வெனிசுலா நிலநடுக்கம்: மரணத்தை வென்றி மனிதன்; – 8 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் 8 நாட்களாகச் சிக்கியிருந்த நபர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

140 டன் எடை கொண்ட இடிபாடுகளுக்கு அடியில் ஹெர்னான் கில் (Hernán Gil) இருக்கும் இடத்தை அவசரக்கால மீட்புப் படையினர் கண்டறிந்தனர்.

அதன் பிறகு, 100 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அவரைப் பத்திரமாக வெளியே மீட்டுள்ளனர்.

இந்த மீட்பு நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட சிலி நாட்டைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஒருவர்,

“சந்தேகத்திற்கு இடமின்றி, நான் இதுவரை எதிர்கொண்டதிலேயே மிகவும் சிக்கலான மற்றும் தொழில்நுட்ப ரீதியாகக் கடினமான மீட்புப் பணி இதுதான்” என்று விவரித்தார்.

கடந்த ஜூன் 24 அன்று வெனிசுலாவைத் தாக்கிய நிலநடுக்கங்களில் இதுவரை கிட்டத்தட்ட 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இன்னும் காணவில்லை.

வெனிசுலா, சிலி, கோஸ்டாரிகா, எல் சல்வடோர், மெக்சிகோ, போர்ச்சுகல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் இணைந்து கில்லை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த கில்லுக்குத் தண்ணீர் வழங்கப்பட்டதுடன், மருத்துவர்கள் நரம்பு வழியாகச் செலுத்தும் (Intravenous drip) மருந்துகளையும் அவருக்குக் கொடுத்தனர்.

அவரைச் சென்றடைவதற்காக மீட்புக்குழுவினர் உருவாக்கிய பாதைகள் பலமுறை இடிந்து விழுந்தன. இது கில்லுக்கு மட்டுமல்லாமல், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கும் இருந்த பேராபத்தை உணர்த்தியது.

இருப்பினும், இரவோடு இரவாக மீட்புக் குழுவினர் கில் இருக்குமிடத்தைக் கேமரா மூலம் கண்டறிந்தனர். இடிபாடுகளுக்குள் செலுத்தப்பட்ட ஒரு சிறிய கேமராவில் பதிவான காட்சியில், சிலி நாட்டுத் தீயணைப்பு வீரர் ஒருவர் கில்லைக் கேமராவை நோக்கித் தலையைத் திருப்புமாறு கூறுவது கேட்டது.

தூசிகள் மற்றும் இடிபாடுகளின் துகள்களிலிருந்து பாதுகாப்பதற்காக மீட்புக்குழுவினர் ஒரு சிறிய துளை வழியே அவருக்கு முகக்கவசம் (face mask) ஒன்றை அனுப்பியிருந்தனர்.

அதை அவர் அணிந்திருந்தார். இடிபாடுகளை அகற்றும் போது கண்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, கில் பாதுகாப்பு கண்ணாடிகளை (goggles) அணியுமாறும் தீயணைப்பு வீரர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

Latest Articles