Home Blog Page 86

பவள விழா பாப்பாவுக்கு என்ன தெரியும்? தி.மு.கவை விளாசித்தள்ளிய விஜய்!

“அரசியலில் தங்களை யார் எதிர்த்து நின்றாலும் கொந்தளிப்பதே திமுகவின் வேலை” என்று தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.

தவெக ஆரம்பித்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்று, மூன்றாம் ஆண்டு இன்று தொடங்கும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை நிலையத்தில் 3-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.

முன்னதாக கட்சி வளாகத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்த விஜய், தவெக கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து விஜய் தவெகவினர் மத்தியில் பேசியதாவது:

” காமராஜர், எம்ஜிஆர், அண்ணா இருந்த இடத்தில் இப்போது இவர்களும் இருக்கிறார்களே என்று தமிழக மக்கள் திமுகவைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழகத்தில் புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் திமுக அவர்களைப் பார்த்து உங்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது? என்று கேள்வி கேட்கும்.

எம்ஜிஆருக்கு அரசியல் அரிச்சுவடி தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். காமராஜருக்கு இலக்கியம் தெரியுமா? என்று கொந்தளித்தனர். இன்று நம்மைப் பார்த்துக் கொந்தளிக்கின்றனர். அரசியலில் யார் அவர்களை எதிர்த்து நின்றாலும் கொந்தளிப்பதே திமுகவின் வேலை.

இத்தனையையும் மீறி தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக தவெக இன்று வளர்ந்திருக்கிறது. அதனால், டெக்னாலஜி வளர்ந்திருக்கும் சூழலில் விமர்சனங்களில் உங்கள் (திமுக) டெக்னிக்கையாவது மாற்றுங்கள்.

அதைவிடுத்து 50 வருடங்களுக்கு முந்தைய தகர டப்பாவை எடுத்து உருட்டுகிறார்கள். ‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும்.

ஆனால், அதற்காக எல்லாம் அவர்கள் செய்யும் தவறுகளை, ஊழல்களை சொல்லிக் காட்டாமல் இருக்க முடியாது. மக்களுடைய ஒரே பிரதிநிதி தவெக மட்டும்தான். திமுகவை தொடர்ந்து நாம் விமர்சனம் செய்வோம்.

இந்த டிஜிட்டல் உலகில் திருவள்ளுவர் இருந்திருந்தால், இந்த தீய சக்தியை பற்றி, ”அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு” என்று திருக்குறள் எழுதியிருப்பார்.

தமிழக தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டி, நான்குமுனை போட்டி என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்கிறேன். இங்கே மாபெரும் மக்கள் சக்தி கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக தலைமையில் மற்றும் பலர் கூட்டணி தான் இருக்கிறது. இதில், திமுகவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான தவெகவால் மட்டும் தான் முடியும்.

அப்புறம், “ஏய் விஜய், வீட்டைவிட்டு வெளியில் வா…” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் பாஸ். தேர்தல் தேதியில் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் ஒவ்வொரு விஜய்யும் வாக்காளர் அடையாள அட்டையுடன் காலையிலேயே பூத் பூத்தாக வந்து நிற்பார்கள். அன்றைக்கு ‘ஏன் விஜய்யை கூப்பிட்டோம்’ என்று நீங்கள் நினைப்பீர்கள்.

நான் என்ன பேசினாலும் ‘இது என்ன சினிமாவா?’ என்று ஆரம்பித்துவிடுகிறார்கள். நானே சினிமாவை விட்டுவிட்டேன். ஆனால் அவர்கள் அதை விடுவதாக இல்லை.

தேர்தலை ஒட்டி சில கருத்துக் கணிப்புகள் வருகின்றன. அவற்றில் சில சரியாகவும் இருக்கின்றன. கூடவே சில ‘கடுப்புக் கணிப்புகள்’ வருகின்றன. அந்த கடுப்புக் கணிப்பாளர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஒவ்வொரு வீட்டிலும் தவெக இருக்கிறது. இதை நம்பவில்லை என்றால் நீங்கள் எடுத்த கடுப்புக் கணிப்பை ரப்பர் வைத்து அழித்துவிட்டு மீண்டும் எடுத்துப் பாருங்கள். அப்போதும் தவெக பற்றி அதே ரிசல்ட் தான் வரும். தவெக எல்லோரது வீட்டிலும் இருக்கிறது. இவ்வாறு விஜய் பேசினார்.

94 ஆவது வயதில் படம் இயக்குகிறார் சிங்​கீதம் சீனிவாச ராவ்

பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்கிறார்.

தமிழில் ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை எக்ஸ்​பிரஸ் உள்பட சில படங்​களை இயக்​கி​யுள்​ளார். இவருக்கு நடிகர் கமல்​ஹாசன், ‘அபூர்வ சிங்​கீதம்’ என்​கிற பெயரில் ஒரு கொண்​டாட்ட நிகழ்ச்​சியை சில வருடங்களுக்கு முன் நடத்​தி​னார். இந்​நிலை​யில், சிங்​கீதம் சீனிவாச ராவ் தனது 61ஆவது திரைப்​படத்தை இயக்க இருக்கிறார்.

அதை தயாரிக்க இருப்​ப​தாக பிரபல தெலுங்கு திரைப்பட நிறு​வன​மான வைஜெயந்தி மூவிஸ் அறி​வித்​துள்​ளது. இதன் தொடக்கவிழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இது, இளம் தலை​முறை​யின் காதலைப் பேசும் படமாக இருக்​கும் என்று கூறப்​படு​கிறது. சிங்​கீதம் சீனி​வாச ராவ் 94 ஆவது வயதில் திரைப்​படத்தை இயக்க இருக்​கிறார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்!

இலங்கை நாடாளுமன்றம்  நாளை (03) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளது.

தற்போதைய அரசியல் மற்றும் சமூகச் சூழ்நிலையில், இந்த அமர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதேபோல், அபிவிருத்தி அதிகாரிகளும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இவை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கடும் வாத–பிரதிவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுவதால், அன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு நடைபெறாது. அதனைத் தொடர்ந்து பெப்ரவரி 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளன.

அதேவேளை, அரசியலமைப்பு பேரவையும் நாளை கூடவுள்ளது. புதிய கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் இதன்போது இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

இலங்கைக்கான பாதீட்டு உதவியை அதிகரித்தது இந்தியா

2026-27 பாதீட்டில், இலங்கைக்கான பாதீட்டு உதவியை இந்தியா 4 பில்லியன் இந்திய ரூபாவாக ( 43.6 மில்லியன் டொலர்) அதிகரித்துள்ளது.

இது 2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 3 பில்லியன் இந்திய ரூபாவாக ( 32.7 மில்லியன் டொலர்) இருந்தது.

2024-25 ஆம் ஆண்டில் இலங்கைக்கான இந்திய உதவி 3.17 பில்லியன் இந்திய ரூபாவாக ( 34.6 மில்லியன் டொலர்) இருந்தது. பின்னர் 2025-26 ஆம் ஆண்டில் 3 பில்லியனாக திருத்தப்பட்டது.

தற்போது, 2026-27 ஆண்டுக்குக்கான நிதி ஒதுக்கீடு   அதிகரிக்கப்பட்டுள்ளது.

2026-27 ஆம் ஆண்டிற்கான வெளிநாடுகளுக்கான மொத்த இந்திய உதவி 56.86 பில்லியன் இந்திய ரூபாவாக ( 620.1 மில்லியன் டொலர்) முன்மொழியப்பட்டுள்ளது.

இது 2025-26 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் 57.84 பில்லியன் இந்திய ரூபா ( 631.0 மில்லியன் டொலர்) ஆக இருந்தது.

2026-27 ஆம் ஆண்டில் அதிக நிதியுதவியைப் பெறும் நாடாக பூட்டான் உள்ளது. அதற்கு 22.89 பில்லியன் ரூபா ( 249.7 மில்லியன் டொலர்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆறுதல் வெற்றி கிட்டுமா? நாளை 3ஆவது டி20 போட்டி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை (03) நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியையேனும் இலங்கை பெற வேண்டும் என இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது.

அதன்பின்னர் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கான 2வது டி20 போட்டி கண்டி பல்லேகலேயில் நேற்று நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.

டக்வொர்த் லெவிஸ் முறைப்படி 17 ஓவரில் 168 ஓட்டங்கள் இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

இங்கிலாந்து 16.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்து டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

மூன்றாவது டி20 போட்டி இலங்கை நேரப்படி நாளை இரவு 7 மணிக்கு பல்லேகல மைதானத்தில் நடைபெறுகின்றது.

மரக்கறி விலைப்பட்டியல் (02.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பயணிக்க டக்ளஸ் பச்சைக்கொடி!

“இணைந்து பயணிக்கத் தமிழ்க் கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்தால், அதைச் சாதகமாகப் பரிசீலிப்பதற்குத் தயாராக இருக்கின்றோம்.” – என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தமிழ் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

“1994ஆம் ஆண்டிலிருந்து கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பதவி வகித்து வந்தேன்.

கடந்த பொதுத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளேன். அதை நான் ஒரு சறுக்கலாகவே கருதுகின்றேன்; தோல்வியாக அல்ல.
வருங்காலத்தில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.” – எனவும் அவர் கூறினார்.

தனது அண்மைய கைது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், “என் கைது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், இது தொடர்பாக மேலதிகமாக எதுவும் கூற விரும்பவில்லை. எனினும், நீதி வெல்லும்; உண்மை விரைவில் வெளிவரும் என நம்புகின்றேன்.” – என்றார்.

“சக தமிழ்க் கட்சிகளுக்கும் எனக்கும் இடையில் நேச முரண்பாடே உள்ளது; பகைமை இல்லை. எனினும், சில தமிழ்க் கட்சிகள் என் மீது காழ்ப்புணர்ச்சி அரசியலுடன், பயத்தின் அடிப்படையில் செயற்படுகின்றன.” – எனவும் டக்ளஸ் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து உறுதி இல்லை எனக் குறிப்பிட்ட அவர், “எனினும், அரசு உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது நல்லது.” – என்றார்.

மேலும், “எனது கட்சியை மேலும் செழுமைப்படுத்தி, வலுப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வதே எனது பிரதான நோக்கம்.” – என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஈரான்மீது கை வைத்தால் பிராந்திய போர் வெடிக்கும்!

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பிராந்தியத்திலும் ஒரு பெரும் போராக உருவெடுக்கும்’

இவ்வாறு ஈரானின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களை அந்நாட்டு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியதைத் தொடர்ந்து, ஈரான்மீது இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை மத்திய கிழக்கில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்காகவே அமெரிக்கா இந்த நகர்வை கையாள்கின்றது எனக் கூறப்படுகின்றது.

இந்தச் சூழலில், அயத்துல்லா அலிகமேனி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றுகையில், அமெரிக்கா ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள்; போரைத் தொடங்கினால், அது இம்முறை ஒரு பிராந்தியப் போராக மாறும்.

நாங்கள் யாரையும் முதலில் தாக்கமாட்டோம். ஆனால், எங்கள் நாட்டின் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அல்லது தொந்தரவு கொடுத்தால், அவர்களுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்.” – எனக் கூறினார்.

ஈரானில் உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் தொடங்கிய போராட்டங்களை ‘ஆட்சிக்கவிழ்ப்புக்கான சதி நடவடிக்கை’ என்று கமேனி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்தி, வெளிநாட்டுச் சக்திகள் ஈரானின் முக்கிய நிர்வாக அமைப்புகளைச் சிதைக்க முயன்றதாகவும், அந்த முயற்சி தற்போது முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஈரானின் ‘புரட்சிகர காவல் படையை’ பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய யூனியன் அறிவித்தது. இதற்கு பதிலடியாக, ஐரோப்பிய நாடுகளின் அனைத்து ராணுவப் படைகளையும் பயங்கரவாத அமைப்புகளாக ஈரான் அறிவித்துள்ளது.

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று போராட்டம்!

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வவுனியா – நெடுங்கேணியில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்று முற்பகல் 10 மணிக்கு நெடுங்கேணி பஸ் நிலையம் முன்பாக ஒன்றுகூடும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை நகர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பர். போராட்டத்தின் நிறைவில் மனு ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, சிறீ ரெலோ உள்ளிட்ட அரசியல் கட்சிகள், வன்னி மாவட்ட பொது அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி கிவுல் ஓயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த மாவட்டங்களுக்குத் தண்ணீரை இலகுவாகக் கிடைக்கச் செய்யும் நோக்கில் – மகாவலி எல் வலயத்தின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பூர்வீக நிலப் பகுதிகள் பெருமளவில் பறிபோகும் என்பதுடன் குடியேற்றங்கள் மூலமாக குடிப்பரம்பலும் திட்டமிட்டமுறையில் மாற்றியமைக்கப்படும் என்று தமிழ்க் கட்சிகளால் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

“அயோத்துல்லா அலி காமேனி தியாகத்தின் விளைவே போர் நிறுத்தம்!” – ஈரான் ஜனாதிபதி

0
மாபெரும் தியாகத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், மக்களின் ஒற்றுமை காரணமாகவுமே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: எத்தனை புத்தகங்களை எழுதினாலும் உண்மையை மறைக்க முடியாது!

0
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வாறான புத்தகங்களை எழுதினாலும் விசாரணைகளை மூடிமறைக்க முடியாது. அவை உரியவகையில் இடம்பெறும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்...

ரஷ்ய போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை!

0
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha வரவேற்றுள்ளார். ஹார்முஸ் நீரிணைப்பில் நிலவிய பதற்றம் தணிந்திருப்பதை வரவேற்றுள்ள அவர், இதேபோன்றதொரு உறுதியான நடவடிக்கையை ரஷ்யாவுக்கு எதிராகவும்...