Home Blog Page 848

அயரி தமிழ் மகா வித்தியாலத்தில் 503 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட அயரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ராமசீலன் தலைமையில் இன்று நடைபெற்றது.

” Wisdom For Asiya ” நிறுவனத்தின் அனுசரணையில் சுமார் 65 லட்சம் ரூபா செலவில் 503 மாணவர்களுக்கு இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதொகாவின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

சிறப்பு விருந்தினராக ” Wisdom For Asiya ” நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆப்ரகாம் தோமஸ், SMC CHRIST CALVARY CHURCH ( புசல்லாவை ) பங்குதந்தை P.S.K. கிரிஸ்டோபர் , கசூன் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

கொத்மலை பிரதேச செயலாளர் லக்மால், கொத்மலை வலய கல்பி பணிப்பாளர், இதொகாவின் பிரதி செயலாளர் எஸ். செல்லமுத்து, இ.தொ.கா வின் கொத்மலை வட்டார அமைப்பாளர் புண்ணிய மூர்த்தி, பிரதி பொது செயலாளர் பழனி சசிக்குமார், முன்னாள் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்களான ரஜீவ் காந்தி, இளங்கோவன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் தேசிய தலைவர்களை டில்லி அழைக்கிறார் பிரதமர் மோடி?

இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

டில்லியில் இன்னும் சில வாரங்க ளில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்படு கின்றது.

நானுஓயாவில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளால் அச்சத்தில் மக்கள்!

சமீப காலமாக புகையிரத கடவைகளில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து தொடர்ந்து கேள்விப்பட்டு வருகிறோம் , அந்த வகையில் நானுஓயாவை அண்மித்த பகுதிகளில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளால் தினமும் ஆபத்தை எதிர்நோக்குவதாக பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுவதாகவும் இதில் நானுஓயா பிரதான நகருக்கு செல்லும் முக்கியமான வீதிகளாகவும் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பொது மக்கள் பயணிக்கின்ற வீதிகளாகவும் காணப்படுகின்றன.

அண்மைய நாட்களில் அந்தக் கடவையில் விபத்து சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததுடன் அண்மையில் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் புகையிரத கடவைப் பாதுகாவலர் இல்லாத காரணத்தினாலும் , புகையிரத கடவை தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகையை எதுவும் காட்சிப்படுத்த வில்லை எனவும் இதன் காரணமாக பல விபத்துக்கள் ஏற்பட்டு மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே இப்பகுதிகளில் பாரிய விபத்தோ அல்லது மக்களின் பல உயிர்களையோ பலி எடுப்பதற்கு முன் உரிய அதிகாரிகள் விரைவில் கவனம் செலுத்தி பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளுக்கு காவலர்களை நியமித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

நானுஓயா நிருபர்

கெஹலியவுக்கு வீட்டில் இருந்து உணவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு வீட்டில் இருந்து உணவு எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைத்தியர்களின் பரிந்துரைக்கமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்ததாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி டீ.திசாநாயக்க தெரிவித்தார்.
இமியூனோகுளோபியூலின் மருந்து கொடுக்கல் – வாங்கல் தொடர்பில், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கடந்த வெள்ளிக்கிழமை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ராஜினாமா!

சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் எனவும் தெரியவருகின்றது.

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக பதவி வகித்தபோது மருந்து கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கெஹலிய தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.

கெஹலிய ரம்புக்வெல்ல பதவி விலக வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புனரமைக்கப்பட்ட தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் திறந்து வைப்பு

இயல்பான திறமைகளைக் கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சம வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட “தேசிய கிரிக்கெட் அபிவிருத்திப் பாதை ” எனும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக தம்புள்ள மைதானத்தில் நிறுவப்பட்ட ‘தனித்துவ மையம்’ நேற்று (05) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, தனித்துவ மையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். இதன் கீழ் நீர் சிகிச்சைப் பிரிவு மற்றும் விளையாட்டு காயங்களை குணப்படுத்தும் புதிய மருத்துவ பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அதன் பின்னர், தம்புள்ள விளையாட்டரங்கில் நிறுவப்பட்டுள்ள புதிய சர்வதேச தரத்திலான நீச்சல் தடாகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, நீச்சல் தடாகத்தின் செயற்பாடுகளையும் அவதானித்தார்.

இந்த பிரிவுகளுக்கு மேலதிகமாக, விளையாட்டு வீரர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடிய உள்ளக கிரிக்கெட் மைதானம், புதிய ஊடக மையம் மற்றும் பிரதான கேட்போர் கூடம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

இதேவேளை, சர்வதேச தரத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தப்பட்டுள்ள ரங்கிரி தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அதிநவீன LED ஒளிவிளக்குக் கட்டமைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்து வைத்தார்.

மேலும் இங்கு பல கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,டிரான் அலஸ் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் முன்னாள் விளையாட்டு அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கிரிக்கெட் நிறுவனத் தலைவர் சம்மி சில்வா உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

” சிறைச்சாலை வைத்தியசாலையில் சிங்கப்பூர் மருந்து கேட்கும் கெஹலிய”

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைபெறுகின்றார் எனக் கூறப்படும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிங்கபூரில் இருந்து தனிப்பட்ட ரீதியில் வாங்கிய மருந்தே தனக்கு வேண்டும் என கோருகிறார் எனவும், அவரால் மக்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மருத்தை நிராகரிக்கின்றார் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் பேரவையின் தலைவரும், விசேட வைத்திய நிபுணருமான ருக் ஷான் பெல்லன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தான் இறக்குமதி செய்த மருந்து வேண்டாம் என அதனை கெஹலிய ரம்புக்வெல்ல நிராகரித்துள்ளார் எனவும், சிங்கப்பூரில் இருந்து தனிப்பட்ட ரீதியில் தனக்கு வாங்கப்பட்ட மருந்தே வேண்டும் என அவர் கோருகின்றார் என தெரியவருகின்றது.

அதேபோல சிறைச்சாலை வைத்தியசாலையில் இருக்க முடியாது, தனியார் வைத்தியசாலைக்கு மாற்றுமாறு கோருகிறார் எனவும் அறியக்கிடைத்துள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் அதிகாரிகள் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டும்.

சிறை அறைக்குள் போட்ட பின்னர் அங்கு சுகயீனம் ஏற்பட்டால் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நடைமுறையே உள்ளது. ஆனால் சிறை அறைக்குள் போடாமல் கெஹலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பிலும் நடவடிக்கை அவசியம்.” – என்றார்.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 7 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் மீட்பு!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் நேற்று (05) இரவு படகுடன் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதோடு, பெரிய பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்த புதுமடம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மரைன் பொலிஸார் பெரிய பட்டினம் கடற்கரையில் வைத்து ஒரு நாட்டுப்படகையும் அதிலிருந்து சுமார் 7 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

மார்ச் மாதம் மேலும் 1,300 வைத்தியர்கள் நியமனம்!

வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் அரச வைத்தியசாலைகளுக்கு மேலும் 1300 வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்கள் தற்போது பயிற்சி நிறைவடையும் நிலையில் உள்ளதாக சுகாதார செயலாளர், விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டும் பயிற்சி முடித்த 590 வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இதுவரை காலமும் வெற்றிடமாக இருந்த அரச வைத்தியசாலைகளுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

அதனடிப்படையில், எதிர்காலத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும் என செயலாளர் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தியை டில்லி அழைத்ததன் பின்னணி என்ன?

அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை, இந்தியா பேச்சுக்கு அழைத்துள்ளமையானது தேசிய அரசியல் களத்தின் மட்டுமல்ல இராஜதந்திர வட்டாரங்களின் பார்வையையும் அக்கட்சி பக்கம் திரும்பிபார்க்க வைத்துள்ளது.
அத்துடன் இலங்கை தொடர்பான டில்லியின் வெளிவிவகாரக் கொள்கையில் இது குறிப்பிடத்தக்க மாற்றமாகவும் கருதப்படுகின்றது.

இந்திய அரசின் அழைப்பின் பிரகாரம் டில்லி சென்ற தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க தலைமையிலான குழுவினர், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை சந்தித்து நேற்று (6) சந்தித்து பேச்சு நடத்தினர்.

