கடைசி நேரத்தில் பரபரப்பு – முற்போக்கு கூட்டணி எம்.பி. தாவல்?

தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், நாளை கட்சி தாவவுள்ளார் என வெளியாகும் தகவலை கூட்டணியின் உள்ளக வட்டாரங்கள் மறுத்தன.

2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நாளை மாலை நடைபெறவுள்ளது.

இதன்போது பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்து, எதிரணி உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர் எனவும், இந்த பட்டியலில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் உறுப்பினர் ஒருவர் உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையிலேயே தமது அணியில் இருந்து எவரும் கட்சி தாவமாட்டர் என கூட்டணியின் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.

 

Related Articles

Latest Articles