Home Blog Page 846

” கூச்சல் போடுவதால் மாத்திரம் திருடர்களைப் பிடிக்க முடியாது “

“ கூச்சல் போடுவதால் மாத்திரம் திருடர்களைப் பிடிக்க முடியாது. திருடர்களைப் பிடிப்பதற்கு, வலுவான சட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் மற்றும் அறிவியல் முறைகள் தேவை.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று அரசின் கொள்கை விளக்க உரையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ இந்த நாட்டில் ஊழல் ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது என்பதை பலரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், முறைமையான சட்ட விதிகளால் மாத்திரமே ஊழலை ஒழிக்க முடியும் என்பதை பலர் உணரவில்லை. திருடர்கயைப் பிடியுங்கள் என்று கூச்சல் போடுவதால் மாத்திரம் திருடர்களைப் பிடிக்க முடியாது.

திருடர்களைப் பிடிப்பதற்கு, வலுவான சட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் மற்றும் அறிவியல் முறைகள் தேவை. அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய பயிற்சி பெற்ற அதிகாரிகளும் தேவை.

ஊழல்வாதிகளை நீதியின் முன் நிறுத்தினால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று பலர் நினைக்கிறார்கள். இது ஒரு மாயை. ஊழலைத் தடுக்கவும் கடுமையான சட்ட விதிமுறைகளை உருவாக்க வேண்டும். மேலும் ஊழல்வாதிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஊழலை ஒழிக்க இந்த இரண்டு விடயங்களும் ஒன்றாக செயல்படுத்தப்பட வேண்டும்.

அதற்காக, ஊழல் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றினோம். தற்போது சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அத்தகைய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் ஒருபோதும் அரசியல் அல்லது பிற அழுத்தங்களைப் பிரயோகிக்க மாட்டோம். அது தற்போது நாட்டின் முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் – மனைவி சிஐடியில் முறைப்பாடு!

தனது கணவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும், அது தொடர்பில் முழுமையான விசாரணைiயை நடத்துமாறு கோரியும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பிரியங்கா பெரேரா.

விபத்து இடம்பெற்ற விதம் பற்றி சந்தேகம் ஏற்படுகின்றது, சாரதியின் நடத்தை குறித்தும் சந்தேகம் நிலவுகின்றது எனவும் அவர் சிஐடியினரிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் சனத் நிஷாந்தவும், அவரின் மெய் பாதுகாவலரும் பலியாகினர். சாரதி உயிர் தப்பினார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டிய ‘கதிரை’ 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களத்தில்…!

1970 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரி கட்சிகளையும் இணைத்துக்கொண்டு களமிறங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றியை பதிவு செய்து, அரியணையேறியது. அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தையும் இழந்தது.

எனினும், 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அந்த வெற்றியின் பின்னரே இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையுடன் புதிய அரசமைப்பு இயற்றப்பட்டது.

அதன்பின்னர் 1982 இல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது ஜனாதிபதித் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றி நடைபோட்டது.

சு.க. ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் ஐதேகவின் அரசியல் பலம் உள்ளிட்ட காரணிகளால் சுதந்திரக் கட்சியால் மீண்டெழ முடியுமா என அரசியல் ரீதியில் அச்சம் ஏற்பட்டது. 1988 இல் நடைபெற்ற 2 ஆவது ஜனாதிபதி தேர்தலிலும் கை சின்னத்தில் களமிறங்கிய சுதந்திரக்கட்சி பின்னடைவை சந்தித்தது.

1977 இற்கு பின்னர் 1989 இலேயே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. (சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி நாடாளுமன்ற ஆட்சிகாலத்தை மேலும் ஒரு தவணைக்கு நீடித்துக்கொள்வதற்கு ஜே.ஆர். ஜயவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்.)

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே 1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் கூட்டணியாக கதிரை சின்னத்தில் களமிறங்கியது. ( அதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் கை சின்னத்திலேயே அக்கட்சி தனித்து – கூட்டணியாக களமிறங்கியது)

இத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது, ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்டு, சுதந்திரக்கட்சி மீண்டும் தலைதூக்கியது.

மக்கள் கூட்டணியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கிய அதன் தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 4 இலட்சத்து 64 ஆயிரத்து 58 விருப்பு வாக்குகளைப்பெற்று வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.

இலங்கையில் விகிதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகளாக இது அமைந்திருந்தது. (2015 இல் இச்சாதனையை கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க முறியடித்தார்.)

அதே ஆண்டு அதாவது 1994 நவம்பர் 9 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் கதிரை சின்னத்திலேயே சுதந்திரக்கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. வெற்றியும் பெற்றது. இலங்கையில் முதலாவது நிறைவேற்று அதிகார பெண் ஜனாதிபதியை உருவாக்கிய தேர்தல் அது.

அதன்பின்னர் 2000, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் கதிரை சின்னமே சுதந்திரக்கட்சிக்காக களத்துக்கு வந்தது.

அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கதிரை சின்னம் களத்துக்கு வரவில்லை. மக்கள் கூட்டணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக உதயமானது. வெற்றிலை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2004 இற்கு பின்னர் அனைத்து தேர்தல்களிலும் சுதந்திரக்கட்சி வெற்றிலை சின்னத்திலேயே கூட்டணி அமைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக களமிறங்கியது.

2019 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியது. இதனால் அக்கட்சியின் வெற்றிலை சின்னமும் மாயமானது. மொட்டு சின்னம் ஆதிக்கம் செலுத்தியது. 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதும் மொட்டு கூட்டணியில் சுதந்திரக்கட்சி களமிறங்கினாலும் சில மாவட்டங்களில் கை சின்னத்தில் போட்டியிட்டது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சுமார் 23 ஆண்டுகளுக்கு பின்னர் ‘கதிரை’ சின்னத்துக்கு புத்துயிர் கொடுத்து களமிறக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. மக்கள் கூட்டணி தற்போதும் சுதந்திரக்கட்சியின் கட்டுப்பாட்டின்கீழ்தான் உள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணியாக செயற்படுகின்றது.

முன்னணியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவும், செயலாளராக லசந்த அழகியவண்ணவும் செயற்படுகின்றனர். முன்னணியின் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. தலைமைத்துவ சபையொன்றை உருவாக்கி அச்சபையின் தலைமைப்பதவியை சந்திரிக்கா அம்மையாருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், இக்கூட்டணி தொடர்பில் சந்திரிக்கா அம்மையார் இன்னும் எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.சனத்

டெஸ்ட் கிரிக்கெட்: பந்து வீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா முதலிடம் – ஆறாவது இடத்தில் இலங்கை வீரர்

இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிறகு, உலக டெஸ்ட் தரவரிசையில் பந்து வீச்சாளர்களுக்கான பிரிவில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த ஜஸ்பிரித் பும்ரா, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முக்கியமான முதல் இன்னிங்ஸில் 4 முக்கிய விக்கெட்டையும் வீழ்த்தி இந்தியாவை 106 வெற்றிக்கு அழைத்து சென்றார்.

உலக கிரிக்கெட் தரவரிசை பட்டியலை ஐசிசி அறிவித்திருக்கும் நிலையில், டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வினை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இதன்மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதற்கு முன் பும்ராவின் அதிகப்படியான டெஸ்ட் தரவரிசையாக 3ம் இடத்தையே பிடித்திருந்தார். பும்ராவிற்கு முன்னதாக 1979ம் ஆண்டு கபில்தேவ் மட்டுமே அதிகப்படியாக டெஸ்ட் தரவரிசையில் 2வது இடம்பிடித்த இந்திய வேகப்பந்துவீச்சாளராக இருந்தார். பும்ராவிற்கு முன் சிறந்த வேகப்பந்துவீச்சாளராக இருந்த ஜகீர் கான் கூட அதிகப்படியாக 3வது இடத்தையே பிடித்திருந்தார். இந்நிலையில் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளராக மாறி சாதனை படைத்துள்ளார் ஜஸ்பிரித் பும்ரா.

அதேவேளை, இலங்கை அணி பந்து வீச்சாளரான பிரபாத் ஜயசூரிய 6 ஆவது இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தானில் நாளை தேர்தல்: இன்று இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் 26 பேர் பலி!

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 26 பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிஷின் என்ற நகரில் முதல் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

சுயேட்சை வேட்பாளர் அஸ்பந்த்யார் காகர் என்பவரின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 14 பேர் பலியாகினர் எனவும், 30 பேர் படுகாயமடைந்தனர் எனவும் பிஷின் நகர துணை காவல் ஆணையர் ஜூம்மா தாத் கான் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள கான்சாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சிறிது நேரத்துக்குள் இரண்டாவது குண்டுவெடிப்பு அதே பலுசிஸ்தான் மாகாணத்தின் கிலா சைபுல்லா நகரில் இடம்பெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு துருஐ-கு என்ற கட்சியின் தேர்தல் அலுவலகத்துக்கு வெளியே நிகழ்ந்துள்ளது. இதில், 12 பேர் பலியாகியுள்ளனர்.

இவ்விரு குண்டுவெடிப்புகளுக்கும் இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், பாகிஸ்தான் தாலிபன், பலுசிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள் ஆகியவை இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றமான தேசிய அவைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்ததை அடுத்து, இன்று நாடு முழுவதும் அமைதியாக உள்ளது. இந்நிலையில், இந்த இரட்டை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. குண்டுவெடிப்புக்கு இடைக்கால அரசின் உள்துறை அமைச்சர் கோஹர் இஜாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன் போருக்கு தயார் – போலந்து பாதுகாப்பு அமைச்சர்

உக்ரைனை தொடர்ந்து போலந்து மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், போரை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக போலந்து அறிவித்துள்ளது.

