Home Blog Page 847

முன்னாள் கடற்படை தளபதியும் சஜித்துடன் சங்கமம்…!

இலங்கை கடற்படையின் 14 ஆவது கடற்படைத் தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற அட்மிரல் தயா சந்தகிரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து அவரது அரசியல் பயணத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

கடல்சார் மற்றும் கடற்படைத் துறையில் அவருக்கு இருக்கும் பரந்த அறிவு மற்றும் அனுபவத்தினை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரை ஐக்கிய மக்கள் சக்தியின் கடல்சார் மற்றும் கடற்படைக் கொள்கைகள் குறித்த ஆலோசகராக இன்றைய(07) தினம் நியமித்தார்.

மூன்று தசாப்த கால யுத்தத்தில் அவர் ஆற்றிய தாராள பங்களிப்பு காரணமாக 2001 ஆம் ஆண்டு,ஜனவரி மாதம் 01 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டார்.53 வருட கால கடற்படை வரலாற்றில் மிகவும் அனுபவம் வாய்ந்த கடற்படை தளபதியாக இவர் வரலாற்றிலும் இடம்பிடித்துள்ளார்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரையில் பாரதியாரின் கவிதை…!

9 ஆவது நாடாளுமன்றத்தின் 5 ஆவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்து வைத்ததுடன், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தையும் முன்வைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது கொள்கை விளக்க உரையின்போது மகாகவி பாரதியாரின் கவிதையொன்றையும் கோடிட்டிகாட்டி உரையாற்றினார்.

ஜனாதிபதி இது தொடர்பில் கூறியதாவது,

“ 19 ஆம் நூற்றாண்டில் மகாகவி பாரதியார் தனது நாடு பற்றி எழுதிய கவிதையொன்று நினைவிற்கு வருகிறது. அதனை சிங்களத்தில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன

” முப்பது கோடி முகமுடையாள்
உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்
இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்”

அவ்வாறான எண்ணம் எமக்கு ஏன் வரவில்லை? பல்வேறு எண்ணங்கள் இருந்தாலும் பல்வேறு இனங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், பல்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும், பல்வேறு பிரச்சினைகள், நம்பிக்கைகள் இருந்தாலும், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்தாலும், எமது நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் ஒருமித்த எண்ணத்துடன் ஒன்றுபட முடியாமல் இருப்பது ஏன்? எமது நாட்டு இளைய சமூகத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட முடியாதிருப்பது ஏன்?

மீண்டும் – மீண்டும் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். பொது நோக்கத்துடன் ஒன்றுபடுங்கள். மாற்றத்தை நம்மிலிருந்து ஆரம்பிப்போம். எமக்கு நாமே ஒளியாவோம். இந்தச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளில் பல தசாப்தங்களாக என்னை விமர்ச்சித்தவர்களே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளனர்.

நாட்டின் நன்மைக்காகவும், இளையோரின் எதிர்காலத்திற்காகவும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாளானவர்கள் பழைய பகையை மறந்துவிட்டு ஒன்றுபட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் என்னுடன் பல காலமாக அரசியலில் ஈடுபட்டவர்கள். நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்களும் உள்ளனர்.

நாட்டுக்கான பொது பயணத்தில் இணைந்துகொள்ள பொதுஜன பெரமுனவால் முடியுமாயின் ஐக்கிய மக்கள் சக்தியால் அதனை செய்ய முடியாதிருப்பது ஏன்?

மக்கள் விடுதலை முன்னணி நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எம்முடன் நெருக்கமாக செயற்பட்டது. ஊழல் ஒழிப்புச் செயற்பாடுகளின் அனுர குமார திசாநாயக்க எம்.பி முன்னோடியாகச் செயற்பட்டார். ஊழல் ஒழிப்பு பிரிவின் அலுவலகத்திற்கு ஆனந்த விஜயபாலவின் பெயரையும் அவரே பரிந்துரை செய்தார். அந்த அலுவலகத்தின் ஆவணங்கள் இன்றும் அனுரகுமார திசாநாயக்க எம்.பியிடம் உள்ளன. அவ்வாறிருக்க நாட்டின் பொது முன்னேற்றத்திற்கான பயணத்தில் இணைய முடியாதிருப்பது ஏன்?

இந்தச் சபையில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் என்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளன. எனினும், நாட்டிற்காக இந்தக் கட்சிகளுக்கு பொதுப் பயணத்தில் ஏன் இணைந்துகொள்ள முடியாது.
நாம் தேர்தலில் வெவ்வேறாக போட்டியிடுவோம். ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் இணைந்துகொள்வோம்.

அதனால் நாட்டை முன்னேற்ற பொது நிலைப்பாட்டுடன் – பொதுவான எண்ணத்துடன் ஒன்றுபட முன்வாருங்கள் என மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். மாற்றத்தை எம்மிலிருந்து ஆரம்பிப்போம். எமது மனங்களைத் திருத்திக்கொள்வோம். எமக்கு நாமே ஒளியாவோம். நாம் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவோம். தனிப்பட்ட நோக்கங்களுக்காக அன்றி நாட்டின் பொதுக் கனவை நனவாக்க ஒன்றுபடுவோம். அடுத்த சந்ததியின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம். எம்மீது சாட்டப்பட்டிருக்கும் பொறுப்புக்களை நாம் நிறைவேற்றுவோம். பல்வேறு தனிப்பட்ட நோக்கங்களுக்காக, இந்த பொறுப்புக்களைப் புறக்கணித்தால் வரலாற்றில் நாம் துரோகிகளாக அடையாளப்படுத்தப்படுவோம். அதனால் புதிய பயணத்தைத் தொடர்வோம். புதிய எதிர்காலத்தை, புதிய நாட்டை உருவாக்குவோம்.

வாருங்கள் ஒன்றுபட்டு நாம் புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்….!” – என்றார்.

 

மகன்மாரை தாக்கி கொடுமைப்படுத்திய தந்தை கைது!

கொட்டகலை, பத்தன பகுதியில் தமது இரு மகன்மாரை கடுமையாக தாக்கி – கொடுமைப்படுத்திய தந்தை லிந்துலை பொலிஸாரால் இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளமை பொலிஸார் ‘மலையக குருவி’யிடம் உறுதிப்படுத்தினர்.

லிந்துலை, நாகசேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள அவர் விசாரணைகளுக்காக தற்போது தம்புள்ள – பத்தன பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.

குறித்த இரு சிறார்களின் தாய் வெளிநாடு சென்றுள்ளார், பத்தனை பகுதியில் உள்ள தமது தாத்தா, பாட்டியின் பராமரிப்பிலேயே அவர்கள் வளர்ந்து வந்துள்ளனர். அத்துடன், மது அருந்திவிட்டுவந்து தமது மருகமன், பேரக்குழந்தைகளை கொடுமைப்படுத்திவருவதாக பாதிக்கப்பட்ட சிறார்களின் தாத்தா ‘மலையக குருவி’யிடம் தெரிவித்தார்.

தமது மகன்மாரை தாக்கி கடுமையாக தாக்கி அதனை தந்தை ஒளிப்பதிவு செய்யும் காணொளியை மலையக குருவி வெளிப்படுத்தி இருந்தது.

( மேற்படி தாக்குதல் சம்பவமானது தனிப்பட்ட குடும்ப பிரச்சினை அல்ல, அது சமூகப் பிரச்சினை, சிறார்களின் உரிமை சம்பந்தப்பட்ட விடயம். ஆகவேதான் பொறுப்புடனும், பொதுநலன் கருதியும், விழிப்புணர்வுக்காகவும் காணொளியை பதிவிட்டிருந்தோம். குறித்த நபரை கைது செய்யுமாறு காவல் துறையினரை வலியுறுத்தி இருந்தோம். பெரும்பாலான சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் இந்த வலியுறுத்தலை விடுத்திருந்தனர். விரைந்து செயற்பட்ட பொலிஸாருக்கும் நன்றி)

கஞ்சா பயிரிடலுக்கு அமைச்சரவை அனுமதியா?

கஞ்சா செய்கையை சட்டப்பூர்வமாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது கஞ்சா பயிரிடலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு,

“ இல்லை, அவ்வாறானதொரு பத்திரம் அமைச்சரவைக்கு வரவில்லை.” – என்று அமைச்சர் பதிலளித்தார்.

