அழுத்தங்களுக்கு அடிபணியோம்:விசாரணை வேட்டை தொடரும்

எத்தடை வரினும் உயிர்த்த ஞாயிறு விசாரணை நிறுத்தப்படமாட்டாது. மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் விசாரணை இடம்பெறும் என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் சுனில் வட்கல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் கூறியவை வருமாறு,

“வங்குரோத்தடைந்துள்ள எதிரணி, அரசியல் நடத்துவதற்குரிய காரணிகளை தேடி அலைகின்றன. அண்மையில் கூடாரம் அமைத்து நாடகம் நடத்தப்பட்டது. ஆனால் மக்கள் மத்தியில் இருந்து கிளம்பிய எதிர்ப்பால் எதிரணிகள் பின்வாங்கின.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற்றுவருகின்றது. இந்த விசாரணையின் பிரகாரமே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படும் என நாம் மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தோம். இதனை நாம் நிச்சயம் செய்வோம்.

எனவே, விசாரணைக்கு ஒத்துழைத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க சலே முன்வரவேண்டும். “- என்றார்.

Related Articles

Latest Articles