நேட்டோவில் உக்ரைன் இணைவதை எதிர்த்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தற்போது வரை போர் தொடர்ந்து வரும் சூழலில், ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள மற்றொரு நாடான போலந்து மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இது குறித்து பதிலளித்துள்ள போலந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மத்தேயூஸ் மோராவியஸ்கி ”ரஷ்யாவுடனான போர் தொடங்கினால், அதனை எதிர்கொள்ள ராணுவம் தயாராக உள்ளது. எந்த ஒரு சூழலிலும் போர் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது எந்த அளவிற்கு மோசமானதாக இருக்கும் என்று கணித்து வரப்பட்டு வருகிறது. போலந்தில் உள்ள ஆயுதங்களை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு அமைச்சராக உள்ளதால் ஒவ்வொரு சொல்லையும் கவனித்தே பேசுகிறேன்.” என்று மத்தேயூஸ் மோராவியஸ்கி ((Mateusz Morawiecki)) தெரிவித்தார்.

ஏற்கனவே, உக்ரைன் – ரஷ்யா போர் உலக அளவில் பெரும் பெருளாதார பிரச்னையை ஏற்படுத்தி வரும் சூழலில், நேட்டோ, ஐரோப்பிய யூனியனில் உள்ள போலந்து உடன் போர் ஏற்பட்டால் மூன்றாம் உலகப் போர் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

 

குஜராத் முதல்வருடன் அநுர சந்திப்பு!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று (07) , குஜராத் மாநிலத்தின் முதலமைச்சர் பூபெந்திரபாய் பட்டேல் (Bhupendrabhai Patel) உடன் காந்தி நகரின் பேரவையில் (மாநில சட்டவாக்கப் பேரவை) சந்திப்பினை மேற்கொண்டார்கள்.

மாநிலத்தில் வறுமையை ஒழித்துக்கட்டுவதற்கான அபிவிருத்தி உபாயமார்க்கங்கள் மற்றும் மாநில நிருவாகச் செயற்பாங்கு சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அதன் பின்னர் அந்த மாநிலத்தின் கைத்தொழில் அமைச்சருடனும் விசேட சந்திப்பு இடம்பெற்றதோடு, இந்திய அரசாங்கத்தின் அபிவிருத்தி மாதிரியாக பாவிக்கப்படுகின்ற “குஜராத் எடுத்துக்காட்டு” (Gujarat Model) பற்றிய சமர்ப்பணமொன்றும் இடம்பெற்றது.

வலுச்சக்தி மறுசீரமைப்பு, விவசாயமும் நீரும், உட்கட்டமைப்பு வசதிகளை விருத்திசெய்தல், கைத்தொழில் மற்றும் முதலீடு, சுகாதாரப் பாதுகாப்பும் பெண்களுக்கு வலுவளித்தலும் என்பவை இந்த குஜராத் எடுத்துக்காட்டின் பிரதானமான பிரிவுகளாகும்.

அஹமதாபாத்தின் விவசாயப் பிரதேசங்கள் மற்றும் விவசாயத்தை அடிப்படையாகக்கொண்ட கைத்தொழில்களின் அவதானிப்புச் சுற்றுப்பயணமும் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியாவை சேர்ந்த ஐவர் தமிழகத்தில் தஞ்சம்!

மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் இன்று அதிகாலை தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

வவுனியா, நெடுங்குழி பகுதியை நந்தகுமார் , அவரது மனைவி நித்யா மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகளே இவ்வாறு தமிழகம் சென்றுள்ளனர்.

மன்னாரில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா கொடுத்து , பைப்பர் படகில் நேற்று மாலை புறப்பட்டு , இன்று அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கரையொதுங்கியுள்ளனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார், இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பொருட்களின் விலைகள் அதிகரித்து, வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 5 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 293 ஆக அதிகரித்துள்ளது.

யாழ். வந்தார் பிரபல பாடகர் ஹரிஹரன்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள
இசை நிகழ்ச்சிக்காக இந்திய பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர் முதன்முதலாக இன்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இன்று முற்பகல் 11:30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர் வந்தடைந்தனர்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி ஹரிஹரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது.

அந்நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா , ஐஸ்வர்யா ராஜேஷ் , யோகி பாபு , சாண்டி மாஸ்டர் , புகழ் , பாலா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்பா மற்றும் நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஆகியோர் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

நுவரெலியாவில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலத்தை எதிர்த்தும் இலங்கை மின்சார சபையின் நுவரெலியா கிளை ஊழியர்கள் இன்று புதன் கிழமை (07) மதிய உணவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

நுவரெலியா மின்சார சபை அலுவலகத்துக்கு முன்பாகவே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய வளங்கள் விற்கப்படுவதை அரசு உடன் நிறுத்த வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.


இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிடாவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.

நானுஓயா நிருபர்

சினிமா

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

செய்தி

தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த ஆவணத்தில் தமிழரசுக் கட்சி ஒப்பமிடாது!

0
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு அனுப்ப என்ற பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ்த் தேசியப் பேரவை தயாரித்த கடிதத்தில் ஆவணத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஒப்பமிடாது. தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி...

வடக்கில் 70 இற்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படலாம்!

0
கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்...

சமஷ்டியை வலியுறுத்தி போராட்டம்

0
இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலை - வெருகல், பூநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனை...