அணையா விளக்கு போராட்டத்திலிருந்து தமிழரசுக் கட்சி பதில் தலைவர் துரத்தியடிப்பு!

அணையா விளக்கு போராட்டத்திலிருந்து தமிழரசுக் கட்சி பதில் தலைவர் துரத்தியடிப்பு!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்ற “அணையா விளக்கு” போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் சீ.வி.கே. சிவஞானம், போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அணையா விளக்கு போராட்டம் இன்று மூன் றாவது நாளாக இடம்பெற்றது.

இப்போராட்டத்தில் மதத் தலைவர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர்.

இவ்வாறு போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், பகல் வேளையில் போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற சிவஞானத்தை அங்கிருந்த மக்கள் வெளியேறுமாறு கோஷங்களை எழுப்பி , போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றினர்.

யாழ்ப்பாணத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டப்பட்டு வரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினருடன் கூட்டு சேர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஆட்சி அமைத்துள்ளதாகவும், அவ்வாறானவர்களுடன் கூட்டு சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள தகுதியற்றவர்கள் என்றும் கூறியே சிவஞானம், துரத்தியடிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles