இ.தொ.காவின் டபள் கேமால் தமிழக உதவி இல்லாமல்போகும் அபாயம்!

” நமக்கு உதவி செய்தது தமிழக முதல்வர் ஸ்டாலினா? அண்ணாமலையா? உதவி கொடுப்பது தமிழக அரசு, இங்கு வந்து மோடி புகழை மட்டும் பாடுவது அண்ணாமலை. இதனை தமிழக முதல்வர் கேட்டால் நமக்கு கிடைக்கவிருக்கும் உதவியை கூட நிறுத்த வாய்ப்பு உண்டு.” என்று மஸ்கெலியா பிரதேசசபை உறுப்பினர் ராஜ் அசோக் தெரிவித்துள்ளார்.

” நாங்கள் கேட்டு கொண்டதிற்கு இணங்க தமிழக முதல்வர் உதவி செய்தார் என்று சொன்ன இ. தொ. கா, இப்போது பா,ஜ,கவின் தமிழக செயல்பாட்டாளர் அண்ணாமலையை அழைத்து உதவிகளை பிரதமர் மோடி வழங்கி வைத்தார் என்று சொல்லுவது வேடிக்கையாக இருக்கின்றது.

தமிழகத்தில் தி. மு. க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ. க கட்சிகளுக்கு இடையிலான போட்டி இந்த நேரத்தில் இங்கு தேவையா?

தயவு செய்து சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் இது. மக்கள் விலை ஏற்றதால் அவதி படும் நேரத்தில் அவர்களுக்கு எந்த வழியில் உதவ வேண்டும் என்று சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமே தவிர அனைத்து கட்சிகளும் அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles