இலங்கை – இந்திய கப்பல் மே நடுப்பகுதியிலேயே ஆரம்பம்!

இந்தியாவின் காரைக்காலுக்கும் யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவையை முன்னெடுப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

யாழ். காங்கேசன்துறைக்கும் இந்தியாவின் பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலுக்கிடையிலான கப்பல் சேவை எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகுமென IndSri Ferry Service நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.

ஒரு வழி போக்குவரத்துக்கு 50 அமெரிக்க டொலர் அறவிடப்படுமென்றும் அந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.

65 கடல் மைல் தூரம் கொண்ட இந்த பயணத்துக்கு சுமார் 04 மணித்தியாலங்கள் தேவைப்படுமென கணிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை காலை 08 மணிக்கு காரைக்காலில் பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல், நண்பகல் 12 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையும். மீண்டும்காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 02 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும் கப்பல் மாலை 06 மணிக்கு காரைக்காலை சென்றடையும்.

கப்பலில் 120 – 150 பயணிகள் வரை ஒரு தடவையில் பயணிக்க முடியும். பயணி ஒருவர், நூறு கிலோ பொருட்களை கொண்டுசெல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் இந்த கப்பலில் 06 ஊழியர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.இக்கப்பல் சேவை இம்மாதம் (29) ஆரம்பிக்கப்பட விருந்தது.

எனினும், இந்திய அரசாங்கத்தினால் கிடைக்கப்பெறவிருந்த சில அனுமதிகள் தாமதமடைந்ததால், கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles