Home Blog Page 87

புதிய கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் 3 ஆம் திகதி இறுதி முடிவு!

புதிய கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் எதிர்வரும் 3 ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

எதிர்வரும் 03 ஆம் திகதி அரசமைப்பு பேரவை கூடவுள்ளது எனவும் அவர் கூறினார்.

புதிய கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியால் நான்கு தடவைகள் அனுப்பட்ட பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.

இந்நிலையில் புதிய பெயரை ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.
கணக்காய்வாளர் நாயகமாக பதவி வகித்த டிபிள்யூ.பி.சீ, விக்ரமரத்ன 2025 ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அன்று முதல் இதுவரையில் புதிய கணக்காய்வாளர் நாயகம் தெரிவுசெய்யப்படவில்லை.

பதில் கணக்காய்வாளர் நாயகமாக செயல்பட்டவரின் பதவி காலமும் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தகுதியான ஒருவரை பிரேரிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அரசியலமைப்பு சபை பெப்ரவரி 3 ஆம் திகதி கூடுகின்றது.

சிஸ்டத்தை குழப்பிவிட்டது அரசு: நாமல் குற்றச்சாட்டு!

“Systems change” எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இருக்கின்ற சிஸ்டத்தையும் குழப்பியுள்ளனர். தமது இயலாமையை மூடிமறைக்கவே எம்மை இலக்கு வைக்கின்றனர்.”

இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

“இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு அங்குள்ள பல்கலைக்கழகமொன்றில் சிறப்புரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டிருந்தேன். நானும், எமது கட்சி பிரமுகர்களும் சென்றிருந்தோம்.

இது அரசாங்கத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இறுதியானது அல்ல, இன்னும் பல நிகழ்வுகளுக்கு எதிர்காலத்தில் செல்லவுள்ளேன்.

மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை இந்த அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது. இருக்கின்ற சிஸ்டத்தையும் குழப்பி வருகின்றனர்.

ஜனவரி மாதம் என்னை சிறையில் அடைப்பார்கள் என முன்னர் எச்சரித்திருந்தனர். இதற்காககூட நான் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம்.” – எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

பேரிடர் நிவாரணத்தில் மலையகத் தமிழருக்கு எதிராக இன ஒதுக்கல்!

‘‘டித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையகப் பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி வைத் துள்ளது. இது திட்டமிட்ட இன ஒதுக்கல். எமது மக்கள் மீது பொறுப்பு ஐ.நா. சபைக்கு இருக்கின்றது. ஆகவே எங்கள் இந்த குற்றச்சாட்டை ஐ.நா. சபை விசேட கவனத்தில் எடுக்க வேண்டும்.”

– இவ்வாறு இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஒருங்கிணைப்பாளர் மார்க அந்ரே பிரான்சேவைச் சந்தித்து, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

‘‘இலங்கை அரசாங்கத்தின், இடர் நிவாரண நிலையத்தின் மீள் கட்டுமான திட்டங்களின் கீழ், டித்வா பேரழிவில் பாதிப்புக்கு உள்ளான மலையகப் பெருந் தோட்ட மக்களுக்கு இடமில்லை. அவர் களை நாம் இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ்தான் வைத்துள்ளோம் என அத்தி யாவசிய சேவைகள் ஆணையாளர்- நாயகம் பகிரங்கமாக இலங்கையின் ஒரு முன்னணி ஊடகத்துக்கு கூறி யுள்ளார்.

இடர் நிவாரண நிலையத்தின் மீள் கட்டுமான, வீடமைப்பு திட்டத்தில், ஒவ் வொரு வீடும் அதிகபட்சமாக ரூபா. 50 இலட்சத்தில் வீடுகள் கட்டப்படும் உரிய காணிகள் இல்லாதோருக்கு காணிகள் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தத் திட்டத்தை அனுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கும் போது, அறிவித்தார்.

அதேவேளை இந்தத் திட்டத்தில், மலையக தமிழ் மக்களுக்கு இடமில்லை என ஜனாதிபதியால் விசேட மாக, அத்தியாவசிய சேவைகள் ஆணை யாளர் நாயகமாக நியமிக்க பட்டுள்ள பிரபாத் சந்திரகீர்த்தி கூறுகின்றார்.

மலையகத் தமிழர்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? அவர்கள் என்ன, இந்திய பிரஜைகளா? இலங்கையின் ஏனைய மக்களுக்கு, இடர் நிவாரண நிலையத்தின் மீள் கட்டுமானத்தில் வழங்கப்படும்,

உரிமைகள், கொடுப்ப னவுகள் என்ற அரசாங்க கவனிப்புகள், ஏன் எமது மக்களுக்கு வழங்க படமுடி யாது? ஆகவே இது எமது மக்களை மாற்றான் தாய் பிள்ளைகள் போன்று, இரண்டாம் தரப் பிரஜைகள் போன்று, நடத்தப்படும் இன ஒதுக்கல் இல்லையா? இதைக் கவனத்தில் எடுங்கள்.” – என்றும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஒருங்கிணைப் பாளரிடம் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவ லகத்தில், ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஒருங்கிணைப்பாளர் மார்க் அந்ரே பிரான்சேக்கும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணே சனுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, ஜனநாயக மக்கள் முன்னணியின் சர்வதேச விவ காரங்களுக்குப் பொறுப்பான இணைத் தலைவரும் த.மு.கூ. அரசியல் குழு உறுப்பினருமான பாரத் அருள்சாமியும் கலந்துகொண்டார். இந்தச் சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன்,

தனது எக்ஸ் தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-
“இடம்பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத் திற்கும் வழங்கப்பட வேண்டிய 50 இலட்சம் ரூபா வீடமைப்பு நிதியுதவியும், காணி ஒதுக்கீடும், பெருந்தோட்ட சமூகத்திற்கு மறுக்கப்பட்டு வருகின்றது. இது கவனயீனம் அல்ல. இது திட்டமிட்ட பாகுபாடு ஆகும். மலையக தமிழர்கள் மீது காட்டப்படும் இந்த “அபார்தெய்ட்” என்ற இன ஒதுக்கல் முடிவுக்கு வர வேண்டும்.

டித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவா ரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்க ளில் எங்கள் சமூகத்தை விலக்கி வைக் கும் நிலையை விளக்குவதற்காக ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் அந்ரே பிரான்சேவிடம் நாம் தெரிவித்த எங்களது அவசர நிலைப்பாடுகள்:  டித்வா பேரழிவால் இடம்பெயர்ந்த அனைத்து மலையகக் குடும்பங்களும், தேசிய பேரிடர் முகாமைத்துவ மையத்தின் கீழ் செயல்படும் ஜனாதிபதியின் ரூபா 50 இலட்ச வீடமைப்பு, மற்றும் காணி வழங்கல் திட்டத்தில் உள்வாங்க பட வேண்டும். பெருந்தோட்ட காணிகளின் உரிமையாளர் அரசாங்கமாகும்.

அங்கே பெருந்தோட்ட நிறுவனங்கள் நீண்டகால குத்தகைக்கே காணி நிலத்தை பயன் படுத்துகின்றன. ஆகவே பெருந்தோட் டங்களில் பாதுகாப்பான காணிகளை, அடையாளம் கண்டு, அவற்றை மலையக மக்களுக்கு பிரித்து கொடுக்க, அரசாங் கத்துக்கு சட்டப்படி அதிகாரம் உண்டு. காணிகளை தந்து, வீடமைத்து தந்து, பாதிக்க பட்ட மலையக மக்களுக்கும், நாட்டின் ஏனைய மக்களுக்கு சமானமான அந்தஸ்தை தரும் கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு உண்டு.

இதில் சட்ட தடைகள் எதுவும் இல்லை. அவசரச் சட் டங்கள் நிலம் கைப்பற்ற அனுமதிக்கின் றன. தோட்ட நிலங்கள் அரசின் நிலங் களே. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் நிரந்தரத் தீர்வுகள் உள்ளன.

ரூபா 27 இலட்சம் பெறுமதியான, இந்திய அரசின் உதவி வீடமைப்பு திட்டம் தனியாகவே தொடர வேண்டும். இலங்கைப் பிரஜைகளான மலையகத் தமிழர்களுக்கான இலங்கை அரசின் பொறுப்புக்கு மாற்றாக, இந்திய அரசின் உதவி வீடமைப்பு திட்டம் அமைய முடி யாது. டித்வா வீடமைப்பு திட்டம் என்பது, இலங்கை அரசின் இடர் நிவாரண விசேட அவசர திட்டமாகும். இந்திய அரசின் உதவி வீடமைப்பு திட்டம், பேரழிவு நிகழாத பிரதேசங்களில், வழமை போல், பெருந்தோட்ட தனி வீட்டு திட்டமாக தொடர வேண்டும்.

இலங்கையில் உள்ள இந்திய தூதரகமும் எமது நிலைப்பாட்டுக்கு சமா னமான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

நில உரிமை, நிலத்துடன் கொண் டுள்ள சமூக பிணைப்பு, மற்றும் பாதுகாப்பு காரணங்களால், பெருந்தோட்டங்களில் தொடர்மாடி குடியிருப்புகளை கட்டி, நமது மக்களுக்கு வழங்கும் அரசாங்க யோச னையை நாம் ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டோம். மலையக மக்களை ஒதுக்கி வைக்கும் கொள்கை “அபார்தைட்” என்ற இன ஒதுக்கல் ஆகும். தித்வா மீள்கட்டமைப்பு, பாதிக்க பட்ட இலங்கை மக்கள் அனை வரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதற்காகவே உலக நாடுகள், மற்றும் இலங்கையின் உலகளாவிய அபிவிருத்தி பங்காளிகள், மற்றும் ஐ. நா. ஆகியவை இலங்கை அரசாங்கத் துக்கு உதவுகின்றன. ஆகவே இலங்கை அரசின் மலையக மக்களை ஒதுக்கி வைக்கும் இந்த கொள்கையை, ஐ.நா. தலையிட்டு உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என் றுள்ளது

தமிழர்களின் உரிமைக்காக சிறை தண்டனை எதிர்கொண்ட தலைவரே மாவை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா பதவி ஆசையற்றவர்;, சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மிகச் சிறந்ததொரு மனிதரை நாம் இழந்திருக்கின்றோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மாவிட்டபுரத்தில் அமைக்கப்பட்ட அன்னாரது திருவுருவச் சிலை வடக்கு மாகாண ஆளுநரால் இன்று சனிக்கிழமை காலை (31.01.2026) திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்ற நினைவுப் பேருரை மற்றும் மேடை நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

மாவை.சேனாதிராசா அவர்களை எனக்கு எனது 10 வயதிலிருந்தே தெரியும். அவர் எனது தந்தையாரைச் சந்திப்பதற்காக அடிக்கடி எமது வீட்டுக்கு வருவார். நாங்கள் உயர்தரம் படித்துக் கொண்டிருந்த காலத்தில், எங்களைப் போன்ற இளையோருக்கு அரசியல் வகுப்புகளை நடாத்திய ஆசானாகவும் அவர் திகழ்ந்தார்.

நான் பிரதேச செயலாளராகவும், பின்னர் மாவட்டச் செயலாளராகவும் பணியாற்றிய காலங்களில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். அதிகாரத்தில் இருந்தாலும் அவர் மிகவும் எளிமையானவராகவே வாழ்ந்தார். அவரை எந்த நேரத்திலும், எவரும் இலகுவாகச் சந்திக்க முடியும் என்ற நிலை இருந்தது.

அவர் பதவி ஆசை இல்லாதவர். சலுகைகளுக்கு ஒருபோதும் விலைபோகாதவர். தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ எந்தவொரு சலுகையையும் அவர் எதிர்பார்த்ததில்லை. இன்றைய அரசியல் சூழலில் அவர் மிக வித்தியாசமான ஒரு மனிதராகவே வாழ்ந்து மறைந்துள்ளார்.

அவர் ஒரு அப்பாவியான மனிதர். அவரிடம் உதவி கேட்டு வரும் யாருக்கும் ‘மாட்டேன்’ என்று சொல்லும் துணிவு அவருக்கு இருந்ததில்லை. அவரிடமிருந்து எப்போதும் எதிர்மறையான பதில்கள் வராது. அந்தளவவுக்கு அவர் மென்மையான உள்ளம் கொண்டவர். தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தனது இளமைக் காலத்தைத் தியாகம் செய்து, பல வருடங்கள் சிறையில் வாடியவர். இத்தகையதொரு சிறந்த தலைவரை இழந்தமை எமது சமூகத்துக்குப் பேரிழப்பாகும், என்றார்.

மாவை.சோ.சேனாதிராவின் முதலாமாண்டு நினைவு மலரும், பேராசிரியர் பஞ்.இராமலிங்கம் எழுதிய ஈழ அண்ணல் மாவை.சோ.சேனாதிராசா என்னும் நூலுமாக இரண்டு நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன.

பெருந்தலைவர் மாவையின் திருவுருவச் சிலை திறப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த பெருந்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமா மாவை சேனாதிராஜாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இன்று காலை கே.கே.எஸ். வீதி மாவிட்டபுரத்தில், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தத் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் ந.நல்லுசாமி, யாழ். இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், ஞானமுத்து சிறிநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், பத்மநாதன் சத்தியலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மறுவன் புலவு சச்சிதானந்தம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், மாவை சேனாதிராஜாவின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பதம் கைச்சாத்திடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

மேற்படி ஒப்பந்தப்படி கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால், கனடா பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்தார்.

அத்துடன், அமெரிக்காவின் கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவன விமானங்களுக்கு கனடா அங்கீகாரம் வழங்கவில்லை என்றால், அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் கனடா தயாரிப்பு விமானங்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

மேலும், ‘‘கனடாவில் தயாரிக்கப்படும் அனைத்து விமானங்களுக்கான அங்கீகாரத்தை இரத்து செய்வேன்.” – எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனம், கனடாவின் பம்பார்டியர் விமான நிறுவனத்துக்கு போட்டியாக உள்ளது. இதனால் கல்ப்ஸ்ட்ரீம் நிறுவன விமானங்களுக்கு கனடா அங்கீகாரம் அளிக்காமல் உள்ளது.

தேர்தலில் வெற்றி உறுதி: விஜய் நம்பிக்கை!

“தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறப்போவது உறுதி ,” என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்னர் முதன்முறையாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் அவரைச் சந்தித்த அந்த ஊடகக் குழுவினரிடம் விஜய் கருத்து வெளியிட்டபோது

” கரூர் சம்பவம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. இன்றளவும் என்னை அந்த நிகழ்வு பாதிக்கிறது, இப்படியொரு நிகழ்வு நடக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ அதில் நான் உறுதியாக இருப்பேன். எனது இலக்குகள் பற்றி அறியாமல் நான் எதையும் செய்வதில்லை. அந்தவகையில், அரசியல் தான் எனது எதிர்காலம் என்று நான் முடிவு செய்துவிட்டேன்.

‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீட்டுக்குச் சிக்கல் வரும் என்று நான் முன்கூட்டியே கணித்திருந்தேன். எனது படம் அரசியல் காரணங்களுக்காக நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு நான் மனதளவில் தயாராகியிருந்தேன். ஆனால், படம் தள்ளிப்போவதால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்காக நான் வருந்துகிறேன்.” – எனவும் அவர் கூறியுள்ளார்.

” அரசியலில் நான் கிங்மேக்கராக முத்திரை குத்தப்பட விரும்பவில்லை. நான் இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற சூழல் இருக்கும்போது நான் ஏன் கிங்மேக்கராக இருக்கப் போகிறேன். எனக்குச் சேரும் கூட்டத்தை நீங்கள் கவனித்திருக்கிறீர்கள் தானே!.

நான் பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்துள்ளேன். இனி அரசியல் செய்வது என்று தீர்மானித்துதான் வந்துள்ளேன். இந்த மாற்றம் அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை. அரசியலில் எனது ரோல் மாடல் எம்ஜிஆர், ஜெயலலிதா தான். இவ்வாறு அந்தப் பேட்டியில் விஜய் கூறியுள்ளார்.

வடக்கு மக்களின் தேவை பூர்த்தி செய்யப்படும்:அமைச்சர் உறுதி

“வடக்கு மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அதேவேளை, அபிவிருத்திப் பணிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.” – என்று அநுர அரசு உறுதியளித்துள்ளது.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

“அரசு என்ற வகையில் நாட்டினுடைய அபிவிருத்தியை எந்தத் தடைகளும் இல்லாமல் மேற்கொண்டு வருகின்றோம்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பொதுமக்கள் காத்திருப்பு பகுதி வேலைகள் முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம்.

கடந்த அரசில் குறித்த விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டாலும் முழுமையான விமான நிலையமாக மாற்றம் பெறாத நிலையில் எமது அரசு அதனை முழுவீச்சில் செயற்படுத்தி வருகின்றது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் காத்திரமான பங்களிப்பை மேற்கொள்ளும் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது.”- எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பில் விமான சேவைகள் நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகின்ற நிலையில் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும்.
வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கியுள்ளார்.

எமது அரசு நாட்டில் வாழுகின்ற சகல இன, மத மக்களை இணைத்துக் கொண்டு புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஓர் அரசாக ஆட்சிக்கு வந்தது யாவரும் அறிந்த விடயம்.

எமது அரசின் பயணத்தைத் தடுத்த நிறுத்தலாம் எனச் சிலர் நினைக்கின்றார்கள். காரணம் கடந்த காலங்களைப் போல் திருடர் யுகம் ஒன்றை மீண்டும் கொண்டு வருவதற்காக அவர்கள் துடிக்கின்றார்கள்.

இந்த நாட்டை மீண்டும் ஒரு அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு இன்னும் சிலர் இனவாதத்தை கையில் எடுக்கின்றார்கள். அது அவர்களின் அரசியல் இருப்புக்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இழந்து போன அரசியலை மீண்டும் புத்துயிர் கொடுப்பதுக்குமே.

ஆகவே வடக்கு மக்களுக்குத் தெளிவாக ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன், எமது அரசு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஓர் அரசாகச் செயற்படும் அதேவேளை அபிவிருத்திப் பணிகளையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கும்.” – என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
……………

பழி தீர்க்குமா இலங்கை? நாளை 2ஆவது டி20 போட்டி!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.

கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் இலங்கை நேரப்படி போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.

இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கான முதல் டி20 போட்டி நேற்று பல்லேகலயில் நடைபெற்றது.

மழை காரணமாக போட்டி 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

134 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இந்திலாந்து அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றிருந்தவேளை மழை மீண்டும் குறுக்கிட்டது.

இதனால் டக்வொர்த் லூயிஸ் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, இங்கிலாந்து அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

மரக்கறி விலைப்பட்டியல் (31.01.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (31.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

“அயோத்துல்லா அலி காமேனி தியாகத்தின் விளைவே போர் நிறுத்தம்!” – ஈரான் ஜனாதிபதி

0
மாபெரும் தியாகத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், மக்களின் ஒற்றுமை காரணமாகவுமே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: எத்தனை புத்தகங்களை எழுதினாலும் உண்மையை மறைக்க முடியாது!

0
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வாறான புத்தகங்களை எழுதினாலும் விசாரணைகளை மூடிமறைக்க முடியாது. அவை உரியவகையில் இடம்பெறும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்...

ரஷ்ய போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை!

0
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha வரவேற்றுள்ளார். ஹார்முஸ் நீரிணைப்பில் நிலவிய பதற்றம் தணிந்திருப்பதை வரவேற்றுள்ள அவர், இதேபோன்றதொரு உறுதியான நடவடிக்கையை ரஷ்யாவுக்கு எதிராகவும்...