மக்கள் ஆசியுடனேயே ஆட்சி தொடரும்: சூழ்ச்சி எதுவும் செய்யமாட்டோம்!!

“சூழ்ச்சிமூலம் ஆட்சியை தக்கவைக்கும் எவ்வித நோக்கமும் எமக்கு கிடையாது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம்.” என்று ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“ நாட்டைக் கட்டியெழுப்பவே நாம் ஆட்சியைப் பொறுப்பேற்போம். அதனை செய்வதற்கு காலம் எடுக்கும். அதற்குரிய அடித்தளம் தற்போது இடப்பட்டுள்ளது. நாட்டில் ஸ்தீரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்களின் ஆசியுடன் ஆட்சியை தொடரவே விரும்புகின்றோம். மாறாக மக்கள் விருப்பமின்றி – பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம். ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கு சூழ்ச்சி செய்ய மாட்டோம்.

அதிகாரத்தை நாம் மோசடிக்காக பயன்படுத்தவில்லை. நாட்டுக்காகவே பயன்படுத்துகின்றோம். நாட்டுக்கு சேவைசெய்த திருப்தியுடன் மரணிக்க வேண்டும். அது போதும்.

மக்கள் ஆசியுடன் எமது ஆட்சி தொடரும். நாட்டை நாம் கட்டியெழுப்புவோம்.” – எனவும் டில்வின் சில்வா குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles