ஆட்டோ விபத்தில் 9 மாத குழந்தை பலி!

குருநாகல், வெவ ரவும வீதியில் இடம்பெற்ற விபத்தில் 9 மாத ஆண் குழந்தையொன்று பலியாகியுள்ளது.

பன்தம்பலாவ பகுதியில் இருந்து பமுனுகெதர நோக்கி பயணித்த ஆட்டோவொன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து – வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயமடைந்த ஆட்டோ சாரதி மற்றும் நான்கு பயணிகளும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் 9 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

Related Articles

Latest Articles