கலஹா பகுதியில் ஆலயம் உடைக்கப்பட்டு உண்டியல், வேல் கொள்ளை

 

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழாத்தோட்டம் பகுதியில் நேற்று நள்ளிரவு கோவில் உடைக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கிழாத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த காணிக்கை உண்டியல் மற்றும் பூஜைக்குரிய வேல் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். அத்துடன் ஆலயத்திலிருந்த வேறு சில பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

மேலும், அதே பகுதியில் அமைந்துள்ள சிறிய வியாபார நிலையமொன்றின் பூட்டை உடைத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கலஹா பொலிஸாரும் கம்பளை தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனையிட்டதுடன், கைரேகைகளைப் பதிவுசெய்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles