எனது கதையை முடிக்க பார்த்தனர் ஆனால் நான் ஜனாதிபதி ஆனேன்” – மைத்திரி

தனது கதையை முடிக்கும் நோக்கிலேயே மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் தனக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” என்னை இல்லாமல் ஆக்கும் நோக்கிலேயே 2010 இல் எனக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு அந்த அமைச்சு பதவி வழங்கப்பட்டதால்தான் ஜனாதிபதி ஆக முடிந்தது என்பதை தற்போதைய சுகாதார அமைச்சருக்கு நினைவுபடுத்துகின்றேன். என்னை முடிக்க பார்த்தனர். ஆனால் நான் விழித்துக்கொண்டேன்.

எனது ஆட்சிகாலத்தில் பிடிக்கப்பட்ட போதைப்பொருட்கள் நீதவான் முன்னிலையில் எரிக்கப்பட்டது. தற்போது கைப்பற்றப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்பது தெரியவில்லை.

சுகாதார அமைச்சில் ஊழல், மோசடிகள் உள்ளன. விலைமனுகோரல்கூட முறையாக நடப்பதில்லை. ஊழல், மோசடி நிறுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles