கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியை பெண் ஒருவர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாஎல பொலிஸ் போக்குவரத்து அதிகாரி ஒருவர், பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணை தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதன்போது, பொலிஸாருக்கு பயப்படாத பெண் தடுத்து நிறுத்திய பொலிஸ் அதிகாரியை அறைந்துள்ளார்.
ஜாஎல பொலிஸ் போக்குவரத்து அதிகாரியின் காதில் குறித்த பெண் அடித்ததுடன் தனது மோட்டார் சைக்கிளையும் விட்டுச் சென்றதாக ஜாஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் சீதுவ பிரதேசத்தில் வசிப்பவர் என்பதை அறிந்த பொலிஸார் அவரை தேடிச் சென்ற போது குறித்த பெண் நீண்ட நாட்களாக மனநல சிகிச்சை பெற்று வருவதாக வீட்டில் உள்ளவர்கள் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்
