமைச்சர் பிரதீப் சந்திப்பு மலையகத்துக்கான இந்திய உதவிகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் பெருந்தோட்டம் , சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கிடையிலான விசேட...

பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து தேசபந்து நீக்கம்: தீர்மானம் நிறைவேற்றம்!

0
2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பிரகாரம் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோன் அவர்களைப் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம்...

நல்லிணக்கம் குறித்த தேசிய கொள்கை திட்டத்தை தயாரிக்க அமைச்சரவை அனுமதி!

0
நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு, '2024 ஆம் ஆண்டின் முதலாம்...