சஜித்துடன் தெளிவான கொள்கை இல்லை: ரணிலுடன்; நாம் பேச்சு நடத்தவில்லை!

ஒற்றையாட்சி உள்ளிட்ட விடயங்களில் சஜித் பிரேமதாசவிடம் தெளிவான கொள்கை இல்லை. நாட்டுக்கான தெளிவான கொள்கை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசமே உள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று (2) நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் சாகர காரியவசம் கூறியவை வருமாறு,

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பேச்சு நடத்தவில்லை.

எமது கட்சிக்கும், ஐதேகவுக்கும் இடையில் பாரிய கொள்கை வேறுபாடு காணப்படுகின்றது. ஒற்றையாட்சி, தேசியத்துவம் உள்ளிட்ட விடயங்களில் இரு கட்சிகளினதும் நிலைப்பாடு வேறானவை.

எனவே, எமது கட்சியின் கொள்கையை ஏற்பவர்கள் இணைந்து செயல்படலாம். கொள்கையே எமக்கு முக்கியம்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயல்படுத்துவது தொடர்பில் பேச்சு நடத்தப்படவில்லை.” – என்றார்

Related Articles

Latest Articles