Home Blog Page 85

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு மிகவும் பரிச்சியமானவர்கள். இதில் தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாவது உறுதியாகி இருக்கிறது. இதற்கான கதை உருவாக்கும் படலத்தில் மும்முரமாக இருக்கிறார் தனுஷ்.

தனுஷ் இயக்கத்தில் அவரது மகன் யாத்ரா அறிமுகமாக இருக்கிறாரா அல்லது கதையை மட்டும் கொடுத்து வேறொரு இயக்குநர் இயக்கவுள்ளாரா என்பது விரைவில் தெரியவரும். ஆனால், யாத்ரா நாயகனாக அறிமுகமாக இருப்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு பிறந்தவர்கள் யாத்ரா மற்றும் லிங்கா. சில வருடங்களுக்கு முன்பு இருவருமே விவகாரத்து பெற்றாலும், மகன்கள் விஷயத்தில் இருவருமே கலந்து ஆலோசித்து முடிவு எடுத்து வருகிறார்கள். இதனால் ரஜினியின் ஆசீர்வாதத்தில் விரைவில் யாத்ரா நாயகனாக அறிமுகமாகும் அறிவிப்பு வெளியாகக் கூடும்.

சுதந்திரக் கட்சி மீண்டெழும்: எனக்கு ஜனாதிபதி பதவி கனவு இல்லை!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பயணத்தை ஆராயும்போது, ஆட்சி கவிழ்ப்பு பணியை எதிரணி செய்யவேண்டியதில்லை. அவர்களாகவே தம்மை கவிழ்த்துக்கொள்வார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ அரசியல் களத்தில்போன்று வேறு எங்கும் பாரிய சவால்கள் கிடையாது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டும் அல்ல, அனைத்து கட்சிகளுக்குள்ளும் இன்று உள்ளக மோதல் உள்ளது. ஆளுங்கட்சிகூட பிளவுபட்டுதானே உள்ளது.

எனவே, யதார்த்த அரசியலை புரிந்துகொண்டு கட்சியை நாம் கட்டியெழுப்ப வேண்டும். முன்னோக்கி செல்வது பற்றி ஆராய வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பலாம். நிச்சயம் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி என்ற நிலைக்கு கட்சியை கொண்டுவரலாம்.

எனது அரசியல் வாழ்வில் நான் என்றும் அவசரப்பட்டதில்லை. படிப்படியாகவே வளர்ந்துவந்தேன். எனவே, கட்சியை விட்டு சென்ற அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.

சிலர் பதவி கேட்கின்றனர். முதலில் கட்சிக்குள் வந்து பிறகு இலக்கை அடைய வேண்டும். எனக்கு ஜனாதிபதியாக வேண்டும் என்ற கனவு இல்லை.” – என்றார்.

மரக்கறி விலைப்பட்டியல் (03.02.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (03) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

சஜித்துடன் தெளிவான கொள்கை இல்லை: ரணிலுடன்; நாம் பேச்சு நடத்தவில்லை!

ஒற்றையாட்சி உள்ளிட்ட விடயங்களில் சஜித் பிரேமதாசவிடம் தெளிவான கொள்கை இல்லை. நாட்டுக்கான தெளிவான கொள்கை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசமே உள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று (2) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் சாகர காரியவசம் கூறியவை வருமாறு,

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பேச்சு நடத்தவில்லை.

எமது கட்சிக்கும், ஐதேகவுக்கும் இடையில் பாரிய கொள்கை வேறுபாடு காணப்படுகின்றது. ஒற்றையாட்சி, தேசியத்துவம் உள்ளிட்ட விடயங்களில் இரு கட்சிகளினதும் நிலைப்பாடு வேறானவை.

எனவே, எமது கட்சியின் கொள்கையை ஏற்பவர்கள் இணைந்து செயல்படலாம். கொள்கையே எமக்கு முக்கியம்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயல்படுத்துவது தொடர்பில் பேச்சு நடத்தப்படவில்லை.” – என்றார்

ஆளுங்கட்சிக்கு அனுபவம் இல்லை!

 

“கடந்த காலத்தை வைத்து தற்போதுள்ள அரசாங்கத்தை எடைபோடக்கூடாது. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஜனாதிபதிக்கு உள்ளது. ஆனாலும் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு போதிய அனுபவம் இல்லை. உடனடியாக மாற்றத்தை எதிர்பார்ப்பது தவறான கருத்து. அதனால்தான் கால அவகாசம் வழங்கியுள்ளோம்.”

இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தலாய் லாமாவுக்கு கிராமி விருது: சீனா கடும் அதிருப்தி!

தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பதற்கு சீன அரசு கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளது.

பௌத்த மதத்தின் தலைமைப் பதவிகளுள் முக்கியமான தலாய் லாமாவாகவிருக்கும் ‘டென்ஸின் க்யாட்சோ (90)’ மீது சீனா தொடர்ந்து அதிருப்தி போக்கைக் கடைப்பிடித்து வருகிறது.

இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரில் விமரிசையாக நடைபெற்ற 68-ஆவது கிராமி விருதளிப்பு விழாவில், த்லாய் லாமாவின் ஆன்மீகப் படைப்பான ‘மெடிடேசன்ஸ்: தி ரிஃப்லெக்சன்ஸ் ஆஃப் ஹிஸ் ஹோலினெஸ் தி தலாய் லாமா’ எனும் ஆன்மீக சொற்பொழிவுக்கு ‘சிறந்த ஒலி வடிவ கதைச் சொல்லும் படைப்பு’ பிரிவில் ‘கிராமி விருது’ வழங்கப்பட்டது.

இதுவே, தலாய் லாமா பெறும் முதல் கிராமி விருதென்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, சீன அரசின் கருத்தை வெளிப்படுத்திய அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான்,

“தலாய் லாமா பரிசுத்தமானதொரு ஆன்மீக நபரல்லவே. சீனாவுக்கெதிரான மதத்தின் பெயரிலான தமது பிரிவினைவாத நடவடிக்கைகளுக்காக அவர் சீனாவிலிருந்து அரசியல் ரீதியாக வெளியேற்றப்பட்டுள்ளவராவார்.

இந்த நிலையில், இத்தகையை விருதையொரு கருவியாகப் பயன்படுத்தி சீனாவுக்கெதிரான நடவடிக்கைகளை சில கட்சிகள் மேற்கொள்வதை சீனா கடுமையாக எதிர்க்கிறது” என்றார்.

இதனிடையே, தமக்கான கிராமி அங்கீகாரம் பற்றி குறிப்பிட்டுள்ள தலாய் லாமா, இவ்விருதைப் பரிவு மற்றும் மனிதாபிமானத்துடன் பெற்றுக்கொள்வதாகவும், தனியொருவனாக தனது சாதனை என்ரு இதனைக் கருத முடியாதெனவும் அவர் எளிய மனப்போக்குடன் கருத்து தெரிவித்தார்.

மேலும், “அமைதி, பரிவு, சுற்றுச்சூழல் மீதான அக்கறை, ஒருவரை மனிதநேயத்துடன் புரிந்துகொள்வது ஆகிய குணங்கள் அனைத்து 80 கோடி மனிதர்களின் கூட்டு நலனுக்கு அவசியமானவையாகும். கிராமி அங்கீகாரம் மூலம் மேற்கண்ட செய்தி பரவலாகச் சென்றடைய உதவும்” என்றும் குறிப்பிட்டார்.

சீனாவின் கடும் அழுத்தத்தால், கடந்த 1959களில் திபெத்திலிருந்து வெளியேறி இமாசலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் தஞ்சமடைந்த தலாய் லாமாவுக்கு, திபெத்திய விடுதலைக்காக தொடர்ந்து அமைதி வழியில் மேற்கொள்ளும் போராட்டத்துக்காக கடந்த 1989இல் ‘அமைதிக்கான நோபல் பரிசு’ வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் போராட்டம் முன்னெடுப்பு!

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட் டத்துக்கு எதிராக நெடுங்கேணி யில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் உணர்வெழுச்சி யுடன் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நெடுங் கேணி பஸ் நிலையம் முன்பாக இன்று காலை ஆரம்பமாகியது.

இதன்போது கிவுல் ஓயா திட்டத் துக்கு எதிராக மக்கள் கோஷங் களை எழுப்பியதுடன், பதாதைக ளையும் தாங்கியிருந்தனர்.

தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து நெடுங்கேணி பிர தேச செயலகம் வரை ஊர்வலமாகக் கோஷங்களை எழுப்பியவாறு சென்றி ருந்தனர்.

அங்கும் மக்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்புப் போராட்டத்தை நடத் தியதுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றையும் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக வழங்கியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அரசின் திட்டமிட்ட நில அபகரிப்பு எதிராகக் குரல் கொடுத் திருந்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பின்களான சி.சிறீதரன், இரா.சாணக்கியன், து.ரவிகரன், ப.சத்திய லிங்கம், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார், சாந்தி சிறிஸ்கந்தராஜா, தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஜன நாயகப் போராளிகள் கட்சியின் பேச்சா ளர் துளசி, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலர் பங்கேற்றி ருந்தனர்.

 

குளவிக்கொட்டு: மூவர் பாதிப்பு!

குளவிக்கொட்டு இலக்கான மூவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை வந்த எம்பிலிபிட்டியவை சேர்ந்த 20 வயது உடைய இளைஞன், 19 வயது யுவதி மற்றும் வத்தேகெதரவை சேர்ந்த 29 வயது உடைய யுவதி ஆகியோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வரபட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்.

ஐ.தே.க., மொட்டு கட்சி இணைவு சாத்தியமா?

“ ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எமது கட்சிக்கிடையில் கொள்கை வேறுபாடு காணப்படுகின்றது. எனவே, இணைந்து பயணிப்பது தொடர்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொள்ள விரும்பும் பட்சத்தில் எம்முடன் எவரும் இணைந்து பயணிக்கலாம் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

 

பவள விழா பாப்பாவுக்கு என்ன தெரியும்? தி.மு.கவை விளாசித்தள்ளிய விஜய்!

“அரசியலில் தங்களை யார் எதிர்த்து நின்றாலும் கொந்தளிப்பதே திமுகவின் வேலை” என்று தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.

தவெக ஆரம்பித்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்று, மூன்றாம் ஆண்டு இன்று தொடங்கும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை நிலையத்தில் 3-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.

முன்னதாக கட்சி வளாகத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்த விஜய், தவெக கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து விஜய் தவெகவினர் மத்தியில் பேசியதாவது:

” காமராஜர், எம்ஜிஆர், அண்ணா இருந்த இடத்தில் இப்போது இவர்களும் இருக்கிறார்களே என்று தமிழக மக்கள் திமுகவைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழகத்தில் புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் திமுக அவர்களைப் பார்த்து உங்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது? என்று கேள்வி கேட்கும்.

எம்ஜிஆருக்கு அரசியல் அரிச்சுவடி தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். காமராஜருக்கு இலக்கியம் தெரியுமா? என்று கொந்தளித்தனர். இன்று நம்மைப் பார்த்துக் கொந்தளிக்கின்றனர். அரசியலில் யார் அவர்களை எதிர்த்து நின்றாலும் கொந்தளிப்பதே திமுகவின் வேலை.

இத்தனையையும் மீறி தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக தவெக இன்று வளர்ந்திருக்கிறது. அதனால், டெக்னாலஜி வளர்ந்திருக்கும் சூழலில் விமர்சனங்களில் உங்கள் (திமுக) டெக்னிக்கையாவது மாற்றுங்கள்.

அதைவிடுத்து 50 வருடங்களுக்கு முந்தைய தகர டப்பாவை எடுத்து உருட்டுகிறார்கள். ‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும்.

ஆனால், அதற்காக எல்லாம் அவர்கள் செய்யும் தவறுகளை, ஊழல்களை சொல்லிக் காட்டாமல் இருக்க முடியாது. மக்களுடைய ஒரே பிரதிநிதி தவெக மட்டும்தான். திமுகவை தொடர்ந்து நாம் விமர்சனம் செய்வோம்.

இந்த டிஜிட்டல் உலகில் திருவள்ளுவர் இருந்திருந்தால், இந்த தீய சக்தியை பற்றி, ”அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு” என்று திருக்குறள் எழுதியிருப்பார்.

தமிழக தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டி, நான்குமுனை போட்டி என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்கிறேன். இங்கே மாபெரும் மக்கள் சக்தி கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக தலைமையில் மற்றும் பலர் கூட்டணி தான் இருக்கிறது. இதில், திமுகவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான தவெகவால் மட்டும் தான் முடியும்.

அப்புறம், “ஏய் விஜய், வீட்டைவிட்டு வெளியில் வா…” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் பாஸ். தேர்தல் தேதியில் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் ஒவ்வொரு விஜய்யும் வாக்காளர் அடையாள அட்டையுடன் காலையிலேயே பூத் பூத்தாக வந்து நிற்பார்கள். அன்றைக்கு ‘ஏன் விஜய்யை கூப்பிட்டோம்’ என்று நீங்கள் நினைப்பீர்கள்.

நான் என்ன பேசினாலும் ‘இது என்ன சினிமாவா?’ என்று ஆரம்பித்துவிடுகிறார்கள். நானே சினிமாவை விட்டுவிட்டேன். ஆனால் அவர்கள் அதை விடுவதாக இல்லை.

தேர்தலை ஒட்டி சில கருத்துக் கணிப்புகள் வருகின்றன. அவற்றில் சில சரியாகவும் இருக்கின்றன. கூடவே சில ‘கடுப்புக் கணிப்புகள்’ வருகின்றன. அந்த கடுப்புக் கணிப்பாளர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஒவ்வொரு வீட்டிலும் தவெக இருக்கிறது. இதை நம்பவில்லை என்றால் நீங்கள் எடுத்த கடுப்புக் கணிப்பை ரப்பர் வைத்து அழித்துவிட்டு மீண்டும் எடுத்துப் பாருங்கள். அப்போதும் தவெக பற்றி அதே ரிசல்ட் தான் வரும். தவெக எல்லோரது வீட்டிலும் இருக்கிறது. இவ்வாறு விஜய் பேசினார்.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: எத்தனை புத்தகங்களை எழுதினாலும் உண்மையை மறைக்க முடியாது!

0
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வாறான புத்தகங்களை எழுதினாலும் விசாரணைகளை மூடிமறைக்க முடியாது. அவை உரியவகையில் இடம்பெறும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்...

ரஷ்ய போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் உக்ரைன் கோரிக்கை!

0
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Andrii Sybiha வரவேற்றுள்ளார். ஹார்முஸ் நீரிணைப்பில் நிலவிய பதற்றம் தணிந்திருப்பதை வரவேற்றுள்ள அவர், இதேபோன்றதொரு உறுதியான நடவடிக்கையை ரஷ்யாவுக்கு எதிராகவும்...

நவீனமயமாக்கப்பட்ட கொழும்பு மத்திய பேருந்து நிலையம் மக்களிடம் கையளிப்பு!

0
முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், இன்று (08) முற்பகல் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது. 424 மில்லியன் ரூபாய் செலவில், "கிளீன் ஸ்ரீலங்கா" கருப்பொருளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி...