இன்னும் நீதி கிட்டவில்லை: பேராயர் கடும் அதிருப்தி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நடைபெற்று ஆறு ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் இத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்ட குழுவினர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை – என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற வழிபாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

“ 6 வருடங்களுக்கு முன்னர் பயங்கரமான தாக்குதல் இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் எமக்கு பல கேள்விகள் உள்ளன. இந்த தேவாலயத்தில் 57 பேர் கொல்லப்பட்டனர்.

கட்டுவாப்பிட்டிய, மட்டக்களப்பு சியோன் தேவாலயம், சுற்றுலா விடுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் நாட்டுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
இத்தாக்குதலின் பின்னணியில் செயற்பட்ட குழுவினயர் யார் என்பதை இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல்போயுள்ளது. ஆறு வருடங்கள் கடந்தும் முன்னேற்றம் இல்லை.

நீதியை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையை வேண்டா வெறுப்பில் முன்னெடுக்க முற்பட்டால் அது உயிரிழந்த மக்களை அகௌரவப்படுத்தும் செயலாகவே அமையும்.
உண்மையை வெளிப்படுத்தும் அதிகாரம் பரிசுத்த ஆண்டவருக்கு உள்ளது. இந்த சூழ்ச்சியின் பின்னணியில் செயற்பட்டவர்களை அவர் வெளிப்படுத்த வேண்டும் என ஆண்டவரிடம் மன்றாடுகின்றோம்.
இச்சம்பவத்தை காலத்தால் மூடிமறைக்கவும் இடமளிக்க முடியாது.

முன்கூட்டியே தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்தும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காத ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக, விசாரணை ஆணைக்குழுக்களில் உள்ள பரிந்துரைகள் அமுலாகாமை கவலையளிக்கின்றது. இது விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடு தொடர்பில் வெட்கமடைகின்றோம்: கண்டிக்கின்றோம்.

ஊழல் மோசடிகளை தடுப்பதற்கு ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கையை நாம் மதிக்கின்றோம். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எமக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படாமை தொடர்பிலும், அதற்குரிய நடவடிக்கை ஆரம்பமாகாமை குறித்தும் நாம் கவலையடைகின்றோம்.” – என்றா

Related Articles

Latest Articles