கோர விபத்து: தாய், 7 வயது மகள் உட்பட மூவர் பலி

தெல்கொட, புதிய கண்டி வீதியில் முச்சக்கரவண்டியும் காரும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஏழு வயதுச் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஆகஸ்ட் 19) பியகமயவிலிருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, வீதியின் வலது புறத்திற்கு திடீரெனத் திரும்ப முற்பட்டபோதே எதிரே வந்த காரொன்றுடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்தின் போது காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, இரு பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உடனடியாக உடுப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி சாரதி, பெண் ஒருவர் மற்றும் ஏழு வயதுச் சிறுமி ஆகியோர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய நபர் எனவும், சியம்பலாப்ப பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய தாய் மற்றும் அவரின் 7 வயது மகள் எனவும் பொலிஸாரால் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், காரில் பயணித்த சிறுமி ஒருவரும் காயமடைந்து ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles