கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 54 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை கண்டி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 694 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2ஆவது அலைமூலம் இம்மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 272 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.










