லெபனானில் தாக்குதல் தொடரும்!

லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர்மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பிற்காக இந்தத் தற்காப்பு நடவடிக்கை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் சர்வதேச ஒப்பந்தங்களை மீறும் செயல் என்று ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

லெபனான்மீதான தாக்குதலை நிறுத்துமாறு மேலும் பல நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தாக்குதலை கைவிடப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles