இறக்குவானையில் 20 ஆம் திகதி மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைமையில் விஷ்வ இந்து பரிஷத் நடத்தும் மாபெரும் விநாயக சதுர்த்தி பெருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20) இறக்குவானையில் நடைபெறவுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படும் விநாயகர் சிலைகள் பக்திபூர்வமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளன.

அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு இறக்குவானை சந்தைப் பகுதியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகும்.

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெறும் விசேட பூஜைகளைத் தொடர்ந்து ஊர்வலம் தெனியாய வீதி, எலட்டன் ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தை சென்றடையும்.

அங்கு சிறப்பு பூஜைகள், ஆன்மீக சொற்பொழிவுகள், பஜனை ஆகியன இடம்பெற்று சிலைகள் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆலயங்களின் நிர்வாக சபையினர், அறநெறிப் பாடசாலை மாணவர்கள், சமய, சமூக அமைப்புகளைச் சார்ந்தோர் பொதுமக்கள் என பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.

Related Articles

Latest Articles