கலஹா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, கித்துல்முல்ல மேல் பிரிவு தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
கித்துல்முல்ல மேல் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 58 வயதான சந்திரசேன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
தேயிலை தோட்டத்தில் களை நாசினி தெளித்து கொண்டு இருந்த சந்தரப்த்தில் திடீரென குளவி குடு கலைந்து அங்கு இருந்த மூன்று பேருக்கு தாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மூவரையும், கலஹா பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் 58 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
ஏனைய இருவரும் கலஹா பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