இது குறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கலாநிதி ஜெய்சங்கர், அநுர குமார திஸநாயக்கவை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கின்றது எனக் கூறியுள்ளார்.
“நமது இருதரப்பு உறவு மற்றும் அதன் மேலும் ஆழமான பரஸ்பர நன்மைகள் பற்றிய ஒரு நல்லதொரு உரையாடல் இடம்பெற்றது. இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதைகள் குறித்தும் பேசினோம்”- என்று அவர் பதிவிட்டுள்ளார்.

எனினும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக கொண்டு வரப்பட்ட இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டமைக்கு அமைய, தமிழர்களுடன் அதிகாரப் பகிர்வு பற்றி தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுடன் இந்திய தரப்பு விவாதித்ததா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே ஜே.வி.பி. இருக்கின்றது. எனினும், அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை கிடைக்கப்பெறும் வகையில் புதிய அரசமைப்பொன்று அவசியம் என்ற நிலைப்பாட்டிலும் அக்கட்சி உள்ளது.

ஐந்து நாட்கள் பயணமாக இந்தியா சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள அரசியல் மற்றும் வர்த்தகத்துறையின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்திவருகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் தலைநகர் அம்தாவாதிற்கும், இடதுசாரிகள் ஆட்சி செய்யும் தென்னிந்திய மாநிலமான கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்திற்கும் பயணிக்கவுள்ளனர்.
தமது கட்சியை இந்தியா அழைத்துள்ளமையானது நல்லதொரு இராஜதந்திர நகர்வு என தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரச்சாரக் குழுவின் உறுப்பினர் சாந்த ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

“ இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத வகையிலான இந்த நடவடிக்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தேசிய மக்கள் சக்தியின் வளர்ந்து வரும் சர்வதேச செல்வாக்கு மற்றும் கேந்திர ரீதியான பார்வையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, குறிப்பாக இரண்டு பொருளாதார சக்தி நாடுகளான சீனா மற்றும் இந்தியா இடையேயான உறவுகளுக்கும் இடையே எப்படி சமப்படுத்திச் செல்கிறோம் என்பதையும் இது காட்டுகிறது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியை இந்தியா அழைத்துள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இந்த விஜயம் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மாத்திரமல்லாமல், இலங்கையின் அரசியல் நிலப்பரப்பிற்கு தெளிவான சமிக்ஞையையும் அனுப்புகிறது, இது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தேசிய மக்கள் சக்தியை ஒரு முக்கியமான சக்தியாக இந்தியா அங்கீகரிக்கிறது”. – என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறகலயவின் பின்னர் தேசிய மக்கள் சக்திக்கான ஆதரவு பெருகி வருகின்றது, அக்கட்சிக்கு 3 சதவீத வாக்குகளே உள்ளன என சிலர் விமர்சித்தாலும் அதில் கணிகசமானளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அநுர குமார திஸநாயக்கவுடன் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் ஜயசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் பொருளாதார நிபுணர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோரும் சென்றுள்ளனர்.

சினிமா

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்

0
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83. தமிழில் 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் கோட்டா சீனிவாச ராவ். தொடர்ந்து...

செய்தி

பாலஸ்தீனம் குறித்த கனடாவின் நிலைப்பாட்டுக்கு ட்ரம்ப் போர்க்கொடி!

0
பாலஸ்தீனத்தை ஒரு இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ள கனடாவுடன், வர்த்தக உடன்படிக்கை செய்வது மிகவும் கடினம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கனடாவின் பலஸ்தீனை அங்கீகரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து...

நாட்டை காத்த படையினர் போர்க்குற்றவாளிகளா? நாமல் கொதிப்பு!

0
" புலிகள் அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் முதலீட்டாளர்களாகவும், அவ்வமைப்பிடமிருந்து நாட்டை பாதுகாத்த படையினர் போர்க்குற்றவாளிகளாகவும் பார்க்கப்படும் நிலையே தற்போதைய ஆட்சியின்கீழ் காணப்படுகின்றது." இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச...

மரக்கறி விலைப்பட்டியல் (02.08.2025)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...