அதேவேளை, ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா பயிரிடலுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறை குறைந்த பாண் விற்பனை – நூற்றுக்கு மேற்பட்ட வர்த்தகர்களுக்கு வழக்கு

குறைந்த நிறையில் பாண் விற்பனை செய்த மற்றும் உற்பத்தி செய்த நூற்றுக்கும் அதிகமான வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நேற்று(06) மற்றும் நேற்று முன்தினம்(05) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக நுர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

பாண் இறாத்தலின் விலை மற்றும் நிறையை காட்சிப்படுத்துவதை கட்டாயமாக்கி நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கமைய நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, பேக்கரிகள், வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டதுடன் பாணின் நிறையை உரிய முறையில் பேணாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜனாதிபதி நாளை ஆஸ்திரேலியா பயணம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

ஆஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெறவுள்ள 7 ஆவது இந்திய பெருங்கடல் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார்.

பெப்ரவரி 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறும் குறித்த மாநாட்டில் ஜனாதிபதி சிறப்புரையாற்றவுள்ளார்.

அத்துடன், இவ்விஜயத்தின்போது ஆஸ்திரேலிய பிரதமர் அந்தனி அல்பானீஸி மற்றும் வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் ஆகியோருடனும் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – கெஹலியவும் பங்கேற்பு?

9 ஆவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 இற்கு கூடும். அதன்பின்னர் ஜனாதிபதியால் அரசின் கொள்கை பிரகடனம் முன்வைக்கப்படும்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை முடிவடைந்த பின்னர், நாடாளுமன்றம் நாளை முற்பகல் 9.30 மணிவரை ஒத்திவைக்கப்படும்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரைமீது நாளையும், நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஒத்திவைப்புவேளை பிரேரணைiயை எதிரணிகள் முன்வைக்கவுள்ளன.

இதேவேளை, இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு சபாநாயகர் அனுமதி வழங்கியுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல விடுத்த கோரிக்கையைக் கருத்திற்கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

 

பசறையில் விபத்து – தாயும், மகனும் காயம்!

பதுளை – பசறை வீதி 8 ஆம் கட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று வீதியைவிட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் மகனும் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பசறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பசறை, ரணுகல்ல பகுதியை சேர்ந்த 45 வயதுடைய தாயும், 22 வயதுடைய மகனுமே இவ்வாறு காயம் அடைந்துள்ளனர்.
பதுளை வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பும் வழியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

அவிசாவளை வெடி விபத்தில் மஸ்கெலியாவை சேர்ந்த குடும்பஸ்தரே பலி!

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதொல பிரதேசத்தில் பழைய இரும்புகளை சேகரிக்கும் நிலையத்தில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர் மஸ்கெலியா பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா, கிலென்டில்ட் தோட்டத்தை சேர்ந்த 49 வயதான கந்தசாமி ஜெகன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவருக்கு 7 வயதில் பிள்ளையொன்று இருக்கின்றார். அவர் தரம் 2 இல் கல்வி பயில்கின்றார்.

வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த அந்த நபர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மற்றுமொரு நபருடன் இணைந்து பழைய இரும்புகளை சேகரித்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்த பொலிஸார், மரணமடைந்தவரின் சடலம், அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும், குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகள் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் ஸ்தலத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

யுக்திய ஒப்பரேஷன் – 50 நாட்களில் 56,541 பேர் கைது!

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பமாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகும் நிலையில், இக்காலப்பகுதியில் 56 ஆயிரத்து 541 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 49 ஆயிரத்து 558 சந்தேகநபர்களும், குற்றப்பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 6,983 சந்தேகநபர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இந்த சுற்றிவளைப்புகளின் போது 142 கிலோ 541 கிராம் ஹெரோயின், 208 கிலோ 290 கிராம் ஐஸ், ; ஆகிய போதைப்பொருட்கள் பாதுகாப்பு தரப்பினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் 1817 பேர் தடுத்து வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 1,981 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சினிமா

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

செய்தி

செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு!

0
  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் மற்றும் இரண்டு...

பாலஸ்தீனம் குறித்த கனடாவின் நிலைப்பாட்டுக்கு ட்ரம்ப் போர்க்கொடி!

0
பாலஸ்தீனத்தை ஒரு இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ள கனடாவுடன், வர்த்தக உடன்படிக்கை செய்வது மிகவும் கடினம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடாவின் பலஸ்தீனை அங்கீகரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து...

நாட்டை காத்த படையினர் போர்க்குற்றவாளிகளா? நாமல் கொதிப்பு!

0
" புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அவ்வமைப்பிடமிருந்து நாட்டை பாதுகாத்த படையினர் போர்க்குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போதைய ஆட்சியின்கீழ் காணப்படுகின்றது." இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...