இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்த நடவடிக்கை

இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்தல் மற்றும் துரிதபடுத்தலுக்வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகளை இலகுபடுத்தகான முன்மொழிவொன்றை விரைவாகத் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான குழுவின் (NTFC) செயற்திறன் மீளாய்வு கூட்டத்தின் போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்படி அறிவுரைகளை வழங்கினார்.

இலங்கைக்குள் வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான உகந்த சூழலை கட்டமைப்பதற்கான துரிதமானதும் மிக முக்கியமானதுமான தீர்மானங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

நாட்டிற்குள் வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பில் இக்கூட்டத்தின் போது ஆராயப்பட்டதோடு, தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான செயலகத்தின் பணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. இந்த செயலகத்தினால் 2025-2030 காலப் பகுதியில் நிறைவுசெய்யப்பட வேண்டிய பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

இதன் பூர்வாங்க நடவடிக்கையாக, தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான செயலகத்தை நிதி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுப்பதற்கும் அதன் பணியாளர் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், தற்போது சுங்கத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான செயலகத்திற்கு 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை, நிதி அமைச்சின் கீழ் கொண்டுவருதல் தொடர்பிலும், அதன் இணையத்தளத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் முன்னேற்ற அறிக்கையிடல், கட்டமைப்பு தயாரித்தல் போன்ற தேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான குழுவின் வினைத்திறனான செயற்பாட்டை மேற்பார்வை செய்வதற்கு உயர்மட்ட அதிகார சபையொன்று அவசியம் என தனியார் துறைப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர்.

ஒவ்வொரு முகவர் நிறுவனங்களினதும் பொறுப்புகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கு முறையான அறிக்கையிடல் பொறிமுறையொன்றை நிறுவுவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கை தேசிய கைத்தொழில் சம்மேளனம் தலைவர் கெனீசியஸ் பெர்னாண்டோ, மகளிர் கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் உப தலைவி கயானி டி அல்விஸ், இலங்கை வர்த்தக சபையின் உதவிச் செயலாளர் மனோரி திஸாநாயக்க மற்றும் தேசிய வர்த்தக வசதியளித்தல் தொடர்பான குழுவின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles