அமெரிக்காவில் அரசியல் மாறினாலும் பகைமை மாறாது: பதிலடிக்கு ஈரான் தயார் நிலையில்

அமெரிக்காவின் கட்சிசார் அரசியல் மாற்றங்களினாலோ அல்லது அந்நாட்டுக்கு எந்தவிதமான சலுகைகளையும் வழங்குவதாலோ, தெஹ்ரான் மீதான வொஷிங்டனின் விரோதப் போக்கில் மாற்றம் ஏற்படாது. அவ்வாறு நம்புபவர்கள் மிகப்பெரிய தவறிழைக்கின்றனர் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்விகளைச் சந்தித்துள்ள நிலையில், புதன்கிழமை அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்கா மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி முன்னெப்போதையும் விடப் பல மடங்கு தீவிரமாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் அழித்தமை மற்றும் ஹோர்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவை, அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அமெரிக்கா தனது ஆதிக்கத்தின் முடிவு இன்னும் தொலைவில் இருப்பதாகக் கருதுகிறது. ஆனால், அந்த முடிவு நெருங்கிவிட்டதாக நாம் கருதுகிறோம்” என மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles